Nandri

Nandri

ம்... ரொம்ப சிரமமா இருந்தது தமிங்கிலம் இவ்வளவு பெருசு படிக்க. :) இருந்தாலும் படிச்சாச்சு. நிறைய பேசணும் உங்ககிட்ட. நினைச்சதெல்லாம் என்னால் தட்ட முடியுமா தெரியல... பார்ப்போம். முதல்ல காது கொடுத்து கேட்க, சொல்வதை ஏற்க உங்கள் மனசு தயாரா? இருந்தால் நான் மேற்கொண்டு சொல்வதை படிங்க. :) இல்லன்னா இவங்க இப்படி அட்வைஸ் பண்ண யாருன்னு என் மேல கூட கோபம் வரலாம்.

//thirumanam aagi 5 maatham aagivitathu.// - 5 மாதம் ஆகிவிட்டது இல்லைங்க... 5 மாசம் தான் ஆச்சு. இது தான் முதல் தப்பு... இங்க ஆரம்பிச்சது தான் எல்லாமே. 5 மாசத்துல உங்க கணவரிடம் அவர் குடும்பம் பற்றி பேசுறீங்க, யாரும் வேண்டாம் கணவர் மட்டும் போதும்னு சொல்றீங்க, யாருமே இல்லாம தனிமைங்கறீங்க, கணவர் உங்களோடு நேரம் ஒதுக்கல, இப்பவே குழந்தை இல்லைன்னு வேதனைப்படறீங்க, அதை விட மோசம் சண்டை அடிங்கறீங்க !!

இதெல்லாம் 5 மாதத்தில் நடக்க கூடியது இல்லை பிரியா. எங்கோ தப்பு நடக்குது... எனக்கு அதுக்கான காரணம் தெரியாது, ஆனா தீர்வு சொல்ல முடியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//iruvarum migavum oruvar mel oruvar paasam vaithu ullom. irunthum pirachanaigal varukirathu.// - இருவருக்கும் அன்பு இருக்குன்னு நீங்க சொல்றது முழுசா உங்க மனசு நம்பித்தானா?? அப்படி இருந்தா, வேறு யாருக்காகவோ அடிச்சுக்கறீங்கன்னு தான் நான் சொல்வேன். அது தப்பா தோணலய? உங்ககிட்ட அவர் அன்பு வெச்சிருக்கார், அவர் மேல நீங்களும்... அப்பறம் தேவையில்லாத விஷயங்களில் கருத்து சொல்வானேன், பிரெச்சனை ஆவானேன்?? அதை தவிர்க்கலாம் தானே பிரியா? யோசிங்க.

//ellorum irunthum enakku yaarum ilai endra unarvu varukirathu// - அது கல்யாணம் பண்ணதும் பல பெண்கள் உணர்வது தான். பிறந்த வீடு, பெற்றோர் எல்லாம் விட்டு போனதும், புது இடமும் உறவுகளும் அப்படி ஒரு உணர்வை தரும். அது நாளாக ஆக சரியாகிடும்.

//en kanavar avar veetu aatkal meethu alavukadantha paasam , nambikkai, vittu kodukatha subavathil irukiraar// - உங்களுக்கு உங்க குடும்பத்து மேல் நம்பிக்கை பாசம் இருக்கா? இருக்கும் நிச்சயம். அதே பாசம் அவருக்கும் அவர் குடும்பத்தின் மேல் இருப்பதில் தவறில்லையே?

