மீண்டும் அரட்டை - வரிசை எண் 1001

அன்பு நேயர்களுக்கு,

அறுசுவையை தொடர்ந்து பார்வையிட்டு வரும் நேயர்கள் மன்றத்தில் அரட்டை பகுதி குறித்தும், பின்னர் அது மூடப்பட்ட நிகழ்வையும் அறிவார்கள். அறுசுவையில் மன்றம் தொடங்கிய பொழுதிலிருந்தே அரட்டையும் தொடங்கிவிட்டது. ஆரம்ப காலத்தில் இருந்தே இதற்கு கொஞ்சம் எதிர்ப்புகளும், நிறைய ஆதரவுகளும் இருந்து வந்தன. இது தேவையா என்ற விவாதமும் பல வருடங்களுக்கு முன்பே நடந்திருக்கின்றது. அரட்டை பகுதியினால் ஒரு சில பயன்கள் இருந்தன, இருக்கின்றன என்பதை என்னால் மறுக்க முடியாது. அதனாலேயே இந்தப் பகுதியைத் தொடர்ந்து அனுமதித்து வந்தேன். ஒரு நேரத்தில் அவரவர் விருப்பத்திற்கு அரட்டை இழைகளைத் தொடங்க, பின்னர் மூன்று மட்டுமே, இரண்டு மட்டுமே என்றெல்லாம் சொல்லி, கடைசியில் ஒரு நேரத்தில் ஒரு அரட்டை இழை மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தோம். பின்னாட்களில் அரட்டை என்பது அதனுடைய வடிவில் மாறி, ஒன்றுமே இல்லாமல் வெறும் ஒரு ஹாய் மட்டும் சொல்லி பதிவுகள் கொடுப்பதுதான் அரட்டை என்ற நிலைக்கு வந்த நேரத்தில், அதனால் உண்டான வேறு சில பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு, அரட்டைப் பகுதியை மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்.

மூடப்பட்ட அரட்டைப் பகுதியை மீண்டும் கொண்டு வரச்சொல்லி அவ்வபோது பல நேயர்கள் என்னுடன் பேசி வந்திருக்கின்றார்கள். நிறைய பேருக்கு இது வருத்தத்தையும் தந்துள்ளது என்பதையும் நான் அறிவேன். அரட்டை இழைக் குறித்து மற்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிய, பேஸ்புக்கில் உள்ள நமது அறுசுவை ஃபேன்ஸ் பக்கத்தில் ( https://www.facebook.com/groups/arusuvaifans/ ) ஒரு வாக்கெடுப்பு நடத்தினேன். இரண்டு நாட்களாக நடந்த இந்த வாக்கெடுப்பில் அந்தக் குழுவில் இருக்கும் பலர் வாக்களித்து இருந்தார்கள். இதில் 72 சதவீதம் பேர் அரட்டைப் பகுதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற விருப்பத்தினை பதிவு செய்திருந்தார்கள். இதைத் தவிர, அரட்டை இழைகளில் உள்ள பிரச்சனைகளும், எப்படியெல்லாம் கொண்டு சென்றால் சுவாரஸியமான, பிரச்சனைகள் இல்லாத அரட்டை இழைகளாகக் கொண்டு செல்லலாம் என்பது குறித்து ஒரு கலந்துரையாடலும் அங்கே நடைபெற்றது. நேயர்களின் விருப்பம் மற்றும் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, மூடப்பட்ட அரட்டைப் பகுதியை மீண்டும் திறந்துள்ளோம். எதிர்காலத்தில் பிரச்சனைகள் வராது இருக்க அரட்டைப் பகுதிக்கென்று சில சிறப்பு விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளோம். அவை ஒவ்வொரு அரட்டை இழைத் தொடங்கும்போதும் தெரிவிக்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விதிகளை அனைவரும் கடைபிடித்தால் அரட்டை இழை எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல் செல்லும். நான் புதிய உறுப்பினர், எனக்கு விதிகள் தெரியாது என்ற கதையெல்லாம் இனி ஏற்றுக்கொள்ளபடமாட்டாது. ஒவ்வொரு அரட்டை இழையின் தொடக்கத்திலும் இந்த விதிமுறைகள் இருக்கும். விதிகளை மீறிப் பதிவுகள் வருமாயின் அந்தப் பதிவுகள் நீக்கப்படும். உறுப்பினர் தொடர்ந்து அதேப் போன்ற பதிவுகள் கொடுக்கும்போது அவரது பெயர் ப்ளாக் செய்யப்படும். எனவே, தயவுசெய்து உறுப்பினர்கள் இங்குள்ள விதிகளை மீறாமல் பதிவுகள் கொடுத்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

