சின்னச் சின்ன டிப்ஸ் - 1

என்றோ எங்கோ தட்டி வெச்ச பதிவு வெகு நாட்களா இமா சொல்லியும் போடாம மறந்து போயிருந்தேன், இன்னைக்கு க்றிஸ் நினைவுபடுத்தி போட வைக்கிறாங்க :) தேன்க்யூ இமா & க்றிஸ். பூரி வரல பொங்கல் வரலன்னு படிச்சதோட எஃபக்ட் தான் இந்த பதிவு ;) எனக்கு இட்லி தவிற மற்றவர் எல்லாம் அம்சமா வருவாங்க. அதனால் பார்ட்டிக்கு இட்லி தவிர வேறு யாரையாவது தான் எப்பவும் ப்ளான் பண்ணுவேன். இப்போ இட்லியும் மல்லி பூ போல அம்சமாத்தான் வருது சீதா புண்ணியத்துல. எனக்கு தெரிஞ்ச சில டிப்ஸ்... அம்மா எனக்கு ஆரம்பத்துல சொன்னது.

சப்பாத்தி & பூரி:

1. சப்பாத்தி மாவு நிறைய தண்ணீர் விட்டு மிருதுவா பிசையணும். பூரி மாவு சப்பாத்தி மாவை விட கொஞ்சம் கெட்டியா இருக்கணும். ரொம்ப மிருதுவா இருக்க தேவை இல்லை. பூரியோ சப்பாத்தியோ மாவை நல்லா பிசைய வேண்டியது முக்கியம். மாவு எடுத்து உருட்டினா க்ராக் இல்லாம வழு வழுன்னு ஒண்ணு போல பந்தா உருட்ட வரணும். அப்ப தான் மாவுக்கு தேவையான நீர் ஊற்றி இருக்கோம், நல்லா பிசைந்து இருக்கோம் என்று அர்த்தம்.

2. பூரி மாவு பிசைஞ்சதும் சுடலாம். ஊற வைக்க தேவை இல்லை. ஆனால் சப்பாத்திக்கு மாவை பிசைந்து 1 மணி நேரம் மூடி வெச்சிருந்து சுட்டா நல்லா சாஃப்ட்டா வரும்.

3. பூரிக்கு முக்கியமானது எண்ணெயின் சூடு. சரியான அளவில் சூடாகி இருக்க வேண்டும். கடாய் கொஞ்சமாவது அகலம், ஆழம் உள்ளதா இருக்கட்டும். சில நேரம் பூரி உள்ள விட்டதும் எண்ணெய் பொங்கிடும். முக்கியமா நல்லெண்ணெய் பயன்படுத்துறவங்க இந்த பிரெச்சனையை சந்திச்சிருப்பீங்க. சரியான சூடில்லாத எண்ணெயில் பூரி/வடை எல்லாம் போட்டா பொங்கும். அதனால் ஆழமான கடாய் தான் சரி.

4. மாவை திரட்டும் போது கொஞ்சமே கொஞ்சம் சப்பாத்தியை விட திக்கா இருக்கலாம். கூடவே மாவை சின்ன சின்ன உருண்டையா எடுத்து திரட்டுங்க உங்க கடாய் அகலத்துக்கு ஏற்றபடி.

5. எண்ணெயில் சிறு மாவு துண்டை போட்டால் ஒரு சில நொடியில் மேலே எழும்பி வர வேணும்... அது தான் எண்ணெய் பதம்.

6. பூரி வெள்ளையா இருந்து உப்பாம எண்ணெய் குடிச்சு வந்தா தீ பத்தல / எண்ணெய் சூடு பத்தலன்னு அர்த்தம். கூட்டி வெச்சு கொஞ்சம் எண்ணெய் காய்ஞ்சதும் போடுங்க.

7. பூரி போட்டதும் சிவந்து எண்ணெய் குடிச்சு தட்டை போல வந்தா தீ அதிகம் / எண்ணெய் சூடு அதிகம்னு அர்த்தம். தீயை குறைச்சு வைங்க.

