ஆரோக்கிய சமையல்

அறுசுவை மக்களுக்கு வணக்கம்.

தலைப்பைப் பார்த்தவுடன் இந்தம்மா (நாந்தாங்க!!) ஏதோ புதுவிதமான ஆரோக்கிய சமையல் குறிப்பு சொல்லப்போறாங்கன்னு நினைத்து படிக்க ஆரம்பிக்காதீங்க மக்களே!! நாங்க சமையலில் அந்தளவுக்கெல்லாம் அப்பாடக்கர் இல்லீங்கோ!!!

சமைக்கிற உணவு எந்தளவுக்கு ஆரோக்கியமாக இருப்பது முக்கியமோ, அதே அளவு சமைக்கும் பாத்திரமும் ஆரோக்கியமா இருக்கனும் இல்லைங்களா??

நம்ம மக்களோட பேசி எந்த பாத்திரம் ஆரோக்கியம்னு தெரிந்துகொள்ளலாம்னு வந்திருக்கேனுங்க!! இது என்ன சிறுபிள்ளைத்தனமா இருக்கு!! இவ்வளவு நாளா இது தெரியாமயா சமைச்சிட்டு இருந்தன்னு கேக்கறது புரியுதுங்கோ!!

ஏதோ கொஞ்சம் தெரிந்தாலும், முழுசா சந்தேகத்தை போக்கிக்கனும் இல்லைங்களா? என்னைமாதிரி கத்துக்குட்டிகளுக்கும், புதுசா சமைக்க ஆரம்பிக்கிறவங்களுக்கும் பயன்படலாமில்லீங்களா?

மண்சட்டியில் ஆரம்பித்து அலுமினியம், எவர்சில்வர் மற்றும் நான்ஸ்டிக்னு எவ்வளவோ பாத்திரங்கள் வந்துவிட்டது. இதுல, சமைக்கிற உணவுக்கும், அதை சாப்பிடற நமக்கும் கெடுதல் உண்டுபன்னாத பாத்திரங்கள்னா ? இவற்றில் முதலிடம் மண்பாத்திரங்களுக்குத்தான் .
மண்சட்டியில் சமைப்பதால் நிறைய நன்மைகள் இருக்குன்னு தெரிந்து ,சமீபகாலமாக நிறையபேர் மண்சட்டிக்கு மாறிட்டாங்க!! நல்லவிஷயம் நடந்தா நல்லதுதானே!

நான் சமைக்க ஆரம்பித்த புதுசுலயே மண்சட்டியும் பயன்படுத்த தொடங்கிட்டேன்! அதனாலேயே, மக்கள் அதிகமா மண்சட்டி பயன்படுத்தறதுக்கு முன்னாடி (அப்பல்லாம் விற்பனை அதிகம் இல்லை) , இந்த மண்பாத்திரங்கள் எப்படி எல்லாம் இருந்ததுன்னு எனக்கு ஓரளவு தெரியும்னு வைங்களேன். அப்பொழுது பளபளப்பு எதுவும் இல்லாமல் இருந்தது! ஆனால் இப்பல்லாம் கடைகளில் கிடைக்கிற மண்பாத்திரங்கள் நல்லா மொழுமொழுன்னு, பளபளப்பா இருக்கு!! நிறமும் வித்தியாசமா இருக்கு!! பார்க்கும்போதே கூடவே சந்தேகமும் வருதுங்க! வியாபார நோக்கத்துக்காக இதுலயும் ஏதாவது கெமிக்கல் கலந்த மேற்பூச்சு பூசி விற்பனை பன்றாங்களோன்னு!!!

ஆரோக்கிய வாழ்வுக்கு திரும்பனும்னு நினைத்துதான் மக்கள் மண்பாத்திரங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்காஙக"! இதுலயுமா???? தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்க மக்களே! எனக்கு வந்த சந்தேகம் சரியா? தவறா?

முன்னாடி நாம நீண்டகாலமாக பயன்படுத்திவந்த அலுமினியப்பாத்திரங்கள் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலாம்!! சமைக்கும்போது அந்த பாத்திரங்களில் உள்ள அலுமினியம் உணவுடன் கலந்து உடலுக்கு கெடுதல் விளைவிக்குதாம்!!