<hr />
<font color="#1A0DAB">

<h2 align="center">அரட்டை இழைக்கான சிறப்பு விதிகள். </h2>

1. அரட்டை இழைத் தொடங்க உறுப்பினர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. அவற்றை அறுசுவை நிர்வாகம் மட்டுமே இனித் தொடங்கும். உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டு பதிவுகள் கொடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பதிவுகள் வந்ததும் அடுத்து புதிய இழை தொடங்கப்படும். அதையும் நாங்கள் மட்டுமே செய்வோம். உறுப்பினர்கள் ஆரம்பிக்கும் அரட்டை இழைகள் நீக்கப்படும்.

2. அரட்டையில் மதம், இனம் சார்ந்த பதிவுகள், ஆன்மீகம் பரப்பும் விசயங்கள் கூடாது.

3. தனித்தனி குழுக்களாக பிரிந்து உரையாடல் கூடாது. ஒருவரையொருவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி பதிவுகள் கொடுப்பது, மனம் வருந்தும்படி பதிவுகள் கொடுப்பது கூடாது.

4. அரட்டை என்பது சப்ஜெக்ட் எடுத்துக்கொண்டு உரையாடுவது இல்லையென்றாலும், உங்களது உரையாடல் சுவாரசியமான உரையாடல்களாக இருக்க வேண்டும். "அடுத்த வீட்டு அம்புஜம் ஆறு பவுன்ல செயின் வாங்கி இருக்காளேமே.. அம்புட்டு காசு எங்கிருந்து வந்துச்சு.." இப்படி எதாவது பேசுவது சப்ஜெக்ட் இல்லாத பேச்சாக இருந்தாலும் ஒரு சுவாரசியமானப் பேச்சு. படிக்கும் எல்லோருக்குமே அம்புஜம் பற்றின ஒரு ஆர்வம் வரும். இதுபோல் எதையாவது, எதைப் பற்றியாவது பேசுங்கள். அதுதான் அரட்டை. வெறுமனே, "ஹாய்" என்று மட்டும் ஒரு பதிவு. அடுத்து, "யாராவது இருக்கீங்களா" என்ற பதிவு. அடுத்து நான் உள்ளே வரலாமா என்று பதிவு. அடுத்து bye என்று ஒரு வார்த்தை போடுவதற்கு ஒரு பதிவு..!! Chat ல் உரையாடுவது போலான இந்த வகை உரையாடல்கள், பக்கம் பக்கமாக ஒற்றை வரி பதிவுகள் இவைகளைத் தவிர்க்கவும். சில இடங்களில் நூறு பதிவுகளைக் கடந்தும் ஒரு இடத்தில்கூட ஒருவரும் எதைப் பற்றியுமே பேசாமல், ஹாய், எப்படி இருக்கீங்க, யார் இருக்கீங்க என்றே இருந்திருக்கின்றது.. இதனைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. யாராவது இருக்கீங்களா என்ற தேடல் பதிவுகள், நான் வந்துட்டேன் என்ற ஆஜர் பதிவுகள், வரலாமா என்று கேட்கும் அனுமதிப் பதிவுகள், வெறும் ஹாய் சொல்லும் மரியாதைப் பதிவுகள் இவற்றையெல்லாம் தவிர்க்கவும்.

