
கதையின் முதல் பாகம் - http://www.arusuvai.com/tamil/node/29635
கிளிக் என்ற மிதமான சத்தத்துடன் நம்ம ஹீரோவோட இதயம் நம்ம ஹீரோயினை ஃபோட்டோ எடுத்தாச்சுங்க. இருவரின் இனிய சந்திப்பின் நினைவிலேயே தீபாவளியையும் இனிமையாக கொண்டாடினாங்க இருவரும் ( தனித்தனியே).
ஜானகியை அழைத்த ராஜீவ் அவள் அருகே வரும்முன் தன் திட்டத்தை நண்பர்களிடம் சொன்னான். வேற என்னங்க புதுசா சொல்லப்போறான்? இளையோரை எப்படி கொஞ்சமா ரேகிங் பண்ணலாம்னுதான்.
டேய் ராஜீவ் வேணம்டா, எல்லாரும் சேர்ந்துட்டு புதுசா வரவங்கள ரொம்ப கிண்டல் பண்றீங்கன்னு கெளதம் எவ்வளவு சொல்லியும் கேட்கல அவங்க டீம்.
போடா போடா பயந்தவனே... நீ நல்லவனா இரு எங்களையும் ஏன்டா மாத்தற? நண்பர்களின் கேலிப்பேச்சு கேட்காத தூரம் செல்லும் நம்ம ஹீரோவைத்தான் கிண்டல் செய்கின்றனர் அனைவரும்.
சாதரண ரேகிங்தானேன்னு சென்ற ஜானகி மிரட்சிப்பார்வையுடன் திரும்பினாள்.
அவர்கள் சொன்ன செயலை செய்து முடித்திட துணையாக தன் தோழிகளை அழைத்தாள். ஆனால் யாரும் உடன் வருவதாக இல்லை.
மான் விழிகள் மருட்சியுண்டு மேலும் விரிய அந்த அறைக்கதவை தொடப்போன ஜானகி திரும்பினாள், டாஸ்க்கை சொன்ன ராஜீவ் டீம் இப்ப அந்த இடத்தில் இல்லை. பயம் மனதுள்ளே கிடக்கட்டும், கொஞ்சமேனும் தைரியமில்லைன்னா எப்படி? என்று தனுக்குத்தானே கேட்டுக்கொண்டு மீண்டும் தொட்டாள் கதவை,
"உன் பட்டுக்கரங்கள்
என்மீது மென்மையாக
வேணும் படாதோ என்று காத்திருந்தேன்."
_ என்பதுபோல திறந்துகொண்டது அறைக்கதவு. குப்பென்ற வாடை வீச மூக்கு நுனி சிவந்திட, பயம் அகன்றிட ஷஷ்டி கவசம் பாடிய அவளின் செவ்விதழ்களை இதமாக அழுத்தியது ஒரு கரம்.
மயில்தோகையென மயங்கிச் சரிந்த அவளை தன் தேக்கு தோள்களில் சாய்த்துக் கொண்டான் கெளதம்.
இருட்டு மங்கிக்கிடக்கும் அந்த பிணவறையில் இவளின் மயக்கம் தெளிவிக்க தண்ணீருக்கு எங்கேபோகவென திகைத்தான் கெளதம். ஆனால் சில நிமிடங்களிலேயே வியர்வையின் உதவியால் விழிகள் திறக்க கெளதமின் முகம் பார்த்து தெளிந்தால் ஜானு.
ஆமாங்க, பிணவறையில் உள்ள ஒரு பிணத்தின் கைரேகையை தனியே சென்று கொண்டுவரணும் என்பதே ரேகிங்கில் இவளுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். தன் கைரேகையை நோட்டில் பதித்து கொடுத்து போகச் சொன்னான் கெளதம்.
தாங்க்ஸ், சொல்லிவிட்டு சிறு புன்னகை உதிர்த்தவள், கெளதமின் மின்னல் சிரிப்பால் வசீகரிக்கப்பட்டாள்.
என்னடா நீ? இப்படியா கோவிச்சிட்டு வருவ? அந்தபொண்ணு இப்ப அங்கபோய் பயந்துபோ..யி..ரு... பேச்சை நிறுத்தினான் ராஜீவ். இவன் வருகையை கவனிக்காமல் கையில் உள்ள மையை துடைப்பதில் கவனமாக இருக்கும் கெளதமை கேலி செய்தான்.
மச்சீ மாட்டிட்டயா? நிஜமா காதல்ல மாட்டீட்டயா என்று கேட்டு, கண்டிபிடித்து குதூகலிக்கும் நண்பனிடம் எப்படி மறைப்பது? அவர்கள்தான் நண்பேண்டா.... ஆயிற்றே.!
அன்று ஒன்றான பார்வை,
இன்று தொடர்கிறது,
இனியும் தொடரும்,
வாழ்க்கைப் பயணத்தில்...
