வாழ்த்துக்கள் கோடி... அண்ணா மற்றும் அறுசுவை

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்பு அண்ணனுக்கும், அழகு அறுசுவைக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள்... :) மனதில் நினைத்த நல்லவை எல்லாம் வெற்றி பெற பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்.

அறுசுவைக்கும் இனிப்பான பிறந்த தின நல்வாழ்த்துகள்

அன்பு அண்ணாவிற்கும் அறுசுவைக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். எங்கும் இல்லை இந்த சுவை இதற்கு இல்லை ஈடு இணை.. வாழ்த்துகள் கோடி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அன்பு அட்மின் பாபு அவர்களுக்கும், அறுசுவைக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அறுசுவைக்கும், அட்மின் பாபுவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
regards
siljavignesh

வனிதா சிஸ்டர்,

வழக்கம்போல ஒரு வாழ்த்து இழையைத் தொடங்கியதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. :-) இந்த தளத்தின் வளர்ச்சியில உங்களுடைய பங்களிப்பு மிக அதிகம். முறைப்படி உங்களுக்கு நான்தான் நன்றி சொல்லணும். சொன்னா திட்டுவீங்க.. இருந்தாலும் எனது நன்றிகள். :-)

எனக்கும், அறுசுவைக்கும் தங்களின் அன்பான வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்த சகோதரிகள் Krishnamercy, chrishmas, kanimozhi.n, kavitha1911, sumibabu, Renuka Rajasekaran, ammulu, ashvath devi, Revathi.s, Priya Ravikumar, Anu Senthil, nisa_72, Teddy K, swarna vijayakumaar, Tharsa, ganelaya, zahidabanu, revathy.P, siljavignesh, சீதா மேடம் மற்றும் திரு. பழனி, திரு. குணா ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் வழக்கமாக குறிப்பிடும் ஒரு யதார்த்த உண்மையைத்தான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். அறுசுவையின் இந்த வெற்றிப்பயணம் ஒரு தனிமனிதச் சாதனை அல்ல. இதற்காக உழைத்தவர்கள், உழைப்பவர்கள் ஏராளம் பேர். இங்கே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள உங்களில் தொடங்கி, வருகையாளர்களாக இருக்கின்ற அத்தனைப் பேரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவும்தான் இந்த பயணத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கின்றது. இந்த நாளில் நீங்கள் எனக்கு நன்றி தெரிவிப்பதைவிட, நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுதான் பொருத்தமான செயல். உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் அன்பும், ஆதரவும் இந்த தளத்தை இன்னும் சிறப்பான இடத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை நான் நன்கறிவேன். இது உங்களின் விருப்பத்தளமாக என்றும் தொடர என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்று உறுதியளிக்கின்றேன்.

வாழ்த்துக்கள் அண்ணா.....
உங்கள் நற்பணி என்றும் தொடர்க...........

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

அட்மின் அண்ணாவிற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அறுசுவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

இனிய‌ பிறந்த‌ நாள் வாழ்த்துக்கள் சகோ.
அறுசுவை ஆலமரமெனெ வளர‌ வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்