5. பதிவுகள் கொடுக்கும்போது தலைப்பு என்று இருக்கும் பெட்டியில் தயவுசெய்து உங்கள் பதிவுக்கு பொருத்தமான தலைப்பு ஒன்று கொடுங்கள். யாரை நோக்கியாவது பதில் கொடுத்தீர்கள் என்றால் அவரது பெயரையாவது குறிப்பிடுங்கள். வெறும் வணக்கம், அஸ்லாமு அலைக்கும், ஹாய் இவற்றையெல்லாம் தலைப்புப் பெட்டியில் கொடுக்காதீர்கள். உங்கள் வணக்கத்தையும் மரியாதையையும் உள்ளே சப்ஜெக்ட் பெட்டியில் கொடுங்கள். தலைப்பு பெட்டியில் தயவுசெய்து கொடுக்காதீர்கள்.

6. யாராவது பிரச்சனைக்குரிய பதிவுகள் கொடுத்தால் அவற்றை உடனே அட்மினுக்கு தெரிவியுங்கள். நீங்களும் பதிலுக்கு அங்கே பிரச்சனைகள் செய்து, பிறகு பிரச்சனை முற்றிய பின்பு அட்மினைத் தொடர்புகொண்டால் எங்களால் எந்த விதத்திலும் உதவ இயலாது. யாரேனும் பிரச்சனையைத் தொடங்கினால் மற்றவர்கள் அமைதி காத்து எங்களுக்கு தெரிவிக்கவும். நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றோம்.

7. அறுசுவையின் பொதுவான மற்ற விதிகள் இதற்கும் பொருந்தும்.

( இப்போதைக்கு இந்த விதிமுறைகளுடன் அரட்டையை மீண்டும் தொடங்குகின்றோம். காலப் போக்கில் இந்த விதிகளில் மாற்றங்கள் வரலாம். )
</font>

<h1 align="center"> அரட்டை ஆரம்பமாகட்டும்.. !! </h1>

//காலப் போக்கில் இந்த விதிகளில் மாற்றங்கள் வரலாம்.// லாம் எல்லாம் இல்ல; கட்டாயம் வரணும் பாபு.

//அத்தனைப் பேரும்... உரையாட அன்புடன்// அழைத்தும் இங்க ஒரு ஈ காக்காயையும் காணோம். ;)) பூனைக்கு மணி யார் கட்டுறதுன்னு யோசிக்கிறாங்களோ என்னவோ! பலருக்கும் இது நல்லிரவு என்றும் தெரியும். அதனால் நானே வந்தேன்.

இடைக்காலத்தில்... ஸ்கூல் கிளம்ப முன்னால ஒரு எட்டு வந்து பார்ப்பேன். அப்போ நான் ஏதாச்சும் பதில் தட்டிட்டுப் போயிருந்தா... திரும்ப இரவு வந்து பார்க்கும் வரை இடையில் யாருமே வந்து இருக்க மாட்டாங்க. என் பதிவுதான் அப்போதும் சமீபத்தைய பதிவாக இருக்கும். விடுமுறை நாளில் கூட என் பகற்பொழுது இங்க ஈ ஆடாது. இனிமேல் கம்பெனி குடுக்க யாராச்சும் இருப்பாங்கன்னு நினைச்சா... இன்னும் யாரையும் காணோம். ;)

