பனை ஓலைக் கொழுக்கட்டை

திருக் கார்த்திகை என்றதும் தீபத்திற்கு அடுத்து நம் நினைவுக்கு வருபவர் பனை ஓலை மணம் வீச‌ வரும் மாண்புமிகு கொழுக்கட்டையார் தான்.

முன்பு வயலிலுள்ள‌ பனையில் நல்ல‌ இளங்குருத்து ஓலையாகப் பார்த்து வெட்டி எடுத்து வருவார்கள். இப்போது ஓலையை விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். இங்கே 20 ரூபாய்க்கு ஓலை வாங்கினால் போதும். அது ஒரு கிலோ அரிசிக்கு போதுமானது. இதிலிருந்து சுமார் 35 கொழுக்கட்டைகள் தயாராகும்.

கார்த்திகை அன்று மாவு மிஷினில் ரொம்பக் கூட்டமாக‌ இருக்கும். எனவே, முன் தினமே பச்சரிசியை ஊறவிட்டு துணியில் விரித்து லேசாக‌ ஈரத்தைப் போக்கி அந்த‌ ஈர‌ அரிசியை புட்டுக்கு அரைக்கும் பக்குவத்தில் அரைத்து கொள்ளுங்கள். மிகவும் நைசாக‌ அரைக்கக் கூடாது.

அரைத்த‌ மாவை லேசாக‌ வறுத்து சலித்து கட்டியை நீக்கிக் கொள்ளலாம் அல்லது மாவை ஆவியில் வேக‌ வைத்து கட்டியை உதிர்த்து தாம்பாளத்தில் கொட்டி காற்றாட‌ உலர்த்தி வைத்துக் கொள்ளலாம்.

வறுத்த‌ மாவை விட‌ ஆவியில் வேக‌ வைத்த‌ மாவில் கொழுக்கட்டை மிகவும் மிருதுவாக‌ வரும்.

ஆனால், வறுத்த‌ மாவை ரொம்ப‌ நாட்கள் கெடாமல் டப்பாவில் இட்டு பத்திரப்படுத்தலாம். வேக‌ வைத்த‌ மாவு வெகு நாட்கள் வராது. விரைவில் பயன்படுத்தி விட‌ வேண்டும்.

இப்போது மாவு ரெடி
பச்சரிசி = 1 கிலோ (மாவாக்கவும்)
வெல்லம் = 1/2 கிலோ (நீரில் கரைத்து வடிகட்டவும்)
தேங்காய் = 1 (துருவிக் கொள்ளவும்)
சிறுபருப்பு = 100 (வறுத்துக் கொள்ளவும்)
ஏலம், சுக்கு = சிறிது (பொடி செய்யவும்)

அனைத்தையும் கலந்து மாவு பிசைந்து கொள்ளவும்.

பனையோலை கொத்தாக‌ கிடைக்கும். அதை மாவு வைப்பதற்கு ஏற்ப‌ ஒவ்வொன்றாக‌ கிழித்துக் கொள்ள‌ வேண்டும். தென்னை ஓலையைப் போல‌ ஒவ்வொரு இதழையும் பிரிக்க‌ வேண்டும். பின்னர் அதனை 15 செ. மீ. நீளத்திற்கு வெட்டிக் கொள்ள‌ வேண்டும். சிலவற்றை கொழுக்கட்டையை கட்டுவத‌ற்கு கயிறு போல‌ மெல்லிசாக‌ கிழித்துக் கொள்ள‌ வேண்டும்.

நறுக்கிய‌ துண்டில் மாவை திணித்து மற்றொரு துண்டால் மூடிக் கட்ட வேண்டும்.

பெரிய‌ குக்கரில் ஒரு செம்பு நீரை ஊற்றி அதில் வேஸ்டான‌ ஓலைதுண்டுகளைப் போட்டு அதன் மீது கொழுக்கட்டைகளை நிறுத்தி வைக்க வேண்டும். விசில் வந்த‌ பின் 20 நிமிடம் ஆனதும் எடுத்தால் பனையோலை மணம் வீசும் சுவையான‌ கொழுக்கட்டை ரெடி. சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க‌ தோழிகளே.

அவற்றை எடுத்து தாம்பாளத்தில் வைத்து மறுதினம் ஒரு கவரில் அடுக்கி ஃப்ரிஜில் ஓலையுடனே வைத்திருந்து சாப்பிடலாம்.

கொழுக்கட்டையை கருப்பட்டி, சர்க்கரையிலும் செய்வார்கள். கருப்பட்டியில் செய்வது கொஞ்சம் டார்க் கலராகவும் , சர்க்கரையில் செய்வது வெள்ளையாகவும் இருக்கும்.ஆனால், வெல்லம் தான் பிரௌன் கலராக‌ அலாதியான‌ சுவையாக‌ இருக்கும்.

சோளமாவு கொழுக்கட்டை.

வெள்ளை சோளத்திலும் அம்மா கொழுக்கட்டை செய்வாங்க‌. சோளத்தை மிஷினில் கொடுத்து புட்டு மாவு போல‌ பரபர‌ என‌ அரைத்துக் கொள்ளுங்கள். ஆவியில் மாவை வேக‌ வைத்துக் கொள்ளுங்கள். மற்றபடி அதே முறையில் செய்ய‌ வேண்டியது தான்.

சோள‌ மாவு ஓலைக் கொழுக்கட்டை ரொம்ப‌ மிருதுவாக‌ இருக்கும். மிகுந்த‌ சுவையாகவும் இருக்கும்.

கார்த்திகைப்பொரி என்று இந்த‌ சீசனில் விற்பனைக்கு வரும். அதை வாங்கி வெல்லப் பாகில் நெய் தடவி உருண்டை பிடிக்க‌ பொரி உருண்டை கிடைக்கும்.

மேலும் விளக்குகளை கொஞ்சம் டிரென்டியா அலங்கரித்து உங்கள் கைவண்ணத்தைக் காட்டலாம்.

பழைய‌ சி.டி. மீது ஓரத்தில் கோலிக்குண்டுகளை வரிசையாக‌ அடுக்கி ஒட்டுங்கள். மேலும் மேலும் மூன்றடுக்கு கோலிகுண்டு ஒட்டவும். நடுவில் விளக்கேற்றி வைத்தால் ஒளி கோலியில் பட்டு சிதறி நாற்புறமும் டாலடிக்கும்.
குந்தன் கற்கள் வைத்தும் சி. டி. யை அலங்கரிக்கலாம். தரையிலும் எண்ணெய் வழியாது தடுக்கலாம். விளக்கும் ஜொலிக்கும்.

செய்து பார்த்து, சுவைத்துப் பார்த்து சொல்லுங்களேன் தோழிகளே.:)

5
Average: 5 (4 votes)

Comments

நிகி பனை ஓலை கொழுக்கட்டை பார்க்கவே சாப்பிடனும்னு தோனுது இப்படி ஒரு பதார்த்தம் இதுவரை இங்கு கேள்வி பட்டதில்லை செய்ததும் இல்லை வித்தியாசமான ரெசிபி சூப்பர் :)
சீ.டி ஐடியாவும் ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பனைஓலை கொழுக்கட்டை கேள்விப்பட்டிருகிறேன்! ஆனால் இதுவரை பார்த்ததில்லை! உங்க‌ பதிவைப் படித்தவுடன் செய்யவும், சுவைக்கவும் ஆவல் அதிகமாகுது!!!

ஊருக்குப் போனா கண்டிப்பாக‌ முயற்சி செய்யனும்!

முதல் படத்தில் இருக்கும் பனைஓலை வித்தியாசமாக‌ இருக்கே! பனை ஓலை பச்சை நிறத்தில் இருக்கும், காய்ந்தவுடன் பழுப்பு நிறமாக‌ இருக்கும். காய்ந்தவுடன் கடினமாக‌ ஆகிவிடும். மடக்கினால் உடைந்துவிடுமே!! இது வேறு, நான் நினக்கும் பனைஓலை (பனைமரத்தின் ஓலை) வேறோ?

ம்ம்ம்ம்..... இங்குவரைக்கும் மணம் வந்திருச்சே. நாங்கள் கார்த்திகையை கொண்டாடாவிட்டாலும், எல்லா வருடமும் (அப்பா நன்றாக‌ இருந்தவரை) ஓலைக்கொழுக்கட்டை உண்டு. பனை ஓலை மட்டுமல்லாமல், திரளி இலை, பூவரசு இலை, வாழை இலை, பலா இலை கொண்டும் செய்வாங்க‌. இலைகளில் வைக்கும்போது அதை இரண்டாக‌ மடித்து, அதனுடைய‌ காம்பினாலேயே குத்தி வைப்பாங்க‌. வெந்து வரும்போது எல்லாம் கலந்து மணம் வருமே..... ஆஹா!

செய்து கொண்டிருக்கும்போதே பச்சை மாவை வாயில் போட்டுக்கொள்வோம். நினைக்கும் போதே வாயூறுகிறது.

அன்புடன்
ஜெயா.

நிக்கி சூப்ப்ர் பார்த்த்தும் சாப்பிட ஆசையாயிருக்கு எங்கபாட்டி செஞ்சுகொடுப்பாங்க.அவங்க ஞாப்கம் வந்துடுச்சு.அருமையான பாரம்பர்ய குரிப்பு நன்றி நிக்கி

ம்ம் எனக்கு பனை ஓலைக் கொழுக்கட்டை சாப்பிட‌ ஆசை வந்துருச்சே,
வீட்ல‌ கொலுக்கட்டை வாழை இலைல‌ செய்வாங்க‌ இந்த‌ மாதிரி பன‌ ஓலைல‌ செய்ததில்லை, இப்போ தான் நான் 1ஸ்ட் டைம் கேள்விபடுறேன். கார்த்திகை இன்னும் வரல‌ அதுக்குள்ள‌ செய்தாச்சா, இது காலி ஆகிருக்கும். கார்த்திகைக்கும் செய்றத‌ பார்சல் அனுப்பிருங்க‌.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

எங்கள் கிராமத்தில் மெஷின் வசதி இல்லாததால், பாட்டி கை உரலிலேயே இடித்து மாவாக்கி,வறுத்து,பிசைந்து,விறகு அடுப்பில் வேக‌வைத்து....! இது போன்றே பனையோலையில் செய்து தருவாங்க‌.
ரொம்ப‌ சுவையாக‌ இருக்கும்.
மறுநாள் பள்ளித் தோழிகளுக்கும்,ஆசிரியருக்கும் கொடுத்து மகிழ்வோம்.
இனிமையான‌ நாட்கள்...

பனை ஓலை கொழுக்கட்டையைப் பற்றி படிக்கும் போதே கொழுக்கட்டை வேகும்போது வரும் ஓலையின் மணம் தான் நினைவுக்கு வருது.
எனக்கென்னமோ கருப்பட்டியில் செய்வது சாப்பிட்டுத்தான் பழக்கம். இப்போ என் பெரியம்ம ஊரில் தான் பனை ஓலை கிடைக்குது. பெரியம்ம தான் எங்களுக்கெல்லாம் செய்து தர்ராங்க.

முதல் படத்திலிருக்கும் ஓலை பனை குருத்தோலை போல இருக்கு. நீங்க சொல்ற திரளி/ அரச இலை கொழுக்கட்டைகளும் தோழி வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன்.

பதிவும், படங்களும் அருமை

நான் சாப்பிட்டதே இல்ல நிகி. .முயற்சி செய்துப்பார்க்கிறேன்.

Be simple be sample

ரொம்ப அழகான பதிவு நிகிலா மா
பனைஓலையில் கொழுக்௧ட்டை செய்து௎சாப்பிட்டா
அவ்ளோ மணமும். ருசியும் இருக்கும்
அம்மா செய்து தரும் போது
வாழை இலையிலையும் செய்வாங்௧
௧ருப்பட்டி தான் பயன் படுத்துவாங்௧

இந்த பதிவை பார்த்ததும் அம்மா ஞாப௧ம் வந்திருச்சு

நாங்௧ இருக்கிற பகுதியில் பனைஓலை கிடைக்காது
அதனால் வாழை இலையில் தான் செய்வேன்

பனைஓலை கொழுக்௧ட்டை சாப்பிட ஆசைதான் ம்ம் என்ன பன்றது கிடைக்காதே

கொழுக்௧ட்டையை பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கே
10 கொழுக்௧ட்டையை பார்சல் பண்ணி அனுப்புங்௧ மா

ML

//இப்படி ஒரு பதார்த்தம் இதுவரை இங்கு கேள்வி பட்டதில்லை செய்ததும் இல்லை வித்தியாசமான ரெசிபி சூப்பர் :)//
இங்கே ரொம்ப‌ ஃபேமஸ் சுவா. திருக்கார்த்திகை அன்று ஓலை விற்பனை கன‌ ஜோரா நடக்கும். அங்கே ஓலை கிடைத்தால் செய்து பாருங்க‌.
உங்க‌ அன்பான‌ பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுவா:)

//முதல் படத்தில் இருக்கும் பனைஓலை வித்தியாசமாக‌ இருக்கே! பனை ஓலை பச்சை நிறத்தில் இருக்கும், காய்ந்தவுடன் பழுப்பு நிறமாக‌ இருக்கும். காய்ந்தவுடன் கடினமாக‌ ஆகிவிடும். மடக்கினால் உடைந்துவிடுமே!! இது வேறு, நான் நினக்கும் பனைஓலை (பனைமரத்தின் ஓலை) வேறோ?//

அது இளங்குருத்தோலை அனு. குருத்தோலை சற்று வெளிறிய‌ நிறத்தில் இருக்கும்.
காய்ந்த‌ ஓலை தான் உடையும். மரத்தில் இருந்து வெட்டியவுடன் பச்சையான‌ ஓலை வளையும், காயும் வரை அது உடையாது.

நன்கு பழுத்த‌ ஓலை பழுப்பு நிறத்தில் இருக்கும். அது உடையும்.
இப்போது புரியுதா அனு:)

//ஊருக்குப் போனா கண்டிப்பாக‌ முயற்சி செய்யனும்!// அவசியம் செய்து பாருங்க‌.மிக்க‌ மணமாக‌ இருக்கும்.
உங்க‌ பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி அனு:)

//ம்ம்ம்ம்..... இங்குவரைக்கும் மணம் வந்திருச்சே// ஆஹா.........வந்துருச்சா.......

//திரளி இலை, பூவரசு இலை, வாழை இலை, பலா இலை கொண்டும் செய்வாங்க‌. இலைகளில் வைக்கும்போது அதை இரண்டாக‌ மடித்து, அதனுடைய‌ காம்பினாலேயே குத்தி வைப்பாங்க‌. வெந்து வரும்போது எல்லாம் கலந்து மணம் வருமே// ஆம் ஜெயா நானும் சாப்பிட்டிருக்கிறேன். இலை மணம் தான் இதோட‌ ஸ்பெஷாலிட்டி.
இந்த‌ வருடம் மீண்டும் சுவைத்துப் பாருங்க‌:)
உங்க‌ பதிவுக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயா:)

//நிக்கி சூப்ப‌ர் பார்த்த‌தும் சாப்பிட ஆசையாயிருக்கு எங்கபாட்டி செஞ்சுகொடுப்பாங்க.அவங்க ஞாப்கம் வந்துடுச்சு.அருமையான பாரம்பரிய‌ குறிப்பு நன்றி நிக்கி//

வாழை இலை கிடைக்குமே செய்து உங்க‌ பொண்ணுக்கு கொடுங்க‌ நிஷா. பாட்டி ஞாபகம் வந்துருச்சா..........
உங்க‌ பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி நிஷா:)

//ம்ம் எனக்கு பனை ஓலைக் கொழுக்கட்டை சாப்பிட‌ ஆசை வந்துருச்சே,//
ஆஹா வந்துரிச்சு...
ஆசையில் ஓடி வந்தேன்....
//கார்த்திகைக்கும் செய்றத‌ பார்சல் அனுப்பிருங்க‌.//
கார்த்திகைக்குப் பார்சல் அனுப்பறேன். அதுவரை காத்திருக்கத் தேவையில்லை. இதெல்லாமே சுபிக்குத் தான்:)
உங்க‌ பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி சுபி:)

//பாட்டி கை உரலிலேயே இடித்து மாவாக்கி,வறுத்து,பிசைந்து,விறகு அடுப்பில் வேக‌வைத்து....!//
ம்...ஆமாம் எங்க‌ பாட்டியும் அப்படித்தான் செய்வாங்க‌......
//மறுநாள் பள்ளித் தோழிகளுக்கும்,ஆசிரியருக்கும் கொடுத்து மகிழ்வோம்.
இனிமையான‌ நாட்கள்.//
அடுத்த‌ நாள் ஸ்கூல்ல‌ எல்லோர் கையிலும் கொழுக்கட்டை இருக்கும். ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வோம்:).
எல்லாம் இனிமையான‌ நினைவுகள் தோழி.......
உங்க‌ பதிவுக்கு நன்றி விப்ஜி:)

//படிக்கும் போதே கொழுக்கட்டை வேகும்போது வரும் ஓலையின் மணம் தான் நினைவுக்கு வருது.// எனக்கும் தான் சாப்பிட‌ ஆர்வம் வருது......

//எனக்கென்னமோ கருப்பட்டியில் செய்வது சாப்பிட்டுத்தான் பழக்கம்// முன்னாடில்லாம் கருப்பட்டியில‌ தான் செய்வாங்க‌. அதிலும் ஒரு மணம் உண்டு. பானையில் சற்றே லூசாக‌ ஒரு தினுசு கருப்பட்டி ஊற்றுவாங்க‌. அதில‌ செய்தால் சுவையாக‌ இருக்கும். அதுக்கு 'தங்காரம்' நு பேரு.
இப்போ கருப்பட்டி கூட‌ ஒரிஜினல் கிடைப்பதில்லை. காய்ச்சும் போதே சர்க்கரை கலந்து தயாரிக்கிறாங்க‌. தெரிந்தவர்களிடம் சொல்லி தான் சுத்தமான‌ கருப்பட்டி வாங்குகிறோம்.

அதைவிட‌ வெல்லம் சுவை அதிகமே. செய்து சுவைத்துப் பாருங்க‌ வாணி:)

//பதிவும் படங்களும் அருமை//
நன்றி நன்றி வாணி

//நான் சாப்பிட்டதே இல்ல நிகி. .முயற்சி செய்துப்பார்க்கிறேன்//.
இந்த‌ வருடம் அவசியம் செய்து பாருங்க‌ ரேவா. குட்டீசுக்கு ரொம்பப் பிடிக்கும். ஓலை சென்னையில் கிடைக்கும். ஓலை மணத்துடன் கொழுக்கட்டை சாப்பிட்டு கார்த்திகை கொண்டாடுங்க‌:)
உங்க‌ பதிவுக்கு மிக்க‌ நன்றி ரேவா.

//ரொம்ப அழகான பதிவு// நன்றி கல்யாணி.

//௧ருப்பட்டி தான் பயன் படுத்துவாங்௧// இந்த‌ தடவை வெல்லத்தில் செய்து பாருங்க‌. சுவையும், நிறமும் நல்லாருக்கும்.

//கொழுக்௧ட்டையை பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கே
10 கொழுக்௧ட்டையை பார்சல் பண்ணி அனுப்புங்௧ மா//

அனுப்பிட்டாப் போச்சு. கல்யாணிக்கு இல்லாமலா...... கொரியர்ல‌ வந்துட்டே இருக்கு...........அட்ரஸ் எழுதாம‌ ....... விட்ருக்கேன்...அதை நீங்க‌ தான் எழுதணும்.....:)
உங்களுடைய‌ அன்பான‌ பதிவுக்கு மிக்க‌ நன்றி கல்யாணி.

நிகி, இப்பொழுது நல்லாவே புரிந்தது.....

நான் கிறிஸ்டியன் ஸ்கூல்ல‌ படிக்கும்போது, குருத்தோலை ஞாயிறுன்னு சொல்லி கொண்டாடுவாங்க‌, அப்போ இந்த‌ இளங்குருத்தோலை ஒவ்வொருத்தர் கையிலயும் இருக்கும். நானும் வைத்திருந்தேன்!! ஞாபகம் வந்துடுத்து......

ஞாபகம் வந்துருச்சா...
அதே தான்.
குருத்தோலை ஞாயிறு எனக்கும் நினைவு இருக்கு. நானும் கிறிஸ்டியன் ஸ்கூல் தான் அனு.

இந்த கொழுக்கட்டை பேஜ்ஜை அப்பப்ப மொபைலில் இருந்து ஓப்பன் பண்ணி பார்க்கறேன்... இந்த ஓலைக்கு நான் இப்ப எங்க போக ;(

இட்ஸ் ஓக்கே... கொழுக்கட்டை கார்த்திகை தீபத்துக்கு தான் பண்ணனுமா?? நாங்க பொங்கலுக்கு பண்ணிக்குறோம் ;) ஊருக்கு போய் கொழுக்கட்டை பண்ணி சாப்பிடுவேனாக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அம்மாகிட்ட‌ சொன்னா ஓலையை 15 செ. மீ. நீளத்தில‌ கட் பண்ணி கொரியர்ல‌ அனுப்பிடுவாங்களே வனி.

//கொழுக்கட்டை கார்த்திகை தீபத்துக்கு தான் பண்ணனுமா?? நாங்க பொங்கலுக்கு பண்ணிக்குறோம் ;) ஊருக்கு போய் கொழுக்கட்டை பண்ணி சாப்பிடுவேனாக்கும்.//

எஞ்சாய் வனி..பொங்கலுக்கு செய்துட்டு அறுசுவைக்கு அனுப்பி வைங்க‌. என்னால‌ படங்காட்ட‌ முடியலை பா.
உங்க‌ பதிவுக்கு நன்றி வனி.:)

அம்மா மட்டும் சென்னையில் எங்க தேடுவாங்க!! எங்க வீட்டு மக்களுக்கு புது புது பொருளெல்லாம் நான் தான் கண்ணுல காட்டணும், அவங்களூக்கு ஒன்னும் தெரியாது. கிராமத்துக்கு போனா தான் இதெல்லாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சென்னையில் கார்த்திகை அன்று கிடைக்கும்.நங்கனல்லூர், மடிப்பாக்கம் பக்கம் பார்க்கலாம்.
ஊர்ப்பக்கம் வந்தால் சொல்லுங்க‌ வனி. நிகி வெயிட்டிங்:)

பனையோலைக் கொழுக்கட்டை - பார்க்க, படிக்க ஆசையாக இருக்கிறது. அது என்ன சிறு பருப்பு - 100!

சீடீ... கைவினை பிடித்திருக்கிறது. அழகாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

சிறு பயத்தம் பருப்பு இப்போ புரியுதா?
இன்னும் தெளிவா வேண்டுமெண்டால் பாசிப் பருப்பு.....
அதை இங்கே சுருக்கமா சிறுபருப்பு நு சொல்வது உண்டு.:)
சி,டி.கைவினை செய்து பாருங்க‌ இமா சும்மா ஜொலிக்கும்
உங்க‌ பராட்டுக்கு நன்றி:)

அன்பு நிகிலா,

சுவையான‌ பதிவு.

இதுவரைக்கும் இந்த‌ மாதிரி கொழுக்கட்டை செய்ததேயில்ல‌. சென்னையில் பனை ஓலை கிடைக்கும்னு சொல்லியிருக்கீங்க‌.

இந்தத் தடவை கார்த்திகைக்கு வாங்க‌ முடியுமான்னு தெரியல‌. அதனால் என்ன‌, எப்ப‌ கிடைக்குதோ, அப்ப‌ செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

உங்க‌ பாராட்டுக்கு மிக்க‌ நன்றி.
இந்தக் கொழுக்கட்டையின் ஸ்பெஷாலிட்டியே பனையோலை மணம் தான்.
அது கிடைக்காவிட்டால் வாழையிலையில் செய்யுங்க‌ சீதா.:)