இன்று அறுசுவையை பார்வையிட வரும்போது 11வது ஆண்டில் அறுசுவை காலடி எடுத்து வைக்கிறது என்ற தகவல் பார்க்க கிடைத்தது. சந்தோசமான ஒரு தகவல். மனதார வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் சொல்வதை விட நன்றி சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அறுசுவை ஒரு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தளம். புதிதாக வரும் யாரும் இலகுவாக பார்வையிடலாம். பல பல தகவல்கள் ஒன்று கூடி இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக அறுசுவையின் கண்ணியமாண பதிவுகள் வியக்க வைக்கின்றது. பாராட்ட பல நல்லவை இருக்கின்றது. அறுசுவையின் பணிகள் இவ்வாறே தொடர வாழ்த்துக்களும், கோரிக்கைகளும். :).
பல நாட்களாக நன்றி சொல்ல நினைத்தேன். இது தருணம் என்று நினைத்தேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
11வது ஆண்டு
நிச்சயமான உண்மை. சரியாக தேர்வு செய்யப்பட்ட அழகான வார்த்தைகள் ரேணுகா சிஸ். : ) அறுசுவைக்கு என் நன்றிகள். பல்லாண்டு அறுசுவையின் அரும்பணி தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்
தயூ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
Teddy K
நன்றி தயூ.
ரேணுகா விஜய்
அன்பு ரேணுகா,
அழகான வாழ்த்து. எங்க எல்லோர் சார்பிலும் நீங்க சொன்னதை, நாங்களும் வழிமொழிகிறோம்.
அன்புடன்
சீதாலஷ்மி
ரேணுகா
//அறுசுவை ஒரு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தளம். புதிதாக வரும் யாரும் இலகுவாக பார்வையிடலாம். பல பல தகவல்கள் ஒன்று கூடி இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக அறுசுவையின் கண்ணியமாண பதிவுகள் வியக்க வைக்கின்றது. பாராட்ட பல நல்லவை இருக்கின்றது. அறுசுவையின் பணிகள் இவ்வாறே தொடர வாழ்த்துக்களும், கோரிக்கைகளும். :)// - வழி மொழியறேன்... :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி
நன்றி சீதா லக்ஷ்மி அக்கா & வனி அக்கா. என் வாழ்த்து அழகாக இருக்கா. கேட்கவே சந்தோசமா இருக்குங்க. நன்றி.