8. ஒரு பூரிக்கும் இன்னொரு பூரிக்கும் நடுவில் ஒரு பூரி தேய்க்கும் நேரம் கேப் விடலாம்... எண்ணெய் சூடு ஆக சரியா இருக்கும். ஒரு பூரியை சுட்டு எடுத்ததும் எண்ணெய் கொஞ்சம் சூடு ஆறி இருக்கும், மீண்டும் பதமான சூடு வர ஒரு பூரி தேய்க்கும் நேரம் சரியா இருக்கும்.

9. பூரிக்கு மட்டும் எண்ணெய் சூடு மெயிண்டெய்ன் பண்ணனும். முதலில் வெச்ச தீயை அப்படியே கடைசி வரை வெச்சிருக்க இயலாது. அடிக்கடி தீயை சரி பண்ணணும், எண்ணெயின் சூடுக்கு ஏற்றபடி.

10. இப்படி செய்தா பூரிக்கு மாவை மைதா / கோதுமை / மல்டிக்ரெய்ன் என எதில் வேணும்னாலும் செய்யலாம், புஸ்ஸுன்னு தான் வரும்.

11. மிருதுவா பிசைந்த மாவில் சப்பாத்தி செய்தால் நிச்சயம் சப்பாத்தி ஒரு முழு நாள் ஆனாலும் சாஃப்ட்டாவே இருக்கும். எங்க வீட்டில் வெளியே போனால் சப்பாத்தி தான் அதிகமா செய்து எடுத்துட்டு போவேன். இரண்டு நாள் ஆனாலும் கெடாது, சாப்பிட சாஃப்டா இருக்கும்.

12. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது கொஞ்சமா எண்ணெய் சேர்த்து பிசைந்தாலும் சப்பாத்தி சாஃப்ட்டா வரும். சூடான தண்ணீர் விட்டு பிசைந்தாலும் சாஃப்ட்டா வரும்.

13. சப்பாத்தி சுடும் போது தீ மிதமா இருக்கணும். அதிக சூடு, அல்லது சிறு தீயில் வைத்து சுட்டால் சப்பாத்தி சாஃப்ட்டா வராதுங்க. ஆற ஆற ஹார்டா ஆகிடும்.

14. நான் சப்பாத்தியா போடுவதை விட ஃபுல்காவா போடுவது அதிகம். எண்ணெய் விடவே மாட்டேன் துளியும், ஆனால் சாஃப்ட்டோ சாஃப்ட்டா இருக்கும். தேச்சு கல்லில் போட்டு மேலே சிறு சிறு முட்டை போல எழும்பியதும் திருப்பி விடுங்க. அடுத்த பக்கம் சிவந்ததும் எடுத்து முதல்ல கல்லில் பட்ட பக்கம் இப்போது தீயில் படும்படி நேரடியா அடுப்பில் போட்டு ஊப்பி வந்ததும் எடுக்க வேண்டியது தான். புஸ்ஸுன்னு பூரி போல உப்பின சப்பாத்தி.... ம்ம்... கூட 2 கண்டிப்பா உள்ள போகுமாக்கும்.

பொங்கல்:

1. 1 கப் அரிசி 1/4 கப் பருப்புக்கு 4 1/4 கப் நீர் ஊற்ற வேண்டும்.

2. உப்பு போட்டு குக்கரில் வெச்சு 1 விசில் விட்டு பின் 10-15 நிமிஷம் சிம்மில் வைத்து எடுக்கலாம்.

3. தாளிக்க எண்ணெய் + நெய் சேர்த்து 2 - 3 மேஜைக்கரண்டி பயன்படுத்தலாம். இதை விட கம்மியாவும் பயன்படுத்தலாம், உங்க விருப்பம்.

4. மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, பெருங்காயம். இது தான் நான் வழக்கமா தாளிக்க பயன்படுத்துறது. வாசம் சூப்பரா இருக்கும்.

