அரட்டை - வரிசை எண் 1002

<font color="#1A0DAB">

<h2 align="center">அரட்டை இழைக்கான சிறப்பு விதிகள். </h2>

1. அரட்டை இழைத் தொடங்க உறுப்பினர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. அவற்றை அறுசுவை நிர்வாகம் மட்டுமே இனித் தொடங்கும். உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டு பதிவுகள் கொடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பதிவுகள் வந்ததும் அடுத்து புதிய இழை தொடங்கப்படும். அதையும் நாங்கள் மட்டுமே செய்வோம். உறுப்பினர்கள் ஆரம்பிக்கும் அரட்டை இழைகள் நீக்கப்படும்.

2. அரட்டையில் மதம், இனம் சார்ந்த பதிவுகள், ஆன்மீகம் பரப்பும் விசயங்கள் கூடாது.

3. தனித்தனி குழுக்களாக பிரிந்து உரையாடல் கூடாது. ஒருவரையொருவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி பதிவுகள் கொடுப்பது, மனம் வருந்தும்படி பதிவுகள் கொடுப்பது கூடாது.

4. அரட்டை என்பது சப்ஜெக்ட் எடுத்துக்கொண்டு உரையாடுவது இல்லையென்றாலும், உங்களது உரையாடல் சுவாரசியமான உரையாடல்களாக இருக்க வேண்டும். "அடுத்த வீட்டு அம்புஜம் ஆறு பவுன்ல செயின் வாங்கி இருக்காளேமே.. அம்புட்டு காசு எங்கிருந்து வந்துச்சு.." இப்படி எதாவது பேசுவது சப்ஜெக்ட் இல்லாத பேச்சாக இருந்தாலும் ஒரு சுவாரசியமானப் பேச்சு. படிக்கும் எல்லோருக்குமே அம்புஜம் பற்றின ஒரு ஆர்வம் வரும். இதுபோல் எதையாவது, எதைப் பற்றியாவது பேசுங்கள். அதுதான் அரட்டை. வெறுமனே, "ஹாய்" என்று மட்டும் ஒரு பதிவு. அடுத்து, "யாராவது இருக்கீங்களா" என்ற பதிவு. அடுத்து நான் உள்ளே வரலாமா என்று பதிவு. அடுத்து bye என்று ஒரு வார்த்தை போடுவதற்கு ஒரு பதிவு..!! Chat ல் உரையாடுவது போலான இந்த வகை உரையாடல்கள், பக்கம் பக்கமாக ஒற்றை வரி பதிவுகள் இவைகளைத் தவிர்க்கவும். சில இடங்களில் நூறு பதிவுகளைக் கடந்தும் ஒரு இடத்தில்கூட ஒருவரும் எதைப் பற்றியுமே பேசாமல், ஹாய், எப்படி இருக்கீங்க, யார் இருக்கீங்க என்றே இருந்திருக்கின்றது.. இதனைக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. யாராவது இருக்கீங்களா என்ற தேடல் பதிவுகள், நான் வந்துட்டேன் என்ற ஆஜர் பதிவுகள், வரலாமா என்று கேட்கும் அனுமதிப் பதிவுகள், வெறும் ஹாய் சொல்லும் மரியாதைப் பதிவுகள் இவற்றையெல்லாம் தவிர்க்கவும்.

5. பதிவுகள் கொடுக்கும்போது தலைப்பு என்று இருக்கும் பெட்டியில் தயவுசெய்து உங்கள் பதிவுக்கு பொருத்தமான தலைப்பு ஒன்று கொடுங்கள். யாரை நோக்கியாவது பதில் கொடுத்தீர்கள் என்றால் அவரது பெயரையாவது குறிப்பிடுங்கள். வெறும் வணக்கம், அஸ்லாமு அலைக்கும், ஹாய் இவற்றையெல்லாம் தலைப்புப் பெட்டியில் கொடுக்காதீர்கள். உங்கள் வணக்கத்தையும் மரியாதையையும் உள்ளே சப்ஜெக்ட் பெட்டியில் கொடுங்கள். தலைப்பு பெட்டியில் தயவுசெய்து கொடுக்காதீர்கள்.

6. யாராவது பிரச்சனைக்குரிய பதிவுகள் கொடுத்தால் அவற்றை உடனே அட்மினுக்கு தெரிவியுங்கள். நீங்களும் பதிலுக்கு அங்கே பிரச்சனைகள் செய்து, பிறகு பிரச்சனை முற்றிய பின்பு அட்மினைத் தொடர்புகொண்டால் எங்களால் எந்த விதத்திலும் உதவ இயலாது. யாரேனும் பிரச்சனையைத் தொடங்கினால் மற்றவர்கள் அமைதி காத்து எங்களுக்கு தெரிவிக்கவும். நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றோம்.

7. அறுசுவையின் பொதுவான மற்ற விதிகள் இதற்கும் பொருந்தும்.