இமா ஸ்டூடண்ட்டா இருந்தப்ப, ஒரு சமயம் எங்க க்ளாஸ் ரொம்ப வாசனை வீச ஆரம்பிச்சுது. அப்போ இப்ப மாதிரி சிப்ஸ் ++ லாம் இல்ல. நொருக்ஸ் கிடைக்காத ஆரோக்கியமான காலம் அது. யாரோ வீட்ல இருந்து கறுவாப்பட்டை கொண்டு வர.. அது ஷேர்ல போயிருந்துது. (இமா நல்ல பொண்ணு. கூட இருந்த பாவத்துக்காக என்னென்னவோ எல்லாம் வெயில் காயுறது இல்லையா!) இது எல்லாம் பெரிய குற்றம்னு எங்க பாட்டனி சிஸ்டர் ப்ரின்ஸிட்ட எடுத்துப் போய்ட்டாங்க. ;( மீதி நாள் ஆஃபீஸ் முன்னால லைன்ல நின்று, பார்க்கிறவங்களுக்கு ஏன் நிக்கிறோம்கிறதுக்குப் பதில் சொல்லி அவமானப்பட்டு முடிச்சா, அடுத்து வந்த திங்கள்... ஃபுல் ஸ்கூல் அசெம்ப்ளில எங்க க்ளாஸ் மீண்டும் மேடையேற்றப்பட்டோம். எதுக்குன்னே புரியல. ப்ரின்ஸி ஒரு பாக்கட் கறுவாப்பட்டையை எடுத்துக் கொடுத்து, "சபை முன்னே ஆசை தீர சாப்பிடுங்க," என்றாங்க. ;) கறுவா அப்படியே தொடாம இருந்துது... இந்த த்ரெட் போலவே. ;D

ஸ்கூல் பசங்க... எப்ப கொஞ்சமா காப் கிடைச்சாலும் கச்சகச்சான்னு ஏதாச்சும் பேச ஆரம்பிச்சுருவாங்க. அப்புறம் நிறுத்துறதுக்கு ரொம்ப சிரமப்படுவோம். டீச்சருக்கு கோபம் வந்து காச்மூச்னு கத்திட்டு... "சரி, இப்போ எல்லோரும் பேசணும். யாருமே பேசாம இருக்கப்படாது," என்று சொல்லிட்டா.. கப்சிப் ஆகிருவாங்க. பேசவே வராது அவங்களுக்கு.

ஸ்கூல் பசங்க மோட்ல இருந்து சீக்கிரம் வெளிய வந்துருங்க. இல்லாட்டா கர்ர் சொல்லிருவேன். ;)

இமாவுக்கு அரட்டைல்லாம் ஆசைன்னு இல்லை. ஆனா... சோஷலைஸ் பண்றதுக்காக முடியும் போதெல்லாம் நிச்சயம் வருவேன்.

‍- இமா க்றிஸ்

நான் இங்க பேசலாம்னு இருந்தேன் ,,ஆனா என்னோட ஒரு பிரச்சன என்னன்னா பாஸ்வேர்ட் மறந்திருவேன் ,,,இந்த பாபு அண்ணன எத்தன தரவ தொந்தரவு செஞ்சிருக்கேன் பாவம் அண்ணன் ,,,எதுகெடுத்தாலும் பாஸ்வேர்ட் டா இருக்கா எதுக்கு எதுன்னு மறந்திருவேன் ,,என்னோட ஐபேடுல ஜிமெயிலு ஓபன் ஆகவில்லை லோட் கனாபின்னான்னு ஆகுது என்னோட கணவர் வேற ஆபீஸ்ல இருக்கார் அவரிடம் ஓபன் பண்ண சொல்லி பாஸ்வேர்ட் கேட்டு இங்கு வர தாமதமாகி விட்டது நம்ம(வெளிநாட்டு ) மக்களுக்கு தெரியாது போல அதான் இங்க வரல ,உள்நாட்டு மக்கள் துயில் கொள்வதால் இங்கு வரவில்லை ,,,தூங்கி எந்திச்சு எல்லாரும் இங்கு வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறாய் உங்கள் அன்பு நண்பி @@@

