ஊத்தாப்பம்

தேதி: January 20, 2007

பரிமாறும் அளவு: 5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - இரண்டு கோப்பை
உளுத்தம்பருப்பு - அரைக்கோப்பை
வெந்தயம் - அரைதேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
ஆப்பச்சோடா - ஒரு சிட்டிகை
வெங்காயம் - நான்கு
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - ஒரு கட்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்கெண்ணெய் - கால் கோப்பை


 

அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து களைந்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
அடுத்த நாள் தோசைக்கு அரைப்பதைப் போன்று மையாக அரைக்கவும். மாவு பதம் சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.
உப்பைப் போட்டு நன்கு கரைத்து ஒரு நாள் முழுவதும் புளிக்க வைக்கவும்.
நன்கு புளித்தவுடன் ஒரு சிட்டிகை ஆப்பச்சோடாவை சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை நொறுங்க நறுக்கி வைக்கவும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி சற்று தடிமனான தோசைப் போல் வார்க்கவும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காய கலவையில் ஒரு பிடியளவு எடுத்து ஊத்தாப்பத்தின் மீது பரவலாக போட்டவும். தொடர்ந்து தோசை கரண்டியால் கலவையை சற்று அழுத்தி விடவும்.
பிறகு எண்ணெயை சுற்றிலும் ஊத்தாப்பத்தின் மீதும் ஊற்றி திருப்பி போட்டு வெங்காயக் கலவை சிவக்க வெந்தவுடன் எடுத்து விடவும்.
இந்த சுவையான ஊத்தாப்பத்தை சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் சூடாக
பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

I had prepared utthappam. Come out really good.
Taste was super.

ஹலோ ommanick எப்படி இருக்கீங்க?இந்த ஊத்தாப்பம் உங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்ச்சியே குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.