//avaroda ammavum thangaiyum avaridam pesum alavuku kuda ennidam palaguvathillai.ithanaal avargal meethu kopam varum. antha kopathil ennidum ulla niyangalai en kanavaridam sonnal avargal thappey panni irunthalum ennai kutram saatukiraar. // - உங்க வீட்டு ஆட்கள் எடுத்த எடுப்பில் உங்க கணவரிடம் உங்களிடம் பேசுவது போலவே பேசுவாங்களா? இருக்காது. புது மனிதர்களிடம் பேசுவது சற்று சிரமம் தானே? கொஞ்ச நாள் ஆனா உங்களை புரிஞ்சுகிட்டா பழக போறாங்க. அவங்களை பற்றி நீங்க குறை சொல்வதே இந்த நிலையில் தப்பு தான். இன்னும் உங்களுக்கே அவங்களை பற்றி முழுசா தெரியாது, உங்களுக்கு அவங்களும் புதுசு தான். இத்தனை வருடமா அவங்க அன்பில் வளர்ந்த அவர் நீங்க சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர் பார்ப்பது சரியா? யார் பாசம் வெல்லும்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//en kanavaroda anbu irunthum ennal avaroda nambikkaiyai pera mudiyavillai. naan ondru seithalo allathu aalosanai sonnalo athai mulumaiya yerka marukiraar. // - எப்படி நம்பிக்கையை பெற முடியும்??? அவர் அதிகம் நம்பும் அன்பான குடும்பத்தையே குறையாக நீங்கள் சொன்ன பின், அவருக்கு உங்கள் மேல் எப்படி நம்பிக்கை வரும்?? நீங்க பேசிக்கா யாரையும் புரிஞ்சுக்காத நபராக தோண்றும். அதனால் தான் உங்க பேச்சை அவர் கேட்பதே இல்லை.

//en amma veetil iruntha antha santhosham mamiyarum nathanaarum irukum pothu illai. // - ஏன்னா உங்க மனசு அவங்களை ஏற்கல... நேசிக்கல. அதனால் அவங்க நேசமும் கூட தெரியாம இருக்கலாம் உங்களுக்கு.

//ennavaridam ammavin anbai kaankiren. // - அடி வாங்கினாலும் அவரை நேசிக்கறீங்க... அதான் அவர்கிட்ட அன்பு இருக்குறது தெரியுது. :)

//thangai magan thaan en appa endru solli thanni kulapi kondu irukiraar. kulanthain meethu avvalavu paasam.// - இருக்கட்டுமே... தப்பில்லை தானே? குழந்தை தானே? பெரியவர்கள் மேல் உங்களுக்கு கோபம் இருப்பதால் அந்த பிஞ்சு என்ன செய்தது?

//enakku yethuvum vendam yaarum vendam ennavar pothum endren.// - உங்க கணவரும் இதையே சொல்லி உங்க பிறந்த வீட்டு ஆட்களை ஏற்க மறுத்தால் சரியா இருக்குமா? திருமணம் என்பது இரு மனங்களை மட்டும் இணைப்பதில்லை. நம்ம நாட்டில் அது இரண்டு குடும்பங்களை இணைப்பது. ஒருவர் குடும்பத்தை மற்றவரும் தன் குடும்பமாக ஏற்க வேண்டும்.... இல்லையெனில் உங்கள் கணவர் சொன்னது போல அனாதையை (அந்த வார்த்தையை சொல்வதே தப்பு... உறவுகள் அறியாதவரை என்றே சொல்ல விரும்புகிறேன்) தான் எல்லாரும் தேடி திருமணம் செய்ய வேண்டும்.

இனி நான் சொல்ல விரும்புறது இது தான்:

உங்க உடம்பில் ஏற்படும் ஹார்மோன் சேஞ்சஸ் மன அழுத்தம் காரணமா இருக்கலாம். எடையும் ரொம்பவே அதிகம் தான். நிச்சயம் நீங்க மட்டுமல்ல உங்க கணவருமே எடையை குறைகணும். இந்த எடை என்பது ஒரு வகையில் மனசோட சம்பந்தப்பட்டது தான். அது குறைஞ்சா மனசுலையும் நிறைய மாற்றங்கள் வரும். மனசு சந்தோஷமா இருந்தா எடையிலும் மாற்றம் வரும் :)

முதல்ல உங்க கோபத்தை குறைங்க. தனிமை தவிர்த்து எதாவது வேலையில் கவனத்தை திசை திருப்புங்க. எந்த காரணம் கொண்டும் உங்க கணவரிடம் அவர் குடும்பத்தை பற்றி குறையாக பேசாதீங்க. உங்க குடும்பத்தை குறை சொன்னா மனசு ஏற்குமா? ஏற்காதில்ல? அப்படித்தான் ஆண்களுக்கும், உண்மையில் நம்மை விட அவர்கள் தான் இதை அதிகம் எதிர்ப்பாங்க.

