(இந்த கதையில் வரும் கதாபாத்திரமும், அதன் பெயர்களும் உண்மையே. ஆனால், கதை கற்பனையே).
அந்த ஆரம்பப் பள்ளியில் எல்லோரும் ஆசிரியர் வருவதற்காய் உற்சாகமாய் காத்திருந்தார்கள். அனைவர் முகமும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஏனென்றால் இன்று தான் அவர்கள் ஆசிரியர் அரட்டை அடிக்க அனுமதித்திருந்தார்.
வந்த ஆசிரியர் வணக்கம் சொல்லி அமர்ந்து, மாணவர்களைக் கேட்டார், "வர்ற தீபாவளிய, நம்ம பள்ளில எப்படியெல்லாம் கொண்டாடலாம்? எல்லாரும் அவங்கவங்க கருத்த சொல்லுங்க, நம்ம கொண்டாட்டத்த பார்க்க வெளில இருந்தும் வருவாங்க."
முதல் ஆளாய் கை தூக்கிய இமாம்மா "அழகான கைவினை செஞ்சி தொங்கவிடலாம்" என்றார்.
"க்ராஃப்ட் வொர்க்கா?" யாரோ குரல் எழுப்ப இமாம்மா கர்ர்ர்...ர்.. "தமிழில் சொல்லலாமே..."
"கைவினை ஓகே தான். ஆனா, அது எனக்கு ஆரம்பம் தான். வேணா, ம்ம் ஸ்வீட் செய்யலாம்'' இது வனி சிஸ்.
"சரி தான்" கூடவே உமா டன்ஸ்டன், வாணி, சுவர்ணா, செந்தமிழ் செல்வி அம்மா.
"கொஞ்சம் காரமும் சேர்த்துக்கலாம்பா, குழம்பு மாதிரி" இது உமா டன்ஸ்டன்.
"இனிப்போ, காரமோ குட்டி அம்மாக்களுக்கும் ஒத்துக்கிற மாதிரி பண்ணுங்கப்பா..." இது வாணி சிஸ்டர்.
"அப்படீன்னா சித்த மருத்துவத்துல பயன்படுற பனை வெல்லம், மலைத்தேன் கலந்து செய்யலாம். இந்த மழைக் காலத்துக்கு சளி பிடிக்காது" என்று தனது கருத்தைக் கூறினார் சீதாம்மா.
"ஆமா... ஆமா... " என ஆமோதித்தார் ரேணுகா சிஸ்டர்.
"என்னம்மா கொஞ்ச நாளா காணல"
"இந்த கிறிஸ் தான் எப்ப பாத்தாலும் கொசுவர்த்தி கொளுத்துறா, மூக்கு எரியுது, அம்மா வீட்டுக்கு போய்ட்டேன். தீபாவளியும் அங்கதான். வேணும்னா இப்பவே பட்டிமன்றம் வைங்க." கூடவே பட்டிமன்ற நேயர்களும் கைதூக்கினர்.
கவித, கவித - கோரசாய் குரல். பார்த்தால் அங்கே ரஜினிபாய் அம்மா, சுபி, சஜன்யா, ரேவ்ஸ்.
"அந்தக் கால தீபாவளி, இந்தக் கால தீபாவளின்னு பிரிச்சி போட்டு கவித எழுதிரலாம்" பக்கத்துக்கு மூணு, நாலு கவித போதும். "அதுகூட ஓகே தான். ஆனா, ரேவ்ஸ் சோக கீதம் கூடாது.''
அப்படீன்னா, தீபாவளி எப்படி வந்ததுன்னு, நம்ம வரலாற படிச்சி கத சொல்லுவோம். நம்ம தொல்காப்பியத்துல தீபாவளி பத்தி என்ன சொல்லுறாங்கன்னா,
"ஏய் இத நானும் படிக்கணும்னு நெனைச்சேம்பா" ஆரம்பித்தார் 'அணு' செந்தில். ஆனா படத்துலதான், நரகாசுரனை கொல்லுறத கொடூரமா காட்டிட்டாங்க.
"ஏய் கதையே சொல்லுவோம். ஆனா உண்மை கத. யாருக்கும் தெரியாத மாதிரி பேர மாத்திடுவோம்." இது அருட்செல்வி சிவபிரகாசம்.
