தேதி: October 27, 2014
ட்யூலிப் செய்ய :
திராட்சை
அகலமான வளைந்த முனை கொண்ட காரட் பீலர் / அகலமான U வடிவ டூல்
கத்தி
வெண்காயத் துளிர்கள்
லாவண்டர் பூ தண்டுகள்
டூத் பிக்
காரட் வாஸ் செய்ய :
முற்றிய காரட்டின் மொத்தமான பக்கம் - 5 அல்லது 6 செ.மீ நீளத் துண்டு
கத்தி
பீலர்
சிறிய V வடிவ டூல்
சிறிய ( வடிவ டூல்
ட்யூலிப் செய்வதற்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும்.

டூலின் முனையை திராட்சையின் காம்புப் பகுதியிலிருந்து மூன்றில் இரண்டு பாகம் தள்ளி, மெதுவாக உள் நோக்கி அழுத்தவும்.

அழுத்தும் போதே ஒரு பக்கம் சற்றுச் சரித்துக் கீழே இறக்கி வெட்ட வேண்டும். ஆரம்பித்த இடத்திலிருந்து தொடங்கி மீண்டும் மறு பக்கமும் இதே போல வெட்ட வேண்டும். இப்படியே நான்கு இதழ்கள் வெட்டி, தேவையற்ற பகுதியை நீக்கிவிடவும். சதைப் பகுதியையும் கத்தியால் சிறிது குடைந்து நீக்கிவிடவும்.

காம்பு இருந்த இடத்தில் லேசாக ஒரு முறை குற்றவும். (ஆழமாகக் குற்ற வேண்டாம்). இதன் வழியே லாவண்டர் தண்டினைச் சொருகவும். இறுக்கமாக இல்லாவிட்டால் பார்வைக்குத் தெரியாதபடி இன்னொரு சிறு துண்டைச் சேர்த்துச் சொருகிவிடவும்.

வெண்காய துளிர்களின் நடுவிலும் லாவண்டர் தண்டுகளைச் சொருகித் தயாராக வைக்கவும்.

காரட் வாஸ் செய்வதற்கு வேண்டிய பொருட்களைத் தயாராக வைக்கவும்.

காரட்டின் தோலை மெல்லிதாகச் சீவி எடுக்கவும்.

தலைப் பகுதியை நேராக வெட்டி நீக்கவும். மேசையில் வைத்துப் பார்த்து, காரட் துண்டு சரிந்து நிற்குமானால் அதற்கேற்ப திருத்தி வெட்டிக் கொள்ளவும்.

வாஸ் எங்கு வளைந்தாற் போல் வர வேண்டுமோ அந்த இடத்தில் சுற்றிலும் கத்தியால் ஆழமில்லாத அடையாளம் ஒன்று செய்து வைக்கவும். இது போல வாஸின் மேல் விளிம்பிலும் ஒரு வட்டம் அடையாளமிட்டுக் கொள்ளவும்.

முதலில் மேற் கோட்டிலிருந்து கீழ் நோக்கி நடுவில் சற்று ஆழம் வருமாறு சரிவாக வெட்டவும். சுற்றிலும் இது போல வெட்ட வேண்டும். எல்லா வெட்டுக்களையும் கிட்டத்தட்ட ஒரே உயரத்தில் நிறுத்தவும்.

இனி கீழ்க் கோட்டிலிருந்து மேல் நோக்கி முதலில் வெட்டி வைத்ததோடு சேருமாறு வெட்டி முடிக்கவும்.

அங்கங்கே தெரியும் சிறு விளிம்புகளைக் கத்தியால் சுரண்டி சீர்ப்படுத்தவும். அடிப்படை இது தான். சாடியின் வடிவத்தை உங்களுக்குப் பிடித்த விதமாக அமைத்து எடுக்கலாம். விரும்பினால் V வடிவ டூலைக் கொண்டு சுற்றிலும் கோடுகள், பூக்கள் வரைந்து கொள்ளலாம்.

வாய்ப் பகுதியில் உட்பக்கம் U டூலை வைத்து மெதுவே வட்டமாகக் குடைந்து நீக்கினால் விளிம்பு மெல்லியதாகும்.

வாஸை ஆழமாக்குவதற்கு, முதலில் கத்தியின் கூர் முனையை உள்ளே சரித்துப் பிடித்தவாறு சுழற்றிக் குடைந்து எடுக்க வேண்டும்.

பிறகு வளைவான டூலைக் கொண்டு உள் நோக்கிச் சுரண்டினால் வாஸின் கழுத்துப் பகுதியை ஆழமாக்கலாம். (கவனமாகச் செய்யாவிட்டால் வாஸ் உடைந்து போகும் அபாயம் இருக்கிறது).