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

இருபது வருஷங்களுக்கு முன்னால எல்லாம் பாத்திங்கன்னா கிராமங்கள்ல எல்லா வீடுகளிலும் திண்ணை இருக்கும். பெரியவங்க ரிலாக்ஸா உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாங்கன்னா அரசியலில் இருந்து ஆரம்பிச்சு ஆன்மீகம், விவசாயம், வாழ்க்கை முறைகள், கூடவே கொஞ்சம் கிசுகிசு இப்படி போகும். நாம அவங்க பேசுறத சும்மா கேட்டுட்டு இருந்தாலே போதும், எவ்வளவோ விஷயங்கள் கத்துக்கலாம்.
இப்படி இருந்து வந்த திண்ணைகள் பின்னாளில் சூதாட்டம் ஆடவும், வஞ்சகம் பேசவும், குடிகாரர்களின் புகலிடமாகவும் மாறிப்போனது. அதனால் திண்ணை எல்லா வீடுகளிலும் இருந்து மெல்ல மெல்ல மறைந்து விட்டது. மனிதர்கள் மனிதத்தையும் அன்பையும் மூட்டை கட்டாமலே எறிந்து விட்டு சுயநலவாதிகள் ஆகிப்போனார்கள். வீடுகளை சுற்றி காம்பவுண்டும், வாசலில் கேட்டும், வீட்டுக்குள்ளே நாயும், குளோஸ் சர்க்யூட் காமிராவும் வந்து விட்டன.
மீண்டு வந்த அரட்டையில் நல்லதை பற்றி மட்டுமே அரட்டைகள் நடக்கட்டும். எவ்வளவோ பேர் சப்தமில்லாமல் வந்து நமது எழுத்துக்களை படித்து போகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அன்புடன்
THAVAM

//எதுகெடுத்தாலும் பாஸ்வேர்ட்டா இருக்கா எதுக்கு எதுன்னு மறந்திருவேன்// ம்.. இது ஒரு பெரிய பிரச்சினைதான். மறக்காம இருக்க ஒரு வழி இருக்கு. கொஞ்சம் க்ரியேட்டிவா இருந்தா போதும்.

ஏதாச்சும் ஒரு விஷயத்தை நினைச்சுக்கங்க. பிறகு அதுக்கு எக்ஸ்டென்ஷன் போட்டுட்டே போகணும். உதாரணத்துக்கு... கீரை. ;)
அறுசுவை பச்சைக் கலர்ல இருக்கா... இதுக்கு பச்சைக்கீரை பாஸ்வர்ட். அப்றம்... நாள்ல பாதிப் பொழுது எங்க செலவளிப்பீங்க! வேலைல! பாதியும் அரையும் ஒண்ணுதானே! அப்போ அதுக்கானதுக்கு அரைக்கீரை. புதுசா எங்கயோ ஜாயின் பண்ணிருக்கீங்களா? அது புதுசா முளைச்ச விஷயம். சோ... முளைக்கீரை. ;) பிடிக்காத இடமானாலும் போக இருக்கும் சில சமயம். அதுக்கும் பாஸ்வேர்ட் வேணும்ல! கசப்பான விஷயம் இது. ஆகவே... அகத்தி அல்லது குறிஞ்சாக்கீரை. ;D பாங்க் சம்பந்தமானதுக்கு... மணித் தக்காளிக் கீரை.

பிறகு மூணு அல்லது ஆறு மாசம் கழிச்சு எல்லாம் மாத்துற சமயம்... கீரைல்லாம் விட்டு காய்க்கு மாறணும். அப்றம் கனிக்கு மாறணும்.

எங்கயோ ஃபேஸ்புக்ல பார்த்தேன்... காதலில் வெற்றி பெற்ற ஆண்கள், காதலியை மனைவி ஆக்கிக்குவாங்களாம். மீதிப் பேர் ஃபேஸ்புக் பாஸ்வர்ட் ஆக்கிக்குவாங்களாம். இந்த டிப் யாருக்காச்சும் உதவியா இருந்தா புடிச்சுக்கங்க.

