நகம் ஓரம் காயம் ஏற்பட்டு பின்பு ஆறிவிட்டது...

எனது இடது கால் பெருவிரலில் சுமார் ஒரு வருடம் முன்பு நகம் ஓரம் காயம் ஏற்பட்டு பின்பு ஆறிவிட்டது... ஆனால் சமீப காலமாக அந்த கால் பெருவிரலில் விட்டு.. விட்டு..சுருக் சுருக் என்று ஏற்படுகிறது ... சில சமயம் அந்த பெருவிரல் உணர்ச்சியற்று உள்ளது போல் தோன்றுகிறது... தயவு கூர்ந்து ...இதற்கு தீர்வு யாராவது சொல்லுங்குளேன் ....?

அதற்கும் இதற்கும் தொடர்பு இருப்பது போல தெரியவில்லை. வேறு காரணம் இருக்க வேண்டும். சில சமயம் இப்படி இருந்துவிட்டு சில நாட்கள் கழித்து தன்னால் சரியாகிவிடும்.

குளிர், இரும்புச் சத்து குறைபாடு, இன்னும் சில காரணங்களால் இப்படி வரலாம். சும்மா அதையும் இதையும் சொல்லிப் பயமுறுத்த விரும்பவில்லை. காலணி சரியாக இல்லாவிட்டாலும் இப்படி ஆகலாம். இதைப் பலரும் யோசிப்பதில்லை. சின்னதாகச் சுழுக்கு இருக்கலாம். இதுவும் தன்னால் சரியாகிவிடும். நகம் தோலின் உள்ளே வளர்ந்திருக்கிறதா! நகம் அல்லது விரல் நிறம் மாறி இருக்கிறதா! நகம் உள்ளே விரலோடு ஒட்டாதது போல தெரிகிறதா? காலைப் பார்க்காமல் மருத்துவரே யோசனை சொல்ல முடியாது. நாங்கள் மட்டும் எப்படி! :-)

என்ன வேலை பார்க்கிறீங்க? பயமாக இருந்தால் ஒரு தடவை உங்கள் குடும்ப வைத்தியரைக் கலந்தாலோசியுங்களேன். நிம்மதியாக இருக்கும். எதையும் நாட்பட விட்டுக் காட்டுவதை விட ஆரம்பத்தில் சிகிச்சை செய்வது மருத்துவருக்கும் உங்களுக்கும் சுலபமாக இருக்கும். விரைவில் சுகமாகி விடும். நாட்பட்டால் குணமாகவும் நாள் ஆகும். போகும் போது நீங்கள் எந்தக் காலணியை அதிகம் பயன்படுத்துவீர்களோடு அதையே அணிந்து கொண்டு போங்க.

‍- இமா க்றிஸ்

கால் பெருவிரலில் அடிப்பட்டால், ரொம்ப ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளனும்.
அதவது எங்கு தட்டாமல் அடிபடாமல்.
அது குணமாக ரொம்ப நாட்கள் ஆகும், அடிக்கடி குத்தி கொண்டு தான் இருக்கும்.

டைகர் பாம் ரொம்ப அருமையான மருந்து காலை சுற்றி மிதமாக தேய்த்து விடுஙக்ள். வின் வின் என குத்துவது குறையும்.
எனக்கும் இது போல் அடி பட்டது, குணமாக ரொம்ப வருடம் ஆகியது.
இப்போதைக்கு மருதாணி தொப்பி அடிக்கடி வையுங்கள் ,ம் மருதாணியில் கொஞ்சம் மஞ்சள் கிராம்பு பொடித்து கலந்து வையுங்கள். செப்டிக் ஆகமல் இருக்கும்.

ஒரு முறை மருத்துவரை அனுகி எக்ஸ்ரே எடுத்து செக் பண்ணி கொள்ளுங்கள்.

