சிறு தானிய உணவு

எனக்கு சிறு தானியம் பெயர்கள் வேணும்.
அதுல‌ என்ன‌ என்ன‌ சமையல் செய்யலாம், எப்படிலாம் யூஸ் பண்ணலாம்னு ஐடியாவும் வேணும்,

இதுல‌ செய்ற‌ உணவு தான் உடம்புக்கு ரொம்ப‌ நல்லதான்,
இங்க‌ நிறைய‌ புதுசா சிறு தானிய ஹோட்டல் திறந்துஇருக்காங்க‌,
மெயினா சுகர் பேஸன்ட்க்கு ரொம்ப‌ நல்லதுனு சொல்றாங்க‌.

அப்படியே நம்ம‌ அறுசுவை ல‌ இருக்க‌ சிறுதானிய உணவுகள் லிங்கும் கொடுங்க‌,

எனக்கு தெரிஞ்ச‌ சிறு தானிய‌ பெயர்கள்‍ ‍= 1.கேள் வரகு, 2.கம்பு, 3.சோளம்,

அப்புறம் நம்ம‌ அருள் அக்கா சொன்ன‌ 4.குதிரை வாலி, 5.சாமை அரிசி

வேற‌ ஏதும் நியாபகம் வ‌ந்தா சொல்றேன்,

மத்தவங்களும் சொல்லுங்க‌.........

குதிரைவாலி தோசை ‍லிங்க்.......

www.arusuvai.com/tamil/node/27788

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

வரகரிசி, குதிரைவாலி, சாமை, தினை, கேழ்வரகு, கம்பு எல்லாம் சிறு தானியம் தான். இதுக்குன்னு தனியா குறிப்பு தேவை இல்லை, அரிசியில் செய்யும் எல்லாமே சிறு தானியம் கொண்டும் செய்யலாம். தோசை, இட்லி, பணியாரம், அடை, சாம்பார் சாதம், வெறும் சாதமாக‌ வடிப்பது, இனிப்பு பணியாரம், கஞ்சி, முறுக்கு, உப்புமா, பொங்கல், பாயாசம்.... இப்படி எல்லாமே செய்யலாம். தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் கூட‌ செய்யலாம். நீரும் அரிசிக்கு வைக்கும் அதே அளவு போதுமானது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ எல்லாமே அப்படி யூஸ் பண்ணலாமா,
எங்க‌ அம்மா இதுல‌ சத்துமாவு கஞ்சி செய்து தருவாங்க‌,
சோள‌ ரவைல உப்புமா செய்வோம்....

சாமை அரிசி, குதிரை வாலி ல‌ மட்டும் தான் சாதம் செய்வாங்கனு நினைச்சேன்,
பதிலுக்கு நன்றி அக்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சாரி நான் சோளத்தை லிஸ்ட்ல சொல்லவே இல்ல... அதுல தோசை இட்லிக்கு பணியாரத்துக்கு அரைச்சிருக்கேன், இதுவரை ரவையா ஒடைச்சு செய்ததில்லை. அது போல கேழ்வரகும் சாத வகை எல்லாம் செய்ய இயலாது. மாவாக அரைச்சு வெச்சுக்கிட்டு புட்டு, இடியாப்பம், அடை, தோசை, பக்கோடா, கஞ்சி, கலி, கூழ் இது போல செய்யலாம்.

தினை, ராகி மாவில் லட்டு பண்ணலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ இங்கேயும் இந்த‌ மாதிரி ஹோட்டல் புதுசா திறந்துருக்காங்க‌, குழந்தைகளுக்கு பழக்கப‌டுத்தினா நல்லா இருக்கும்.
எங்க வீட்ல‌ டெயிலி சத்துமாவு கஞ்சி பிள்ளைகளுக்கு உண்டு.

மேலும் சில பதிவுகள்