படிப்பில் தெளிவானார்கள், வாழ்க்கையில் ஒன்றானார்கள். அவ்வப்போது இருவரையும் சீண்டுபவன் ராஜீவ் மட்டுமே... அவன் மட்டும் இல்லைன்னா இவர்கள் இருவரின் காதலும் ஸ்டெதஸ் கோப்பும், கால்ஃபாலும் கைகோர்க்க, டீ மினிக்கோடு இஞ்சக்ஸன், ஸ்பைனல் இஞ்சுரி, இப்படி சென்றிருக்கும். என்ன கொடுமைங்க நண்பன் இல்லைன்னா ஒழுங்கா காதலிக்ககூட மாட்டேங்கறாங்க போங்க.
எத்தனை நண்பர்கள் இருந்தாலும் இவர்கள் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் நண்பேண்டாங்க. அன்பானவன், நம்பகமானவன். ஆனாலும் ஜானகி அண்ணான்னு அழைக்கும் பொழுதெல்லாம் பொய்யாய் வருந்தி, மெய்யாய் மகிழ்பவன்.
ஜானகி கெளதம் இவங்க நடுவில் கரடிபோல இந்த ராஜீவ். இவங்க வாழ்க்கை எத்திசையில் எப்படி போகிறதுன்னு வரும் பாகங்களில் பார்க்கலாம்.
Comments
ரேணுகா மேடம்
அருமையான வர்ணனை, அழகான தொடர்ச்சியுடன் கதை ரொம்ப நல்லாயிருக்குங்க.
சிறு பிழைகளை சரி செய்துகொள்ளுங்கள். திரும்பினால்& நிருத்தினான் ( ள், று)
ரொம்ப அருமைங்க. மேலும் எழுதுங்க.
நட்புடன்
குணா
குணா,
மகிழ்ச்சிங்க, தங்களின் வருகைக்கும் பதிவிற்கும். திருத்திவிட்டேன் நீங்கள் சுட்டிக்காட்டிய பிழைகளை. மேலும் படித்து பிழை இருப்பின் கண்டிப்பா தெரிவிக்கவும். தேங்க்ஸ் :)
முன்னே ஷேக் என ஒரு நண்பர் இருந்தார் நம் அறுசுவையில். எனக்கு பிழை திருத்தமும், எழுதும் முறைகளையும் அவர் சொல்வார். இப்போ நீங்க. அவர் வந்தால் இன்னும் நல்லா இருக்கும்.
ரேணு
கதை சூப்பரா போகுது தொடருங்க....
ஒரு திருத்தம் ' மெய்யாய் மகிழ்பவன்'னுவர வேண்டும்
ரேணு
ரேணு அடுத்த பாகமும் போட்டாச்சு, படிக்க சுவாரஸ்யமா இருக்கு, தொடர்ந்து எழுதுங்க :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அருள்,
தேங்க்ஸ் அருள், (வலிச்சும் வலிக்காதது மாதிரி காட்டுறீங்களோ!) நிஜமாவே நல்லாயிருக்கா?
பிரியா,
தேங்க்ஸ் பிரியா, மாற்றிவிட்டேன்.தொடர்ந்து படிக்கனும்.
அட
நிசமாத்தேன் சொல்றேன் தொடர்ந்து எழுதுங்க :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
இதயம் - 2
சூப்பரா போகுது ரேணு சிஸ்டர். சீரியல் எபிசோட் முடிக்கிறமாதிரி, சஸ்பென்ஸ்ஸோட முடிச்சிரிக்கீன்களே. அடுத்த பார்ட்க்காக வேய்ட் பண்ணுறோம்.
உன்னை போல் பிறரை நேசி.
அழகு கதை
ரொம்பவே எதார்த்தமாக போகிறது கதை தொடருங்க ரேணு அக்கா.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
ரேணு
கதை ஜெட் வேகத்தில் செல்கிறது.
படிக்க சுவாரசியமாக இருக்கும் விதமாக எழுதி இருக்கீங்க.
தொடருங்க ரேணு.:)
renuka
ஹாய் ரேணு. டிவிஸ்ட் வச்சே முடிக்கிறிங்களே. நல்லா எடுத்து போறிங்க கதையை. தொடருங்க
Be simple be sample
ரேணுகா
நல்லா இருக்குங்க இந்த பாகமும் :) தொடருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கிரிஸ், சுபி, நிகி
கிரிஸ் அப்போ சீரியல்க்கு போயிடலாமா? ஹி ஹி..
சுபி தேங்க்ஸ் பா...
நிகி, ஜெட் வேகத்திலா? நிகி இது தொடர் கதை. சோ ஒவ்வொரு சீனையும் இழுக்கிறேன். கிண்டல் பண்ணாதீங்க. :) தேங்க்ஸ் நிகி வருகைக்கு.
ரேவ்ஸ், வனி,
தேங்க்ஸ் ரேவ் அண்டு வனி, கதை படித்தமைக்கும், கருத்துக்கு....:)