வாஸின் உட்புறம் டூத் பிக்கினால் ஆழமான துளைகள் செய்துவிட்டு, தயாராக வைத்துள்ள ட்யூலிப் பூக்களையும் இலைகளையும் கவனமாகச் சொருகிவிடவும். மேலே பூக்களின் பாரம் ஒரே பக்கம் சாராமல் பரவலாக இருக்குமாறு அலங்கரிக்கவும். வாஸின் அளவைப் பொறுத்து உள்ளே ஒன்று அல்லது ஒன்றரை தேக்கரண்டி நீர் விடலாம்.

Comments
கேரட் பூந்தொட்டி
இமா கண்ணை கவரும் விதத்தில் இருக்கு கேரட் வேஸூம், திராட்சை
ட்யூலிப்பும் :) கேரட்டை சொப்பு போல அழகா செதுக்கி இருக்கீங்க.
( சிறுவயதில் மரத்தாலான ஆட்டுக்கல், உரல், சமையல் சாமான்லாம் வெச்சு விளையாடிய ஞாபகம் வந்துடுச்சு, அதைப்பார்த்து அப்படியே மழை நாட்களில் களிமன்ணில் செய்வதுண்டு).
திராட்சை எப்படி நீங்க சொன்னபடிலாம் கேட்குது, அழகா ஆப்ரேசன் பண்ணி இருக்கீங்க :))
நீங்க டீச்சரா?? டாக்டரா ?? :))))
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ட்யூலிப்
இந்த ட்யூலிப்ஸ் எனக்கே எனக்குத்தான். யாருக்கும் தரமாட்டேனே!
கைகளில் மந்திரம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா என்ன !
ஏற்கெனவே அல்லிக்குளத்தைப் பார்த்து விட்ட ஜொள்ளே இன்னும் நிக்கல.
அன்புடன்
ஜெயா
வாஸ்
வாஸ் டெரகோட்டா ஜாடி போல இருக்கு.. க்யூட் அன்ட் நீட்.. சூப்பர்மா
இமாம்மா
காரட் வாஸில் திராட்சை ட்யூலிப்கள் சோ க்யூட் உங்கள மாதிரியே ...:)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
காரட் வாஸில் திராட்சை
காரட் வாஸில் திராட்சை ட்யூலிப்கள்
இமா அம்மா ரொம்பவே அழகா இருக்கு, காரட் வாஸ் இன்னும் அருமை.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
immamma.
சான்சே இல்லை..செம க்யூட்.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
அருள்
பூக்களோடு இருப்பது முதல் தடவை செய்த வாஸ். அப்போது படம் எடுத்திருக்கவில்லை. பிறகு தான் அனுப்பலாம் என்று தோன்றிற்று. ஒரு தடவை செய்தது போல இன்னொரு முறை செய்யப் பிரியப்படுவது இல்லை. இரண்டாவது தடவை கூசா வடிவத்தில் செய்தேன். அதைப் படம் எடுத்து எல்லாவற்றையும் கலந்து குறிப்பாக அனுப்பியிருக்கிறேன்.
//மரத்தாலான ஆட்டுக்கல், உரல்,// :-) அழகு இல்லையா அவை! காரட் கடைய ஒரு லேத் கிடைக்க வேண்டும். காரட்டும் குண்..டாகக் கிடைக்க வேண்டும். ஐடியா கொடுத்துட்டீங்க. பார்க்கலாம். :-)
நன்றி அருள்.
- இமா க்றிஸ்
ப்ரியா ஜெயராம்
//டெரகோட்டா ஜாடி போல// :-) மிக்க நன்றி. உங்கள் கருத்து மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆசையில் 3 நாட்கள் ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்தேன். பிறகு ட்ரிக்ஸிக்கு சாப்பிடக் கொடுத்தாயிற்று. :-)
- இமா க்றிஸ்
இமா
சோ க்யூட் பா.
இது போல பீட்ரூட், முள்ளங்கியிலும் செய்து மூணு கலர்ல வாஸ் வைக்கலாம் இல்லியா?
ரொம்பவும் அழகு தோழி:)
காரட், முள்ளங்கியில் புல் மாதிரி செய்வதைப் பார்த்திருக்கேன்.
அதாவது பாதி கேரட்டின் மீது புல் போல செதுக்கி விடணும். செய்து பாருங்களேன்
ஜெயா & டீம்...
மந்திரம் எதுவும் இல்லை. நீங்கள் செய்தாலும் இப்படி வரும் ஜெயா.