எவர்சில்வர் பாத்திரத்தில சமைக்கிறது ஒன்னும் பிரச்சனை இல்லை!! ஆனா சமைக்கிற உணவு அடிபிடிக்கிற பிரச்சனை இருக்கே, அது ஒரு தொல்லைதான்!! ஆரோக்கியம் வேண்டுமென்றால், இந்த பிரச்சனையெல்லாம் சாதாரணமப்பா!!!

அடுத்து விதவிதமா, பளபளப்பா கிடைக்கிற நான்ஸ்டிக் பாத்திரங்கள்!! சமைக்கும்போது நான்ஸ்டிக் பாத்திரங்கள்ல இருக்கிற டெஃப்லான் பூச்சு உரிந்து வந்தால்தான் பிரச்சனை!! அதனால் அப்படி வராம இருக்க மரக்கரண்டி பயன்படுத்துங்கன்னு சொல்றாங்க!! இதுல எவ்வளவு வில்லங்கமோ!! தெரியலை???

ஒரு சமயம் மைக்ரோவேவ் ஓவன் வாங்கனும்னு நினைத்தேன்!! பிறகு மனசு என்னவோ ஒத்துக்கல.....புதுசு புதுசா என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க!! ஆரம்பத்துல எல்லாமே நல்லா இருக்கு! பிறகுதான் அதுல இருக்கிற ஒவ்வொரு பிரச்சனையா தெரிய வருது! மைக்ரோவேவும் அப்படிதானோ? அதுலயும் ஏதாவது பிரச்சனை இருக்குமோ? அந்த வேவ்ஸ் உடம்புக்கு ஏதாவது பிரச்சனை பன்னுமோன்னு, பலவிதமா யோசித்து, ஓவன் வாங்கிறத விட்டுட்டேன்!!

இப்ப என்னாச்சுன்னா, மைக்ரோவேவ் இல்லாத ஒரு நாள் இல்லைங்கிறமாதிரி ஆயிடுச்சு!! நம்ம பிழைப்பு!!! ஆனாலும் மனசுக்குள்ள அதே பட்டிமன்றம்!! இது சரியா?? முறையான்னு?? இதில் உபயோகிப்பதற்கு என்றே வித விதமான பாத்திரங்கள்!! மைக்ரோவேவ் சேஃப் பிளாஸ்டிக்னு சொல்றாங்களே!! அந்த பிளாஸ்டிக்னால எந்த கெடுதலும் வராதா??

இந்த மைக்ரோவேவ் ஓவன் பற்றி (சமைப்பது ஆரோக்கியமா ??) எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்குங்க!! என்ன மாதிரியே இன்னும் நிறையபேருக்கு இருக்கும்னு நினைக்கிறேன். நம்ம அறுசுவையில அதைப்பற்றி யாராவது பதிவிட்டீங்கன்னா நல்லாயிருக்கும்.........

இப்பல்லாம் விஜய் டிவியில் வர்ற ஒருசமையல் நிகழ்ச்சியில், அந்த செஃப் ஒரு வித்தியாசமான பாத்திரத்தை பயன்படுத்தி சமைக்கிறார்!! பார்க்க பீங்கான் பாத்திரம் மாதிரியே இருக்கு! ஆனா நான்ஸ்டிக்மாதிரி சமைக்கிறது எதுவுமே பாத்திரத்தில் ஒட்டறதில்லை! மைக்ரோவேவ்ல உபயோகப்படுத்திற மாதிரியும் இருக்கு!! ஆனா ஸ்டவ்வில் வைத்து சமைக்கிறாங்க!! இது என்ன பாத்திரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா!!

ஏதோ எனக்குத் தெரிந்ததையும், தெரியாத பல விஷயங்களையும் இங்கு கொட்டிட்டேன். அறுசுவை மக்களுக்கு எனது விண்ணப்பம் என்னன்னா? உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொண்டால் அது எனக்கு மட்டும் அல்லாமல் பலருக்கும் உபயோகப்படும்னு நினைக்கிறேன் .