அவர் குடும்பத்தை உங்களுடையதா ஏற்க முயற்சி பண்ணுங்க. முடியாதுன்னு எடுத்ததும் நினைக்காதீங்க. யோசிங்க, அப்பா இல்லாம உங்க கணவரை இந்த அளவு வளர்த்து ஒரு பெண் திருமணம் செய்து வைத்திருக்கிறார். எவ்வளவோ கஷ்டப்பட்டிருப்பார். அவருக்கு மனதளவில் ஒரு இன்செக்கியூரிட்டி இருக்கும். தன் பிள்ளையை வந்தவள் பிரித்து விடுவாளோ என்ற பயம் இருக்கலாம். தன் மகளுக்கு பின்நாளில் பிறந்த வீட்டு ஆதரவு இல்லாமல் போகுமோ என்ற அச்சம் இருக்காலாம். எந்த தாயும் தன் பிள்ளைகள் கடைசி வரை ஒன்றாக அன்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார். அது தப்பில்லை என்பதே என் கருத்து.

அவர்கள் உங்களிடம் பேசாமல் போனாலும் நீங்கள் அன்பாக பேசுங்கள். தொலைப்பேசியில் அடிக்கடி பேசி நீங்களும் அவருக்கு ஒரு மகள் என்ற உணர்வை ஏற்படுத்துங்கள். உங்களை அவர் புரிந்து கொண்டால் நிச்சயம் உங்க வாழ்க்கை மாறும், உங்க கணவரும் உங்களை நேசிக்க ஆரம்பிப்பார், உங்களிடம் நிறைய பகிர்ந்து கொள்வார். ஆண்களுக்கும் தன் குடும்பத்தை குறைசொல்பவர்களை விட, தன் குடும்பத்தை நேசிக்கும் பெண்ணையே பிடிக்கும். உங்களுக்கு புகுந்த வீடும், புகுந்த வீட்டாருக்கு நீங்களும் புதுசுங்க... ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்க கொஞ்சம் நேரமாகும். அந்த நேரத்தை கொடுங்க. நம்ம குடும்பத்தார், நாம நெசிக்கும் ஒருவர் என்ன தப்பு பண்ணாலும் அதுக்கு ஒரு நியாயம் சொல்லி நம்ம மனசு அவங்களை மன்னித்து அவர்களை அவர்களாகவே ஏற்கும். உங்க கணவர் அடிச்சாலும் நீங்க அவ்ர் மட்டும் போதும்னு சொல்றீங்களே... அதன் அடிப்படை இது தான். நம்ம அம்மா அப்பா தங்கை தம்பி அக்கான்னு எல்லாரையும் நாம நேசிக்கிறதும் இந்த அடிப்படையில் தான். அதனால் அவர்கள் தப்பே பண்ணாலும் நம்ம மனசு அதை பெரிதுபடுத்துவதில்லை. இதையே நாம் நேசிக்காத, நமக்கு விருப்பமில்லாத புகுந்த வீட்டார் செய்தால் சின்ன தப்பும் பெரிய பூகம்பமா வெடிக்குது. புரிஞ்சுகிட்டா ஹேண்ட்ல் பண்றது ஈசி. என்ன இருந்தாலும் உங்களுக்கு ஒரு பிள்ளையை இத்தனை வருடம் பெற்று வளர்த்து கொடுத்தவராச்சே... அதுக்காக நேசிக்கலாம் தானே?? :)

