சமையல் அறை

சமையல் அறையில் நான் Money Plant வைத்து அலங்கரித்துள்ளேன். Counter Topல் ஒரு பகுதியில் அழகான பழக்கூடையில் பழங்கள் வைத்துள்ளேன். இன்னும் எப்படி decorate பண்ணலாம் என்று idea சொல்லுங்களேன்.

டியர் வினோதா, சமையல் அறை அலங்காரம் என்றால் நமக்கு பிடித்த நிற வண்ணபூச்சிலிருந்து ஆரம்பித்து கால் மிதியடி போன்ற பொருட்கள் வரை அவரவர் வசதிக்கேற்ப்ப வாங்கி அலங்கரிக்கலாம்.வாடகை வீடானால் அலங்கார பொருட்களை கொண்டு அலங்கரிக்கலாம்.
பொதுவாக எல்லாவித சமையல் அறையிலும் நீங்கள் கூறியிருப்பது போன்று பழங்களால், மற்றும் வண்ண புகைப் படங்கள், சர விளக்குகள், மேலும் சிறிய மண் தொட்டிகளில் செடிகளை கொத்தமல்லி, புதினா, வெந்தயம், போன்ற நாம் பயன் படுத்தும் செடிகளை வளர்த்தால் அழகும் பயனும் இரண்டும் கிடைக்கும்.
மேலும் வடிவான பீங்கான் குப்பிகளில் எலுமிச்சைபழங்கள்,நல்ல நிறமுள்ள பருப்புகள், தானியங்கள்,பாஸ்டா வகைகள், போன்றவற்றை போட்டு வரிசையாக வைத்து செலவே இல்லாமல் அலங்கரிக்கலாம். ஸ்டோர்களில் இது போன்ற அலங்காரத்திர்க்கு மட்டும் என்று உணவு பொருட்களை குப்பிகளில் அடைத்து இருப்பதைக் காணலாம்.
அழகான திரைச்சீலைகள், மேசை விரிப்புகள், போன்று உபயோகிக்கும் பொருட்களை நல்ல தரமான பொருட்களைக் கொண்டும் அலங்கரிக்கலாம்.
என்னைப் பொருத்தவரையில் கிச்சனை சுத்தமாக, எந்த நேரமும் உலர்ந்த நிலையில், இருக்கும் பொருட்களை துப்புரவாக அடக்கி வைத்து உபயோகிக்கும் பொருட்களை அந்தந்த பொருட்களை சரியான இடங்களில் வைத்திருப்பதும் அழகு என்பேன். கவுன்டர் டாப்பில் எதுவுமே வைக்காமல் துப்புரவாக இருப்பதும் அழகாக இருக்கும் என்று தான் கூறுவேன் நன்றி.

நன்றி Manohari Mam. மண் தொட்டிகளில் கொத்தமல்லி, புதினா, வெந்தயம் போன்ற செடிகளை எப்படி வளர்ப்பது(பயிரிடுவது)?

டியர் வினோதா, தங்கள் ஆர்வத்திற்க்கு மிகவும் நன்றி. கொத்தமல்லி(தனியா), வெந்தயம் போன்ற செடிகளை அதன் விதைகளை,கொண்டு கடைகளில் கிடைக்கும் மண்ணை potting soil தொட்டிகளில் நிரப்பி அதில் போட்டு தண்ணீரை தினமும் தெளித்து வைத்தால் செடிகள் முளைத்து விடும்.புதினா செடிகளுக்கு அதன் காம்பை மட்டும் நட்டு வைத்தாலே போதும் முளைத்து விடும். நன்றி.

மிக்க நன்றி Manohari Mam.

புதினா,கொத்தமல்லி,வெந்தயம் ஆகிய செடிகளை நம் வீட்டு சமையலறையிலேயே வளர்க்கலாமா?அல்லது தோட்டத்தில் தான்வளர்க்க வேண்டுமா?நன்றி.

ramba

டியர் ரம்பா, செடிகளை வீட்டின் உள்ளேயும், தோட்டத்திலும் வளர்கலாம். ஆனால் தோட்டதில் வளர்க்க வேண்டுமென்றால் விதைகளை பயிரிடும் பொழுது மட்டும் வீட்டின் உள்ளே வைத்து முளைவிட்ட பிறகு தோட்டத்தில் நிழல் படும்படியாக நட்டு வளர்கலாம்.நன்றி.

மனோஹரி மேடம்

நலம். உங்கள் அனைவரின் நலமறிய ஆவல். நீங்கள் கூறியபடி செடிகளை பயிரிட்டேன். புதினா மட்டும் நன்றாக வளர்ந்துள்ளது. வெந்தயமும் கொத்தமல்லியும் வரமாட்டேன் என்கிறது. தயவுசெய்து மீண்டும் கூறுங்கள். கொத்தமல்லியை அப்படியே மண்ணிற்குள் புதைத்து வைக்க வேண்டுமா? இல்லை உடைத்து வைக்க வேண்டுமா?
மிக்க நன்றி.

ஹாய் வினோ,
எப்படியிருக்கே? தீபாவளி வந்துட்டே இருக்கா?

என் தோழி மனோகரிக்காக (அவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன்) நான் பதில் கொடுக்கிறேன்.

வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறப்போட்டு காலையில் தண்ணீரை வடித்து துணியில் முடிந்து வைக்கவும். மாலையில் எடுத்து பார்த்தால் முளை விட்டிருக்கும். மண்ணில் தூவி , லேசாக மண்ணைத்தூவி மூடவும். நன்றாக ஜம்மென்று வளரும்.

கொத்தமல்லியையும் லேசாக உடைத்து மண்ணில் தூவி, மேலே மண் தூவவும்.
கொத்தமல்லியை உடைத்து விடக்கூடாது.
கல்லால் தேய்க்கக் கூடாது.

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நன்றி செல்வி.நாள் முழுவதும் ஒரே பிஸியா இருந்தேன்.தங்கைகளுக்கு வாழ்த்து கூறத்தான் வந்தேன் ஆகவே நான் இப்ப போறேன் மீண்டும் நாளை இரவு பார்க்கலாம். ஒகே டியர் குட் நயிட், டேக் கேர்.

செல்வி அவர்களுக்கு

இங்கு நாங்கள் அனைவரும் நலம். அதுபோல் அங்கு அனைவரின் நலமறிய ஆவல். உடனடியாக குறிப்பு கொடுத்ததற்க்கு மிக மிக நன்றி.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

நம் நாட்டில் நம் வீட்டில் தீபாவளி கொண்டாடுவது போல் இங்கு இல்லை. இருப்பினும் தீபாவளி ஓகே.

என்னால் அரட்டை அரங்கத்திலோ மன்றத்திலோ அவ்வளவாக கலந்து கொள்ள முடியவில்லை. நேரமின்மைதான் காரணம். சிலசமயம் பல பதிவுகளை கூட பார்ப்பதில்லை.

உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்