அமானுஷ்ய அனுபவம்- 3

ஹாய் அமானுஷ்யம் 3 நானே இழையை தொடங்கிவிட்டேன். தோழிகளே உங்கள் வாழ்க்கையில் நடந்த அமானுஷ்யங்கள் பற்றி பதிவிட வாங்கோ......................................................

நானே முதல் பதிவை போடுகிறேன்.
இது என் கணவருக்கு நடந்தது.என் கணவர் திருமணத்திற்கு முன் ட்ரன்ஸ்போர்டில் வேலை செய்து வந்தார்.ஒரு நாள் ட்ரன்ஸ்போர்டில் இருந்து சென்ற லாரி ஒன்று அரக்கோணத்தில் ரிப்பேர் ஆகி நின்று விட்டதாக டிரைவர் போன் செய்தாரம்.உடனே என் கணவர் பைக் எடுத்துக் கொன்டு டிரைவர் சொன்ன இடத்திற்கு சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது மணி சரியாக12.30னெருங்கிகொண்டிருந்ததாம்.சரியாக வெளிச்சம் தெரியாததால் ஹெட்லைட் போட்டு வண்டியை திருப்பினாராம்.அங்கே ஒரு ஆள் கீழே உட்கார்ந்து கொண்டு கையை முட்டியின் மீது வைத்து முகத்தை மடியின்மீது வைத்து கொண்டு முடியை முன்னாடி போட்டு இருந்தார்களாம்.
என் கணவர் அதன் அருகில் சென்று லைட்டை அதன் மீது அடித்துள்ளார். உடனே அது முகத்தை தூக்கி பார்த்ததாம்.முகம் அப்படியே எரிந்து கொண்டிருந்ததாம்.அப்படியென்றால் அது ஆமாம் "அதுவேதான், என் கணவர் பயந்த பயத்திற்கு அளவே இல்லையாம்.அங்கிருந்து எடு ஜூட் அதோடு வீட்டு வாசலில்தான் வண்டியை நிருத்தியுள்ளார்.ஒரு வாரம் வாந்தியுடன் ஜுரம் வந்துவிட்டதாம்.
....................................இன்னும் திகில்தொடரும்........................................

மேலும் சில பதிவுகள்