karuppati

hi friends...
karuppati baby ku try pandravangaluku nallatha? atha epdi entha dish use pannalam... athoda uses ennanu therinjavanga sollunga..

கருப்பட்டி சீனியை விட‌ நல்லது பா. நான் அதைதான் நிரய‌ உபயோகப்படுதுவேன். உளுந்தங்களி செய்ய‌ பயன் படுத்துவேன். கருப்பட்டி பனியாரம் செய்வேன். காபி போடுவேன்.....

கருப்பட்டி,குழந்தைக்கு எத்தனை மாதத்திலிருந்து சேர்த்துக்கலாம.இதனால் loose motion aaguma.

நல்ல எண்ணமே நல்ல செயல்களுக்கு அடிப்படை

கருப்பட்டி கர்பமாக‌ போறவங்க‌ சாப்பிடலாமா? நான் ராகி உருண்டை 2 அல்லது 3 தினமும் சாப்டுரேன்.ராகி உருண்டை கருப்பட்டி சேர்த்து செய்தேன். தினமும் சாப்பிடுரது நல்லதா?

யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

//ராகி உருண்டை 2 அல்லது 3 // ;-) இது என்ன அளவு மாஷிகா!! ;) என் கையால் பிடித்தால் குட்டியாக இருக்கும். உங்கள் கை அளவு தெரியலயே!! கருப்பட்டி கூட, அவரவர் சுவைக்குக் கூட்டிக் குறைத்துச் செய்யலாம்.

//தினமும் சாப்டுரேன்.// எதற்காக! காரணத்தைச் சொன்னால் அதற்கு ஏற்றபடி பதில் சொல்லலாம்.

//தினமும் சாப்பிடுரது நல்லதா?// அது... கூட கருப்பட்டியும் சேர்க்கிறீங்க. அப்போ... இது ஸ்னாக்காகச் சாப்பிடுறது, சரிதானே! நீங்க குச்சிக்கிழங்கு ஆள் என்றால் பூசின மாதிரி வருவீங்க; அளவான வெய்ட் உள்ள ஆள் என்றால்.. மெது..வா எடை கூடி குண்டாகுவீங்க. பிறகு இங்க வந்து, 'நான் குழந்தைக்கு ட்ரை பண்றேன். எடை அதிகம் என்று டாக்டர் சொல்றாங்க. எடையைக் குறைக்க என்ன வழி?' என்று த்ரெட் போடணும். :-)

//தினமும் சாப்பிடுரது நல்லதா?// இல்லை. உங்களுக்கு என்று இல்லை, யாராக இருந்தாலும் இது அவசியமில்லாத விடயம். டீ, காஃபிக்கே சக்கரை சேர்க்கிறதைக் குறைச்சுக்கறோம். சாப்பிடும் போது சாதத்தின் அளவைக் குறைக்கிறோம். பிறகு இப்படி எக்ஸ்ட்ராவா உள்ளே அனுப்புவதால் என்ன லாபம்? உண்மையில்.. இது குண்டாகுற வேலை.

தினமும் எடுக்கும் சாதாரண சாதம் அல்லது மாவின் இடத்தில் ராக்கி பரவாயில்லை. அதே போல தினப்படி எடுக்கும் சீனியின் இடத்தில் கருப்பட்டி சீனியை விடப் பரவாயில்லை. அவை நல்லது என்பது கருத்து அல்ல. 1 கரண்டி சீனியைத் தவிர்த்து 2 கரண்டி அளவு கருப்பட்டியைச் சேர்த்தால் எந்த மாற்றமும் ஆகி இராது.

எந்த உணவானாலும் அளவோடுதான் சாப்பிட வேண்டும். ஒன்றையே தினமும் சாப்பிடும் போது மீதி நல்ல உணவுகளைச் சாப்பிடும் சந்தர்ப்பம் குறைந்து போகிறது இல்லையா!

சாப்பிடுவதானால் வாரம் ஒரு நாள் பரவாயில்லை; தினமும் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

அய்யய்யோ ராமா. நான் ராகி உருண்டை 2 அல்லது 3 தினமும் சாப்பிடுரேன்.என் கனவருக்கும் குடுத்துட்டு இருக்கேன். en weihgt 53 kg.na kutti ponnaa thaa irupen. en hand sirusaa thaa irukum.
badam,pistha,walnut,cashew,வறுத்த‌ வேர்கடலை பொடி செய்து ,வறுத்த‌ ராகி மாவுடன் கலந்து கருப்பட்டி சேர்த்து உருண்டை பிடுச்சு ஒரு டப்பால‌ போட்டு வச்சுப்பேன். கருப்பட்டி ல‌ இரும்பு சத்து இருக்குனு எங்கயோ படுச்ச‌ ஞாபகம். சத்தான ஸ்னாக்ஸ்னு நானும் தினமும் சாப்டேன்.இந்த‌ மாசம் தான் டாக்டர் january 15th பேபி form ஆக‌ gestofit 300mg SR tablets 15 குடுத்தாங்க‌.எனக்கு january 1st period வந்தது.இந்த‌ மாசமும் போச்சா. எதாவது மடத்தனமா பன்னிட்டு இருக்கேன். டீ,காபி குடிக்க‌ மாட்டேன்.சர்க்கரை பயன்படுத்த‌ மாட்டேன். பீரிய்ட் வர்ர‌ மாதிரி வயிறு வலிச்சது.அதான் சந்தேகம் வந்தது உங்ககிட்ட‌ கேட்டேன். என் கனவருக்கு sperm count,motility problem iruku.
avar சோம்பு சாப்பிடலாமா???
நெய் fridge la வைக்கலாமா? நாங்க‌ சாப்பிடலாமா?
இங்க‌ அறுசுவைல‌ பார்த்து தா தினை,வரகு,சாமை,குதிரைவாலி அரிசி பயன்படுத்துரேன். இனிமே கருப்பட்டியே வாங்கமாட்டேன். நா ராகி ரொட்டி,ராகி தோசை செஞ்சு சாப்பிட்டுகிரோம்.

மர்ஷிகா

naan unga pathilukaaha kaathirukiren

அன்பு மார்ஷிகா,

கருப்பட்டி வாங்காம இருக்கற அளவுக்கு ஏன் பயம்?

அளவோடு பயன்படுத்துங்க, அவ்வளவுதான்.

நெய் ஃப்ரிஜ்ல வச்சு உபயோகிக்கலாம். சாப்பிடறதுக்கு முன்னால, அதை ஓரளவுக்கு உருக்கி, சாப்பாட்டில் சேத்துக்குங்க. (ஒரு பாத்திரத்தில் இருக்கும் வென்னீரில் நெய் கிண்ணத்தை வைத்தால், பக்குவமாக உருகி விடும்)

சோம்பு - தாளிக்க, குருமாவில் சேர்த்து அரைக்க, இப்படி அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் அளவுதானே. இதில் என்ன பிரச்னை?

அன்புடன்

சீதாலஷ்மி

Imma amma

மர்ஷிகா,

நீங்க இமா அவர்களிடம் கேள்வி கேட்டு இருக்கீங்க. இருந்தாலும் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதை விட்டு கருப்பட்டியை நன்றாக பயன்படுத்தலாம். கருப்பட்டி உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.

உமா

மேலும் சில பதிவுகள்