ஸ்பாஞ்ச் கேக்

தேதி: October 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (5 votes)

 

மைதா மாவு - ஒன்றேகால் கப்
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி (தேவையென்றால்)
பட்டர் - அரை கப்
சர்க்கரை - முக்கால் கப்
முட்டையின் மஞ்சள் கரு மட்டும் - ஒன்று
முட்டை (வெள்ளை மற்றும் மஞ்சள் கருவுடன்) - ஒன்று
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
ஹெசல் நட் எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி (தேவையென்றால்)
தயிர் - அரை கப்
வால்நட் அல்லது பிற நட் வகைகள் - சிறிது (தேவையென்றால்)


 

தேவையான பொருட்களை எடுத்துத் தயாராக வைக்கவும். அவனை 350 டிகிரிக்கு முற்சூடு (Pre - Heat) செய்யவும்.
மைதா மாவுடன் பேக்கிங் சோடா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் கலந்து சலித்து தனியாக வைக்கவும்.
பேக்கிங் பேனில் பட்டர் தடவி மைதா மாவைத் தூவி தயாராக வைக்கவும்.
பட்டரையும், சர்க்கரையையும் ஒன்றாகக் கலந்து பீட் (Beat) செய்யவும்.
இரண்டும் நன்றாகக் கலந்தவுடன், முட்டையின் மஞ்சள் கருவைச் சேர்த்து பீட் செய்யவும்.
பிறகு முட்டையை (வெள்ளை மற்றும் மஞ்சள் கருவுடன்) சேர்த்து நன்றாக பீட் செய்யவும். அத்துடன் வெனிலா எசன்ஸ் மற்றும் ஹெசல் நட் எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும்.
பிறகு சலித்து வைத்துள்ள மைதா மாவுக் கலவையைச் சேர்த்து, சிறிது சிறிதாகத் தயிரையும் சேர்த்து பீட் செய்யவும்.
நன்றாக பீட் செய்யப்பட்ட கலவையை பேக்கிங் பேனிற்கு மாற்றவும். விருப்பப்பட்டால் மேலே நட்ஸ் தூவவும்.
பிறகு பேக்கிங் பேனை அவனில் வைத்து 40 நிமிடங்கள் பேக் செய்யவும்.
40 நிமிடங்களுக்குப் பிறகு கேக்கை வெளியே எடுத்து, சிறிய ஸ்பூன் அல்லது கத்தியை கேக்கின் உள்ளே விட்டுப் பார்க்கவும். கேக் நன்றாக வெந்திருந்தால் ஸ்பூன் / கத்தியில் மாவு ஒட்டாமல் வெளியே வரும்.
சூடான கேக்கை 10 நிமிடங்கள் பேக்கிங் பேனிலேயே வைத்து, பிறகு ஒரு தட்டில் கவிழ்த்து ஒரு கரண்டியால் மெதுவாகத் தட்டவும். இப்போது தட்டில் உங்களுக்காக ஸ்பாஞ்ச் கேக் தயாராக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Super akka :) avasiyam seyyaren. Thanks for sharing the recipe ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்பாஞ்ச் கேக் டெம்ப்டிங் ரெசிபி :) யம்மி லவ் இட் கண்டிப்பா ட்ரை பண்ணுவேன் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பருங்கோ பார்த்ததும் சாப்பிடனும் போல இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கேக் நல்லா வந்து இருக்கு ...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

தோழி எனக்கு தேக்கரண்டி, மேசைக்கரண்டி அளவெல்லாம் தெரியாது.தயவுசெய்து சொல்லிக்கொடுங்கப்பா..

நன்றி தங்கச்சி ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி கனிமொழி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மிக்க நன்றி ஸ்வர்ணா :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நன்றி சங்கீசெந்தில் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)