"எதுக்கு அது? டிரஸ் எடுப்போம், பலகாரம் சுடுவோம், பட்டாசு கொளுத்துவோம். போட்டோ எடுப்போம். பட்டாசு வருஷம் ஒருக்கா தானே கொளுத்துறோம். ஜமாய்ப்போம்'" பட்டாசாய் வெடித்தார் நிகிலா.
ஆண்கள் யாராச்சும். "ஒரு கத, நெடுங்கதை 2 மாசத்துக்கு, 1 பாகம் அடுத்த தீபாவளிக்கு முடிச்சிகலாம்".
"அப்படின்னா கடைசி வார்த்தைய மரியாதையோட 'ங்க' ன்னு முடிப்போம்." குரல்கள் ஒலித்தன.
ஆசிரியர் "எது வேணும்னா பண்ணலாம். ஆனா, கண்டிப்பா விதிமுறை நெறைய இருக்கும். ஃபாலோ பண்ணனும். அப்படி பண்ணல அவங்க போட்டில இருந்து நீக்கப்படுவீங்க. சரியா?" அனைவரும் சரி என தலையாட்டினர்.
“அப்புறம்... ஆசிரியைகள் சார்பா கோலம் போடுவாங்க."
"சுபத்ரா டீச்சரா, நல்லா கோலம் போடுவாங்களே, எனக்கு ரொம்ப பிடிக்கும்." என்றார் இமாம்மா.
"நான் கூட அத பார்த்து என் நோட்டுல போட்டுருக்கேன்." குரல் மட்டும் கேட்க,
"இப்ப சொன்னது செந்தமிழ்ச் செல்வி அம்மாவா", என்றது இன்னொரு குரல்.
"இல்லை நான் அருட்செல்வி நீங்க குழம்பாதீங்க".
"நான் சொல்லுறது இது தான், எப்படின்னாலும் எது, தேவையோ அத முன்கூட்டியே ரெடி பண்ணி, பேக் பண்ணி வைங்க." செந்தமிழ்ச் செல்வி அம்மா.
"நான் வேணும்னா, பேக் யுவர் பேக்ன்னு குறிப்பு குடுக்கிறேன்...சரியா?".
"ஓகே, அங்க என்னப்பா, புரியாத மாதிரி குசுகுசுன்னு சத்தம் மட்டும் வருது. தெளிவா சொல்லுங்க. தமிழ்ல சொல்லுங்க. சரி யாரெல்லாம் கலந்துகிறவங்கள உற்சாகப்படுத்துறது." எல்லாருமாய் கை தூக்கினர்.
முதல் வரிசையில் இருந்த, ரேவதி.ப, கனிமொழி, தயு, கலை, பாலபாரதி, ரேமு, முசி, பாலநாயகி, ஜா123, ஆனந்தகௌரி முழுமையாய் கைதூக்க, இன்னும் சிலர் அரை குறையாய் தூக்கினர்.
"கிறிஸ் ஒழுங்கா கைதட்டனும், அப்பப்ப கட் அடிக்கக்கூடாது. சரி, சரி எல்லாரும் என்னென்ன பண்ணப் போறீங்க அப்படீன்னு முடிவு பண்ணி லீடர் இம்மாம்மா, வனிதா சிஸ்டர், ரம்யா கார்த்திக் இவங்ககிட்ட பேர குடுங்க. அரட்டை அடிங்க ஆனா, விதிமுறையைக் கடைபிடிங்க. நாளைக்கு பாக்கலாம்".
அனைவரும் ஆர்வமாய் பெயர் கொடுக்க ஆரம்பிக்க, வகுப்பில் அரட்டைத் தொடர்ந்தது...
Comments
கிறிஸ்
நல்ல கதை. : )) படிச்சிட்டு இருக்கும் போதே சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியல. அறுசுவையை நல்லா ஆராய்ந்துப் பார்த்து எல்லோர் ஸ்டைலும் கலந்து சூப்பரா எழுதி இருக்கிங்க. படிக்கும் போது இது யார் ஸ்டைல்? எந்த பதிவு நு கண்டுப்பிடிக்கிறது ஆர்வமா இருந்தது. பள்ளியின் பெயர் பொருத்தம் அழகு.