(காலப் போக்கில் இந்த விதிகளில் மாற்றங்கள் வரலாம். )
</font>

க்றிஸ் குக்கர்ல விசில் நின்ன பிறகு தான் திறக்கணுமா? ரொம்ப பயனுள்ள தகவல்ப்பா.
கெமிஸ்ட்ட்ரி எல்லாம் சொல்லிக் கொடுக்கிறீங்க டீச்சர்
அப்படியே மைக்ரோவேவ்ல எப்படி சட்டு "புட்டு"ன்னு தண்ணீரை கொதிக்க வைக்கிறதுன்னு சொல்லி கொடுங்களேன் :)))
கூடவே இலவச ஆஃபரை அள்ளி விடுங்க
ஐ அம் வெயிட்டிங்

இடை வெளி தேவைதான்ங்க, ஆனால் நீங்கள் சொல்வது அதிக இடைவெளி. முதல் குழந்தை 2 அல்லது 3 படிக்கையில் 7 வயதாகி விடுமே. அதற்க்கிடைப் பட்ட காலங்களில் முதல் குழந்தை தனியே வளரும். நீண்ட இடைவெளி உண்டாகி விடும். மேலும் பலருக்கு நீண்ட இடைவெளி விடுவதால் பல உடல் உபாதைகளும் வர வாய்ப்புள்ளது. சில நேரங்களில் முதல் குழந்தை உண்டாகுவதில் பிரச்சனையில்லாமல் இருந்தாலும், இரண்டாவது குழந்தைக்கு முயற்ச்சிக்கையில் சில பிரச்சனைகளால் தாமதமாகவும் வாய்ப்புள்ளது.
3 வருட இடைவெளி போதும் என்பது என் கருத்து.

//மேலும் பலருக்கு நீண்ட இடைவெளி விடுவதால் பல உடல் உபாதைகளும் வர வாய்ப்புள்ளது. சில நேரங்களில் முதல் குழந்தை பிரச்சனையில்லாமல் இருந்தாலும், இரண்டாவது குழந்தைக்கு முயற்ச்சிக்கையில் சில பிரச்சனைகளால் தாமதமாகவும் வாய்ப்புள்ளது.//
ஆம். 100% உண்மைதான்.
At least குழந்தை Lkg முடிக்கிற வரைக்குமாவது wait பண்ணலாம்னு சொல்லனும்னு நினைகிரேன் . Bcoz கொஞ்சம் விவரம் தெரிஞ்சா பெரிசே சின்னத அக்கறையா பாத்துக்கும். இது என்னோட Suggestion தான் தவறா இருந்தா Sorry sis!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நீங்க தான் முதலில் பதிவு போடுவீங்கனு நான் நினைத்தேன் . Bcozநீங்க தான் current ல இருக்குரீங்க!!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ஆமாம்மா. அனுபவம்தான்மா. நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன் . அப்போது யாரும் எனக்கு ஆலோசனை சொல்லவில்லை . எனக்கும் அந்த அளவுக்கு பக்குவம் இல்ல. இப்பொ எனக்கு தெரிஞ்சவங்க Friendskulam சொல்லிடு இருக்கேன் கருத்து. Government & doctors 3 வருடமாவது gap விடுங்கனு சொல்லிட்டுதான் இருக்கு . எங்க எங்கள்மாதிரி ஆட்களுக்கு அது இன்னும் reach ஆகல?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

எங்கள் தெருவில் நாய்கள் தொல்லை தாங்க‌ முடியவில்லை. வாசலில் மலம் கழித்து அசிங்கப்படித்திவிடுகிறது. இதற்கு என்ன‌ தீர்வு

ஊருக்குப் போயிருந்த சமயம் பலரது வெளிவாசல்களிலும் வெற்று ஃபான்டா, கோக் பாட்டில்களில் தண்ணீர் நிறைத்து வைத்திருப்பதைப் பார்த்தேன். கேட்ட போது... அப்படி வைத்தால் நாய்கள் வாசலை நெருங்காது, அசுத்தம் செய்யாது என்றார்கள். எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

‍- இமா க்றிஸ்

\\பாத்திரத்தை அடுப்பில் வச்சுட்டு ஆன் பண்ணணுமா இல்லை ஆன் பண்ணிட்டு பாத்திரத்தை அடுப்பில் வைக்கணுமா\\
தோழி கவிசிவா அவங்க பட்டிமன்றம் நடத்தி தீர்வு காண வேண்டிய ரொம்ப கடினமான கேள்விய கேட்டு இருக்காங்க. யாராவது நடுவரா வந்தா பட்டிமன்றம் ஆரம்பிக்கலாம். நான் கூட ஒரு பக்கம் வாதாட வாரேன்.

\\மைக்ரோவேவ்ல எப்படி சட்டு "புட்டு"ன்னு தண்ணீரை கொதிக்க வைக்கிறதுன்னு சொல்லி கொடுங்களேன்\\
மைக்ரோவேவ்ல சட்டுன்னு தண்ணீரை கொதிக்க வைக்க ஐடியா இருக்கு. நீங்க "புட்டு"ன்னு கேட்டா, கொஞ்சம் கஷ்டன் தான்.