5. தாளிச்சு கொட்டி கிளறியதும் குக்கரை மூடி சிம்மில் ஒரு 5 நிமிஷம் வெச்சு எடுத்தா பொங்கல் அருமையா இருக்கும்.

6. பொங்கல் புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் தான் சுவை அதிகம்.

7. முந்திரி வறுத்து சேர்ப்பதும் பண்ணலாம் விரும்பினால். பொங்கல் எப்பவுமே சூடா பரிமாறணும், ஆற ஆற கொஞ்சம் கெட்டியாகிடும். முக்கியமா பச்சரிசி பயன்படுத்தும் போது கெட்டியாகும் தன்மை அதிகமா இருக்கும். இதே முறையில் புழுங்கல் அரிசி, குதிரைவாலி, சாமை, வரகரிசி என எல்லாத்துலையும் பொங்கல் சுவையா பண்ணலாம்.

பிரியாணி:

1. வீட்டில் தயாரிக்கும் மசாலா தான் சுவை. கடைகளில் வாங்குவது அவசரத்துக்கு மட்டுமே.

2. நான் பயன்படுத்தும் கரம் மசாலா காம்பினேஷன்: 1 சின்ன பிரியாணி இலை, 1 கிராம்பு, 1 துண்டு பட்டை, 1 பச்சை ஏலக்காய், 1/2 கறுப்பு ஏலக்காய், 1/4 துண்டு ஜாதிக்காய், ஒரு சிட்டிகை சோம்பு, 1/4 துண்டு நட்சத்திர மொக்கு, 1/4 துண்டு ஜாதிபத்திரி. இதை லேசான தீயில் வைத்து வறுத்து எடுத்து கையால் பொடி செய்து பிரியாணி முக்கால் பதம் வெந்ததும் மேலே தூவி, எலுமிச்சை பிழிந்து தம்மில் போடுவேன்.

3. கடைசியா எடுத்து கிளறிவிட்டு பரிமாறலாம். இந்த காம்பினேஷன் வாசமே அருமையா இருக்கும். ட்ரை பண்ணிப்பாருங்க.

4. பிரியாணி பண்ணும் போது சிக்கன் செய்தா தண்ணி விடாம வேக வைங்க. அது தான் சுவை.

5. மட்டன், காய்கறி என்றால் அதை வேக வெச்ச நீரை பிரியாணியில் சேருங்க, அது தான் சுவை.

6. பிரியாணி எப்பவுமே சாப்பிட 2 மணி நேரம் முன்பே செய்துட்டா சுவை ரொம்ப நல்லா இருக்கும். பார்ட்டிக்கு எல்லாம் மதியமே பிரியாணி பண்ணி 3/4 பதம் வெந்ததும் அடுப்பை விட்டு எடுத்து அலுமினியம் ஷீட் போட்டு டைட்டா மூடி வெச்சுடுவேன். மாலை பரிமாற 1/2 மணி நேரம் முன் எடுத்து சிறு தீயில் 10 நிமிடம் வைத்து எடுத்து கிளறுவேன். பதமா வெந்து மசாலா கறியில் நல்லா ஊறி சுவையா இருக்கும் பிரியாணி. வீட்டிலும் இது போலவே சீக்கிரமா செய்து ஊற விட்டுட்டா டேஸ்ட் நிச்சயம் நல்லா இருக்கும். எலுமிச்சை சாதம், புளி சாதம் எல்லாம் கிளறி கொஞ்ச நேரம் வெச்சிருந்தா எப்படி சாதத்தில் அதன் சுவை கூடுதோ, அப்படி தான் பிரியாணியும்.

இதெல்லாம் நான் ஃபாலோ பண்ற சின்ன சின்ன விஷயம்... யாருக்காவது பயன்படுமென்றால் மகிழ்ச்சி :) தப்பா இருந்தா கோச்சுக்காம உட்டுடுங்க. வனி பாவம், அவளும் இப்ப தான் கத்துக்குறா கொஞ்சம் கொஞ்சமா.