அன்பு ஒன்றே உலகில் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது. அதை நம்பி எல்லோர் மீதும் அன்பு காட்டுங்கள், எதிரியிடமும் அன்பு காட்டும் மனமே மகிழ்ச்சியாக இருக்கும். :)

என்ன சொல்ல வந்தேன், எல்லாம் சரியா சொன்னேனா தெரியாது... ஆனால் நிச்சயம் தப்பா சொல்லலன்னு நம்பறேன் ;) புரிஞ்சுக்கிறது உங்க கையில் தான் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் பதிவை பார்த்தால் என் வாழ்க்கை மாதிரியே இருக்கு நான் சொல்வது தவறாக இருந்தால் மன்னியுங்கள் எனக்கு திருமணம் sep 2013 ல் நடந்தது நீங்க சொல்லற ப்ராப்லம் அப்படியே எனக்கும் நடந்தது மாமியார் நாத்தனார் அவங்க மட்டும் தான் என் கனவருக்கு உலகம் நான் சொல்வதை காதுல கூட வாங்க மாட்டார் எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல அம்மா வீட்டுக்கு போலானு கூட நினைப்பேன் அப்பறம் என் தவறு என்னனு எனக்கு புரிந்தது என் கனவருக்கு பிடிக்காத எதையும் அவரிடம் பேச கூடாதுனு முடிவு பன்னினேன் அதே மாதிரி நடந்தேன் இப்ப அவர் பரிஞ்சுகிட்டார் அவங்க வீட்ல யாரவது என்ன பற்றி பேசினால் அவர் எனக்காக பேசறார் நீங்களும் அவங்கள பற்றி உங்க கனவரிடம் எதுவும் பேசவேன்டாம் அவர் உங்கள புரிஞ்சுக்குவார் நீங்க உங்க பீரியட் ப்ராப்லம் என்னனு பாருங்க உங்களுக்குனு ஒரு குழந்தை இருந்த உங்க ப்ராப்லம் அதுவே போய்டும் கடவுள் சீக்கிரம் தருவார் இப்பதான் உங்களுக்கு திருமனம் ஆனது நீங்க உங்க வாழ்கையை ரசிங்க நல்லது நடக்கும் சீக்கிரம் உங்க நல்ல செய்தியை எதிர் பார்க்கிரேன்

யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.

கலக்கிடேங்க போங்க vanithaa madam ,Very good advice at right time for her,I became FAN of yours.

marriage agi 5 month thana aguthu athukulla yen ivlo kovam.life virakthi.. nama pirantha veetil epadi vendumanalum irunthirupom..after marriage namma totala mari than aganum..life ae change agum athuku thaguntha pola nammala mathikka vendithan..illana mana kuzhapam kudumba prachanai than varum ..theva illatha tension thevaya namaku..first ungalukula nalla love understanding irukundringa atha life long thakavachikonga..namma oru step kila irangi porathala onnum koranji poida matom..namma adjust panni porathala nama family la problem varathu..tension rendu perkume irukathuna apdi adjust pandrathula thappilaye thozhi..unga tension ah korainga first..ungalukula argument vendam..apdi sandai vantha silenta irunga..ungalukum tention avarukum tention..ipdi iruntha nallarukuma life..yaravathu oru aal irangi pona thappilla.. be relaxxxxxxx..... all the best...weight reduce panna try pannunga.. enaku manasula patatha sonnen

பிரியா நீங்௧ எடையை குறையுங்௧ள் அதி௧மா௧ உள்ளது
தேவையற்ற உணவு௧ளான எண்ணெயில்பொரித்தவை. மட்டன்.
பால் பொருட்௧ள் ஆகியவற்றை தவிர்க்௧ வேண்டும்

கல்யாணம் முடிந்து 5மாதங்௧ள் தானே ஆகிறது சந்தோஷமா௧ இல்லறவாழ்க்கையை நடத்துங்௧ள் மனகுழப்பத்தை தவிர்த்து விடுங்௧ள்