இலக்கம்லாம் கூட... 12155 என்னன்னு எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். இப்புடி க்ரியேடிவா யோசிச்சு பண்ணலாம். :-)

‍- இமா க்றிஸ்

ரொம்ப உபயோகமா இருக்கும் இம்மா மா , நான் எப்பயும் எதுல ஆரம்பிகிரோமோ அதுல இருந்துதான் அதாவது அறு சுவை -aru*எந்த மாசமோ அது (10) , facebook - face @10 , ஜிமெயில் - gmail &10 இப்படி கேரக்டர் மட்டும் ( @,*& ) மாத்தி மாத்தி குடுப்பேன் , இப்படி மாத்திபுட்டு மறந்திடுவேன் ,,,இனிமே மறக்கமாட்டேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பாபு அண்ணா ரொம்ப நன்றி அரட்டை இல்லாமல் அருசுவை என்னமோபோல் இருந்தது.இனிமேல் தான் கலைகட்ட போகிறது எல்லாம் தோழிகளும் வாங்கமா...........................

ஏமாறாதே|ஏமாற்றாதே

தூங்கப் போகும் நேரம் எனக்கு. இந்த டிப்ரஷன் வந்து பூனை போல் உட்கார்ந்து கொண்டு பாடாய் படுத்துகிறது. என்ன வேண்டுமென்றே தெரியவில்லை. ஆனால் மனம் எதியோ தேடி அழுது அலைகிறது. யாராவது உதவுங்களேன். என்னுடன் பழகும் யாரும் நம்ப மாட்டார்கள் நான் மனவழுத்தத்தில் உழல்வதை. முக்கியமாக இவ்வழுத்தம் மாலை நேரத்தில் வரும். என் அம்மா இறந்த பின் அதிகமாகிவிட்டது.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

எல்லோருக்கும் ஒரு ஹாய்

வந்துட்டோம்ல‌!! ரொம்ப‌ சந்தோஷமா இருக்கு அரட்டை இழையைப் பாத்து.

இதுல‌ விசேஷம் என்னன்னா, அரட்டை இழைல‌ பதிவே போடாம‌ இருந்த‌ நான், இதை ரொம்பவே மிஸ் பண்ணேன். எந்த‌ விஷயமுமே கிடைக்காம‌ இருக்கறப்பதான், அதோட‌ அருமையே தெரியும் போல‌.

போன‌ வாரம் ஒரு உறவினர் வீட்டுக்குப் போயிருந்தோம். அங்க‌ நிறையப் பேர் வந்திருந்தாங்க‌. அரட்டைங்கறதோட‌ மகிமையே எனக்குப் புரிஞ்சுச்சுன்னு சொல்லலாம்.

சாதாரணமான‌ அரட்டையா இல்லாம‌ நிறைய‌ விஷயம் தெரிஞ்சுகிட்டேன்.

முதல்ல‌ தெரிஞ்ச‌ பயமுறுத்தின‌ விஷயம், சென்னைல‌ இப்ப‌ சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் எல்லாம் வந்திருக்குதாம்.

6 வயசு பெண் குழந்தைக்கு டெங்கு ஜுரம் இருக்கு. இந்த‌ காய்ச்சல் வந்தா, ப்ளட்ல‌ ப்ளேட்லெட்ஸ் அளவு குறைஞ்சு போயிடுமாம். அது ரொம்பவும் குறைஞ்சு போயிடுச்சுன்னா சிக்கல். அதனால‌ தினமும் 2 வேளை ப்ளட் டெஸ்ட் பண்றாங்களாம்.

ப்ளேட்லெட்ஸ் கவுண்ட் குறையாம‌ இருக்கறதுக்கு, பப்பாளி இலையை சாறு எடுத்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தினமும் குடுக்கறாங்களாம்.

இதை அங்கே இருந்த‌ இன்னொருத்தங்களும் கன்ஃபர்ம் பண்ணாங்க‌. அவங்க‌ பொண்ணுக்கு டெங்கு வந்தப்ப‌, இப்படித்தான் குடுத்தாங்களாம். நல்ல‌ பலன் இருந்ததுன்னு சொன்னாங்க‌. ரொம்பக் கசக்கும், வாந்தி வரும், ஆனாலும் குடிக்கறது அவசியம்னு சொன்னாங்க‌.

