"இதயத்தால் பேசுகிறாள் - 3"

கதையின் முதல் பாகம் செல்ல‌ ‍_ http://www.arusuvai.com/tamil/node/29635
கதையின் இரண்டாம் பாகம் செல்ல‌ _ http://www.arusuvai.com/tamil/node/29672

ராஜீவின் கலாட்டாக்கள் நடுவில் இவர்கள் காதல் பலம் அடைந்ததுபோல‌, இவர்களின் கவனத்தால் படிப்பும் நன்றாகவே சென்றது. கெளதம் பயிற்சி மருத்துவராகவும், ஜானகி இறுதியாண்டும் வந்தாயிற்று. இவர்கள் திருமணத்திற்கு ஜானகி வீட்டில் சச்ம்மதிக்காவிட்டாலும் பெரிதாக‌ எதிர்ப்பு காட்டவில்லை. தனது தாய்மாமன் ஆசியுடன் சுபதினத்தில் ஜானகியின் முறைப்படி மாங்கல்யம் கட்டி மனைவியாக்கினான் கெளதம். கெளதமின் முறைப்படி மோதிரமணிவித்து தன் கணவனாக‌ ஏற்றாள் ஜானகி. ஆமாங்க‌ கெளதம், ஜானகி வேறுவேறு மதம் இதனாலேயே அவள் வீட்டில் சம்மதிக்கவில்லை.

இதோ இன்றுவரை வாழ்க்கை பயணத்தில் சந்தோஷமாகவே பயணிக்கின்றனர். ஜானகியின் ஆலோசனை இல்லாமல் புதிதாய் ஏதேனும் துவங்கவோ, முடிவெடுக்கவோ மாட்டான் கெளதம்.

இதோ நாளை தன் செல்ல‌ மகள் நிதர்ஷனாவின் திருமணம். இத்தனை வருடங்கள் எப்படி ஓடியதென‌ வியக்குமளவிற்கு அன்பால் நெருங்கி இருந்தனர் இருவரும்.

தன் வழிபாட்டிற்காக‌ தனியறை அமைத்துக்கொடுத்த‌ தன் கணவன் மீது தனி காதல் உண்டு ஜானகிக்கு. அவளைத்தவிர‌ யாரும் அதனுள் சென்றதில்லை, கெளதம் உட்பட‌.

நிதர்ஷனா அவ்வறையை ஒருமுறை மிகுந்த‌ ஆவலுடன் திறந்தாள். அறையினுள் தூய்மையும், அமைதியும் குடிகொண்டிருந்தது. எந்தக்கடவுளின் படமும் அங்கு இல்லை. தன் அன்னை மருந்துவமனை செல்லும் முன் அவ்வறையில் தினமும் தியானம் செய்வது அவளுக்கு நினைவு வந்தது. தன் தாய் தந்தையின் அன்பை எண்ணி பெருமையும் ஆனந்தமும் அடைந்தாள்.

தெரிந்தோர், பழக்கமானோரை மட்டும் அழைத்து, ராஜீவின் துணையுடன் ஜானகி கெளதம் இணைந்து தன் பெண் நிதர்ஷனாவை கணிப்பொறி வல்லுனர் சஞ்சைக்கு பதிவுத்திருமணம் செய்து வைத்தனர்.

ஒருவாரம் கடந்தநிலையில் சஞ்சய் தன் மாமாவிடம் வந்தான். மாமா விடுப்பு இன்னும் நான்கு தினமே உள்ளது, நானும் நிதர்ஷனாவும் நாளை கிளம்பறோம் என்றான். சரி சஞ்சய் நாளைக்கு ஃபிளைட்டுக்கு டிக்கட் புக் பண்ணிடறேன்.

காலையில் திடீர் விஜயம் செய்த‌ ராஜீவ் கண்டு ஆச்சரியம் கெளதமிற்கு, ஜானு ராஜீவ் வந்திருக்கான் பாருன்னு உள்ளே திரும்பி குரல் கொடுத்தான்.

வாங்க‌ அண்னா, இந்தாங்க‌ காஃபி, இன்னைக்கு இவங்க‌ இருவரும் கிளம்புறாங்க‌.

தெரியும்மா, வாங்க‌ ஃபிளைட்டுக்கு நேரமாகிடும் கிளம்பலாம். ஒருவழியாக‌ புதுமண‌ தம்பதிகளை வழியனுப்பிட்டு ராஜீவ் நேரே ஹாஸ்பிட்டல் சென்றுவிட‌, இருவர் மட்டும் அமைதியான‌ வீட்டினுள் வந்தனர்.

தனிமை ஏற்படுத்திய‌ அமைதியில் கெளதமின் அணைப்பில் ஜானகி, பழைய‌ இனிய‌ நினைவுகளின் தாக்கத்தில் இருவரும்.

இத்தனை வருஷத்தில் ஒருமுறைகூட‌ உன் வீட்டுக்கு போகனும்னு கேட்டதில்லையே ஜானு !

என்னை அன்பா பார்த்துக்க‌ நீங்க‌ இருக்கீங்க‌, என் அன்பை காட்டிட‌ நீங்களும், நிதர்ஷனாவும் இருக்கீங்க‌. சொந்த‌ சகோதரன்போல‌ செய்ய‌ ராஜீவ் இருக்காரு. உங்ககூட‌ இருக்கும்போது நிம்மதியையும், அமைதியையும் முழுமையா உணர்கிறேன்.

நம்ம‌ தொழில், நீங்க‌, நம்ம‌ பொண்னுன்னு இத‌ தவிர‌ இதுவரைக்கும் வேற‌ எண்ண‌ம் வரலை கெளதம், அவள் முடிக்கும் முன்னமே அவனது அணைப்பு இருகியது.