//அல்லிக்குளத்தைப் பார்த்து விட்ட ஜொள்ளே இன்னும் நிக்கல.// அவ்வ்!! இதை டீம் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். :-)))
அல்லிக் குளம் கூட பெரிதாக வேலை இல்லை. ட்ரை பண்ணுறீங்களா ஜெயா? :-)
- இமா க்றிஸ்
ட்யூலிப்
//சோ க்யூட் உங்கள மாதிரியே// ;) தாங்க்ஸ் கனி. :-))
அன்பு சுபிக்கும் ராஜிக்கும் என் நன்றிகள். :-)
- இமா க்றிஸ்
நிகிலா
ஆமாம், அழகாக இருக்கும். அது இரண்டும் இங்கு வாங்குவதில்லை. ;(
காரட்... ட்ரிக்ஸிப் பெண்ணுக்காக நிறைய வாங்குவோம். நான் விளையாடி முடிந்ததும் சாப்பிடக் கொடுத்து விடுவேன். :-)
- இமா க்றிஸ்
இமா
நிஜமாவே கையில் மந்திரம் ஏதும் இருக்கு போல... இவ்வளவு அழகா!! சான்ஸே இல்ல... சூப்பர்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமாம்மா
சூப்பரா இருக்கு உங்க திறமைய எங்களுக்கும் அழகா சொல்லி கொடுக்கிறீங்க நன்றி..
நானும் முயற்ச்சி செய்து பார்கிறேன்...
இமா அம்மா
அருமையான படைப்பு.
எல்லா புகழும் இறைவனுக்கே
காய், கனிகளில் கலைவண்ணம்
"கல்லிலே கலைவண்ணம் கண்டான்" தெரியும்....
காய்களிலும், கனிகளிலும் கலை வண்ணம்!
அருமை! புதுமை ! பார்ப்பதற்கோ வெகு இனிமை!
காரட் வாஸில் திராட்சை ட்யூலிப்கள்
காரட் வாஸில் திராட்சை ட்யூலிப்கள்,ரொம்ப ரொம்ப அருமையா, அழகாய் இருக்கு... உங்க கையில் எதோ மாஜிக் இருக்குனு நினைக்கிறேன்...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
சொல்லாமலே பெரியார்...
;) //நானும் முயற்ச்சி செய்து பார்கிறேன்...// அது தான் செய்து பார்த்தாச்சே! தர்ஷா அமைதியாக செய்து காட்டிய வாஸ், அழ...கு. மிக்க நன்றி தர்ஷா. @}->--
- இமா க்றிஸ்
நன்றி செண்பகா
எப்போதோ இருபத்தைந்து வருடங்கள் முன்பாக முதல் முதல் காரட் கார்வ் செய்தது நினைவுக்கு வருகிறது. அழகாக ஒரு குட்டி முயல் செய்தேன். பிறகு முயற்சி செய்யவே இல்லை. இப்போது மீண்டும் என்னைத் தூண்டி விட்டது செண்பகாதான். மிக்க நன்றி.
- இமா க்றிஸ்
இமாமா
ரெம்ப அ௫மையா இ௫க்குமா,
ரம்யா ஜெயராமன்
காரட்\ திராட்சை
எவ்வளவு அழகு !!! பார்க்கவே ரொம்ப க்யூட். இமாம்மா. சில கைகளுக்கு மட்டும் தான் வரும் போல.
புலியை பார்த்து, பூனை கேரட்/ கிரேப்ஸ் வெட்டி சாப்பிட்ட கதை தெரியுமா? இமாம்மா...
உன்னை போல் பிறரை நேசி.
நன்றி
//மந்திரம்// கர்ர்.. தன் கைல மந்திரம் வைச்சு இருக்கிற வனி இதைச் சொல்லலாமா! ஏற்றுக் கொள்ள முடியாது இந்தக் கருத்தை. :-)
மிக்க நன்றி வனி.
மாஜிக் எல்லாம் இல்லை, யார் நினைத்தாலும் வரும் அது.
உங்கள் அனைவரது கருத்துக்களையும் பெறுமதியாகக் கருதுகிறேன். மிக்க நன்றி ரெமு, அனு, ரம்யா, பிரேமா & க்றிஸ்மஸ்.
- இமா க்றிஸ்
suyatholil
na arusuvai intha website ta regulara pathutu iruke, kaivinai porul seiyurathu enaku romba putikum,athapathi neraya arusuvai ls solirukanga very nice.
Imma amma
super amma. Plastic la senja mathiri irukku. Ithe color nail polish tha vachi irunthinga carrot halwa seiyum podhu..
I love my parents...