அன்புடன்
தயூ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
கதை
வெளியிட்ட அறுசுவை டீமுக்கு நன்றி. ஏய்....ய் ..ய்ய், கதை வந்திடுச்சிசிசி.. ஹையா.(சந்தோசத்துல குதிக்காத அமைதி, அமைதி. மூஞ்ச சோகமா வச்சிக்க. ம்ம்.. இப்ப சொல்லு) நான் கதை வராதுன்னு தான் நெனச்சேன், வந்திடுச்சி. மன்னிச்சிடுவீங்க தெரியும். இருந்தாலும், எல்லாருமா மொத்தமா சேர்ந்து வந்து அடிக்காமா, உங்களுக்குள்ள டைமிங் போட்டுக்கோங்களேன்.
உன்னை போல் பிறரை நேசி.
தயு டீச்சர்
முதல் ஆளா படிச்சி, பாராட்டிருக்கீங்க. நன்றி.நன்றி. \\படிக்கும் போது இது யார் ஸ்டைல்? எந்த பதிவு நு கண்டுப்பிடிக்கிறது ஆர்வமா இருந்தது\\ அப்படியா. பெயர் போடாம இருந்திருந்தா, இன்னும் சுவாரஸ்யமா இருந்திருக்குமோ?
உன்னை போல் பிறரை நேசி.
chrishmas
அடேங்கப்பா .... அருமைய்யா ( சாலமன் பாப்பைய்யா சார் வாய்ஸ் ) ...
பல்சுவைப் பள்ளி இது அறுசுவை பள்ளித்தானே...:)இந்த பள்ளில தான் வயது வித்தியாசம் இல்லாம..., வகுப்பு வாரியா இல்லாம எல்லாரும் ஒரே வகுப்புல இருக்குற ஒரு ஃபீலிங்..:)
உண்மைய சொல்லணும் நா..., படிக்க ரொம்ப ஜாலியா இருந்துச்சு கதை .... :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ஓ மை காட்
அன்பு கிறிஷ்மஸ்,
நகைச்சுவை ரொம்ப ரொம்ப சரளமா வருது உங்களுக்கு. மொத்த அறுசுவையையும் கலாய்க்கிறதுக்கு உங்களாலதான் முடிஞ்சிருக்கு.
சான்ஸே இல்ல, சூப்பர்.
சீனியர் தோழிகள் அப்பப்ப இப்படி கலாய்ச்சதுண்டு. அதெல்லாம் முன்னொரு நிலாக் காலம். அந்த நினைவு வந்துடுச்சு.
லிங்க் கீழே கொடுத்திருக்கேன், எல்லோரும் ரசிக்கறதுக்கு.
http://www.arusuvai.com/tamil/node/9967
http://www.arusuvai.com/tamil/node/7693
http://www.arusuvai.com/tamil/node/4929
http://www.arusuvai.com/tamil/node/9289
அன்புடன்
சீதாலஷ்மி
க்றிஸ் ....
செம ஜாலியா கதை படிச்சேன் .லிஸ்ட்ல என் பெயரும் வந்ததும் சிரிக்க முடியல என்னால..ரொம்ப அருமையா எல்லோரையும் நோட் செய்து எழுதிருக்கிங்க.வாழ்த்துக்கள் :)
//"அந்தக் கால தீபாவளி, இந்தக் கால
தீபாவளின்னு பிரிச்சி போட்டு கவித எழுதிரலாம்"
பக்கத்துக்கு மூணு, நாலு கவித போதும். "அதுகூட
ஓகே தான். ஆனா, ரேவ்ஸ் சோக கீதம் கூடாது.''// சூப்பர் ;)))
All is well
கூல் ஸ்கூல் கதை
ரசித்தேன். :-)
//"அழகான கைவினை செஞ்சி தொங்கவிடலாம்"// எங்க! அறுசுவை ஆஃபீஸ் சுவர்லயா! ;)))))) அழகா இருக்கிற சுவரை கெடுக்கப் போறோம் என்று திட்டப் போறாங்க. ;)
//"தமிழில் சொல்லலாமே..." // குழப்படி. ;)) ஆங்கிலத்தை தமிழ்ல தட்டினா ஓகே. தமிழை ஆங்கில எழுத்தில தட்டினாத்தான் புரிய மாட்டேங்குது. ;)))
கோலம்... சுபத்ரா நிச்சயம் சிரிச்சு இருப்பாங்க. ;))
//லீடர்// எப்பவுமே இது பாபு அண்ணா ஒருத்தர்தான். சிங்கிள் சிங்கம். ;)))
~~~~~~~
நன்றி சீதா. ;) லிங்க் தேடணும் என்று நினைச்சுட்டே வந்தேன். வேலையை சுலபமாக்கிட்டீங்க.
