3 வயது குழ‌ந்தைக்கு அடிக்கடி சளி தொந்த்த‌ரவு.

அன்பு தோழிகளே என் மகனுக்கு 3 வயது ஆகிரது play school போறான் அவனுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது விடுவதர்கும் ரொம்ப‌ நாளாகிறது மேலும் சளி இல்லாத‌ பொதும் கூட‌ சாம்பிரானி,perfume வாடை உள்ள‌ இடங்களில் மூச்சு மிகவும் தினறுகிரது டாக்டரிடம் கேட்டால் அது problem இல்லை என்கிறார்கள்.எனககு மனம் கஷ்டமாக‌ உள்ளது சளி அடிக்கடி பிடிப்பதால் சரியாக‌ சப்பிடாமல் உடம்பும் இழைத்து போகிரது please immunity power வளர்க்க‌ என்ன‌ செய்யலம் என்று கூறி உதவுங்கள் சளி இருப்பதால் பழமும் கொடுக்க‌ முடிவதில்லை.

என் பெரிய பையன் 3வயது,சின்ன பையன் 10 மாதம் ரெண்டு பேருக்கும் அதே ப்ரச்சனை தான். Medicine கூட துளசி, தூதுவளை, மிளகு சேர்த்த சாறு கொடுத்தேன், டாக்டர் 5,6, வருடங்களுக்கு அப்படிதான் இருக்கும் பயப்பட வேணாம்னு அலர்ஜி தானு சொல்றாங்க. ரொம்ப கஷ்டபடுறான்ங்க. எதாவது solution சொல்லுங்க தோழீஸ்.........

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Hi, thulasi tannir kodugkal and vetrilaiyil vicks thadavi vilakil lesaka sudu seithu atai Nenjil thavungal thinamum iruvu thungum Mun seikal intha prbm kuraithu vidum.

milk la sugerku bathil panangkarkandu thool potu kodungal........................

basu...
//சளி இல்லாத‌ பொதும் கூட‌ சாம்பிரானி,perfume வாடை உள்ள‌ இடங்களில் மூச்சு மிகவும் தினறுகிரது// இந்த விஷயத்தைத் தவிர்க்கப் பாருங்க. பின்னால வீஸிங் வர சான்ஸ் இருக்கு. இதுக்கும் இம்யூனிடிக்கும் தொடர்பு இல்லை. இது.... காற்று மாசு தொடர்பானது.

சுத்தமான காற்றுக்கு வாசனை இராது. அது சுவாசப்பையை ஒன்றும் செய்யாது. வாசனை வந்தால்... காற்று சுத்தமில்லை என்று அர்த்தம். பர்யூம் நல்லதில்லை. வாசனை வருவது எதனால்! இயற்கை வாசனை அல்ல அது. பர்ஃபூம் - முன்னால எல்லாம் பாட்டில்ல வரும். தொட்டு வைப்பாங்க. இப்ப எல்லாமே ஸ்ப்ரே ஆக இருக்கு. ஸ்ப்ரே செய்தால் அந்த ஆளுக்கு உடலில் படுவது என்னவோ ஒரு சில துளிகள் தான். ஆனால் மீதி காற்றில் ஸ்ப்ரே ஆகிறது. சுவாசப்பைக்கு ஆக்ஸிஜன் மட்டும்தான் தேவை. கூடவே காற்றிலுள்ள கெமிக்கல்கள், சாம்பிராணி புகை எல்லாவற்றையும் உள்ளிழுக்கும் சமயம் மூச்சுத் திணறல் வரத்தான் செய்யும்.

வீட்ல இருக்கும் போது எப்படி இருக்கிறார்? வெளியே போனால் மட்டும்தான் இந்தப் பிரச்சினையா? போகும் இடங்கள் எப்படியிருக்கும் என்று யோசித்து அழைத்துப் போங்க. உங்கள் வீட்டினுள்ளும் பர்ஃபூம், நுளம்புச் சுருள், ஏர் ஃப்ரெஷ்னர் எல்லாம் தவிருங்கள். புகைபிடிப்பவர்கள் யாரும் உங்கள் வீட்டில் இல்லையல்லவா!

