காய்கறி இனிப்பு ஊறுகாய்

தேதி: January 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காய்கறி கலவை - இரண்டு கிலோ
(காரட், பீன்ஸ், டர்னிப், காலிஃப்ளவர் போன்றவை)
வெங்காயம் - இரண்டு
வெல்லம் - கால் கிலோ
பூண்டு - ஆறு பற்கள்
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
பட்டை - இரண்டு துண்டு
கிராம்பு - நான்கு
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரைக்கோப்பை


 

காய்கறிகளை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். பிறகு கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து நீரை வடித்து நன்கு ஆறவைக்கவும்.
வெங்காயம் பூண்டை மையாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சியை மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
கடுகு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை தூள் செய்துக் கொள்ளவும். பிறகு மிளகாய்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கி வைக்கவும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு உருக்கி வடிகட்டி வைக்கவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு காயவைக்கவும். பிறகு அடுப்பின் அனலைக் குறைத்து வைத்து வெங்காய விழுதைப் போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி மற்றும் கலக்கி வைத்துள்ள தூளை போட்டு வெல்லக்கரைசலை ஊற்றி கலக்கவும்.
தொடர்ந்து ஆறவைத்துள்ள காய்கறிகளைப் போட்டு கிளறி உடனே இறக்கி விடவும்.
பிறகு நன்கு ஆறவைத்து பீங்கான் குப்பியில் போட்டு ஒரு நாள் முழுவதும் வைத்திருந்து அடுத்த நாள் எடுத்து பரிமாறலாம். நன்கு ஊறினால் சுவையாக இருக்கும்.
தேவைக்கேற்ற காரத்தை கூட்டியோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு மனோகரி அக்கா, இந்த ஊறுகாயை எவ்வளவு நாள் வைத்து உபயோகிக்கலாம்?சாதாரணமாக வெளியில் வைத்து உபயோகிக்கலாமா அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவேண்டுமா? உங்கள் பதில் மிகவும் உபயோகமானதாக இருக்கும். நன்றி.

அன்பு தங்கை விதுபா எப்படி இருக்கீங்க?இந்த ஊறுகாயை செய்த பின்னர் அது நன்கு இனிப்பு கலவையில் ஊறவேண்டும். அதற்காக நான்கு ஐந்து நாட்கள் வெளியில் வைத்திருந்து விட்டு பிறகு ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும். காய்கறிகளை கொதிக்கும் நீரில் போட்டு அரை வேக்காடாக வேகவைத்து செய்வது நல்லது. நன்றி.

மனோஹரி அக்கா,சிரமம் பாராமல் பதிலளித்தமைக்கு நன்றி. இந்தக் குறிப்பு என் வீட்டு சமையலில் வெகு விரைவில் இடம்பெறும்.