- இமா க்றிஸ்
பல்சுவைப் பள்ளி
அழகான பள்ளி.அதில் நானும் இருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி.தீபாவளியை அரட்டையோடு கொண்டாடிட்டு தீபாவளி முடிஞ்சி எல்லோரும் பள்ளிக்கு வரும்போது தீபாவளி டிரெஸ் போட்டுகிட்டு வரணும்.சரியா?
எல்லா புகழும் இறைவனுக்கே
ஜாலி ஸ்கூல்,
கிறிஸ் அக்கா,
//இந்த கதையில் வரும் கதாபாத்திரமும், அதன் பெயர்களும் உண்மையே. ஆனால், கதை கற்பனையே)/// முன்னெச்சரிக்கையா போட்டாச்சு
என்னா காமெடி கலந்த கற்பனை போங்க படிக்க படிக்க சிரிப்புடன் வேகமா நகர்ந்தது அருமை,
பல்சுவை பள்ளி ல நானும் ஒரு மாணவியா இருப்பது மகிழ்ச்சி,
அரட்டைனால டீச்சருங்க யாரும் பெஞ்ச் மேல நிக்க வைக்கல தப்பிச்சோம்...
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
எப்படிங்க இப்படில்லாம்
க்றிஸ்
சான்சே இல்லை, உங்களுக்கு நிகர் நீங்களே தான்.
என்னைப் பெயரிட்டு அழைக்கும்போது, அறுசுவைத் தோழிகளை பள்ளித் தோழிகளாக எண்ணியிருக்கேன்.
நீங்கள் எல்லோரையும் ஒரே க்ளாஸ்மேட் ஆக்கி விட்டீங்க. ரொம்ப நல்லாருக்கு க்றிஸ்.
ரசித்துப் படிச்சேன். வளமான கற்பனை.
செம ஜாலி.
என்னையும் க்ளாசில் உட்கார்த்தி இருக்கீங்க. உண்மையிலேயே பள்ளி மாணவி ஆன மாதிரி ஹேப்பியா இருக்கு படிக்க.:)
வாழ்த்துக்கள் க்றிஸ்
க்றிஸ்
சீதா சொன்ன மாதிரி பழைய நினைவுகள்... :) நல்லா இருக்குங்க. அடிக்கடி காணாமல் போகாம வந்து அப்பப்ப சிரிக்க வைங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கிறிஸ்மஸ் மேடம்ங்க
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க :-)
நல்ல நகைச்சுவையுடன் அருமையான கற்பனையுடன் எழுதியிருக்கீங்க :-)
மேலும் பல கதைகள் எழுதுங்க.
நட்புடன்
குணா
க்றிஸ்
உங்க கற்பனை சூப்பர்....
"அறுசுவையின் நகைசுவைத் தென்றல்னு" உங்களை கூப்பிடத்தோனுது....
தீபாவளி கொண்டாட்டத்துல க்றிஸ்க்கு கைதட்டுற வேலை மட்டும்தானா!....கலாய்ப்பு வேலை இல்லையா? சோஓஓஓஒ சேட்ட்ட்.......
உங்கள் நகைச்சுவை சேவை, தாரை தப்பட்டைகளுடன் கோலாகலமாக தொடரட்டும்.......
கனிமொழி
ரொம்ப நன்றிபா படிச்சி, கமெண்ட் போட்டதுக்கு.
உன்னை போல் பிறரை நேசி.