5
Average: 4.8 (8 votes)

Comments

அன்பு வனி,

எல்லா டிப்ஸுமே சூப்பர்.

சமையல் குறிப்புகள் பார்த்து சமையல் செய்யறவங்களுக்கு, இந்த மாதிரி பக்குவத்துக்கான குறிப்புகளும் அவசியம் தேவை.

கலக்குங்கோ.

அன்புடன்

சீதாலஷ்மி

வனி நல்ல உபயோகமான டிப்ஸ் கொடுத்ததுக்கு நன்றி சப்பாத்திக்கு பால் சேர்ப்பேன்.ஆனால் ரென்டு மனினேரத்துக்குள் சப்பிட்டாதான் இல்லன்னா ஹார்டாயிடும் ரென்டுநாள் இருந்தாலும் சப்பாத்தி எனக்கு வேனும்.நான் ஆசிர்வாத் மாவு யூஸ் பன்றேன்.அதில் என்னெய் தன்னீர் சேர்த்து பிசையனுமா

சூப்பர் அக்கா. என்னைப் போல‌ சமையலில் ஆரம்ப‌ நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான‌ குறிப்புகள். நோட் பண்ணிட்டேன். காலை பிரேக்ஃபஸ்ட் பொங்கல், பூரி, மதியம் பிரியாணி, இரவு சப்பாத்தி என்று ஒரு முழு நாள் சமையலுக்கும் டிப்ஸ் தந்துட்டீங்க‌. நன்றி. : )
//தேன்க்யூ இமா & க்றிஸ்// என் சார்பாகவும் நன்றி. : )
//யாருக்காவது பயன்படுமென்றால் மகிழ்ச்சி // ரொம்பவே மகிழ்ச்சியா இருங்க‌. பல‌ பேருக்கு இந்த‌ சின்ன‌ சின்ன‌ டிப்ஸ் பெரிய‌ பெரிய‌ தீர்வுகள் தரும்னு நினைக்கிறேன். :))
//தப்பா இருந்தா கோச்சுக்காம உட்டுடுங்க. வனி பாவம், அவளும் இப்ப தான் கத்துக்குறா கொஞ்சம் கொஞ்சமா.// இந்த‌ பணிவு உங்களை எங்கயோ கொண்டுப்போக‌ போகுது ஆபிசர். :))
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

ஸாப்ட் சப்பாத்தி குறிப்பு வந்திடிச்சே.. எல்லா குறிப்பும் சூப்பர். தண்ணி அதிகம் சேர்த்தா, கைல ஒட்டுமே? என்னை அதிகமா கைல தடவினா, மாவுல எண்ணை அதிகம் ஆகுதே.
வடஇந்தியாவுல உள்ளவங்க சுடுற மாதிரி, நேரடியா நெருப்பிலேயே சுட்டா, அதிகம் எண்ணை வராதில்ல? அப்படி சுட்டா ஸாப்ட்டா வருமா?

\\எங்க வீட்டில் வெளியே போனால் சப்பாத்தி தான் அதிகமா செய்து எடுத்துட்டு போவேன். இரண்டு நாள் ஆனாலும் கெடாது, சாப்பிட சாஃப்டா இருக்கும்\\ வனி சிஸ், சில உண்மைகள நீங்க நேரடியா பப்ளிக்ல சொல்லகூடாது. சொன்னா, மத்தவங்க மனசு வலிக்குமா இல்ல.

உன்னை போல் பிறரை நேசி.

எல்லா டிப்ஸுமே நல்லா சொல்லியிருக்கீங்க‌......சமையல் கத்துக்கிறவங்களுக்கு மிகவும் உபயோகமாயிருக்கும்........

எனக்கு எப்பவுமே பிரியாணிதான் பிரச்சனையான‌ விஷயம்! உங்க‌ளோட‌ கடைசி டிப்ஸ் எனக்கு ரொம்ப‌ உபயோகமாயிருக்கும்......நன்றி வனி.......கலக்குங்க‌...:))))

Ellama nalla tips . Mavu tanner vitu pisaithal taiythu chappathi poda mudiyathu?