ஒன்றும் இல்லை என்றால் நான் சொன்ன வற்றை பாலோ செய்து பாருஙக்ள்.
கால் நகத்தை வெட்டி, கிளீன் செய்து அடிக்கடி மருதாணி வையுஙக்ள்

முடிந்த வரை பெருவிரல் மூடுவது போல் கட் ஷூ போட்டு கொள்ளுங்கள்.

கல்லில் தடுக்காமல், படி தாண்டும் போது அடி படாமல் பார்த்து கொள்ளுஙக்ள்.

இப்படிக்கு
ஜலீலா

Jaleelakamal

தாங்கள் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ...நகமானது ஆரோக்கியமான வலது கால் பெருவிரல் நகம் போல் உள்ளது... நிறம் எதுவும் மாறவில்லை ...சரியாக விரலோடு ஒட்டி தான் வளர்கிறது...இரண்டு கால் பெருவிரல்களும் பார்க்க நல்ல ஆரோக்கியமாக உள்ளது ...தாங்கள் கூறியது போல் ஏதேனும் சத்து குறைபாடு இருந்தால் அது இரண்டு கால்களில் தானே அவ்வாறு உணர வேண்டும்,.... ஆனால் அவ்வாறு இல்லை ... அந்த பழய அடிப்பட்ட பெருவிரலில் தான் அவ்வாறு தோன்றுகிறது...மேலும் நான் விலை உயர்ந்த அதீதாச் காலணி கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன்....நான் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன் ..மேலும் நான் காயம் பட்ட பொழுது இங்கு ஒரு நல்ல பெரிய மருத்துவமனயில் சென்று காட்டிய பொழுது அவர்கள் என் இடது கால் பெருவிரல் நகத்தை முழுமையாக அகற்றி ஒரு வாரம் படுக்கையில் சேர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்று பயமுறுத்தி நல்ல ஒரு கட்டணம் வசூலிக்க பார்த்தார்கள் ... பின்பு நான் பணிபுரீயூம் இடத்திற்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனியில் பழக்கமான டாக்ட்ரிடம் காண்பித்து tt ஊசி மற்றும் மருந்து வைத்து காயம் குணமாக்கிக்கொண்டென். சில நாட்கள் கழித்து இந்த பிரச்னை குறித்து அதே டாக்ட்ரிடம் சொன்ன போது நீங்கள் கூறியது போல் தான் அவரும் சத்து குறைபாடாக இருக்கலாம் என்றார் ...அதன் பிறகு சில மாதங்கள் இந்த பிரச்னை இல்லை ...தற்போது 3 வாரமாகத்தான் இவ்வாறு தோன்றுகிறது.. அதனால் தான் இங்கு தீர்வு கிடைகுமா என்று எதிர்பார்க்கிறேன்...இமா க்றிஸ் அவர்களே தங்களது மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன். ... மிக்க நன்றி ... இப்படிக்கு அன்பு சகோதரன் சதீஷ்....

அன்பு சகோதரி ... ஜலீலா பானுக்கு நன்றி...வின் வின் என குத்துவது போல் இல்லை .. ஆனால் அவ்வப்பொழுது சுண்டுவது போல் இருக்கும் ... சில சமயம் உணர்ச்சியற்று இருப்பது போல் தோன்றும் ...மத மத என இருக்கும்...எதற்கும் தாங்கள் கூறிய மருதாணி முயற்சி செய்து பார்க்கிறேன் .... வேறு ஏதாவது யோசனை இருந்தாலும் கூறவும்.... இப்படிக்கு அன்பு சகோதரன் சதீஷ்

//சத்து குறைபாடு இருந்தால் அது இரண்டு கால்களில் தானே அவ்வாறு உணர வேண்டும்// இல்லை. ஒரு காலில் மட்டும் கூட வரலாம்.

