
எல்லோரும் தீபாவளிப் பலகாரம் செய்துட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதோடு சேர்த்து எங்க பாட்டி செய்யும் தீபாவளி லேகியத்தையும் செய்து சாப்பிடுங்க.
நெய்யில் சுட்ட இனிப்பு, காரம் மற்றும் அசைவம் இப்படி வகை வகையா சாப்பிட்டு நம்ம வயிறு கொஞ்சம் அப்சட் ஆகி இருக்கும். இந்த லேகியத்தை சாப்பிட்டீங்கன்னா பலகாரம் எல்லாம் நல்லா சீரணமாகி வயிறு நம்மை வாழ்த்தும்.
ஓமம் சேர்த்து செய்வதால் வாய்வு கோளாறு வராமல் காக்கும். வயிற்றின் மந்த நிலையைப் போக்கும்.
தீபாவளி லேகியம்
தேவையான பொருட்கள்
சுக்கு = 25 கிராம்
ஓமம் = 50 கிராம்
கண்டந்திப்பிலி = 3 ஸ்பூன்
அரிசித்திப்பிலி = 3 ஸ்பூன்
சித்தரத்தை = 1 குச்சி
இளசான இஞ்சி = 1 துண்டு
மிளகு = அரை ஸ்பூன்
மல்லி = 1 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
இஞ்சியைத் துருவி வெயிலில் உலர்த்தவும். அனைத்துப் பொருட்களையும் உலர்த்தி லேசாக வறுத்து மிக்சியில் நன்கு பொடியாக்கவும்.
பொடி அரை டம்ளர் வரும். இதோடு வெல்லம் முக்கால் டம்ளர் சேர்க்கவும்.
நெய் = 3 கரண்டி
தேன் = 2 கரண்டி
நல்லெண்ணெய் = 1 கரண்டி
எல்லாவற்றையும் கலந்து அடுப்பிலிட்டு ஐந்து நிமிடங்கள் கிளறவும். கலவை அல்வா பக்குவம் வந்ததும் இறக்கவும். அதிக நேரம் அடுப்பில் இருந்தால் கலவை இறுகி விடும். அப்புறம் கல்லு போல கடிக்க கடினமா ஆயிடும். பக்குவமா சட்டியில் ஒட்டாமல் வந்ததும் எடுங்க.
இதை காலை வேளை ஒரு கோலி அளவு எடுத்து உருட்டி அப்படியே சுவைத்துச் சாப்பிடலாம்.
தீபாவளி சமயம் மட்டுமல்லாமல் வாரந்தோறும் அதாவது ஞாயிறு தோறும் உங்க வீட்டு வாண்டுகளுக்கு ஒரு உருண்டை கொடுத்து வந்தால் உணவு நல்லா சீரணமாகி வயிறு சும்மா கலகலன்னு இருக்கும். வயிற்றுக் கோளாறு எதுவும் வராது.
சுவையாக இருப்பதால் அப்படியே வாங்கி சாப்பிட்டு விடுவார்கள். சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க மாட்டாங்க.
எப்பவும் இந்த லேகியம் நம்ம வீட்டில் இருக்க வேண்டிய ஒன்று. கெட்டுப் போகாமல் ரொம்ப நாள் வரும்.
சில பொருட்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஓமம், சுக்கு ரெண்டும் ரொம்ப முக்கியம். செய்து பாருங்க தோழிகளே.

இன்னொரு டிப்ஸ் சொல்லிட்டுப் போறேன்.
உடம்பெல்லாம் வலி, கை காலெல்லாம் அசதி, ஜலதோஷம் வராப்பல இருக்குன்னு அப்பா சொல்லும் போதெல்லாம் அம்மா இதையே செய்து கொடுப்பாங்க.
சுக்கு, கண்டந்திப்பிலி ரெண்டையும் நைசா அரைத்து தேங்காய்ப்பால் ஒரு டம்ளர் விட்டு கருப்பட்டி போட்டு கொதிக்க வைத்து குடித்தால் களைப்பெல்லாம் பறந்து போயிடும். இதுவும் குடிக்க சுவையா இருக்கும்.
பை தோழிகளே !!!
இப்போ போயிட்டு அப்புறமா வரேன். நானும் பலகாரம் செய்யணும்.
Comments
நிக்கி எங்கவீட்ல குழந்தை
நிக்கி எங்கவீட்ல குழந்தை பெத்தா இப்படிதான் லேகியம் கொடுப்பாங்க தீபாவளிக்கு லேகியம் செய்வீங்களா சூப்பர் நிக்கி என்ன தீபாவளி வேளைகள் ஸ்டார்ட் ஆயாச்சா புல்லைங்க வந்துட்டாங்களா ஆளையா பார்க்கமுடியல ரொம்ப பிசிபோல அதிரசம் சரவனபவன்ல வாங்கினேன் நிக்கி ஊர்லயிருந்து வருதான்.நல்லபடியா தீபாவளி கொன்டாடுங்க தீபாவளிவாழ்த்துக்கள்
நிகிலா சிஸ்டர்
முன்கூட்டிய தீபாவளி நல்வாழ்த்துகள் . \\இந்த லேகியத்தை சாப்பிட்டீங்கன்னா பலகாரம் எல்லாம் நல்லா சீரணமாகி வயிறு நம்மை வாழ்த்தும்\\
வயிறும் தீபாவளி வாழ்த்து கூற வாழ்த்துகள்
உன்னை போல் பிறரை நேசி.
