கோவக்காய் பொரியல்

தேதி: October 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

கோவக்காய் - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய் - ஒரு சில்லு
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்தம் பருப்பு
கறிவேப்பிலை


 

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும்.
அத்துடன் நீளமாக நறுக்கிய கோவக்காயைச் சேர்த்து வதக்கவும்.
கோவக்காய் அரை வேக்காடு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
தேங்காய் மற்றும் வெங்காயத்தின் பச்சை வாசனை அடங்கியதும், அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான கோவக்காய் பொரியல் தயார்.

கோவக்காயை அதிக நேரம் வேகவிடாமல் 80% வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிட்டால் க்ரஞ்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஈஸி கோவக்காய் பொரியல் சுப்பர் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாணி சூப்பர்ங்க எனக்கு கோவக்காய் பிடிக்கும் தேங்காய் சேர்க்காமல் தான் செய்வேன் இந்த முறைப்படி செய்து பார்க்கிறேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பார்க்கும் போதே சாப்பிடத் தோணுதே.......

எல்லா புகழும் இறைவனுக்கே

ரொம்ப‌ நல்லா இருக்கு. ட்ரை செய்து பார்க்கிறேன்.

எல்லாம் சில‌ காலம்.....

கடைசி ஃபோட்டோவைப் பார்க்கும்போது, நெத்திலி மீன் வறுவல் மாதிரியே இருக்கு. சூப்பர் :)))

கடைசி படம் வெகு அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு வாணி,

இதுவரைக்கும் கோவக்காய் சமையல் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்.

நல்ல‌ குறிப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

இதுவரை சின்ன வெங்காயம் அரைத்து சேர்த்ததில்லை, வேர்கடலை தான் என் காம்பினேஷன், கட்டாயம் ட்ரை பண்றேன் வாணி... நல்லா இருக்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப ஈசி கனி:-)

செய்து பாருங்க ஸ்வர்ணா, இதுவும் நல்லா இருக்கும்.நன்றி

செய்துப் பார்த்திடுங்க ரேமு:-)

டிரை பண்ணுங்க பாலநாயகி

அப்படியா அனு !! எனக்கு உங்க கையால நெத்திலி மீன் வறுவல் ஒரு பார்சல் பண்ணிடுங்க:-)

நன்றி முசி

நானும் ஊரில் இருந்த வரை இதெல்லாம் செய்ததில்லை . இங்கு வந்துதான் செய்யப் பழகிக் கொண்டேன். என் கணவருக்கும், மகளுக்கும் மிகவும் பிடிக்கும். செய்து பாருங்க சீதா மேடம்.

உங்க சமையல்கள் பலவற்றில் வேர்க்கடலை சேர்த்து பார்த்துள்ளேன். எனக்கும் வேர்க்கடலையின் சுவையும், மணமும் பிடிக்கும். ஆனால் சாப்பிடமுடிவதில்லை, அலர்ஜியாகி விடுது. இந்த முறையிலும் செய்து பாருங்க.நன்றி வனி.

கோவக்காய் பொரியல் முதன் முதலாக‌ செய்தேன்.
ரொம்ப‌ அருமையாக‌ இருந்தது;
மிக்க‌ நன்றி...