கீன்வா இட்லி

தேதி: October 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

கீன்வா (Quinoa) - 3 கப்
இட்லி அரிசி - ஒரு கப்
உளுந்து - ஒன்றரை கப்
உப்பு - தேவையான அளவு


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கீன்வா மற்றும் இட்லி அரிசியைத் தனித்தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் உளுந்தைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். கீன்வா மற்றும் அரிசியை ஒன்றாகச் சேர்த்து அரைத்தெடுத்து, அத்துடன் உளுந்து மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் வரை புளிக்கவிடவும்.
புளித்த மாவை கரண்டியால் நன்கு கலந்துவிட்டு, இட்லித் தட்டில் இட்லிகளாக ஊற்றி 15 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.
சுவையான, சத்தான கீன்வா இட்லி தயார்.

கீன்வா (Quinoa) என்பது ஒரு வகை நார்ச்சத்து மிக்க தானியம். கலோரியும் மிகக் குறைவு. சர்க்கரை நோயாளிகள் கீன்வாவை உண்பது நல்லது. கீன்வாவுடன் இட்லி அரிசி சேர்க்காமலும் அரைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான‌ பேர் கீன்வா அன்ட் ஹெல்த்தியான‌ ரெசிபி சூப்பர் ..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கீன்வா இங்கு கிடைத்தால் செய்து பார்க்கிறேன் வாணி :) நல்ல சத்துமிக்க இட்லி அருமை :) முட்டகப் அழகு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வானி
சூப்பா் பார்க்க மல்லிகைை பூ போல இருக்கு இட்லி

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அன்பு வாணி,

சத்தான‌, நல்ல‌ ரெசிபி. நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

கீன்வா என்பது கோதுமை புர்களா?

வித்தியாசமான சூப்பரான இட்லி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.