//ஆசிரியராக // அப்போ நிறைய நிற்பீர்கள் இல்லையா! //விலை உயர்ந்த அதீதாச் காலணி// விலையில் எதுவும் இல்லை. கடையில் வாங்குகிறோமே தவிர எங்கள் கால்களுக்கென்றே அளவெடுத்து செய்வதில்லை அல்லவா! நல்ல பாதணிகள் கூட எங்காவது அழுத்தம் கொடுக்கக் கூடும். //கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து பயன்படுத்தி.../ இப்போ மாற்றிப் பார்க்கலாம். ஒரே காலணியைத் தொடர்ந்து அணியும் போது ஒரே இடத்தில் அழுத்தம் விழ சந்தர்ப்பம் இருக்கிறது. காலணிகளை மாற்றி மாற்றி அணிவது நல்லது. விரும்பினால் முயற்சித்துப் பார்க்கலாம்.

ஜலீலா சொன்னது உண்மைதான். ஒரு தடவை விரலில் அடிபட்டால் பல காலம் விட்டு விட்டு வலி வருவது உண்டு. சமீபத்தில் உங்களுக்குத் தெரியாமல் எங்காவது இடித்துக் கொண்டீர்களோ தெரியாது. இப்போதைக்கு ஏதாவது பூசிப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

ningal adharkaga endha marundhum eduthukola vendam bayapuda vendam , adhuvagavey sari agividum.

நன்றி .. இம்மா க்ரீஸ்.. அவர்களே தாங்கள் கூறியவாறு காலணிகளை மாற்றி மாற்றி இனி அணிய போகிறேன் ..

மேலும் தாங்கள் எனக்கு முக்கியமான ஆலோசனை ஒன்று கூறுங்கள் .. அதாவது எனக்கு வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .. நான் பார்ப்பதற்கு ஓரளவு கலையாக இருப்பேன்.. ஆனால் என் முகம் ,, கன்னம் போன்றவற்றில் நல்ல சதை பிடிப்போடு பருத்து காணப்படுகிறது ... இதனால் எனது தலை அமைப்பு உடலை விட சற்று பருத்து காணப்படுகிறது ...நான் சற்று ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவன் ..இது எனது மொத்த அழகை சற்று கெடுக்கிறது .....எனது முகத்தில் உள்ள அதிகப்படியான சதை நீக்க நல்ல யோசனை ஒன்று உடனடியாக கூறவும் ..ஏன் என்றால் எனக்கு விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது...தங்கள் அறிவுரையை எதிர் நோக்கி சதீஷ் .....

//இம்மா க்ரீஸ்// ஹும்... தப்பு தப்பா கூப்பிட்டா அழுதுருவேன் சதீஷ். ;)) நான் இமா க்றிஸ். இமா மட்டும் போதும், அவர்களே கூட வேணாம்.

புது இழை ஆரம்பித்திருந்தீர்கள் இதே கேள்வியோடு. அதை முதலில் கண்டு பதில் சொல்லி விட்டேன். அதனால் இங்கு லிங்க் மட்டும் கொடுக்கிறேன். http://www.arusuvai.com/tamil/node/29714 போய்ப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

இமா... உங்களுடய பதில் என்னை நெகிழ வைக்கிறது ..என்னுடய உடல் அமைப்பு ஒல்லியானதுதான்.. அதே போல் எனது முக அமைப்பும் அதற்கு ஏற்ற வாரு சரியான அளவில் பருக்காமல் இருந்தது ...ஆனால் கடந்த இரண்டு அ மூன்று வருடமாகதான் இவ்வாறு எனது முகம் மட்டும் பருத்து விட்டது ....