நாட்கள் உருண்டோடின‌, காலை பேப்பர் எடுக்க‌ போனாள் நிதர்ஷனா. அவள் பெயரில் ஒரு கடிதம் வந்திருந்தது.
முக‌ மலர்ச்சியுடனும், கண்களில் கேள்விக்குறியுடனும் அதை பிரிக்கப்போனாள். பின்ன‌ என்றுமே லட்டர் போட்டு பழக்கமில்லாத‌ அம்மா லெட்டர் போட்டிருக்காங்கன்னா சந்தோஷத்துடன் குழப்பமும் வருமல்லவா?

கடிதம் பிரிக்கும் சமயம் டெலிஃபோன் மணியடிக்கவும் கடிதம் விடுத்து அதனை எடுத்தாள்...

மீதிக்கதை அடுத்த‌ பாகத்தில்...

3
Average: 3 (2 votes)

Comments

ரேணு அக்கா கதை படிக்க ரொம்ப ஆவலாகவும் சுவாரசிமாகவும் இருக்கு.. அடுத்த பகுத் படிக்க ஆவலுடன் காத்திருப்பேன் .. சீக்கிரம் எழுதுங்க … :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உன் வீட்டுக்கு கோகனும்னு//போகனும்னு...

நன்றாக இருக்கிறது கதை... அடுத்த நிகழ்வு என்னவென்று அறிய ஆவலாக உள்ளது

கதை ஜெட்டா போகுது.. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட அதுக்குள்ள மகளுக்கே கல்யாணமா... எதிர்பார்ப்ப கூட்டியிருக்கீங்க

அடுத்த‌ வெள்ளி கண்டிப்பா அடுத்த‌ பாகம் வந்திடும்.

தேங்க்ஸ் ஆஷிகா மாற்றியாகிவிட்டது. வருகைக்கும் கதை படித்து பதிவிட்டமைக்கும் நன்றிகள்.

தொடர் கதைனாலும் அடுத்து என்ன‌ நடக்கும்னு எதிர்பார்ப்பு இருந்தால் நன்றாக‌ இருக்கும், ஆனால் ஜவ் மிட்டாய் போல‌ இழுத்தால் எனக்கே பிடிக்காது. பிறகு நீங்கள் அனைவரும் அடிக்க‌ வந்துடுவீங்களே...

( இப்ப‌ மட்டும் என்ன‌ ? அடிக்கதான் போறோம்னு உங்க‌ மைண்டு வாய்ஸ் எனக்கு கேட்டுடுச்சு, நான் எஸ் ஆகிட்டேன்.)

இது கல்யாண‌ வா...ரம்.... அதனால் கல்யாணத்தில் துவங்கி கல்யாணத்தில் முடித்திருக்கேன். தேங்க்ஸ் பிரியா.

plz tamilla type panrathu eppadinu solluga

உங்க‌ பக்கத்தின் கீழே செல்லுங்கள், அதன் வலது புறம் கடைசியாக‌ தமிழ் எழுத்துதவி இருக்கும். அத்னை உபயோகித்து தமிழில் எழுதலாம்.

அல்லது உங்கள் கருத்து பெட்டியில் சும்மா கிளிக் பண்ணினதும் உங்கள் பக்கத்தின் இடதுபுறம் கீழே டைப் மெத்தடுன்னு ஒன்னு வரும். அதில் தமிழ், ஃபோனிக் செலக்ட் பண்ணிட்டு தமிழில் எழுதலாம்.

Thank u

கதை நல்லாயிருக்குங்க. ரொம்ப வேகமா கொண்டுபோறீங்க.
அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறோம்.

நட்புடன்
குணா

அப்போ சைலண்ட் ரீடரா இருந்து இரு பாகம் படிச்சுட்டு இருந்தீங்களா??! நன்றிங்க‌. நீங்கள் அனைவரும் ஆதரவும், பிழைநீக்கமும்,வழிநடத்தியும் சென்றால் இன்னும் கதைகள் வரும். (அப்படின்னா பதிவிடமாட்டேன்னு நினைக்கிறீங்களோ!) நன்றி குணா வருகைக்கும் பதிவிற்கும் :)

நல்லா தொய்வில்லாம எடுத்துனு போறிங்க. தொடருங்க.

Be simple be sample

சூப்பர் முதல் நாள் தொடர் படித்ததில் இருந்து ஆவலா இருந்தது ஆனால் அடுத்த தொடர் படிக்க‌ கிடைக்கல‌ இப்ப‌ என்னனா 2 கதையயும் சேர்த்து படித்திட்டன் ஆவலுடன் எதிர்பார்கிரன்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ஒரே வாரத்துல, 25 வருசத்த கடத்திபுட்டிங்களே!! நான் நம்ம ஹீரோ, ஹீரோயின் லவ் தான் கதைன்னு நெனைச்சேன். இப்ப இரண்டு போரையும், வயசானவங்களா மாத்திபுட்டீன்களே? அய்யய்யோ, இனி கதை எப்படி போதும், அடுத்த பகுதி பாக்க வெய்டிங். கொஞ்சம் சீக்கிரம்.

உன்னை போல் பிறரை நேசி.

கதை ஜெட் இல்ல‌ ராக்கெட் வேகமுங்கோ:) சூப்பர்

அன்புள்ள ரேனு, உங்கள் கதை மிகவும் நன்றாக உள்ளது. நான் கல்லூரியில் படிக்கும் போது காதலெனும் ஜீவ நதி என்று ஒரு கதை படித்தேன். இன்று வரை என் நினைவில் நிற்கும் கதை அது. உங்கள் கதை கருவும் அதோடு ஒத்து போவதால் அடுத்த பாகத்தை படிக்க waiting!!!!வாழ்த்துக்கள்!!!