என்னை மாதிரி சமையலில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு ரொம்ப ரொம்ப Usefulla irukum . First of all me. Thank u soooooo much sis.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

முதல் பதிவு சீதாகிட்ட இருந்து வந்து ரொம்ப காலம் ஆகுதில்ல ;) தேன்க்யூ தேன்க்யூ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பால் சேர்க்க தேவையில்லை. ஹார்ட் ஆகுதுன்னா முதல் விஷயம் தண்ணி தேவையான அளவு விட்டு பிசையல என்பது தான். இல்லன்னா தீ கம்மியா வெச்சு சுட்டிருப்பீங்க. நானும் ஆசிர்வாத் இல்லன்னா பில்ஸ்பெரி தான். எண்ணெய் விட்டாலும் சரி தான், விடாம செய்தாலும் சரி தான். மாவை நல்லா 10 - 15 நிமிஷம் கையால் பிசைங்க. அடிச்சு பிசைஞ்சா மாவு நல்லா சாஃப்ட்டா வரும், சப்பாத்தியும் சாப்ட்டா வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இந்த‌ பணிவு உங்களை எங்கயோ கொண்டுப்போக‌ போகுது ஆபிசர். :)// - ஹஹஹ... தேன்க்யூ ஆஃபிசர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//தண்ணி அதிகம் சேர்த்தா, கைல ஒட்டுமே? என்னை அதிகமா கைல தடவினா// - தண்ணி முதல்ல ஒட்டுறாப்பல இருக்கும் க்றிஸ், நல்லா பிசைய பிசைய பதமா வந்துடும். ஒரு வேளை நீங்க பிசைந்த பின் ரொம்ப நீர்க்க இருக்க மாதிரி தெரியுதுன்னு சொல்றீங்களோ? அவ்வளவு நீர் விடணும்னு அர்த்தமில்லை க்றிஸ். தேவையான அளவு. அதாவது ஒரு விரலால் நீங்க பிசைந்த மாவை தொட்டால், து அழகா அழுந்து விரல் பதியனும். ரொம்ப நீர்க்க இருந்தா திரட்டவே வராது, ஒட்டும், பிஞ்சு போகும். நான் சொல்லுற பதம் நான் உருட்டி வெச்சிருக்க ஃபோட்டோ பார்த்தா புரியுதா? மாவை பிசைந்த பின் ஒண்ணு போல பார்க்கவும் அந்த உருண்டை போல தான் இருக்கும்.

நான் எப்பவும் தண்ணி அளந்து விட்டு பிசைந்ததில்லை. உங்களுக்காக வேணும்னா இன்னைக்கு அளந்து விட்டு பிசைந்து சொல்றேன் எவ்வளவு மாவுக்கு அதிகபட்சம் எவ்வாவு நீர் எடுக்கும் என்று. அது மாவின் தன்மைக்கு ஏற்ப மாறும் தான், ஆனாலும் ஓரளவு ஒத்து வரும். எண்ணெயும் அதிகம் போடாதீங்க... விரும்பினா ஒரு ஸ்பூன் எண்ணெய் கையில் விட்டுகிட்டு மாவை பிசைங்க.

நேரா நெருப்பில் போடுறது ரொம்பவே சாப்ட்டா வரும். காத்து உள்ள போயி நல்லா உப்பி வருது இல்லையா? அதை நெருப்பில் போடாம பொடவும் ஒரு வழி இருக்கு. கடைசியா நெருப்பில் போடுறதுக்கு பதிலா கல்லிலேயே விட்டு, ஒரு மென்மையான துணியை பந்து போல உருட்டி பிடிச்சு அதை கொண்டு சப்பாத்திய ஒண்ணு போல அழுத்தி விட்டாலும் உப்பு வரும்.

