ப்ளிஸ் ப்ளிஸ் தோழிகளே ஆலோசனை கூறுங்கள். .....plzpa

தோழிகளே இன்னும் இரண்டு வாரத்தில் எட்டாவது மாதம் தொடங்கப்போகிறது. வியாழக்கிழமை செக்கப் வரச் சொல்லிருக்காங்க.

எனக்கு இப்பவே வயிறு இறங்கிருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க.
இனி எப்ப வேணாலும் டெலிவரி ஆகுமா?

உட்கார்ந்து இருக்கும்போது அடிவயிற்றில் முட்டுகின்றது.இரண்டு தொடைகிட்டையும் அப்படிதான் இருக்கு ஒருமாதிரியா.

ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்கமுடியல...

இனிமேல் நான் எப்படி இருக்கனும்? ப்ளிஸ் தோழிகளே பதில் கூறுங்கள். ........

devi don wry ma enakum apdithan irunthuchu kaala neeti ukkarunga freea . adi vayuru muttra maduri irkum bathroom varra maduriye irkum 8,9 mnthlam apdi than irukum payam vendam manasa relaxa vainga thirumbi padukurapa elunthu thirumbi padunga nalla sathana sapada sapdunga nitku chappathy sapdunga mudinja varai tensin illama happya irnga..

Theanai pirithedu thean kuddai pirikathey

காலை நிட்டிதான் உட்காருறேன்.கன்சீவ் ஆனதிலிருந்து எழுந்து திரும்பி தான் படுக்கிறேன்.

8 மாதத்தில் டெலிவரி ஆகும்னு சொல்றாங்க அப்படி ஆகுமா?

அன்பு தோழி. தேவி

இப்பவே என்னால வேலை பார்க்க முடியல.குனிந்து நிமிரவே கஷ்டமாக இருக்கு.இனி நான் என்ன வேலை செய்யலாம்?

பதில் கூறுங்கள் தோழிகளே. ...

அன்பு தோழி. தேவி

வயிறு கீழ இருந்தா சீக்கிரம் பிள்ளை பிறக்கும்னு எல்லாம் இல்லைங்க. எற்கனவே பிள்ளை பெற்றதால் வயிறு அப்படி இருக்கலாம். அல்லது உள்ள பிள்ளை எடை அதிகமா இருக்கலாம். இப்பவே டெலிவரி பத்தி யோசிக்காதீங்க. அது நடக்கும் போது நடக்கட்டும்.

உங்களால் முடிஞ்ச வேலையை செய்யுங்க. வீடு கூட்டுறது சுகப்பிரசவத்துக்கு நல்லதுன்னு சொல்வாங்க. உங்களுக்கு முதல் பிள்ளை சிசேரியனா இருந்தா இந்த வேலையெல்லாம் செய்யாதீங்க. முதல் சுகப்பிரசவம் ஆகி இருந்தா அப்ப இருந்த மாதிரியே இப்பவும் இருக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் டெலிவரி சிசேரியன் க்கா.டெலிவரி னாலே பயமாயிருக்கு க்கா.நாட்கள் நெருங்க நெருங்க பயமாயிருக்கு க்கா.

அன்பு தோழி. தேவி

முதல் டெலிவரி சிசேரியன் க்கா.டெலிவரி னாலே பயமாயிருக்கு க்கா.நாட்கள் நெருங்க நெருங்க பயமாயிருக்கு க்கா.

அன்பு தோழி. தேவி

ம்ம்... அதான் வயிறு கீழ இருக்கு. அதனால் தான் வேலை செய்யவும் முடியல :) பரவாயில்லை... ஓய்வு எடுங்க. அதிகம் சிரமப்படுத்திக்காதீங்க. உட்கார்ந்திருக்க முடியலன்னா, கொஞ்சம் நடங்க.. அதுவும் முடியலன்னா கொஞ்சம் படுங்க. மாதம் அதிகமாகுதில்லையா.

பயம்?? எதுக்கு? முதல் பிள்ளைன்னு பயந்தா பரவாயில்லை, ஏற்கனவே அனுபவப்ப்ட்டாச்சு... புதுசு இல்லை தானே. அப்பறம் ஏன் பயம்? மனசை போட்டு குழப்பாம இஷ்ட தெய்வத்தை நினைச்சுகிட்டு நிம்மதியா படுங்க. நேரமாச்சே... இன்னும் தூங்கலயா நீங்க? போய் நிம்மதியா படுத்து தூங்குங்க. வயிற்றில் இருக்கும் குட்டியை நிம்மதியா இருக்க சொல்லுங்க... உங்க பயம் அவருக்கும் தொத்திகிடாம. :) குட்னைட். சமத்தா போய் நிம்மதியா தூங்கணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் குழந்தைக்கு கர்ப்பவாய் திறக்கவில்லை ன்னு வீட்டை பெருக்க சொன்னாங்க 5 தடவை.அதை விட அதிகமாகவே பெருக்கினேன்.

ஆனால் பனீர்குடம் உடைந்து வலியும் வரவில்லை கர்ப்பவாயும் திறக்கவில்லை.
அதனால் சிசேரியன் பண்ணாங்க.

எனக்கு எதனால் கர்ப்பவாய் திறக்கவில்லை? தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள் தோழிகளே.

அன்பு தோழி. தேவி

இதெல்லாம் உடல் வாகு... ஏன் எதுக்கு அப்படி ஆச்சுன்னு யாரும் சரியா சொல்லிட முடியாது. உடல் தானா டெலிவெரிக்கு தயார் ஆகும் முன் நம்ம மருத்துவர்கள் தேதி முடிஞ்சுது வலி வரல, பாப்பா பெருசா இருக்கு வலி எடுக்கல... இப்படி பல காரணம் சொல்லி சிசேரியன் பண்றாங்க. இதை எல்லாம் ஆராய்ச்சி பண்ணாம அவங்களுக்கு தெரியும், அவங்க சொல்றது சரியா இருக்கும் என்று நம்பி ஏத்துக்க வேண்டியது தான். ஏன்னா நாம மருத்துவம் படிக்கலயே.

நான் சிசேரியன் பண்ண சொல்லி கேட்டு பண்ணிகிட்டேன், நார்மலுக்கு பயந்து :) அதனால் சிசேரியன் பற்றி பயம் வேண்டாம். வீடு பெருக்க சொல்றதெல்லாம் இடுப்பு எலும்பு வளைஞ்சு கொடுக்கணும் பிரசவத்துக்கு என்று தான். கர்ப்பவாயே திறக்கலன்னா அப்பறம் எலும்பு வளைஞ்சு கொடுத்து என்ன பண்றது. விடுங்க. நல்லபடியா பிள்ளை பெற்றெடுங்க. எங்க பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா
அக்கா பையன் தூங்க 11.30 ஆயிடும். எனக்கும் தூக்கம் வரவே 12 க்கு மேல் ஆயிடும்.

நானும் வலி வரலைன்னு சிசேரியன் பண்ண சொல்லிட்டேன். டெலிவரி நினைத்து பயப்படாமல் கடவுளை வேண்டுகிறேன். நன்றி க்கா எனக்காக ப்ரார்த்தனை செய்வதற்கு.

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்