தேங்காய் பர்ஃபி

தேதி: January 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய் துருவல் - 4 கப்
சீனி - 2 கப்
வற்றிய பால் - அரை லிட்டர்
வெனிலா எசன்ஸ் - ஒரு ஸ்பூன்
தண்ணீர் - அரை கப்
முந்திரிப்பருப்பு - 10
நெய் - 2 ஸ்பூன்


 

முதலில் தேங்காய் துருவலை ஒரு வாணலியில் போட்டு நெய்விட்டு லேசான பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியை வறுத்த துருவல்கள் இல்லாமல் துடைத்துவிட்டு, சீனியை கொட்டி அரை கப் தண்ணீர் சேர்த்து சீனி நன்கு கரையும் வரை காய்ச்சவும்.
பிறகு, அதனுடன் வற்றிய பால் மற்றும் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, வறுத்த தேங்காய் துருவலையும் அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
அது திக்கானவுடன் வாணலியில் ஒட்டாமல் திரண்டுவரும்போது நெய் தடவிய ஒரு ட்ரேயில் கொட்டி பரப்பி, முந்திரிப்பருப்புகளை பாதியாக உடைத்து அதன் மேல் தூவி லேசாக அழுத்திவிடவும்.
சற்று ஆறியவுடன் கத்தியால் கீறி வில்லைகள் போடவும்.


நன்கு ஆறுவதற்கு முன், பர்ஃபி கத்தியில் ஒட்டாத பதமாக இருக்கும் போதே வில்லைகள் போடவும். நன்கு ஆறியபிறகு வில்லைகள் போட்டால் தூளாகிவிடும். பாலை வற்ற வைப்பதற்கு பதில், சுகர் இல்லாத கன்டென்ஸ்டு மில்க் பயன்படுத்துவது இன்னும் சுலபமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இதில் வற்றிய பால் என்றால் என்ன? பசுப்பாலை நன்கு காய்ச்சி எடுக்க வேண்டுமா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பாலை நன்கு வற்ற வைத்தும் செய்யலாம். அது டைம் எடுக்கும். நான் மேலே குறிப்பிட்டது சுகர் இல்லாத கன்டன்ஸ்டு மில்க்தான் அதிரா.

அஸ்மா உங்கள் தேங்காய் பர்பி செய்தேன். மிகவும் அருமை. எனக்கு தேங்காய்ப்பூ இனிப்புகள் நல்லா பிடிக்கும். அதுதான் பார்த்ததும் செய்தேன். நட்ஸ் மட்டும் போடவில்லை. கொண்டென்ஸ் மில்க்கில்தான் செய்தேன்.

ஒரு வித்தியாசம், நான் தட்டில் போட்டு கொஞ்சம் சூட்டுடன் துண்டுகளாக வெட்டிவிட்டேன். ஆனால் ஆறியதும், கொஞ்சம் கடிக்க கஸ்டமாகி விட்டது. ஏன்? , நான் அதிக நேரம் அடுப்பில் விட்டுவிட்டேனோ? நன்கு திரண்டுவரும்வரை அடுப்பில் வைத்தேன், அது தவறோ? தேங்காய்ப்பூவும் அதிகம் வறுத்துவிட்டேனோ?
படம் இணைக்கிறேன் பார்த்ததும் சொல்லுங்கள். சுவை மட்டும் சூப்பரோ சூப்பர்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா! இது ரொம்ப டேஸ்ட்டியாக இருக்கும். ஆனா கடிக்க முடியாத அளவுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்காதே?! நீங்கள் சொல்வதை பார்த்தால், சீனியை கம்பி பாகு பதத்தில் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தேங்காய் துருவலை பொன்னிறத்தில் வறுத்தால் ஒன்றும் ஆகாது. தேங்காய் துருவலை கொட்டிய பிறகு ரொம்ப நேரம் அடுப்பில் வைக்கவேண்டாம். சேர்ந்து திரண்டு திக்கலாகி வந்தவுடனே இறக்கி விடுங்கள். ரொம்ப திரளவிடவேண்டாம். படம் அனுப்புங்கள் பார்க்கிறேன். நான் மேலே சொன்னதுபோல் மீண்டும் செய்து பாருங்கள்.

சீனி பாகின் பதத்தில் உஷார் ! :-)

நீங்க சொன்னது சரிதான். நான் சீனியையும் தண்ணியையும் நன்கு காய்ச்சினேன், பின் தேங்காய்ப்பூவைப் போட்டும் நன்கு திரளும் வரை அடுப்பிலேயே வைத்திருந்தேன்.

இங்கு இணைய முன்பு, ஒரு இனிப்பு செய்தேன், அது இளகலாகிவிட்டது, அதற்கு சொன்னார்கள் நீண்ட நேரம் அடுப்பில் விட்டிருக்க வேண்டும் என்று, அந்தப் பயத்தில்தான், இதையும் இப்படி செய்துவிட்டேன். கடிப்பதற்கு ஆகவும் கஸ்டமில்லை. கொஞ்சம் கடினம். மீண்டும் முயற்சி செய்கிறேன். இது கொஞ்ச நாட்கள் பழுதடையாமல் இருக்குமா?
எங்கள் அட்மின் எங்கேயோ ஸ்ரக் ஆகிவிட்டார் போலும், வந்ததும் படத்தைப் போட்டுவிடுவார்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இதுவரை நாங்கள் பால் வைத்து தேங்காய் பர்பி செய்தது இல்லை. இது வித்தியாசமா இருக்கு செய்து பார்க்க ஆசை செய்து விட்டு சொல்றேன். இப்போ கொஞ்சம் ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன் எனக்கு இருந்த டவுட் எல்லாம் அதிரா மேடம் கேட்டுட்டாங்க நன்றி அதிரா மேடம். நான் செய்துவிட்டு சொல்றேன்.

அதிரா & காயத்ரி! பொறுமையாக செய்துவிட்டு சொல்லுங்கள்.

சகோதரி அதிரா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த தேங்காய் பர்ஃபியின் படம்:

<br />
<img src="files/pictures/coconut_cake.jpg" alt="coconut burfi" />

அன்புள்ள அதிரா! அருமையாக செய்துள்ளீர்கள். கட் பண்ணுவதற்கு முன் மேலே முந்திரி பருப்புகளை தூவினால் அழகாக இருக்கும். பார்ப்பதற்கு வேறு எந்த வித்தியாசமும் இல்லை. நான் முன்பே சொன்னதுபோல் சீனிப்பாகை கம்பி பாகு பதத்தில் விடவேண்டாம். //சீனி நன்கு கரையும்வரை காய்ச்சவும்// 'கரையும்வரை மட்டும்' விட்டால் போதும். தேங்காய் துருவலை கொட்டி, திரண்டு வரும்வரை கிண்டினால் போதும். அந்த சமயத்தில் அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும். மீண்டும் நீங்கள் செய்தால் அதன் ரிஸல்ட் சொல்லவும். படம் அனுப்பியதற்கு மிக்க நன்றி அதிரா!

படம் சரியாக இருக்கிறது என்பதால் சந்தோசம். இப்பவும் வைத்திருக்கிறேன், அதே சுவையுடன் பழுதடையாமல் இருக்கிறது. நன்றி அஸ்மா! பர்பியை அறிமுகப்படுத்தியதற்கு.இனி என்னால் பிழை இல்லாமல் செய்ய முடியும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அஸ்மா... இம்முறை தேங்காய் பர்பி போனதடவையை விட நன்றாகச் செய்தெடுத்திருக்கிறேன்.... நான் இதில் 80 வீதம் பாஷாகிவிட்டேன்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹை ASMA SHARBUDEEN MADAM,

Coconut Burfi செஞ்சு பார்தேன் .சூப்பரா வந்துச்சு
என்னவருக்கு கொடுத்தேன் . ரொம்ப நல்லா இருக்குன்னு ஒரே பாராட்டு தான்.

ரொம்ப தாங்ஸ்ங்க

நீங்க FRANCE LA எங்க இருக்கீங்க