சீத்தாம்மா
\\நகைச்சுவை ரொம்ப ரொம்ப சரளமா வருது உங்களுக்கு. மொத்த அறுசுவையையும் கலாய்க்கிறதுக்கு உங்களாலதான் முடிஞ்சிருக்கு.// ரொம்ப நன்றி, நன்றி. நம்ம மட்டும் தான் கலாயிச்சிட்டோமோன்னு பீல்-ஆ இருந்தது. நீங்க கொடுத்த லின்க்க படிச்சதும், கவலை போய்டிச்சி.
உன்னை போல் பிறரை நேசி.
சஜன்யா
\\செம ஜாலியா கதை படிச்சேன் .லிஸ்ட்ல என் பெயரும் வந்ததும் சிரிக்க முடியல என்னால// எதுக்கு? நம்மளையும் கலாயிக்கிராங்கன்னு பீல்-ஆ? இல்ல, இல்ல சும்மா ஜாலிக்கு தான். நன்றிப்பா படிச்சி பாராட்டுனதுக்கு
உன்னை போல் பிறரை நேசி.
இமாம்மா
\ஆங்கிலத்தை தமிழ்ல தட்டினா ஓகே. தமிழை ஆங்கில எழுத்தில தட்டினாத்தான் புரிய மாட்டேங்குது. ;)))\\ தமிழை ஆங்கில எழுத்தில தட்டினா எனக்கும் படிக்கிறதுல கொஞ்சம் கஷ்டம் தான். உங்க டெக்கரேசன குறை சொல்ல யாரு இருக்கா. ரசிச்சதுக்கு நன்றிமா.
உன்னை போல் பிறரை நேசி.
Remu
\\தீபாவளி முடிஞ்சி எல்லோரும் பள்ளிக்கு வரும்போது தீபாவளி டிரெஸ் போட்டுகிட்டு வரணும்\\ அப்படியே எல்லாரும் தீபாவளிய எப்படி கொண்டாடினீங்கன்னும், கட்டுரை எழுதிட்டு வரணும் சரியா. நன்றி ரேமு.
உன்னை போல் பிறரை நேசி.
சுபி
கலாயிக்கப்பட்டவங்க எண்ணிக்கை அதிகமா. அதான் முன்னேச்சரிக்கயா போட்டாச்சு. நன்றிபா படிச்சி ரசித்ததுக்கு.
உன்னை போல் பிறரை நேசி.
நிகிலா சிஸ்டர்.
ரொம்ப நன்றிப்பா பாராட்டுக்கு. \\உண்மையிலேயே பள்ளி மாணவி ஆன மாதிரி ஹேப்பியா இருக்கு படிக்க.:)\\ அதென்ன ஆன மாதிரி? நாங்களெல்லாம் இன்னும் பள்ளி மாணவிங்கதான். ஆனா என்ன ப்ளே ஸ்கூல் போக வேண்டியவங்கள. பள்ளிக்கு அனுப்பிட்டாங்க. ரொம்ப சின்ன வயசுன்னு சொல்ல வந்தேன்.
உன்னை போல் பிறரை நேசி.
வனி சிஸ்
\\அடிக்கடி காணாமல் போகாம வந்து அப்பப்ப சிரிக்க வைங்க.\\ கண்டிப்பா வனி சிஸ். வந்துக்கிட்டே இருக்கோம். நன்றி, நன்றி வனி சிஸ் ரொம்ப பிசி நேரத்துலயும் படிச்சி கமெண்ட் பண்ணுனதுக்கு.
உன்னை போல் பிறரை நேசி.
கிரிஸ்,
செம கதை கிரிஸ், அனைவரையும் உள்ளே இழுத்தால் ஒருசிலர் கோபப்படுவாங்களோன்னு எனக்கு பயம். ஆனாலும் உங்களுக்கு ரொம்பந்தான் தைரியம் போங்க. எல்லாரையும் இழுத்துவச்சு கதை பண்ணிருக்கீங்களே. சூப்பர்.
இங்கே வகுப்பு ஆசிரியர் நம்ம பாபு அண்ணா தானே...
