தோழிகளே என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள். ..

எனக்கு முதல் குழந்தை வலியில்லாததால் ஆபரேசன் மூலம் பிறந்தான்.
ஆபரேசன் செய்து 2 1/2 வருடங்கள் ஆயிற்று. நான் இப்பொழுது 7மாதம் கர்ப்பமாக உள்ளேன். பிரசவத்தின் போது தையல் போட்ட இடத்தில் எதுவும் பாதிப்பு ஏற்படுமா? சுகப்பிரசவம் ஆக வாய்ப்புள்ளதா? சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக வீட்டு வேலைகளையும், பையனையும் நானே பார்த்து கொள்கிறேன். ..எனக்கு பதில் கூறுங்கள் .ரொம்ப குழப்பத்தில் உள்ளேன். .

//பிரசவத்தின் போது தையல் போட்ட இடத்தில் எதுவும் பாதிப்பு ஏற்படுமா?// நிச்சயம் இல்லை. அது க்ளூ போட்டு ஒட்டுவது போல எல்லாம் இல்லை. கலங்கள் இணைந்து வளர்ந்து முடிந்திருக்கும். இனிமேல் பிரியாது, பயம் வேண்டாம்.

//சுகப்பிரசவம் ஆக வாய்ப்புள்ளதா?// சிசேரியன் இல்லாமல் குழந்தை பிறப்பதைச் சொல்கிறீர்களா? இது பற்றி உங்களைப் பார்க்கும் மருத்துவரை விசாரியுங்கள்.

//சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக வீட்டு வேலைகளையும், பையனையும் நானே பார்த்து கொள்கிறேன். // மிக்க நல்ல விடயம்.

சிசேரியன் கூட... தாய் சேய் நிலமையைப் பொறுத்து... சுகப்பிரசவம்தான். நீங்கள் ஆயிரம் வீட்டு வேலை செய்தாலும் பிரசவ சமயம் உங்கள் குழந்தையும் ஒத்துழைக்காது போனால்!!

சிசேரியன் ஒரு வரப்பிரசாதம்தான், அது சுகப் பிரசவம்தான் என்பதை நீங்கள் முன்பே அனுபவித்திருக்கிறீர்கள். எதுவானாலும் நல்லதே என்பது புரிந்து இருக்க வேண்டும் உங்களுக்கு. உங்கள் குழந்தையை ஒரு முறை பாருங்கள். எவ்வளவு அழகாக, துருதுருவென்று இருக்கிறார். ஆரோக்கியமான, சந்தோஷமான குழந்தையாக இல்லையா அவர்! அப்போ அவர் பிறந்தது சுகப்பிரசவம் இல்லை, சிரமப்பிரசவம்தான் என்கிறீர்களா?? தாய்க்கு வேண்டுமானால் சிரமமாக இருந்திருக்கலாம். குழந்தை நன்றாக இருப்பதற்கு அந்தச் சமயம் சிசேரியன் அத்தியாவசியமாக இருந்தது அல்லவா? அவர் நோய்வாய்ப்பட்டிருந்தால் உங்களால் தாங்கியிருக்க முடியுமா?

//வலியில்லாததால் ஆபரேசன் மூலம் பிறந்தான்.// கடைசிச் சொல் 'பிறந்தான்' என்று சந்தோஷமாக எழுதும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. நீங்கள் எவ்வளவு அதிஷ்டசாலி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் நீங்கள்.

நீங்கள் நினைக்கும் சுகப்பிரசவம் கூட குழந்தையைப் பெற்று விட்டு படுக்கையிலிருந்து எழுந்து ஜாலியாக நடந்துவிட முடியாது. சிரமங்கள் இல்லாமலிராது.

தேவிக்கு இனிமேல் இந்தச் சந்தேகம் வரக் கூடாது. எதுவாக இருந்தாலும் நல்லதுதான். கண்டபடி யோசிக்காமல் சந்தோஷமாக இருங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி ம்மா உங்கள் பதிலுக்கு. .தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னியுங்கள். இன்றைக்கு உடம்பு வலி, ராத்திரி தூக்கம் இல்லை அதான்.
//மருத்துவரை விசாரியுங்கள்// .இந்தத் தடவை செக்கப் போகும்போது கேட்க வேண்டும் மா.
எனக்கு சிசேரியன் கடினமாக இல்லை எளிதாக தான் இருந்தது.
ஆனால் லேசா மூச்சு வாங்கிடுச்சு.மயக்கமே வரலை மருத்துவரிடம் பேசிட்டே குழந்தையின் முகத்தை பார்த்தேன்.
சிசேரியன் என்றால் உறவினர்கள் பேசுவது தான் கேட்க முடியவில்லை. அதுவும் என் அத்தை சிசேரியன் பண்ண குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது, மந்தமா தான் இருப்பான்னு லாம் ரொம்ப பேசினாங்க அவுங்க சொன்னதுக்கு எதிர்மறையாதான் இருந்தான்.
ஆம் நான் அதிர்ஷ்டசாலிதான்.இவ்ளோ அறிவான மகனை பெற்றெடுத்ததுக்கு.அவர்தான் என்னை பார்த்துக்கிறான்.வாமிட் எடுக்கும் போது தண்ணீர் தருவது,முதுகை தட்டுவது இன்னும் ஏராளம்.
என் கணவர் shift தான் வேலை பார்ப்பது..