மற்றொரு முக்கியமான விசயம் ...நான் என்றைக்குமே அழகு என்று நினைத்து கொள்வதில்லை ...ஆனால் என்னை சுற்றி உள்ள அனைவரும் என்னை அழகு என்றுதான் கூறுவார்கள்...அதே போல் பெண்கள் என்னை பார்க்கும் பார்வையில் இருந்துதான் நான் மற்ற ஆண்களை காட்டிலும் கூட அழகு என்று நினைக்கத் தோன்றும் ..இதை பெருந்தன்மை உள்ள பல ஆண்களே என்னிடம் கூற நான் கேட்டுள்ளேன் ...ஆனால் அவ்வாறு கூறுவதை கேட்டு நான் சிறிதும் கர்வம் , மகிழ்ச்சி அடய மாட்டேன் ..ஆனால் நான் ,எந்த ஆண் அழகு என்று நினைக்கத்தோன்றுவரை பார்க்கும் பொழுது ... அவர்கள் வாயால் என்னை அழகு என்று கூறும் பொழுது எனக்கு சற்று மகிழ்ச்சியாக இருக்கும் ...ஏன் இதை சொல்கிறேன் என்றால் ..இந்த மாதிரியான புகழும் , மரியாதை மற்றும் பெண்கள் என்னை செல்லமாக தொடர்ந்து நடத்திய விதம்..போன்றவற்றில் சிறுவயது முதலே ..பழக்கப்பட்டே வந்து.... தற்போது இரண்டு அ மூன்று வருடமாக அந்த சுகம் குறைய ஆரம்பிக்கும் போது மனத்திற்கு சற்று வருத்தமாக இருக்கிறது...மேலும் என்மேல் உண்மையான அக்கறை உள்ள ஆண்கள், பெண்கள் ஏன் இப்படிஉன் முகம் மாறுகிறது என்று கனிவோடு கூற கேட்கும் பொழுதும் ... அவ்வாறு உண்மையான அக்கறை உள்ளவர்களுக்கு அவர்கள் மனம் விரும்படியாகவும் ..அவர்கள் மனத்திற்கு மகிழ்ச்சி அளித்து ... என்னை பார்க்கும் பொழுது அவர்களுக்கு முகத்தில் ஏற்படும் சந்தோசத்திற்க்காகவும் நான் என் அழகை பேணி காக்க ஆசை படுகிறேன்... என் என்றால் பெண்கள் எப்பொழுதுமே முதல் தரத்தையும் ... அழகையும் போற்றி பேனகூடியவர்கள் ...ஆகையால் தான் என்னை பார்க்கும் பொழுது அவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை காண நான் மிகவும் விரும்புவேன் ...

மேலும் சிந்தனைகள், பழக்கவழக்கம், பேச்சு, புன்னகை மற்றும் முக அமைப்பு , நிறம் போன்றவற்றிலும் நான் மற்றவர்கள் விரும்பும் வகையில் இருப்பேன்,,,ஆகையால் தான் நான் கவலைப்படுகிறேன்...இமாவின் ஆலோசனையை எதிர் பார்க்கிறேன்.....

((( ஒரு சின்ன கேள்வி.. தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் .. """"இமா வெகு சாதாரணம். விழாக்களானாலும் லிப்ஸ்டிக் தவிர வேறு மேக்கப் போட மாட்டேன். நகைகள், புடவைகளிலும் நாட்டம் இல்லை. ........ "ஏன் பொய் சொன்னீர்கள்? அந்தப் பெண் உங்களைப் போல அழகாக இல்லையே! அப்பா, அம்மா கூட இதைத்தான் பேசிக் கொள்கிறார்கள்," என்றார். "" """ இமா அழகு என்று நீங்கள் பதில் தரும் விதத்திலும் ... மேல் அடைப்புக்குறிக்குள் உள்ள வார்த்தைகளில் இருந்தும் தெரிகிறது ... ஆனால் ஏன் லிப்ஸ்டிக் மட்டும் .....???))))மேலும்----imma === இம்மா ....ima ==இமா ..>??

நீங்கள் கூறுவது போல் பெரிய பிரச்சனை எதுவும் உங்கள் கால் பெரு விரலில் இல்லை என்றே எண்ணுகிறேன். என்றாலும் நீங்கள் உங்களுடைய இரத்ததில் சக்கிரை அளவை test செய்து பார்த்து விடுங்கள். உங்கள் சக்கரை அளவு சரியாக இருப்பின் நீங்கள் கவலைக் கொள்ளத் தேவயில்லை என்பது என் கருத்து

Information is wealth

மேலும் சில பதிவுகள்