கொஞ்ச நாளைக்கு பிரச்சினையான இடங்களுக்கு அழைத்துப் போக வேண்டாம்.

டாக்டர் பிரச்சினை இல்லை என்று சொன்னதன் காரணம்... அவர் குழந்தை மூச்சு விடக் கஷ்டப்பட்ட சமயம் பார்க்கவில்லை. சுகமாக அல்லது பிரச்சினை குறைவாக இருந்த சமயம்தான் அழைத்துப் போய் இருப்பீகள் இல்லையா! அவர் பரிசோதித்த சமயம் குழந்தை எந்த நிலையிலிருந்ததோ அதை வைத்துச் சொல்லி இருக்கிறார்.

//எனககு மனம் கஷ்டமாக‌ உள்ளது// உங்கள் கஷ்டத்தை விடுங்க. சின்னவரது கஷ்டம் யாருக்கும் புரியாது. சொல்லவும் தெரியாது அவருக்கு. பாவம்.

//சளி அடிக்கடி பிடிப்பதால்// ஆஸ்மா இருப்பவர்களுக்கு சுவாசம் தொடர்பான தொற்றுகள் சுலபமாக வரப் பார்க்கும்.

//சளி இருப்பதால் பழமும் கொடுக்க‌ முடிவதில்லை.// கொடுங்க. பழங்கள் கொடுக்க வேண்டாம் என்று டாக்டர் சொன்னாரா? தாராளமாகப் பழங்கள் கொடுக்கலாம். எந்தப் பழம் (அல்லது உணவுப் பொருள்) சாப்பிட்டால் பிறகு பிள்ளைக்குக் கஷ்டமாக இருக்கிறது என்பதை கவனித்து அதை மட்டும் தவிர்த்தால் பொதும். குறைவாகச் சாப்பிட்டாலும் ஆரோக்கியமான உணவாகச் சாப்பிட வைங்க. உணவிலும் எது ஆகவில்லை என்பதைக் கவனித்து தவிருங்க.

‍- இமா க்றிஸ்

இந்த Fragrance Sensitivity எனக்கு நீண்ட நாட்களாக இருக்கிறது.முதலில் குழந்தைக்கு எந்த பொருட்கள் ஒத்து கொள்ள வில்லை என்பதை சரியாக லிஸ்ட் செய்து கொள்ளவும்.
பழம் சாப்பிட்டால் எதுவும் ஆகாது,ஆனால் மூக்கில் நீர் வடிந்தால் மட்டும் குளிர்ச்சியான பழங்களை விட்டு விடலாம்.
நிறைய கீரை,நட்ஸ் ,வெந்நீர்,இஞ்சி,மிளகு,பூண்டு,சீரகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
காலையில் நல்ல தரமான தேனுடன் ,மிளகு தூள் (2 மிளகு கணக்கு) சேர்த்து சாபிடலாம்.
காது மடல்,உள்ளங்கால்,உள்ளங்கையில் eucalyptus ஆயில் தேய்த்தாலும் இதமாக இருக்கும்.
நல்ல காற்று,தூய்மையான சூழல்,மூச்சு பயிற்சி உதவும்.

சில நேரம் சளி அதிகமாகும் போது,immunization தெரபி தான் பெஸ்ட் .நல்ல allergy specialist ஐ consult செய்யுங்க..
இது நிரந்தர தீர்விற்கு வழிவகுக்கும்.

என்றும் அன்புடன்,
கவிதா

thank u friends.அவன் விரும்பும் பழங்கள் grapes,banana,plums மட்டும் தான் இதையெல்லாம் தவிர்க்க‌ சொல்கிரார்கள்.மேலும் அவனுக்கு யாருக்கேனும் சளி இருந்தால் உடனே இவனுக்கும் வந்து விடுகிரது அதனால் தான் இம்யூனிட்டி வளர‌ என்ன‌ செய்யலாம் எனக் கேட்டேன் காய்கறிகள் என்ன‌ கொடுக்கலாம் என‌ கூறி உதவுங்கள். நாங்கல் இருப்பது சிங்கப்பூரில் எங்கள் சொந்த‌ ஊர் மதுரை அதனால் மதுரையில் மூச்சு தொடர்பான‌ பிரசனைக்கு சிறந்த‌ மருத்துவர் யாராவது தெரிந்தால் கூறுங்கள் friends.

