மார்பு வலி ப்ளிஸ் ஹெல்ப் தோழிகளே

8ஆவது மாதம் தொடங்கிருக்கு.இரண்டு நாட்களாக மார்பு காம்பு ரொம்ப வலியாக உள்ளது. நைட்டி காம்பு மேல் பட்டலே வலியாக உள்ளது.
இது நார்மல் தானே?

நேற்று இரவிலிருந்து இடுப்பு ஒரு மாதிரி நகட்டி எடுக்கின்றது.வலியாவும் தெரியவில்லை ஆனால் இடுப்புக்குள் ஏதோ செய்கிறது அந்த நேரத்தில் உட்கார்ந்து இருக்க முடியல நிற்கனும் போல் உள்ளது.

ரொம்ப வலியாக உள்ளது மார்பு காம்பு...என்ன செய்யலாம்?

அன்பு தோழி. தேவி

தேவி இபத்தான் பார்த்தேன். நீ உடனே டாக்டர் பாரும்மா அதான் நல்லது.வெயிட்பன்னாதிங்க

நிஷாம்மா டாக்டரிடம் போனால் எதை எதை கேட்பதென்றே தெரியவில்லை ம்மா. நேற்று ஊசி போட போனேன் ம்மா. பையனுக்கு சளி அவனையும் காண்பித்தேன்.

டாக்டர் பார்த்துட்டு பாவமா இருக்கு நாளைக்கு ஊசி வேணாம்னாங்க.
என் உருவமே மாறிடுச்சும்மா ஊசி போட ஆரம்பித்ததிலிருந்து.

நேற்று டாக்டரிடம் வயிறு எல்லாம் காண்பித்து மருந்து கொடுத்தாங்க. முகத்திலிருந்து கால் வரைக்கும் வேர்க்கூறு மாதிரி புல்லாவே இருக்கும்மா.மருந்து போட்டு துடைக்கும் போது வலி தாங்கவே முடியாம அழுதுட்டேன்ம்மா....வேர்க்கூறு எல்லாம் சிலது சிவப்பாக இருக்கு ம்மா.

கைவிரலில் சின்ன சின்ன கொப்பளமா இருக்கும்மா.லேசான சூட்டில் கூட கை வைக்க முடியல விர்விரன்னு இழுக்குதும்மா.பாத்திரம் விளக்கியதும் உள்ளங்கையிலும் வந்துருச்சும்மா. ...

அடுத்து வாய் பூராவும் உதடும் வெந்து போயிருச்சும்மா.பேசினால் கூட வலி தாங்கலைம்மா.

சாப்பிடவே முடியல ம்மா. இதை எல்லாம் கேட்டேன் இதை கேக்கலாம்மா.10நாள் கழித்து வர சொல்லிருக்காங்க. ....

அதன் தோழிகளிடம் கேட்டேன். .....எல்லாரும் ஒரு மாதிரி பேசுராங்க என்னைய பார்த்து. ....ஆயில் மெண்ட் போட்டு சரியாகுமான்னு தெரியவில்லை ம்மா. ..எனக்கு எதுவேணாலும் பண்ணட்டும் குழந்தை நல்லாருக்கனும் அது ஒன்னுதான்ம்மா.

சென்னையில் சரியான மழைம்மா எங்கையும் போக முடியாதும்மா

அன்பு தோழி. தேவி

தேவி நீ கவலபடாதம்மா எல்லாரும் உன்ன ஒருமாதிரி பார்க்க என்னயிருக்கு கஷ்டபடுரது நீ.அவங்களுக்கு என்ன் வந்தது.நீ எதையும் போட்டு குலப்பிகாதம்மா தைரியம்மாயிரு.அரிப்பு அலர்ஜியாயிருக்கும்.இல்லனா அம்மையானு பாருங்க டாக்டர் நேத்து பாத்துட்டு என்னசொன்னாங்க

அன்பு அஷ்வத் தேவி,

நீங்க இவ்வளவு தூரமெல்லாம் மனசைப் போட்டு, அலட்டிக்காதீங்க.

