கத்தரிக்காய் தக்காளி கொத்சு

தேதி: January 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

கத்தரிக்காய்-கால் கிலோ
பொடியாக அரிந்த தக்காளி-1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம்-அரை கப்
சிறிய வெங்காயம்-7
பச்சை மிளகாய்-5
இஞ்சி- ஒரு சிறிய துண்டு
கடுகு- 1 ஸ்பூன்
அரிந்த கொத்தமல்லி- அரை கப்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
நல்லெண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன்
தேவையான உப்பு


 

• கத்தரிக்காய்களை நெருப்புத் தணலில் சுட்டு, ஆறியதும் அவைகளின் தோல்களை உரித்து சதைப்பற்றான பகுதியை எடுத்து பிசைந்து வைக்கவும்.
• ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
• எண்ணெயை ஊற்றி அது சூடானதும் கடுகைப்போடவும்.
• கடுகு வெடித்ததும் அரிந்த வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
• பிறகு தக்காளியையும் மஞ்சள் தூளையையும் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
• சிறிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை நன்கு அரைத்து அதில் சேர்த்து மறுபடியும் சில நிமிடங்கள் வதக்கவும்.
• 2 கப் நீர் ஊற்றி நன்கு கொதித்து வரும்போது பிசைந்து வைத்துள்ள கத்தரிக்காய் விழுது, கொத்தமல்லி இவற்றுடன் தகுந்த உப்பையும் சேர்த்து எல்லாம் கொதித்து, சேர்ந்து வரும்போது இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ அக்கா எப்படி இருக்கீங்க?இன்று தான் உங்களுடன் முதல் முறையாகப் பேசுகிறேன். இன்று உங்கள் கத்தரிக்காய் தக்காளி கொத்சு செய்தேன் நன்றாக இருந்தது.உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்.
மைதிலி.

Mb

அன்புள்ள மைதிலி!

தக்காளி கத்தரி கொத்சு நன்றாக இருந்ததென்ற உங்களின் அன்பான பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. உங்களுக்கு என் நன்றி!!

இன்று காலையில் உங்களுடைய கத்திரிக்காய் தக்காளி கொஸ்திவைனை செய்தேன். மிகவும் சுவையாக இருந்த்து.
கல்யாணம் ஆகி இதனை வருடத்தில் இன்று தான் முதல் முறையாக இப்படி செய்தேன். இதுவரை கத்திரிக்காயினை தோலுடனே செர்த்து சமைப்பேன்.
இன்று தோலினை நீக்கி செய்த்தால் கருப்பாக இல்லாமல் நன்றாக இருந்த்து. அதிலும் வெங்காயம், பச்சை மிளகாய் ம்ற்றும் இஞ்சியினை அரைத்து சேர்த்த்தால் சுவை வித்தியசமாக இருக்கின்றது.
நான் கத்திரிக்காயினை அடுப்பில் சுடமால் மைக்ரோவேவில் 4 நிமிடம் வைத்தேன். அதன் பிறகு தோலினை நீக்கினேன். சுவையாக இருந்த்து…எல்லாம் காலியாகிவிட்ட்து.
இன்னும் சுட்டு செய்து இருந்தால் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு தான் அடுப்பில் சூட பயமாக இருந்த்து..
மிகவும் பெரிய பதிவாகிவிட்ட்து…குறிப்புக்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

உங்களுடைய கத்திரிக்காய் தக்காளி கொத்சு மிகவும் சுவையாக இருந்தது.நல்ல சுவையான ரெசிபி.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்புள்ள கீதா!

தக்காளி கத்தரி கொத்ஸ் மிகவும் சுவையாக இருந்ததென மிகவும் அழகாக, கொத்ஸைவிட சுவையாக விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். நெருப்பில் சுட்டால் இன்னும் வித்தியாசமாக சுவையாக இருக்கும். காஸ் அடுப்பில் சுடலாம். ஒன்றும் பிரச்சினை வராது. ஒரு பக்கம் வெந்து தோல் கறுப்பாகும்போது மறு பக்கம் திருப்பிவிட வேண்டும். அவ்வளவுதான். அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!

என் பாட்டி இதுபோல்தான் செய்வார்கள்.சூப்பரா இருந்தது.சாதத்தில்போட்டு சாப்பிட ரொம்ப நன்றாக இருந்தது.நன்றி

சவுதி செல்வி