குஸ்கா ரைஸ்

தேதி: October 7, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

பச்சரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - 3 தேக்கரண்டி
தக்காளி - ஒன்று (சிறியது)
பச்சை மிளகாய் - ஒன்று
மல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
புதினா - ஒரு கைப்பிடி அளவு
எலுமிச்சை சாறு - கால் தேக்கரண்டி
தாளிக்க:
நெய் - 3 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிது
வெந்தயம் - துளி


 

வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியைப் பொடியாகவும் பச்சை மிளகாயை இரண்டாகவும் நறுக்கி வைக்கவும்
குக்கரில் நெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தயிர் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் 2 கப் அரிசிக்கு, 4 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்ததும் அரிசி, தக்காளி, மல்லித் தழை, புதினா, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தம்மில் போடவும்
சுவையான குஸ்கா ரைஸ் தயார். வெஜ் தாளிச்சா, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவியுடன் சாப்பிடலாம்.

தண்ணீர் சேர்க்கும் போது விருப்பப்பட்டால் 2 பங்கு தண்ணீர் என்றால் அதில் ஒன்றரை பங்கு தண்ணீர், அரை பங்கு தேங்காய் பால் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குஸ்கா ரைஸ் ஒன் ஆஃப் மை ஃபேவரிட் ரெசிபி அம்மா யூஸ்வல் ஆ தேங்காய் பால் சேர்த்து செய்வாங்க‌ .. ஈஸி அன்ட் டேஸ்டி டிஷ் சுப்பர் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஈசியாகச் செய்யக்கூடிய‌ சுவையான‌ ஒரு சாதம்........என்னோட‌ ஃபேவரெட் ஐயிட்டம்.

அட எங்கயோ பார்த்தமுகம் . ஈசியான ரெசிபி. சூப்பர்.

Be simple be sample

அருமை :) ட்ரை பண்ணிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஈசி லஞ்ச் பாக்ஸ் ரெசிபி. வாழ்த்துக்கள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கனி முதல் பதிவிற்க்கு நன்றி :) ஆமா கனி ரொம்ப ஈசி & டேஸ்டி ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அனு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பார்த்த ஞாபகம் இல்லையோ ;)

மிக்க நன்றி ரேவ்ஸ் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மஞ்சு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு ஸ்வர்ணா,

அருமையாக‌ செய்திருக்கீங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

Gheerice polaveyiruku sema teste nan mutton vellaikuruma vachu intha rice pannen.en hus superayiruku nu sonnar thanks

சீதாம்மா மிக்க நன்றிங்க மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நிஷா செய்து பார்த்து பிடிச்சதுக்கு மிக்க நன்றிங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

nice