குழப்பமா இருந்தா சொல்லுங்க, ஃபோட்டோஸ் போடுறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரியாணி தான் சிக்கலா அங்க... இப்படி ட்ரை பண்ணிட்டு சொல்லுன்க, உங்க வீட்டில் பிரியாணி எல்லாருக்கும் நிச்சயம் ஃபேவரட் ஆகும் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்ம்... மேல க்றிஸ்க்கு சொன்னதே தான் :) அதிக நீர் என்றால் தேவைக்கு தான், கம்மியா விட்டா மாவ் வெடிச்சு நிக்கும், ஹார்டா வரும் சப்பாத்தி. ரொம்ப அதிகமா நீர்க்க பிசைஞ்சா செயவே வராது, செய்தாலும் அப்பளம் போல வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி நன்றி :) பயன்பட்டால் பதிவிட்டதில் எனக்குமே மகிழ்ச்சி தான். ட்ரை பண்ணிட்டு சந்தேகம் வந்தா கேளுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான பயனுள்ள பதிவு..

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நான் சப்பாத்தியா போடுவதை விட ஃபுல்காவா போடுவது அதிகம்//ஃபுல்கா செய்ய அடுப்பில நேரடியா காமிச்சா கேஸ் ஸ்மெல் வராதா அக்கா.. நான் ஒண்ணு ரெண்டு முறை ட்ரை பன்னேன். ஃபுல்காவ புடிச்சிருக்க இடத்தில ஓட்ட விழுந்து சூடான ஆவி கையிலபடுது.

//வீட்டில் தயாரிக்கும் மசாலா தான் சுவை. கடைகளில் வாங்குவது அவசரத்துக்கு மட்டுமே// ஒரு தடவை கரம் மசாலா அரைக்கிறேன்னு அரைச்சி போட்டு பிரியாணியே கருப்பு கலர் ஆக்கிட்டேன். சோ அதில இருந்து முழுசா தாளிக்கரதோட சரி, பொடி பண்ணி போடறதில்ல, நீங்க சொன்ன மசாலா அளவை பாக்கும் போது தான் தெரியிது நா போட்டது எவ்வளவு அதிகம்னு. :-)

சின்ன‌ சின்ன‌ டிப்ஸ்‍‍___ பெரிய‌ பெரிய‌ யூஸ்
பூரி நல்லாவே வரும்.
சப்பாத்தி இன்னும் கொஞ்சம் நேரமெடுத்து பிசையணும்னு தெரிஞ்சுகிட்டேன். நன்றி
பொங்கலும் நல்லாவே வரும்
பிரியாணி அடிக்கடி சொதப்பும். இன்னுங்கொஞ்சம் டிப்ஸ் வேணுமே.
ஆம்பூர் பிரியாணி, தலப்பாகட்டு பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி இதுக்கெல்லாம் என்ன‌ வேறுபாடு வனி.
இன்னும் கொஞ்சம் பிரியாணி டிப்ஸ் தாங்களேன்.:)
பிரியாணி பாத்திரத்தில் தொடங்கி பரிமாறும் வரை ஒரு தனி பதிவா தாங்க‌ வனி.
உபயோகமான‌ பதிவு நன்றி வனி.

நன்றி வனி சிஸ் \\தேவையான அளவு. அதாவது ஒரு விரலால் நீங்க பிசைந்த மாவை தொட்டால், அது அழகா அழுந்து விரல் பதியனும். ரொம்ப நீர்க்க இருந்தா திரட்டவே வராது\\
இந்த இரண்டும் தான் குழப்பம். இப்ப நீங்க ரொம்ப தெளிவா விளக்கம் குடுத்திருக்கீங்க. நான் எப்பவுமே கைல ஓட்டக்கூடாதுன்னு மாவ அதிகமா போட்டு உருட்டுவேன். அத சுட்டு எடுத்து, மத்தியானத்துக்கு ட்ரை பண்ணினா, உடைஞ்சி வரும். மாவ ஒரு மணி நேரம் ஊற வச்சி சுட்டாலும் அதே கதைதான். எனக்கு இவ்வளவு விளக்கம் போதும்னு நினைக்கிறேன். நீங்க சொன்ன மாதிரியே ட்ரை பண்ணுறேன்.
இனிமே நாங்களும், இரண்டு நாள் சப்பாத்தி சாப்டா.,

உன்னை போல் பிறரை நேசி.

