சமைக்காமல் அசத்தலாம்

சூரிய‌ ஒளியில் சமைக்கப்பட்ட‌ உணவுகளே பழங்கள் ஆகும். சமைக்காமல் உண்பதென்றால் நமக்கும் வேலை எளிது தானே. சமைக்காமல் அப்படியே சாப்பிடும்போது முழுச்சத்தும் நமக்குக் கிடைக்கிறது. அப்படிப்பட்ட‌ மூன்று குறிப்புகளை இங்கே காணலாம்.

கறிவேப்பிலை கீர்

கறிவேப்பிலை = 1 கப்
தேங்காய்துருவல் = 1 கப்
வெல்லம் = தேவைக்கேற்ப‌
ஏலக்காய் = 2

அனைத்துப் பொருட்களையும் மிக்சியில் போட்டு அரைத்து ஒரு டம்ளர் நீர் விட்டு கலந்து வடிகட்டவும்.

கறிவேப்பிலை கீர் ரெடி. இது சுவையான‌ பானம் ஆகும். கூந்தல் வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும். பித்தத்தைப் போக்கும்.

நினைவில் கொள்ளுங்கள். தேங்காயின் அளவு குறையக் கூடாது. ஏலக்காயும் அவசியம் போட‌ வேண்டும்.

பப்பாளி பௌல்

பப்பாளி = 1
எலுமிச்சம்பழம் = 1
தேன் = தேவைக்கேற்ப‌

பப்பாளிப் பழத்தை குறுக்குவாட்டில் வெட்டி விதைகளை நீக்கவும். அப்படியே கிண்ணம் போல‌ வைத்துக் கொண்டு ஸ்பூன் மூலம் சதைப் பகுதியை எடுத்து அதிலேயே போட்டு தேன், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து கலக்கவும்.
ஸ்பூனால் எடுத்து சுவைக்கவும்.

பப்பாளி பிடிக்காதவங்க‌ கூட‌ அப்படியே காலி பண்ணிடுவாங்க‌. இதைத் தயாரிக்க‌ பாத்திரம் கூட‌ தேவையில்லை. ஸ்பூன் மட்டுமே போதுமானது, செம‌ டேஸ்டான‌ குறிப்பு இது. கட்டாயம் ட்ரை பண்ணிப் பாருங்க‌. இதிலும் விரும்பினால் தேங்காய்ப் பால் கொஞ்சம் சேர்க்கலாம்.

இந்த‌ விழுதை அப்படியே பேக் போல‌ முகத்திற்கு ஃபேஷியலாக‌ அப்ளை செய்யலாம். பப்பாளி இறந்த‌ செல்களை அகற்றி முகத்திற்கு பளபளன்னு ஃப்ரெஷ் லுக் கொடுக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ்

பெரிய‌ நெல்லிக்காய் = 2
தேன் = தேவைக்கேற்ப‌
இஞ்சி, புதினா ‍ = சிறிது

மிக்சியில் அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்ட‌ ஜூஸ் ரெடி.

ஔவையார் அதியமானுக்கு அளித்தது நெல்லிக்கனி என்றால் இதன் மகிமையை நான் மேலும் உரைக்கவும் வேண்டுமோ? தினமும் அருந்தி வர‌ முடி நரைக்காது. இளமைத் தோற்றம் நீடிக்கும்.

தோழிகளே மூன்றையும் செய்து பார்த்து சொல்லுங்கள். கறிவேப்பிலை கீர் எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை தயாராகும். சுவைக்கு நான் கேரண்டி...

5
Average: 5 (7 votes)

Comments

ம்! எல்லாமே நல்லா இருக்கு. ஆனால்... 1. இங்கு வரும் கறிவேப்பிலையை சமைக்காமல் பச்சையாக... எவ்வளவு பாதுகாப்பு என்று தெரியவில்லை. ;(
2. எப்போதாவதுதான் பப்பாளி கண்ணில் படும். 3. நெல்லிக்காய் கிடைக்கவே கிடைக்காது. ஹ்ம்! பெருமூச்சு விட்டுட்டுக் கிளம்புறேன். டாட்டா. ;)

‍- இமா க்றிஸ்

முத்தான மூன்று குறிப்புகள். இந்த மூன்றுமே இங்கு கிடைக்கும். ஆகவே கட்டாயம் செய்துபார்க்கிறேன்.
சூபர்ப்:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சத்தான குறிப்புகள் சூப்பர்.......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பயனுள்ள‌ நல்ல‌ பதிவு!படங்களும் அழகோ அழகு...
நிச்சயம் ட்ரை செய்கிறேன்.
வாழ்த்துகள்!!

அக்கா சமைக்காமல் அசத்தலாம் ரொம்ப‌ ரொம்ப‌ ஈசியான‌ ரெசிபியோட‌ அருமையான‌ பதிவு .. மூன்று குறிப்புமே அருமை..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எல்லாமே அருமையான‌ நல்ல‌ குறிப்பு, ஆரோக்கியமானதும் கூட‌.....
3 படங்களுமே அழகு,
கருவேப்பிலை உடனே ட்ரை பண்ணலாம்.........

ஆனா நாம‌ எதுலாயவது ஒரு இலை இருந்தாலும் தேடி பிடிச்சி ஓரம் கட்ற‌ ஆளே...... நிகி அக்காவுக்கா ஒரு தடவை ரிஸ்க் எடுக்கிறேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

குறிப்பு ஒவ்வொன்னும் ரொம்ப சூப்பர். ஈசியான குறிப்பு குடுத்து, அதோட மருத்துவ பலன்களையும் குடுத்து இருக்கீங்க. செய்யாம இருக்க முடியுமா. நெல்லில உள்ள கசப்புனால, பாதிக்கு மேல உள்ள போகாது. இப்ப ஈசியா இரண்டா சாப்பிடலாம். சூப்பர் நிகிலா சிஸ்டர்.

உன்னை போல் பிறரை நேசி.

Mikavum arumai super arokiyamana kuripu .

நிக்கி மூன்றுமே முத்தானது கன்டிப்பா எல்லாருக்கும் உபயோகமானது நான் கன்டிப்பா சேர்த்துகிரேன் நீங்க இன்னும் இதுபோல் நிரைய நல்லவிஷயம் சொல்லுங்க மெசேஜ் பாத்தேன்

சூப்பர் :) எல்லா ரெசிபியும் இப்படியே ஷேர் பண்ணிடலாம்னு முடிவா?? ;) இம்புட்டு அழகா படம் போட்டு யாரும் சமைக்கலாம்கு எப்ப குறிப்பு அனுப்புவீங்க? வனி வெயிடிங்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா,
பச்சையாக‌ உண்ணும் முன் நீரில் உப்பு, மஞ்சள் பொடி கலந்து அதில் கறிவேப்பிலையை கால் மணி நேரம் ஊறப் போட்டு எடுங்க‌. மஞ்சக் குளிச்சு சும்மா பவித்திரமா மாறியிருப்பாங்க‌.

நான் பழங்கள், காய்கறிகளை இம்முறையில் தான் குளிப்பாட்டுகிறேன். இமா.

மூன்றுமே சூப்பரான‌, ஹெல்தியான‌ குறிப்புகள்.....

பப்பாளியும், நெல்லிக்காயும் அப்படியே சாப்பிட்டுவிடுகிற‌ வழக்கம்தான் இதுவரை, இனிமேல்தான் உங்க‌ குறிப்பை டிரை செய்யனும்....

கறிவேப்பிலை பொடி, சட்னி, மற்றும் குழம்பு இவையெல்லாம் செய்யறதுண்டு, ஆனா இந்த‌ கீர் ரொம்ப‌ புதுசு!......

இன்னும் நிறைய‌ குறிப்புகள் குடுங்க‌ நிகி, எல்லாமே ரொம்ப‌ நல்லா இருக்கு.....

//முத்தான மூன்று குறிப்புகள்.//
உங்க‌ கனிவான‌ கருத்துக்கு நன்றி அருள்.
சொன்னதோடு நில்லாமல் அவசியம் செய்து பார்க்கணும்:)

மூன்றுமே மிகவும் சத்துள்ளவை. அடிக்கடி உண்வில் இடம் பெற‌ வேண்டும்..
உங்களோட‌ அன்பான‌ பதிவுக்கு நன்றி சுவா:)

முதலில் வாழ்த்துக்கு நன்றி தோழி.:)
//பயனுள்ள‌ நல்ல‌ பதிவு!படங்களும் அழகோ அழகு...
நிச்சயம் ட்ரை செய்கிறேன்//
அவசியம் ட்ரை பண்ணுங்க‌ பா. ஒருமுறை சுவைத்தால் மீண்டும் சுவைக்க‌ தோன்றும்.

