ரவா கேசரி (கல்யாண கேசரி)

தேதி: October 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

ரவை - ஒரு கப்
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - அரை கப்
முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய்ப் பொடி, ஃபுட் கலர் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் கால் கப் நெய் ஊற்றி, அதில் ரவையைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்தெடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும், அதில் ரவையைப் போட்டுக் கிளறவும்.
நன்கு கிளறிவிட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். தண்ணீர் வற்றி ரவை நன்றாக வெந்துவிடும்.
பிறகு சர்க்கரையைச் சேர்த்து கைவிடாமல் வேகமாகக் கிளறவும். (மெதுவாகக் கிளறினால் ரவை கட்டிகளாகிவிடும். சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் ஃபுட் கலர் மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரியைச் சேர்த்து, மீதமுள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான ரவா கேசரி (கல்யாண கேசரி) தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரோ சூப்பர், பார்க்கும் போதே சாப்பிட‌ நாக்கு ஊறுது.....
கண்டிப்பா ட்ரை பண்றேன் ஈஸியா டேஸ்டியா வேறே இருக்கு....
1ஸ்ட் நான் தான் பார்சல் பீளீஸ்....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மிகவும் அருமையாக‌ இருக்கிரது.

பார்க்கவே அருமையா இருக்குங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Manju enaku pidicha sweet super

அப்படியே எனக்குதான் பார்க்கவே அருமையா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அதெல்லாம் முடியாது, நான் தான் பச்சப் புள்ளக் காரி, எனக்குத்தான் எல்லா கேசரியும். கொடுத்தீங்கன்னா தட்டோடு முழுங்கிடுவேனாக்கும் :-)) அவசியம் இரண்டு பங்கு சர்க்கரை சேர்க்கணுமாங்க ?? அதனால் தான் கல்யாண விருந்துகளில் கேசரி அவ்வளவு சுவையாக இருக்கிறதா. படங்களும் செய்முறையும் பசியை தூண்டுதுங்க.

அன்பு மஞ்சுளா,

கேசரி பாத்ததும், கல்யாண‌ வீடு மாதிரி களை கட்டுது. நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பை வெளியிட்ட‌ அட்மினுக்கும் பதிவிட்ட‌ அணைவருக்கும் மிக்க‌ நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சு நெய் வாசத்தோட கேசரி, சாப்பிட தூண்டுதுங்க :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நான் இன்று தங்களின் குறிப்பைப் பார்த்து கேசரி செய்தேன்... நன்றாக‌ இருந்தது நன்றி.....

Condens milk vaithu kheer epdi pana vendum

Supper

சூப்பரா இருக்கு. பாக்கற‌ அப்பவே நாக்குல‌ எச்சில் ஊறுது.

எல்லாம் சில‌ காலம்.....