டெங்கு, சிக்குன் குனியா இதெல்லாம் கொசுக் கடியினாலதான் பரவுதாம். அதுவும் பகலில் கடிக்கற‌ கொசுதான் இந்தக் காய்ச்சல் பரவுறதுக்குக் காரணமாம்.

அதே போல‌, சிக்குன் குனியாவுக்கு, நில‌ வேம்புக் கஷாயம் குடிக்கறது, நல்ல‌ தடுப்பு மருந்தாக‌, அதாவது, வராமல் தடுக்கறதுக்கு உதவும்னு சொன்னாங்க‌.

பொதுவாக‌ இந்த‌ மாதிரி சித்த‌ வைத்தியக் குறிப்புகள் நிறையப் படிப்போம். படிக்கற‌ ஜோர்லயே மறந்தும் போயிடும். ஆனா, இவங்க‌ எல்லாம் பேசினப்ப‌, அனுபவத்துல‌ சொன்னதால‌ மனசுல‌ பதிஞ்சுடுச்சு.

சளி இருமலுக்கு, கற்பூரவல்லி இலை(ஓமவல்லி இலை) அனலில் வாட்டி, சாறு குடுக்கலாம் அல்லது குழந்தைகளுக்கு நெஞ்சில் தேய்க்கலாம்னு சொன்னாங்க‌.

என்னோட‌ ஒரு சின்ன‌ சஜஷன், இந்த‌ மாதிரி பச்சிலை கஷாயம்/சாறு இதெல்லாம் ட்ரை பண்றப்ப‌, முதல்ல‌ ரொம்பக் கொஞ்சமா, ஒரு சின்ன‌ ஸ்பூன் அளவு கொடுத்துப் பாத்துட்டு, கன்டினியூ பண்ணலாம்.

அதே போல‌, இலைகளை வேக‌ வைத்து, கஷாயமாக் குடுக்கறது நல்லது. அப்படியே பச்சிலை சாறாகவேக் குடுக்கறதா இருந்தா, பெரியவங்ககிட்ட‌ கேட்டுட்டு, அல்லது மிகக் கொஞ்சமா ட்ரை பண்ணலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

//ப்ரின்ஸி ஒரு பாக்கட் கறுவாப்பட்டையை எடுத்துக் கொடுத்து, "சபை முன்னே ஆசை தீர சாப்பிடுங்க," என்றாங்க. //
இதைப் படிச்சதும் ஒரு புக்கில் படித்த‌ விஷயம் நினைவுக்கு வருது இமா.
ஒரு தேசியத் தலைவர் பேரு நினைவில் இல்லை.சிறு வயதில் சிகரெட் பிடிச்சதை அவங்க‌ அப்பா பார்த்துட்டு ஒரு ரூம்ல‌ நிறைய‌ சிகரெட் வாங்கி வச்சிட்டு எல்லாத்தையும் பிடித்து முடிக்கனும்னு கட்டளை போட்டாராம்.அதோடு அவருக்கு அந்த‌ ஆசை போயிடுச்சாம்.:)
விஷப் பரீட்சைனு தோணுதா? சரி விடுங்க‌.
அடுத்து அஸ்வதா
நானும் இப்படி தான் சமையலறைப் ப‌ருப்புகளை எல்லாம் ஒரு சமயம் பாஸ்வேர்டா வச்சிருந்தேன். சில‌ எழுத்துக்களுக்கு சிம்பல் வைப்பேன். இது மறக்கவே மறக்காது. ட்ரை பண்ணுங்க‌.:)
ஹி..ஹி...நானும் அர‌ட்டையடிக்க‌ வந்துட்டேனே.:) அப்பப்போ தலைய‌ காட்டறேன்.

பாபு அன்னா சந்தோஷம்.அரட்டை திரும்ப ஒப்பன் செய்து எல்லரும்சந்தோஷமாக பேச் பழக அனுமதி கொடுத்ததுக்கு மீன்டும் நன்றி.தோழிகள் எல்லாரும் நலமா

மேலும் சில பதிவுகள்