மாமியார் . நாத்தனார் என்னிடம் பேசுவதுஇல்லை என்கிறீர்௧ள்
உங்௧ளிடம் சகஜமா௧ பேச சில நாட்௧ள் ஆகும் உங்௧ளை புரிந்து கொள்வார்௧ள்

கணவர் வீட்டில் உள்ளவர்௧ளிடம் நீங்கள் அனுசரனையா௧வும். அன்பா௧வும் நடந்து கொள்ளவும் கணவரிடம் இவர்௧ளைப்பற்றி பேசுவதோ
குறைகூறுவதோ வேண்டாம்

அவர்௧ள் உங்௧ளை பற்றி குறை கூறினால் அதை திருத்தி கொள்ள வாய்ப்பு என்று நினைத்து கொள்ளுங்௧ள்

கணவர் உங்௧ளை புரிந்து கொள்ள சில காலம் ஆகும்
சண்டை போட காரணம் என்ன என்று தெரிந்து கொண்டு அதை பற்றி பேசுவதை தவிர்த்து விடுங்௧ள்

சந்தோஷமா௧ இருங்௧ள் கணவருக்கு பிடித்தாற்போல் நடந்து கொள்ளுங்௧ள்

ML

தோழி,
கவலைபடாதீங்க‌,
//thirumanam aagi 5 maatham aagivitathu.// 5 மாதம் தான் ஆகிருக்கு. இன்னும் கணவன் மனைவிக்குள்ளேயே சரியான‌ புரிதல் வந்திருக்காது. அதற்குள் மாமியார், நாத்தனார் எப்படி உங்கள‌ புரிஞ்சுப்பாங்க‌. நீங்க‌ அவங்கள பற்றி முதல‌ தெரிஞ்சுக்க‌ முயற்சி பண்ணுங்க‌. அவங்க‌ எப்படி இருந்தாலும் எதொ தவறா பேசினாலும் கணவர்கிட்ட‌ குறை சொல்லாதீங்க‌. அதுதான் பிரச்சனைக்கு காரணம்னு உங்களுக்கே தெரியுது. அதனால‌ என்ன‌ நடந்தாலும் அப்படி பண்றாங்க‌ இப்படி பண்றாங்கனு சொல்லாதீங்க‌. அவரா தெரிங்சுகிட்டு அப்பறம் அவரே பரவாஇல்ல‌ நம்ம‌ மனைவி எவ்ளோ பொறுமையா இருக்கானு உங்க‌ மேல‌ நம்பிக்கை வைப்பார்.
அவங்க‌ விசயத்துல‌ நீங்க‌ தலையிடாம‌ இருங்க‌ கொஞ்ச‌ நாளைக்கு.
இதே மாதிரி இல்ல‌ இதைவிட‌ நிறைய‌ பிர்ச்ச்னைகளை நானும் கடந்து வந்துட்டேன். 5 வருடம் ஆகிவிட்டது இப்போதான் கொஞ்ச‌ கொஞ்சமா திருமணம்னா இதுதான் பிரச்சனைகளை இப்படிதான் கையாளனும்னு கத்துட்டே இருக்கேன். நீங்க‌ இப்போவே சோர்ந்துட்டீங்க‌. எதொதோ சொல்லனும்னு நினைத்தேன் தமிழ் டைப் பண்ண லேட் ஆகுது. ஒகே மற்றுமொரு சந்திப்பில் பேசுவோம். எதையும் யோசிக்காம‌ சந்தோசமா இருங்க‌!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Ungal karuthuku Mikka nandri. Naan en puguntha veetai verukavo allathu thalli vaithu paarkavo allathu ennavaridam irunthu pirikka nenaithathu illai.enakkum avangalukum palaga vaaipu illai.athanaal kuda intha pirachanaigal irukalam.neengal en edathil irunthu paarthal dhaan en vali puriyum. nandri .

வாழ்க்கை வாழ்வதற்கே!

Nandri Krishnamercy.

வாழ்க்கை வாழ்வதற்கே!

மேலும் சில பதிவுகள்