தேதி: November 3, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஊத்தாப்ப மாவு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 2
ஊத்தாப்ப மாவு தயார் செய்ய :
பச்சரிசி - ஒரு கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
முழு உளுந்து - அரை கப்
வெந்தயம் - ஒன்றரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - கால் கப்
உப்பு - 2 தேக்கரண்டி
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெந்தயத்தில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி தனியாக ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு ஊற வைத்தவற்றை க்ரைண்டரில் போட்டு மாவாக அரைத்து எடுக்கவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊத்தாப்ப மாவை ஊற்றி, அதன் மேல் வெங்காயத்தைத் தூவி, எண்ணெய் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.

வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான வெங்காய ஊத்தாப்பம் தயார்.

அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்.

Comments
நான் தான் முதல் பதிவு
நான் தான் முதல் பதிவு ஊத்தப்பம் நல்லா இருக்கு ட்ரை பன்னிட்டு சொல்ரன்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
jaya lakshmi amma
Ayya ... onion oothappam jolly jolly
Jaya amma 2dosa parsel panni anupi vainka ma
Saptanum pola erukku
Seithu parthutu epti erukkunu soltraen ma
ML