பால் பணியாரம்

தேதி: January 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 100 கிராம்
உளுந்து - 75 கிராம்
பசும்பால் - 200 மில்லி
தேங்காய்பால் - ஒரு கப்
சீனி - 100 கிராம்
ஏலப்பொடி- சிறிது
பொரிக்க எண்ணெய் - தேவையானஅளவு


 

பால் செய்முறை:
பசும் பாலைக்காய்ச்சி,இறக்குகிற சமயம் கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும் அதில் சீனி ஏலப்பொடி சேர்க்கவும்

பச்சரிசியையும்,உளுந்தையும் ஐந்து மணிநேரம் ஊறவைத்து கிரண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை போல் அரைக்கவும்.

இந்த மாவை சுண்டைக்காய் சைஸாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

வெள்ளை நிறமாக பொறித்து எடுக்கவும்.

பொறித்து எடுத்த உருண்டைகளைக் கொதிக்கைற வெந்நீரில் போட்டு உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும் சுவையான பால் பணியாரம் ரெடி!


மேலும் சில குறிப்புகள்