முகம் பருத்து காணப்படுகிறது

.

எனக்கு முக்கியமான ஆலோசனை ஒன்று கூறுங்கள் .. அதாவது எனக்கு வீட்டில் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .. நான் பார்ப்பதற்கு ஓரளவு கலையாக இருப்பேன்.. ஆனால் என் முகம் ,, கன்னம் போன்றவற்றில் நல்ல சதை பிடிப்போடு பருத்து காணப்படுகிறது ... இதனால் எனது தலை அமைப்பு உடலை விட சற்று பருத்து காணப்படுகிறது ...நான் சற்று ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவன் ..இது எனது மொத்த அழகை சற்று கெடுக்கிறது .....எனது முகத்தில் உள்ள அதிகப்படியான சதை நீக்க நல்ல யோசனை ஒன்று உடனடியாக கூறவும் ..ஏன் என்றால் எனக்கு விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது.. சதீஷ் .....

உங்களுக்கு உதவி செய்ய இயலவில்லை. எந்த டிப்ஸும் தெரியாது. ஆனால் என் மனதிற்குத் தோன்றுவதைச் சொல்லி விட்டுப் போகிறேன்.

நீங்க ஒல்லியா இருக்கிறதா சொல்லிட்டு இதையும் சொல்லி இருக்கிறதால இது உங்கள் இயல்பான உடல் அமைப்பு என்று தோணுது. களையா இருக்கீங்க. இது பற்றி யோசிக்கத் தேவை இல்லை. //இது எனது மொத்த அழகை சற்று கெடுக்கிறது// உங்களைப் பற்றி நீங்களே குறைச்சு நினைக்கப் படாது சதீஷ். :-) அழகு என்பது முக அமைப்போ, நிறமோ அல்ல. சிந்தனைகள், பழக்கவழக்கம், பேச்சு, புன்னகை எல்லாவற்றிற்கும் மேல் எமக்கு குறிப்பிட்ட நபரை எந்த அளவு பிடிக்கிறது என்பதையும் பொறுத்தது. அதுக்கும் மேல ஒரு விஷயம் இருக்கு. நீங்க அழகு என்கிறதை நீங்க நம்பணும்.

ஒரு குட்டிக் கதை சொல்றேன். இலங்கையில் என் ஊரில் ஒரு கொரியன் குடும்பம்... இரண்டு பையன்களோடு வேலை நிமித்தம் வந்திருந்தார்கள். அங்கு ஆங்கிலப் பாடசாலைகள் இருக்கவில்லை. சில ஆசிரியர்களைத் தெரிந்து வீட்டிற்கு அழைப்பித்துக் கற்பித்தார்கள். அவர்களது மூத்த பையனுக்கு அப்போது 9 வயது. ஒரு திருமணத்திற்கு எங்கள் இரு வீட்டாருக்குமே அழைப்பு வந்தது. இவர் என்னிடம் 100 கேள்வி கேட்டார் அதைப் பற்றி. ஒன்று... 'மணப்பெண் அழகாக இருப்பாரா?' என்பது. வெகு அழகு அந்தப் பெண். போதாததற்கு தாயார் ஒப்பனை செய்வதில் ஊரில் மிகப் பிரசித்தம். இமா வெகு சாதாரணம். விழாக்களானாலும் லிப்ஸ்டிக் தவிர வேறு மேக்கப் போட மாட்டேன். நகைகள், புடவைகளிலும் நாட்டம் இல்லை. கலியாண ரிசெப்ஷனில் என்னைக் கண்டதும் சின்னவர் ஓடோடி வந்தார். சுற்றி இருந்தவர்கள் பற்றிய அக்கறை இல்லாமல், "ஏன் பொய் சொன்னீர்கள்? அந்தப் பெண் உங்களைப் போல அழகாக இல்லையே! அப்பா, அம்மா கூட இதைத்தான் பேசிக் கொள்கிறார்கள்," என்றார். எல்லாம் மனித மனதுதான்.

உங்களைச் சுற்றிப் பாருங்க. சக ஆசிரியர்கள், மாணவர்கள்... ஆள் ஆளுக்கு ஒரு விதமாக இருக்கிறார்கள். யாரையாவது அசிங்கம் என்று சொல்ல முடியுமா! அழகிற்கு வரைவிலக்கணம், ஸ்கேல் எதுவும் கிடையாது. மனித உடலமைப்பு ஒவ்வொரு ஸ்டேஜ்ல ஒவ்வொரு ப்ரபோஷன்ல இருக்கும். சிலது பரம்பரை அமைப்புலயும் இருக்கு.

பொண்ணு சரின்னுட்டாங்க இல்ல! இனி கவலையை விடுங்க. அவங்களுக்குப் பிடிக்கிறது தான் முக்கியம். கலியாண நாள் அன்று மாப்பிள்ளை உடை எவராக இருந்தாலும் எடுப்பாகக் காட்டும். உங்க ஹேர் ஸ்டைல், நீங்க போடுற ஷர்ட் டிசைன் மூலம் உங்க முக அமைப்பைக் கொஞ்சம் மாற்றிக் காட்டலாம். உங்களுக்குப் புடிச்ச மாதிரி ஸ்டைல்லா ட்ரெஸ் பண்ணிக்கங்க. ஏதாவது டிப் கிடைச்சா பாருங்க. இல்லாட்டா யோசிக்காம, "இதுதான் நான்," என்று நினைச்சுட்டு சந்தோஷமா இருங்க.

இப்போதே... உங்களிருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

ninga sonnadhu nooru sathidhavidham sari dhan.

Regards
Mani

பரந்த முகம் ஆண்மகனுக்கு ஒரு அழகுதான் என்று நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். தன்னம்பிக்கை கொண்டால் இது உங்களுக்கு ஒரு பிரச்சனையாகத் தெரியாது. கழுத்து பெருத்திருந்தால் thyroid test மட்டும் செய்து பாருங்கள்

Information is wealth

மேலும் சில பதிவுகள்