கனி
ஆம் எல்லாமே அடுப்படிக்குச் செல்லாமல் ஈசியா செய்யலாம்.
கருத்துக்கு நன்றி கனி:)

சுபி
மிக்க‌ நன்றி.
//எதுலாயவது ஒரு இலை இருந்தாலும் தேடிப் பிடிச்சி ஓரம் கட்ற‌ ஆளு//
இங்கேயும் அதே கதை தான் சுபி. ஆனால், தேங்காய் தூக்கலா போட்டால் ரொம்பவும் டேஸ்டியா இருக்கும்.ஏலக்காய் மண‌ம் மேலும் குடிக்கத் தூண்டும்.
ரிஸ்க் லாம் இல்லே. தைரியமா ட்ரை பண்ணுங்க‌ சுபி:)
நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

க்றிஸ் சிஸ்டர்
உங்க‌ அன்பான‌ பதிவுக்கு மிகவும் நன்றி:)
மருத்துவ‌ பலன்களில் நெல்லிக்கு ஈடு இணையில்லை.
இனி ஈசியா இரண்டிரண்டா சாப்பிடுங்க‌. பலன்களை டபுளா அள்ளுங்க‌:)
நன்றி தோழி.

//arokiyamana kuripu// .உண்மையே.. உணவே மருந்தாக‌ சாப்பிட்டால் நாம் ஆரோக்கியமாக‌ வாழலாம்.
உங்க‌ கருத்துக்கு மிக்க‌ நன்றி பாலபாரதி:)

நிஷா
நிறைய‌ நல்ல‌ விஷயந்தானே சொல்லிட்டாப் போச்சு. என்ன‌.... நீங்க‌ கண்டிப்பா ஃபாலோ பண்ணனும் சரியா நிஷா:)
பதிவுக்கு மிக்க‌ நன்றி நிஷா

வனி
இம்புட்டு அழகா கமெண்ட் கொடுத்த‌ வனிக்கு முதலில் நன்றி:)
வனிக்காக‌ கை வலி பற்றி, ஒரு பதிவு போட‌ நானும் படத்துக்காக‌ வெயிடிங்.
படம் காட்டுறது தானே நமக்கு கஷ்டமான‌ காரியமா இருக்கு.:)
முயற்சி பண்ணுறேன் வனி:)

அனு
//பப்பாளியும், நெல்லிக்காயும் அப்படியே சாப்பிட்டுவிடுகிற‌ வழக்கம்தான்// இது ரொம்ப‌ நல்ல‌ விஷயம் ஆச்சே அனு.
சாப்பிட‌ அடம் பிடிக்கிறவங்க‌ இப்படி கொடுத்தா கட்டாயம் சாப்பிடுவாங்க‌.
என் குட்டீசுக்கு இந்த‌ பப்பாளி பௌல் ரொம்பப் பிடிக்கும். இப்படிக் கொடுத்தால் தான் சாப்பிடுவாங்க‌.:)

//இந்த‌ கீர் ரொம்ப‌ புதுசு!......// ட்ரை பண்ணுங்க‌ அனு. சுவையும் புதுசா இருக்கும்.
உங்க‌ கருத்துக்கு மிக்க‌ நன்றி அனு.:)

முத்தான குறிப்புகள். எனக்கு எல்லாமே எ சாப்பிட கஷ்டமான விஷ்யம். முயற்சிக்க. முயல்கிறேன்.

Be simple be sample

Wow superb! intha mathri neraiya kudunga! namakku samakkirathuna romba kastam....!

தைரியமா சாப்பிட்டுப் பாருங்க‌. சுவையாகவே இருக்கும்.
பதிவுக்கு நன்றி ரேவா: )

சமைப்பதென்றால் ரொம்ப‌ கஷ்டமா ?
அப்படீன்னா சமைக்காமல் அசத்துங்க‌
நன்றி சுபா;)

அன்பு நிகிலா,

3 குறிப்புகளுமே ரொம்ப நல்லா இருக்கு. பப்பாளி அவ்வளவா வாங்கறதில்லை. மத்த 2 ஜூஸும் ட்ரை பண்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதா
//3 குறிப்புகளுமே ரொம்ப நல்லா இருக்கு//
மிக்க‌ நன்றி ;)
எல்லாமே டேஸ்டா இருக்கும். அவசியம் செய்து பாருங்க‌.
உங்க‌ அன்பான‌ பதிவுக்கு நன்றி சீதா.