நிஷா
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி நிஷா.:)
அதிரசம் சரவணபவன்ல வாங்கியது குறித்து மகிழ்ச்சி.
தீபாவளி வேலை பிசி தான் நிஷா.
நீங்க மெஹந்தி நல்லா போடுவீங்கன்னா அதை அறுசுவை கைவினைப் பகுதிக்கு அனுப்புங்க நிஷா. பார்க்க காத்திருக்கேன்.:)
க்றிஸ்
உங்க அன்பான வாழ்த்துக்கு நன்றி சிஸ்:)
//வயிறும் தீபாவளி வாழ்த்து கூற வாழ்த்துகள்// ஆஹா, ஒரு 'உம்' போட்டதும் சூப்பரா அர்த்தம் வருதே, இது தான் க்றிஸ் என்பதோ:)
நிகிலா
ஹாய்,
//தீபாவளி லேகியம்// பயனுள்ள பதிவு.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
நிகி
எனக்கு இந்த முறை லேகியம்க்கு வேலை இருக்காது. ஒரே பிசி. பலகாரம் எதுவும் வேண்டாம்ன்னு அவர் தடா. இருந்தாலும் தெருவில் இருக்கிற பாதி வீட்டுல இருந்து எங்களுக்கு பலகாரம். வந்துடும். . லேகியம் சூப்பர்.
Be simple be sample
நிகி
பலகாரம் பண்றவங்க சாப்பிடுறவங்களுக்கு தான் லேகியம் எல்லாம் ;) நான் தான் எதுவுமே பண்ண மாட்டனே. ஹிஹீ. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நிகி அக்கா
தீபாவளி லேகியம் மிகவும் உபயோகமான இழை ... :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
நிகி
இந்த தீபாவளி லேகியத்தைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன், ஆனா இதுவரை செய்ததும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை....
என்னவோ இதுவரைக்கும் அதுக்கான அவசியமும் ஏற்படலை...
உங்க 2 வது ஃபோட்டோவைப்பார்த்து, ஏதோ சுக்கு டீயோன்னு நினத்தேன்....ஆனால் என்க்கு ஒரு சந்தேகம்......///தேங்காய்ப்பால் ஒரு டம்ளர் விட்டு கருப்பட்டி போட்டு கொதிக்க வைத்து/// இது திரிந்துபோய்விடாதா?
தீபாவளி சமயத்தில் தேவையான பதிவு நிகி.....
ரஜினி
//பயனுள்ள பதிவு.// மிக்க நன்றி தோழி:)
ரேவா
//லேகியம் சூப்பர்.// நன்றி. குட்டீசுக்கு வாரந்தோறும் கொடுத்தால் நல்லது ரேவா.:)
//தெருவில் இருக்கிற பாதி வீட்டுல இருந்து எங்களுக்கு பலகாரம். வந்துடும்// ஆமா ரேவா, நாங்களும் ஸ்வீட் பாக்கெட் வாங்கி கொடுத்து விடுவோம்.:)
வனி
//பலகாரம் பண்றவங்க சாப்பிடுறவங்களுக்கு தான் லேகியம் எல்லாம் ;) நான் தான் எதுவுமே பண்ண மாட்டனே. ஹிஹீ. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு ரொம்பவும் நன்றி வனி.:)
நீங்க தான் சமையல் குயின் ஆச்சே. அடிக்கடி பலகாரம் செய்தால் அது சாதாரண விஷயமாகிடுது இல்லியா.:)
உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்:)
கனி
உங்க பதிவுக்கு நன்றி கனி:)
அனு
//இதுவரை செய்ததும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை....//
இனி ட்ரை பண்ணி பாருங்க அனு.:)
//திரிந்துபோய்விடாதா?// திரியாது. நல்லாவே இருக்கும். எங்க அம்மா அடிக்கடி செய்வாங்க. அசதியா இருந்தால் கொடுக்கலாம்:)
உங்க பதிவுக்கு நன்றி அனு
லேகியம்
நிகி நல்லதொரு பகிர்வு. நான் இதுவரை இது போன்ற லேகியம்லான் செய்ததே இல்லை. முயற்சிக்கிறேன் :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள்
செய்து சுவைத்துப் பாருங்க. வயிறு மட்டுமல்ல நாவும் வாழ்த்தும்.:)
NIKI
அன்புத்தோழி இதுபோன்ற லேகியங்கள் நமது கலாச்சாரத்தை பறைசாற்றுகின்றன். அதனை உயிர்ப்பிக்கும் உங்களுக்கு நன்றி..!
தமிழ்
அன்பு தோழி தமிழ்
//கலாச்சாரத்தை பறைசாற்றுகின்றன்.// ஆமாம் தோழி. விதவிதமாக சமைக்கக் கற்றுக் கொடுத்த முன்னோர்கள் உணவே மருந்தாகும் வழியையும் சொல்லியிருக்காங்க. அதனை நாம் மறவாமல் கையாள வேண்டும்.
உங்க பதிவுக்கும், கருத்துக்கும் நன்றி தோழி:)
நிகி
லேகியம் கேள்வி பட்டுருக்கேனே தவிர செய்ய தெரியாது பயனுள்ள பதிவு சூப்பர் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவா
எப்போதுமே வீட்டில் வைத்திருக்கலாம். ரொம்பவும் பயன்படும்.
மிக்க நன்றி சுவா:)