ரொம்ப நன்றிங்க. அறுசுவை பார்த்து நிறைய ட்ரை பண்ணியிருக்கேன் . ஆனா இது தான் என்னோட முதல் பின்னோட்டம். எனக்கும் எப்பவும் பிரியாணி தாங்க சொதப்பும். ஒரு நாள் ரொம்ப குழைய விட்டுடுவேன் , ஒரு நாள் நீர் கோத்த மாதிரி இருக்கும். ஒரு நாள் வெதையா இருக்கும். இனிமே நீங்க சொன்ன மாதிரி ட்ரை பண்றேன். இருந்தாலும் நேயர் விருப்பமா பிரியாணி பத்தி ஒரு முழு பதிவு போட்ட நல்லா இருக்கும், உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது. நன்றி .

அன்புடன்
பாரதி வெங்கட்

அன்புடன்
பாரதி வெங்கட்

ஃபுல்கா அடுப்பில் போட்டா வாசம் இதுவரை வந்ததில்லைங்க. நான் எப்பவுமே அடுப்பில் நேரடியா போட்டு தான் எடுப்பேன். ஓட்டை விழுதா? எதை பயன்படுத்தறீங்க அடுப்பில் போட்டு எடுக்க? கையால போடுறீங்களா? இல்ல இடுக்கி எதாவது பயன்படுத்தறீங்களா? இடுக்கி பெஸ்ட். அதுவும் முனை நல்லா சாஃப்ட்டா குத்தி கிழிக்காம இருக்குற மாடல் வாங்கி வெச்சுக்கங்க.

பிரியாணிக்கு கரம் மசாலா வீட்டில் பண்ணி பாருங்க, கடையில் வாங்குற மசாலா வாசமே இல்லைன்னு தோனும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மாவு அதிகம்னு உருதியா தெரியுது தானே? உருட்டினா கண்டு பிடிச்சுடலாம், கல்லு போல நிக்கும். அழுத்தினா விரல் வலிக்கும். நல்ல மிருதுவா பிசைந்து நல்லா மாவுல பிரட்டி தேயுங்க. தேச்சுட்டு அதிகமா சப்பாத்தியில் மேல ஒட்டி இருக்க மாவை தட்டிட்டு கல்லில் போடுங்க. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கட்டாயம் ப்ரியாணி பற்றி ஒரு போஸ்ட் போடுறேன் நிகி. அடுத்த முறை பிரியாணி செய்யும் போது ஸ்டெப் ஃபோட்டோஸோட தெளிவா கொடுக்க பார்க்குறேன். நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) உங்கள் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது. தண்ணி அளவு சொதப்புறீங்க போல. நிச்சயம் பிரியாணி போஸ்ட்டில் எல்லாம் தெளிவா கொடுக்கறேங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நன்றிம்மா இப்ப புரியுது சப்பாத்தி நான் ஸ்லோவா வச்சுதான் சுடுவேன்.தீஞ்சிடுமோனு ஒகே இனி வேகமா வச்சு ட்ரைபன்ரேன்.அப்புரம் மாவு இன்னும் பிசையனும் போல.இனி அழுத்தி பார்த்து மாவு நீங்க சொன்னமாதிரி செஞ்சுபார்த்து சொல்ரேன்.

வனி சிஸ்,
நீங்கசொன்ன டிப்ஸ் follow பண்ணிதான் பூரி செய்தேன் .அதோட நம் தோழிகளின் கருத்துபடி குட்டியா, Vera design a செய்தேன் .வேணாம்னு சொல்லாம பையன் lunch கும் குடுக்கனும்ங்றான் thank u friends. இட்லி நன்றாக வர என்ன பண்ணலாம்?சொல்லுங்க Pls .