க்றிஸ்
க்றிஸ் சூப்பர் :) ரெண்டுவாட்டி சீன்ல வந்துருக்கேன் போலருக்கு, இருந்தாலும் இவ்வளவு தூரம் நோட் பண்ணிருக்கீங்களே :))) நல்லா இருக்கு, ரசிச்சு படிச்சேன்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
க்றிஸ்
பல்சுவைப் பள்ளி படிச்சு சிர்ப்பு தாங்கலங்க ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள் :)
உங்களிடம் இதுவரை பேசியது இல்லை உங்களை தெரியவும் தெரியாது ஆனால் என் பெயரெல்லாம் தெரிந்து வச்சிருக்கீங்களே ஆச்சர்யமா இருக்கு :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
பல்சுவைப் பள்ளி
இந்த பல்சுவைப் பள்ளி (அறுசுவைப் பள்ளி) கதையை படிக்கும்போதே ஒவ்வொருவரின் டயலாகையும் மனதில் கற்பனை செய்து சிரித்து கொண்டிருக்கிறேன்...
//இந்த கதையில் வரும் கதாபாத்திரமும், அதன் பெயர்களும் உண்மையே. ஆனால், கதை கற்பனையே// இதை பார்த்ததுமே உள்ளே எதோ புதுவிதமாய் இருக்குனு படிக்க ரொம்ப ஆர்வர்ம் வந்திடுச்சு...
அறுசுவையில் அரட்டை என்பதே மகிழ்ச்சி அதிலும் இந்த கதைக்குள்ளும் ஒரு குட்டி அரட்டை. உங்க கற்பனை சூப்பர்.
அப்பறம் இதில் ப்ரேம்ஸ் மிஸ்ஸிங்... ஐ திங்க், இந்த நாளில் நான் க்ளாஸ் கட் அடிச்சிட்டு சீரியல் பார்க்க போய்ட்டேன் போல... ஐ மிஸ்டு டூ பார்டிசிபேட் இன் திஸ். சோ சாட்...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
குணான்னா
பாராட்டுக்கு நன்றிங்க குணான்னா. \\மேலும் பல கதைகள் எழுதுங்க\\ கண்டிப்பா. நன்றி.
உன்னை போல் பிறரை நேசி.
அனு செந்தில்
அனு செந்தில் பாராட்டுக்கு நன்றி. \\அறுசுவையின் நகைசுவைத் தென்றல்னு" உங்களை கூப்பிடத்தோனுது..\\ ஐயோ, நமக்கு பட்டம்லாம் வேணாம். அப்புறம் யாராச்சும், 'இது, நீங்க படிச்சி வாங்கின பட்டமா?' அப்படின்னு கேட்பாங்க. அது சோஓஓஓஒ சேட்ட்ட்...
உன்னை போல் பிறரை நேசி.
ரேணு சிஸ்டர்
ரேணு சிஸ், எனக்கும் கொஞ்சம் பயம் தான். நான் அத அப்படியே, நம்ம கதை செலேச்சன் டிம்கிட்ட கொடுத்திட்டேன். யாராச்சும் மனசு கஷ்டபடுவாங்கன்னா கதையை வெளியிட வேணாம்னு சொல்லிட்டேன். அப்புறம் மூணு நாள் கழிச்சி தான் கதை வந்ததும்ம்ம்.. இது அதுக்கு. பாராட்டுக்கு நன்றி சிஸ்.
உன்னை போல் பிறரை நேசி.
அருட்செல்வி சிஸ்டர்.
\\இவ்வளவு தூரம் நோட் பண்ணிருக்கீங்களே\\ உங்க கதை எல்லாம் நானும் படிச்சிருக்கேல்ல. பாராட்டுக்கு நன்றி சிஸ்டர்.
உன்னை போல் பிறரை நேசி.
சுவர்ணா சிஸ்டர்
வாழ்த்துக்கு நன்றி சிஸ்டர். \\உங்களிடம் இதுவரை பேசியது இல்லை\\ உங்களோட சமையல் குறிப்பு எல்லாம் படிக்கிறது உண்டு. ஆனா என்ன, ஈசியான குறிப்பு மட்டும் தான் செஞ்சு பார்த்து கமெண்ட் போடுவேன். நன்றி சிஸ்டர் கதையை படிச்சி, கமெண்ட் போட்டதுக்கு.
உன்னை போல் பிறரை நேசி.