நீங்கள் குழந்தையை சிறந்த குழந்தை நல மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறவும். முதலில் குழந்தைக்கு Primacy (ப்ரைமரி) complex இல்லை என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்

Dr. S.Palani

Information is wealth

எனது குழந்தைக்கும் இதே பிரச்சனை தான். அவளுக்கும் 3 வயது ஆகிறது. அடிக்கடி சளி தொந்தரவு. விடுவதற்கு நிறைய நாட்கள் எடுக்கும். இதோடு அவளுக்கு வீசிங் பிரச்சனை வேறு. இப்பொழுது நான் கொஞ்ச நாட்களாக துளசி தண்ணீரும், பாலில் அரை டீஸ்பூன் சுக்கு மல்லி காபி யும் பணகல்கண்டோடு கலந்து தருகிறேன் . முன் எப்பொழுதையும் விட கொஞ்சம் சீக்கிரமா ரெகவர் ஆகிற மாதிரி தெரியுது. முயற்சித்து பாருங்கள்.

அன்புடன்
பாரதி வெங்கட்

Doctor கிட்ட போய் blood testஎடுத்து பார்த்தோம் ..சளி அதிகமா இருக்கு அலர்ஜி, ஆறு மாசத்துக்கு வெறும் வயிற்றில் tablets கொடுங்கனு சொன்னார். net ல search பண்ணா அது primary complexக்கு கொடுக்கிற Tablet ணு வருது . அலர்ஜி ஓட one of the symbol ணு இருக்கு. இப்போ என்ன பண்றது. தொடர்ந்து கொடுக்கிறேன் but பயப்படற அளவுக்கு பெரிய problem ஆ தெரிந்ந்தவர்கள் சொல்லவும் please............

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

இது பொதுவா குழந்தைகளுக்கு வருகின்ற Primary complex நோய் என்றால் X ray எடுத்து பார்த்தால் தெரிந்துவிடும்.காதின் மடலின் பின்புறம் வலியில்லாத சிறு சிறு கட்டி போன்று தென் படுகிறாத என்று தடவி பார்க்கவும்.

இதற்கு சிறந்த குழந்தை நல டாக்டரை
அணுகவும்.
கிட்டத்தட்ட 5-6 வயதில் சரியாகிவிடும்.
குழந்தை குளித்தவுடன் நன்றாக உடன் துடைக்க வேண்டும். சாம்பிராணி புகை போன்றவற்றைப் பயன் படுத்தக் கூடாது. டாக்டரின் ஆலோச்னைப் படிதான் மாத்திரைக் கொடுக்க வேண்டும். குளிர்ந்த பொருட்களையோ, குளிர் பானங்களையோ கண்டிப்பாகக் கொடுக்க கூடாது. மார்கழி மாததில் குழந்தைக்கு தரமான கம்பளி ஆடை அணிவிக்க வேண்டும்.
மிதமான சூட்டில் குழந்தைக்கு உணவு கொடுக்கவேண்டும்.

வகுப்புக்கு செல்ல முடியாத அளவு பிரச்சனை என்றால் குழந்தையை கண்டிப்பாக தொந்தரவு செய்யக் கூடாது.
பள்ளிக்குச் சென்ற வேறு குழந்தை களிடம் கேட்டு வீட்டிலேயே பாடம் சொல்லித்தர வேண்டும் அதே நேரத்தில் குழந்தைக்கு அதையே பழக்கப் படுத்தி விடக்கூடாது.
அது போல் பல கஷ்டங்களுடன் வளர்த்த என் மகன் இன்று ஒரு பல்கலையில் பேராசிரியராக வேலை செய்கிறார். இதை நான் சொல்வதன் காரணம் உங்களின் கவலையை குறைக்கவே.

I am ready to answer your further doubts from my experience if you are interested. I am not a medical doctor.
S.Palani

Information is wealth

மேலும் சில பதிவுகள்