கர்ப்ப காலத்தில் சில பேருக்கு இந்த மாதிரி, உடம்பு பூராவும் பொரி பொரியாக வரும். குழந்தை பிறந்ததும் நார்மல் ஸ்கின் திரும்பவும் வந்துடும்.

இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கவலைப்படாம இருங்க.

டாக்டர்கிட்ட எந்த சந்தேகம்னாலும் கேக்கலாம். நீங்க கேளுங்க, சொல்வாங்க.

டாக்டர் கொடுக்கும் ஆயின்மெண்ட் போட்டுகோங்க. அவங்க சொல்வதை ஃபாலோ செய்யுங்க.

டாக்டர்கிட்ட அவங்க ஹாஸ்பிடலில் காண்டாக்ட் செய்யறதுக்கு ஒரு எமெர்ஜென்ஸி நம்பர் வாங்கி வச்சுக்குங்க. இடுப்பு வலி எடுப்பது, இந்த மாதிரி விஷயங்களை உடனே ஃபோனிலாச்சும் கேட்டு, தெளிவு படுத்திக்குங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

டாக்டரிடம் காண்பித்தேன் ஏதோ அலர்ஜியா இருக்கும் னு சொன்னாங்க. சத்து மாத்திரையும்(activit), sioplex டானிக்கும் கொடுத்தாங்க. ...காலமைன் லோஷன் தடவ கொடுத்துருக்காங்கம்மா. ......

அரிப்பு இருந்தால் தேங்காய் எண்ணெய் தடவுரேன்ம்மா. ..கணவர் மட்டும் தான் ம்மா எனக்கு ஆறுதல். ......

அன்பு தோழி. தேவி

மனசை குழப்பிக்கலைக்கா. டாக்டரிடம் காண்பித்தேன் மாத்திரை, டானிக் கொடுத்தாங்க. ..அது ஒன்னுமில்லைன்னு சொன்னாங்க அக்கா.

போன் நம்பர் இருக்குக்க...இல்லாத இடமெல்லாம் இன்னைக்கு வருதுக்கா.

ஊசி போட்டு இரண்டு நாள்
அப்புறம் தான் இந்த மாதிரி வந்ததுக்கா........

நன்றி அக்கா பதில் அனுப்பியதற்கு

அன்பு தோழி. தேவி

உட்கார்ந்து இருந்து நிமிரும்போது
ஒரு சொட்டு யூரின் வருது....எப்பயாவது. ...

அன்பு தோழி. தேவி

தேவி நீ சொல்ர சிம்டம்ஸ்.இடுப்புவலி யூரின் வர்வது எனக்கு என்னமோ நீங்க டாக்டர் போரது நல்லதுமா.உங்க கனவர் மட்டும் ஆறுதல் கொடுத்தாலே நீங்க ல்க்கிதான் கவலப்படாம நல்லபடியா குழந்தைபிறக்கும்.தைரியமாயிருங்க கசாயம் குடிச்சிபாரும்மா

பனீர்குடம் உடைவது எனக்கு தெரியும்மா.இன்னைக்கு அப்படி இல்லை. ...இரண்டு நாட்களாக இடுப்பை நகட்டிருச்சும்மா...

அம்மா ஆறுதலே இல்லையேம்மா.
இதுமாதிரி அவஸ்தை படணும்ன முன்னாடி யே கலைச்சுருக்க சொல்லிருப்பேன்னு சொல்றாங்க.

இன்னைக்கு வலி வலி ன்னு வீட்டு வேலையே பார்க்க மாட்டிகிதுன்னு ரொம்ப திட்டினாங்க. பையனால் இன்னும் அதிகமாக திட்டு விழுது. .உங்களிடம் சொல்லும் எதுவும் என் அம்மாக்கு தெரியாது. ...நான் உங்களிடம் கேட்டுதான் தெளிவு பெறுகிறேன். ..என் கணவர்க்கு தான் எல்லாமே தெரியும். ....

இன்னும் 3மாதங்கள் எப்படி போகப்போகுதுன்னு தெரியலை ம்மா.

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்