ஐஸ் கிரீம்க்கு மாற்று

அன்பு தோழிகளே,
எனது குழந்தைக்கு 3.5 வயது ஆகிறது. அவளுக்கு ஐஸ் கிரீம் என்றால் ரொம்ப புடிக்கும். சளி தொந்தரவு இருப்பதால் வாங்கி தருவது இல்லை. ஆனால் ஷாப்பிங் போனால் ஐஸ் கிரீம்ஐ ஏக்கத்தோடு பார்ப்பாள். அதனால் ரெடிமேட் கோன் வாங்கி அதில் ப்ரூட் சாலட் போட்டு குடுப்பேன். வேறு ஏதாவது உங்களுக்கு ஐடியா இருக்கா? என்னோட பகிர்ந்து கொள்ளுகள். நன்றி

ஐஸ்க்ரீமையே சில விநாடிகள் மைக்ரோவேவில் வைத்து எடுக்கலாம். எனக்கு இப்படிச் சாப்பிடப் பிடிக்கும்.

விப்ட் க்ரீம் கொடுக்கலாம். விப்பிங் க்ரீமை நன்கு அடித்து எடுத்து சுவை, இனிப்பு, நிறம் விருப்பம் போல சேருங்கள். ஐஸ் இல்லாத ஐஸ்க்ரீம்! ரெடி. ;-)

‍- இமா க்றிஸ்

விப்ட் க்ரீம் நிச்சயம் செய்து குடுக்கிறேன். ஐஸ் கிரீம் மைக்ரோவேவ்ல வைத்து குடுத்தா சளி பிடிக்காதா? தகவலுக்கு நன்றி.

அன்புடன்
பாரதி வெங்கட்

//ஐஸ் கிரீம் மைக்ரோவேவ்ல வைத்து குடுத்தா சளி பிடிக்காதா? // :-) நீங்கள் கேட்டதால் சொன்னேன்.

ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் சளி பிடிக்கும் என்பது உண்மையல்லவென்பது என் அபிப்பிராயம். குளிர் பிரதேசங்களில் இருப்பவர்களும் ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறார்கள். உண்மையில் அவர்களிடமிருந்துதான் மீதி உலகிற்கு ஐஸ்க்ரீம் என்னும் உணவு அறிமுகமாகி இருக்கும்.

தொண்டை கட்டிக் கொள்வது கூட எல்லோருக்கும் ஆவது இல்லை. ஒரு சிலருக்குத் தான் ஒத்துக் கொள்ளாது.

எனக்கு பாதி உருகிய ஐஸ்க்ரீம் பிடிக்கும். மைக்ரோவேவ் செய்து அத்துடன் கொஞ்சம் ரைசீஸ் கலந்து சாப்பிடுவேன். :-)

‍- இமா க்றிஸ்

நேற்று நீங்க சொன்ன மாதிரி விப்பிங் கிரீம், சீனி அடிச்சிட்டு குடுத்தேன். ரொம்ப நேரம் விஸ்க் வைத்து அடிக்க வேண்டியதாயிட்டு (அது அப்படித்தானோ! ). ஆனா ரொம்ப நல்லா இருந்தது. ரொம்ப நன்றிங்க.

அன்புடன்
பாரதி வெங்கட்

ஐஸ் கீரீம் சாப்பிடுவதற்கு முன் சிறிது நீர் அருந்த வேண்டும். இப்படிச் செய்வதால் தொண்டை கட்டு ஏற்படாது. ஓவன் வைத்து சாப்பிடும் போது சளி பிடிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு அளவோடு முயற்சித்துப் பார்க்கலாம் நல்ல quality ஐஸ் கிரீம் சாப்பிட்டால் சளி பிடிக்காது என்பது என் எண்ணம்

Information is wealth

;-) //அது அப்படித்தானோ!// ம். //விஸ்க்// எலெக்ட்ரிக் பீட்டர்தான் வசதி.

அடிக்கடி கொடுக்க வேண்டாம் பாரதி. கொழுப்பும் சீனியும் கெடுதலான விடயங்கள். 'எப்போதாவது மட்டும்,' என்பதாக இருக்கட்டும்.

‍- இமா க்றிஸ்

தங்கள் கருத்துக்கு நன்றி சார். நிச்சயம் ட்ரை பண்றேன்

அன்புடன்
பாரதி வெங்கட்

நிச்சயம் இமா மேம். அவளுக்கு வீசிங் ப்ரோப்லம் இருக்கு. நார்மலா சளி புடிச்சாலே விஸிங்ல கொண்டு போய் விட்டுடுது. அதனால முடிஞ்ச வரைக்கும் கூலா எதுவும் குடுக்கறது இல்லை. கொஞ்சம் மாற்றமா எதாவது குடுக்கலாம்னு கேட்டேன். நீங்க சொல்ற மாதிரி எப்போதாவது குடுக்குறேன். பதிலுக்கும், அக்கறைக்கும் நன்றி.

அன்புடன்
பாரதி வெங்கட்

மேலும் சில பதிவுகள்