தேதி: November 6, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
நறுக்கிய முருங்கைக்காய் - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி (பெரியது) - ஒன்று
பச்சை மிளகாய் - மூன்று
பூண்டு - 3 பற்கள்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
திக்கான தேங்காய்ப் பால் - அரை கப்
கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரைத் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முருங்கைக்காயைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அத்துடன் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து மூடி வைத்து சிறு தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.

முருங்கைக்காய் வெந்ததும் தேங்காய்ப் பாலைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையான முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு தயார். சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Comments
உமா
சூப்பர்... :) கட்டாயம் செய்துடுவோம், வீட்டில் முருங்கை ரெடியா இருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அட்மின்
குறிப்பை வெளியிட்ட அன்பு டீமுக்கு நன்றி. :)
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
வனி
நன்றி வனி. செய்துட்டு சொல்லுங்க. வெட்டுப் பலகாரம் செய்துட்டீங்களா?
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
முருங்கைக் காய்
:-) உமா... குறிப்போடு கூடவே, நீங்க காயை எப்பிடி வெட்டுவீங்க என்கிறதையும் படம் போட்டுக் காட்டியிருக்கலாம். ;) இங்க முருங்கைக்காயை தோலோடவே சமைக்கிற ஆட்கள் பலர் இருக்கிறாங்க. ;)
- இமா க்றிஸ்
இமாக்கா
அப்படியா அக்கா? அடுத்த தடவை முருங்கையில் ஏதாவது செய்தா காய் வெட்டுறதையும் படம் எடுத்து போடுறேன்.:)
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
உமா,
உமா,
கம கம குறிப்பு .
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
முருங்கைக்காய் தேங்காய்ப் பால் குழம்பு
அன்பு உமா,
முருங்கைக்காய் வாசத்துடன் தேங்காய்ப்பால் வாசமும் சேர்த்து, நல்ல குறிப்பாகக் கொடுத்திருக்கீங்க.
முருங்கைக்காய் வேகவச்சுதான் செய்திருக்கேன், எண்ணெயில் இதுவரை பொரிச்சதில்லை. செய்து பார்க்கிறேன்.
முருங்கைக்காய் தோல் சீவணுமா, இதுவரைக்கும் அப்படி செய்ததில்லை. தோல் சீவுவது என்றால், எப்படி செய்வீங்க?
அன்புடன்
சீதாலஷ்மி
கவிதா
வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும் நன்றி கவிதா.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
சீதாம்மா
அன்பான பதிவிற்கு நன்றி சீதாம்மா. கத்தி வச்சு மேல் தோலை சுரண்டி அல்லது லேசா வெட்டி எடுக்கனும் சீதாம்மா.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா