hi

oru doubt friends.. fish freezer la evlo nal irukalam ..wash panni masala apply panni vaikalama illa wash pannama irukanuma

மீனை கழுவி ஐஸ்லயோ, ப்ரீஸர்லயோ வைக்கிறது நல்லது இல்ல. கழுவிட்டு வச்சு சமைச்சா டேஸ்ட் நல்லா இருக்காது. அதோட கெட்டியான தன்மையே மாறி இருக்கும். ரொம்ப நாளைக்கும் இருக்காது. மீனை வாங்கி அப்படியே ப்ரீஸர்ல வைக்கணும். அதுமட்டுமில்லாம ப்ரீஸர் நல்லா ஐஸ் கோல்டா இருக்கணும். இது என்னுடைய மீனவ நண்பர்கள் கொடுக்கும் அட்வைஸ். அது உண்மைதாங்கிறது ப்ராக்டிகலா தெரிஞ்சும் இருக்கோம். ப்ரிசர்வ்டு & பேக்டு மீன் தான் ரொம்ப நாளைக்கு வச்சுக்க முடியும். சாதாரணமா நாம மார்கெட்ல வாங்கி வர்ற மீன் ரொம்ப நாளைக்கு வச்சுக்க முடியாது. வச்சுக்கவும் கூடாது.

நீங்க எங்கே இருந்து எப்படிப்பட்ட மீனை வாங்குறீங்கங்கிறதையும் பொறுத்தது அது எத்தனை நாளைக்கு வரும்ங்கிறது. எங்க ஊர்ல கடற்கரை, மீன் பிடி துறைமுகம் இருக்கிறதால ஓரளவுக்கு ப்ரெஷ் மீன் எப்பவும் கிடைக்கும். அதுவே பிடிச்ச உடனே கிடைக்கிறது கிடையாது. இராத்திரி போய் காலையில திரும்புற போட் எல்லாம் ரொம்ப கம்மி. அதனால பிடிச்ச உடனே கிடைக்கிற மீன்கள் அதிகம் கிடைக்காது. பெரும்பாலான போட்ஸ் எல்லாம் கடலுக்கு போயி இரண்டு மூணு நாட்கள் கழிச்சுதான் வருவாங்க. அதுவரைக்கும் அவங்க பிடிச்ச மீன்கள் போட்ல இருக்கிற ஐஸ் பாக்ஸ்லதான் இருக்கும். இதே மீன்கள் வெளியூர்க்கு போறப்ப இன்னும் ஒண்ணு ரெண்டு தினங்கள் கூடுதலா ஐஸ்ல இருக்கிற மாதிரி ஆயிடும். இந்த மீன்களை வாங்கிக்கிட்டு வந்து அதை ரொம்ப நாள் எல்லாம் ப்ரீசர்ல வச்சு சாப்பிடக்கூடாது. மீன்களை கூடுமான வரைக்கும் ப்ரீசர்ல வச்சு சமைக்காம அப்பப்ப வாங்கி சமைக்கிறதுதான் நல்லது. நாங்க பெரிய மீனா வாங்கிட்டு வர்ற நேரங்கள்ல ஒரே நாள்ல மொத்தத்தையும் சமைக்க முடியாம வச்சிருந்து அடுத்தடுத்த நாள் சமைப்போம். அந்த மாதிரி நேரங்கள்ல மீனை வெட்டினாலும் அலசாம அப்படியே ப்ரீசர்ல எடுத்து வச்சிடுவோம். அதை ஒரு ரெண்டு மூணு நாள்ல காலி பண்ணிடனும். மீன் சீக்கிரம் வீணாகக்கூடிய பொருள்.

மேலும் சில பதிவுகள்