கிரகணகாலத்தில் என்ன‌ செய்வது?

அன்பு தோழிகளே,

கிரகணகாலத்தில் என்ன‌ செய்வது

கர்ப்பமாக இருப்பவர்கள் அரிவாள்மனை பயன்படுத்த வேண்டாம்,கிரகணம் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்த பின்பு சமைத்து சாப்பிட வேண்டும்.வெளியிலுள்ள தண்ணீர் அருந்த வேண்டாம் இப்படி பெரியவர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன்.

gm madam

Please put some ''DHARBAI PULL to your POOJA AREA IN YOUR HOUSE

BYE..

நானும் கர்ப்பமாக உள்ளேன்.என்னுடைய அம்மா எனக்கு கிரகண நேரத்தில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சொன்னாங்க. தண்ணீர் குடிகக்கூடாது, சாப்பிடக்கூடாது, வயிற்றில் அறித்தால் சொரியக்கூடாது.கிரகணம் முடிந்ததும் குளித்து வீடு துடைத்து சமையல் செய்யனும்னு சொல்லிருக்காங்க.2 மணிக்குள் சாப்பிடுங்கள்
.என்னிடம் சொன்னதை சொல்லி இருக்கிறேன்.

அன்பு தோழி. தேவி

மிக்க நன்றிப்பா, மேலும் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டலாமா? குழந்தைக்கு என்ன‌ செய்யவேண்டும்?

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

hema madam

Kandipaga kulanthaiku satham kodukatheenge...Veetle Tharbai pul irunthall poojai araiyel vaikavum

தோழிகளே கிரஹண காலத்தில் எங்கள் வீட்டு நடைமுறையை இங்கு பகிர்கிறேன்.
கிரஹணம் ஆரம்பிக்கும் முன்பாக அருகம்புல்லை தண்ணீர் பானை, தண்ணீர் தொட்டி, மாவு உள்ள பாத்திரங்கள், மேலும் உடனே பயன்படுத்தி தீர்க்கமுடியாத பொருட்களான , அதாவது மிகையாக உள்ள அனைத்து உணவு பொருட்களிலுமே மேலாக போட்டுவிடுவோம். (உதாரணமாக உப்பு ஜாடி, புளிபானை, மிளகாய் வற்றல் வைத்திருக்கும் டப்பா, பருப்பு வகையறாக்கள்...இத்யாதி..இத்யாதி )
கிரஹணம் முடிந்த பிறகு வீடு துடைத்துவிட்டு, பெட்சீட் முதலானவற்றையும் துவைத்து போட்டு தலைக்கு குளித்து, விநாயகரை கும்பிட்டு பிறகுதான் சாப்பிடுவது வழக்கம். கோயில் தூரமாக இருப்பின் வீட்டிலேயே கும்பிட்டுக்கொள்ளலாம்.

கர்ப்பிணிகளுக்கு கொஞ்சம் அதிகப்படியான நடைமுறைகள் உண்டு. எந்த வேலையும் செய்யாமல் இருந்துவிடவேண்டும் என்று வீட்டு பெரியவர்கள் அறிவுறுத்துவர். என் கர்ப்பகாலத்தில் முழு சூரிய கிரஹணம் வந்தது. என் பாட்டி பயங்கர சட்டதிட்டம் சொல்லி கடுப்பேத்தினாங்க. என்ன செய்வது அம்மா வீட்ல இருந்தேன் கட்டுப்பட்டே ஆகவேண்டியதாக இருந்தது. உச்சக்கட்டமா எல்லாரும் டிவில கிரஹணத்தை பார்த்திட்டு இருக்காங்க.. நீ எதுக்கு இப்ப எல்லாரோடும் சேர்ந்து இதெல்லாம் பார்க்கிறேனு சொன்னாங்க பாருங்க.. முடியல...
கூடவே கதைகள் வேறு சொல்வார்கள், அதை உண்மையா? பொய்யானு தொண்டை வறள பேசியும் ஒண்ணும் வேலைக்கு ஆகல.
ஒருவேளை தெரியாமல் வேலைசெய்து விட்டால் பயப்படவேண்டாம். தெரிந்து கொண்டால் பின்பற்றித்தான் பாருங்களேன், அதுவும் ஒரு ஜாலியாகத்தான் இருக்கும்.

வெற்றி பெற்ற பின், தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.

என்றும் அன்புடன்
சிவிஸ்ரீ

தார்ப்பாய் புல்லா? புரியலப்பா நீங்க சொன்னது.குழந்தைக்கு முன்னாடியே சாப்பாடு கொடுத்துடுங்க.பால் காய்ச்சி வச்சுக்கங்க, பிஸ்கட் எதாவது ஸ்நாக்ஸ் பக்கத்தில் வச்சுக்கங்க, குழந்தையை தூங்க வச்சுருங்க, எதையும் எடுக்க சமையல் அறைக்கு போகக்கூடாது ன்னு சொல்றாங்க ப்பா.பக்கத்தில் வச்சுக்கங்க. எனக்கும் 2 1/2 வயதில் பையன் இருக்கான்.சமையல் செய்து கொண்டிருந்தேன் இப்பதான் பார்த்தேன்.என்னுடைய சந்தேகம் இருட்டறையில் தான் இருக்கனுமா? டி வி , செல்போன் உபயோகப்படுத்தலாமா?

அன்பு தோழி. தேவி

சிவிஸ்ரீ அக்கா, அருகம்புல் இங்க இல்லை க்கா.முதல் மாடியில் இருக்கோம்.சமைத்ததை மீதி வைக்ககூடாது ன்னு சொன்னாங்க அக்கா.

அன்பு தோழி. தேவி

//ஒருவேளை தெரியாமல் வேலைசெய்து விட்டால் பயப்படவேண்டாம்.// :-) இந்த ஒரு வரியை எழுதியதற்காக சிவிஸ்ரீக்கு ஒரு பாராட்டு. :-)

அஸ்வதா... அது தார்ப்பாய் இல்லை தருப்பைப்புல்.

‍- இமா க்றிஸ்

நாங்கள்சிங்கப்பூரிலிருக்கிறோம்ப்பா, இங்க‌ இப்போ மணி மதியம் 3.30 ஆகுதுப்பா.இங்க‌ எங்க‌ தர்ப்பை புல்லுக்கு போறது வேறு ஏதாவது வழி இருக்கா? மேலும் என் பையன் இப்பொழுதான் தூங்கி எழுந்தான் சாப்பாடு ஊட்ட‌ வேண்டாமா?அப்புறம் ஜூஸ் கொடுக்கலாமா? வேறு என்ன‌ உணவு தான் கொடுப்பது?..

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மேலும் சில பதிவுகள்