அதனால நான் சட்டுன்னு தண்ணி கொதிக்க ஐடியா கொடுக்கேன். இந்த கேள்வி ரொம்ப முக்கியமானது. உலக பெண்கள் எல்லாம் இந்த கேள்விக்குதான் பதில் தேடிட்டு இருக்காங்க. நம்ம நாடே, தண்ணி கொதிக்க நேரம் ஆகுதுன்னு 'எரிபொருள் சிக்கனம். தேவை இக்கணம்'ன்னு பதறுது.

மொதல்ல நீங்க பாத்திரத்துல தண்ணி எடுத்து, வெயில்ல சுட வைங்க. அதுலயும் பாத்திரம் கருப்பா இருக்கிறது முக்கியம்.

ஏன்னா? டாக்டர் சர். சி. வி. ராமன் தன்னோட நிறமாலை (ஸ்பெக்ட்ரம், ஐயோ, இது அரசியல் இல்லைங்கோ) பிரிகை தியரில என்ன சொல்லுறாருன்னா, சூரிய ஒளில இருந்து வர்ற எல்லா நிறங்களையும், அப்படியே பிரதிபலிச்சா அது வெள்ளை. அதுவே அப்படியே வச்சிகிட்டா அது கருப்பு. அதனால கருப்பு சூர்ய வெப்பத்தையும் அப்படியே வச்சிக்கும். சூடும் அதிகம் ஆகும்.

நம்ம புத்திசாலி முன்னோர்கள் அதனால தான் கருப்பு சட்டிய பயன் படுத்தினாங்க. அலுமினிய பாத்திரத்தையும், அடிபாகத்த கருப்பா மாத்திட்டாங்க.

(அப்பாடா... சயின்ஸ், அந்த காலம் எக்ஸ்சம்பில் குடுத்தாச்சி, இனி நான் சொல்லுறத நம்பிதான ஆகணும்.)

உச்சி வெயில, பருப்பு பாத்திரத்தில, சாரி கருப்பு பாத்திரத்தில தண்ணி வச்சி, அப்புறம் மைக்ரோவேவ்ல வச்சா தண்ணி உடனே, சட்டு "புட்டு"ன்னு கொதிக்கும்.

உடனே நீங்க நைட்டு, தண்ணிய சட்டுன்னு கொதிக்க வைக்கிறது எப்படின்னு கேட்டா. உச்சி வெயில, கருப்பு பாத்திரத்தில தண்ணி வச்சி, அப்புறம் அதை தெர்மோ ப்ளாஸ்க்ல (இதுக்காகவே தெர்மோ டைனமிக்ஸ் அப்படீன்னு பாடம் இருக்கு) வச்சி பயன்படுத்துங்க.

உங்களோட கேள்வியால உலக பெண்கள் பல பேர் பயன்பெற போறாங்க வாழ்த்துக்கள் வாணி சிஸ்டர்.

(நாமளும் ரொம்ப அறியாலியா மாறிட்டோமோ, கீப் இட் அப் கிறிஸ்)

உன்னை போல் பிறரை நேசி.

மெர்சி உங்களுக்கு சொல்லி தர ஆள் இல்லைன்னு சொன்னீங்க. ...நாங்களே முடிவு பண்ணிதான்
இருந்தோம் ஆனால் எங்களுக்கு தெரியாமல் நடந்தது....எனக்கு உடம்பு சரியில்லை ன்னு டாக்டரிடம் போனால் கன்சீவ் னு சொல்லி அனுப்பிவிட்டாங்க.

என் டாக்டர் என்னிடம் சொன்னது நான் தான் ஒரு பெண்ணோடு இருந்துட்டேன் நீ லாம் அப்படி
இருக்க கூடாது ன்னு சொன்னாங்க. பையனுக்கு 2வயது ஆகும் போது. .....நான் ஐந்து வருடம் இடைவெளி இருக்கட்டும் ன்னு சொன்னேன். .......

ஸ்கூல் லாம் போனாங்கன்ன கர்ப்பமாக இருக்கும்போது கவனிக்க சிரமம்ன்னு சொன்னாங்க. யாராவது துணையாக இருந்தால் ஈஸி.

எனக்கு தெரிந்து இரண்டு பேர் இரண்டாவது குழந்தை க்கு வெயிட் பண்றாங்க இன்னும் பிறக்கலை எட்டு வருடம் ஆகுது முதல் குழந்தை பிறந்து.

அன்பு தோழி. தேவி

ஆஹா அன்னன் அடுத்த் இழை ஆரம்பிச்சாச்சா.தேவி&மெர்சி எப்ப யாருக்கு என்ன நடகுமோ அது நடந்தேதீரும் கவலைப்படாதீங்க நிம்மதி வரும்.ரென்டுக்கும் மேல உஷாரா இருங்க தேவி இப்ப உடம்பு தேவலயா

மேலும் சில பதிவுகள்