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ஹாய் வனிதா எனக்கு பிரியானி நல்லா வந்தாலும், மதியம் செய்வது மாலையில் களி போல இருக்கமாகிவிடுகிரது .உதிரியாக இருக்க டிப்ஸ் சொல்லுங்க.

சின்னச் சின்ன டிப்ஸ் - 1, இல்ல‌ இது எல்லாருக்கும் ரொம்ப‌ பெரிய‌ டிப்ஸ் ...
எல்லாமே ரொம்ப‌ தெளிவா சொல்லி இருக்கீங்க‌, தான்க் யூ.

சில‌ டைம் இந்த‌ சப்பாத்தி எங்க‌ வீட்லேயுமே சொதப்பிடும், பட் ரொம்ப‌ நேரம் வச்சிகிறது இல்ல‌ அதனால‌ நோ பிராப்ளம்...அம்மா செய்தா வராது நான் செய்தா தான் வரும், அதுக்கும் இப்போ நீங்க‌ வலி சொல்லீட்டீங்க‌... பாலோ பண்றேன்.

பிரியாணிக்கு எல்லாரும் சொன்னதே தான், சின்ன‌ சின்ன‌ டிப்ஸ்‍ 2 க்காக‌ வெயிட்டிங்......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சூப்பர் வனி. ரொம்ப யூஸ்ஃபுல்லான ப்ளாக். எனக்கு எப்பவும் சப்பாத்தி பூரி நல்லா வரும். முன்னெல்லாம் சப்பாத்தி மாவுலயே பூரியும் சுட்டுருவேன். அறுசுவை பார்த்ததுக்கப்புறம்தான் பூரிக்கு தனியா மாவு பிசைஞ்சு சுட ஆரம்பிச்சேன். இப்ப இன்னும் நல்லா வருது. நான் எப்பவும் பூரி எல்லாத்தையும் தேய்ச்சு வச்சிகிட்டு அப்புறமாதான் பொரிப்பேன். இனி நீங்க செய்ற மாதிரி செஞ்சு பாக்குறேன்.

இட்லியும் எனக்கு நல்லாவரும். இது வரை சீதாம்மா குறிப்புப்படி செஞ்சு பார்க்கல. அதையும் ட்ரை பண்ணி பார்க்கனும். (இன்னும் சூப்பரா இருக்கும்ன்னு நினைக்கிறேன்) பிரியாணிக்கு ஒரு கரம் மசாலா குடுத்துருகீங்க. நல்ல வாசனையா இருக்கும்ன்னு பார்க்கவே தெரியுது. அதில் கறுப்பு ஏலக்காய் கட்டாயம் சேர்க்கனுமா? (இங்க இருக்கான்னு தெரியல. அதான் கேக்குறேன்.) நட்சத்திர மொக்குன்னா அன்னாசிப்பூவா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பிகினர்ஸ்க்கு பயனுள்ள டிப்ஸ் வனி. எங்க வீட்ல சுடு நீரில் குழைத்து எண்ணெய் சுத்தமாக இல்லாமல் செய்யும் ஃபுல்கா டைப் சப்பாத்திதான் தான் தினமும். சப்பாத்திக்கென்றே தனி பேன் வைத்திருப்பதால் சுடும் போதும் எண்ணெய் ஊற்றுவதில்லை. அடுத்த நாள் வரைக்கும் சாஃப்ட்டாகத்தன் இருக்கும்.

பிரியாணி முக்கால் பாகம் வெந்ததும் அவல தம் போட்டு விடுவேன். அவனுடன் நாமர் உள்ளதால் பார்ட்டிக்கு சூடாகவே பறிமாரிவிடலாம்.
பூரிக்கு மாவு பிசைகையில் சிறிது ரவை சேர்த்து பிசைவேன், ஃக்ரிஸ்பியாக இருக்கும்.
போங்களும் பிரசனையில்லை. ஆனால் பூரியும், பொங்கலும் எப்போதாவது தான் செய்வதுண்டு.
கன்டினியூ பண்ணுங்க.