ஸ்கூல் சரியான வயது

<!--break-->என் பையன்க்கு 2 வயது ஆகிறது இப்போதா ஸ்கூல் சேர்த்த எனக்கு மனம் இல்லை என் கணவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்..ஸ்கூல் சேர்த்த சரியான வயது கூறுங்கள் தோழி....என் கணாவர் இது தான் சரியான வயது என்னுகிறார்....

என்ன அவசரமாம்?? 3.5 - 4.5 LKG போடலாம். ப்ரி கேஜி போடுறவங்க கூட 2.5 ல தான் போடுவாங்க. அது அவசியமான்னு நீங்க தான் முடிவு பண்ணனும். நான் என் பிள்ளைகள் இருவரையும் நேரா LKG 3.5 வயதில் தான் சேர்த்தேன். விட்டில் விளையாடும் வயது... இப்ப கொண்டு போய் பள்ளியில் விடணுமா? நல்லா யோசிச்சுக்கங்க. நம்மலாம் 5 வயசுல போனோம்... இன்னும் 3 வருஷம் முன்னாடியே கொண்டு போய் நம்ம பிள்ளைகளை விடுவது பாவமா இல்லையா? :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழந்தையை தேவையில்ல்லாமல் இப்போதே பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்பது என் கருத்து. 3 வயதுக்கு மேல் LKG சேர்ப்பதே நன்று.குழந்தையை வீட்டில் கவனித்துக் கொள்ள முடியாத பட்சத்தில் மட்டுமே 2 வயதில் Pre KG க்கு அனுப்ப வேண்டும்.

அன்புடன்,
Dr. S.Palani

Information is wealth

வனிதா அக்கா என் பையனுக்கு 2வயது 8மாதம் ஆகின்றது. ...L K G ல சேர்க்கலாம்னு இருக்கேன். சேர்க்கலாம அக்கா? மார்ச் ல தான் பிறந்தான். ...

அன்பு தோழி. தேவி

இப்போ வேணாம், இன்னும் 6 மாசம் போகட்டும் LKG சேர்க்க. 3.5 வயது சரியா இருக்கும். இப்போ உங்களால் பார்க்க முடியலன்னா ப்ரி கேஜி பக்கத்துல எதாவது ஸ்கூலில் போடுங்க. அடுத்த வருடம் ஜூன்ல பள்ளி திறக்கும் போது LKG போடலாம். 3.5 - 4.5 தான் LKGக்கு பள்ளியில் சொல்லும் வயதும், அதுக்கு முன்னாடி அவங்களே சேர்க்க மாட்டாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா இப்ப சேர்க்கலக்கா...நானே 7வயதில் தான் அக்கா சேர்ந்தேன். ...ஜூன் ல தான் அக்கா சேர்க்க போறேன்.ஜூன் ல பையனுக்கு 3வயது 3மாதம் நடக்கும் சேர்த்துபாங்கலா?

இதுதான் என் சந்தேகம். ..

அன்பு தோழி. தேவி

டவுட்டு தான் சேர்க்குறது. இப்ப எல்லாம் ரூல்ஸ்... 3.5 ஆகலன்னு சொல்லிடுறாங்க முதல்லயே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா கேட்டு பார்க்கிறேன் ஸ்கூலில்.விஐயதசமியில் சேர்க்கலாமா அக்கா?

அன்பு தோழி. தேவி

வனி அக்கா நான் சொல்லுவதை என் கணவர் புரிந்து கொள மறுகிறார்...எனக்கு மிகவும் கவலையாக உள்ளது

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

En ponnu ku 2 1/2 vayasu ... Avanga PKG poranga... 2 months a school poinu irukanga... 1st week aluthanga... Now Jollyya poitu varanga.... pKG ennanga exama elutha poranga... Mostly play and painting... Rimes solikodukuranga... Ect ect.... Naan kuda 1st yosichen... Epdi school serkurarhunu ... romba kastama kuda irunthuchu... En baby school la vittu thaniya veetku varumpothu elam aluven.... Ipo am happy ... Naama feel panratha kolnthainga purinchupanga... Naama santhosama feel pana !.. Avangalum athey than feel panuvanga.... Dhivya 2 vayasu kami... 2 1/2 vayasu is correct
Sorry tamil next tme type panren ... Varamaatuthu

ஸ்கூல் சேர்க்கும் வயது 3 தான் இருந்தாலும் அருகில் விளையாடச சின்ன‌ பிள்ளைகள் இல்லையென்றரல் play school அனுப்பலாம்

மேலும் சில பதிவுகள்