அன்பு தோழி. தேவி

தோழிஸ், ராத்திரி தூங்கவே 2 மணி ஆயிடுது, இடையில் பையனையும் பார்த்து கொள்வேன்.இதனால் நான் எழுவதற்கு 8 மணி ஆகுது 8.15க்குலாம் பால் குடித்து விடுவேன். 10 மணிக்கு டிபன் சாப்பிடுவேன் இந்த நேரம் சரியா? இதனால் குழந்தைக்கு எதுவும் ப்ராப்ளம் வருமா?

அன்பு தோழி. தேவி

//சிசேரியன் பண்ண குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது, மந்தமா தான் இருப்பான்// இல்லை. என் சின்னவர், குறை மாதக் குழந்தை & சிசேரியன். 25 வயது இப்போது. எல்லா விதத்திலும் நல்லாவேதான் இருக்கிறார்.

எதையும் யோசிக்காதீங்க. கடைசில நிலமை எப்படி இருக்கோ, அப்போ டாக்டர் சொல்லும் ஆலோசனையின்படி போகலாம்.

//தூங்கவே 2 மணி ஆயிடுது// அப்படியானால் அதுவரை ஏதாவது சாப்பிட்டுத்தானே இருப்பீர்கள்! அதனால் காலை உணவு 10 மணிக்கு ஓகே.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி ம்மா.நிறைய சந்தேகம் இருக்கிறது கேட்கலாமாஇந்த இழையில்?

அன்பு தோழி. தேவி

தாராளமா கேளுங்க. ஆனால் என்னிடம் மட்டும் என்று கேள்வியை வைக்காதீங்க. என் அனுபவங்கள் கால் நூற்றாண்டுக்கு மேல் பழையவை. :-) உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் எனக்குப் பதில் தெரிந்திராது. பொதுவான கேள்விகளானால் பதில் சொல்லுவேன். சின்னவர்களுக்குத் தான் தற்போதைய நிலவரங்கள் தெரியும். அவர்களும் வந்து உதவுவார்கள்.

‍- இமா க்றிஸ்

பொதுவாகவே கேட்கிறேன் அம்மா. ... . நன்றி ம்மா.

அன்பு தோழி. தேவி

தோழிகளே ஏழு மாதம் தொடங்கிருக்கு.எடை அதிகமாக என்னென்ன சாப்பிடலாம்? மருத்துவர் முட்டை,4டம்ளர் பால், பேரிச்சம்பழம் 5, முந்திரி சாப்பிட சொல்லிருக்காங்க. வேற என்னவெல்லாம் சாப்பிடலாம்? ஹிமோகுளோபின் குறைவாக உள்ளது.

இமாம்மா &தோழிகளே மருத்துவரிடம் கேட்டேன் சுகப்பிரசவம் ஆக வாய்ப்பு நிறையவே இருக்கிறதாம். கர்ப்பமாக உள்ளவர்கள் ஆரம்பம் முதல் டெலிவரிக்குள் 10 -12கிலோ ஏற வேண்டும் என்று படித்திருக்கிறேன். பதில் கூறுங்கள் தோழிகளே. ...

அன்பு தோழி. தேவி

Enkku next baby undaka intha month than try panna poran ,payama irukku. Erkanava payan piranthu six years varaikkum irunthu iranthuttan. Odd numers or even numbers? Etu conceive aka best days? Folic acid tablet sappidukiran. Intha one month a podarathili. Any wrong. Intha month nan conceive ayidanum. Payama irukku

நல்லதே நடக்கும்.ரொம்ப நாட்கள் சேர்ந்து இருங்க.பயப்படாமல் இருங்கள். கூடிய விரைவில் நல்ல சேதியை கேட்போம். ...
கொஞ்சம் தமிழில் அனுப்புங்கப்பா.புரிந்த வரையில் அனுப்பியுள்ளேன்.

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்