5
Average: 4.3 (3 votes)

Comments

அன்பு அனு
உண‌வு என்பது ஆரோகியத்திற்காக‌ என்பது என் கருத்து.
மண்பாண்டமே முதலிடம் என்றாலும் அதைக் கையாள்வது கொஞ்சம் கடினமாக‌ உள்ளது. முடிந்தவரை மண்பானைகளைப் பயன்படுத்தலாம்.
அடுத்து எவர்சில்வர் பெஸ்ட்.
நான் நான்ஸ்டிக் உபயோகிப்பதில்லை. அந்தக் டெஃப்லான் கோட்டிங் உடல் நலனுக்கு மிக்க‌ கெடுதல். அந்தக் கெமிக்கல் எல்லாம் உணவுடன் கலந்து செல்கிறது.

தூள் உப்பு வாங்கினா கூட‌ 'நிக்குது, விழுது' இது சரியில்லை......
எங்க‌ பிராண்டு உப்பு 'சர‌சர‌' நு விழும்னு விளம்பரம் வரும் .
கவனிச்சுருப்பீங்க‌......ஆனா யோசிங்க‌ அனு
'நிக்குது விழுது' இது தானே உப்பின் ஒரிஜினல் கேரக்டர்.
அது 'சரசர‌' நு எப்படி விழும்????
அதில் என்ன‌ சேர்க்காங்க‌.
யோசிச்சிருக்கீங்களா ????
சிலிக்கான் டை ஆக்சைடு சேர்க்கிறாங்க‌ தெரியுமா?????

மைக்ரோவேவ் அவன் அந்த‌ வேவ் கெடுதல்னு சொல்றாங்க‌. அதைவிட‌ எலெக்ட்ரிக் அவன் ஓ.கே.

விஜய் டி,வி, பாத்திரம்...அது செராமிக்கா இருக்கலாம் அனு...

அன்பு நிகி, முதலில் உங்கள் கருத்துகளுக்கு என் நன்றி.

///தூள் உப்பு வாங்கினா கூட‌ 'நிக்குது, விழுது' இது சரியில்லை......
எங்க‌ பிராண்டு உப்பு 'சர‌சர‌' நு விழும்னு விளம்பரம் வரும் .
கவனிச்சுருப்பீங்க‌......ஆனா யோசிங்க‌ அனு
'நிக்குது விழுது' இது தானே உப்பின் ஒரிஜினல் கேரக்டர்.
அது 'சரசர‌' நு எப்படி விழும்????
அதில் என்ன‌ சேர்க்காங்க‌.
யோசிச்சிருக்கீங்களா ????
சிலிக்கான் டை ஆக்சைடு சேர்க்கிறாங்க‌ தெரியுமா?????/// அழகுக்கு முக்கியத்துவம் குடுக்கிற‌ எல்லா உணவுப்பொருள்களிலும் ஏதாவது கண்ணுக்குத்தெரியாத‌ ஆபத்து இருக்கும் என்பதே என் கருத்தும்!! கொஞ்சம் தூசு ,குப்பை இருந்தாலும் கல்லுப்புதான் பெஸ்ட்!!

//மைக்ரோவேவ் அவன் அந்த‌ வேவ் கெடுதல்னு சொல்றாங்க‌// தெரியலை நிகி!!! வெளிநாடுகளில்,குறிப்பா குளிர் பிரதேசங்களில், அதுவும் குளிர்காலங்களில் இந்த‌ மைக்ரோவேவ் இல்லாம‌ சமாளிக்க‌ முடியுமான்னு தெரியலை!!

///உண‌வு என்பது ஆரோகியத்திற்காக‌ என்பது என் கருத்து/// இப்பல்லாம் வர்ற புதுப்புது வியாதிகளைப் பார்க்கும்போது, இதுதான் நம் எல்லோருடைய‌ கருத்தா இருக்கனும்.

அனு மைக்ரோவேவ் உடலுக்கு நல்லதல்ல‌. அந்த‌ வேவ் சுடச்சுட‌ சாப்பிடும் போது அந்த‌ உண‌விலும் இருக்கும்னு சொல்றாங்க‌. மேலும் அது வேலை செய்யும் போது அதுக்கு நேரா நின்னா நம்ம‌ வயிற்றுப் பாகத்தை பாதிக்கும்னு கேள்வி.
எதுக்கு ரிஸ்க்?? நாம‌ இந்தியால‌ தான‌ இருக்கோம். நமக்கு வேணாமே.

ம்ம்... இண்ட்ரஸ்டிங் சப்ஜக்ட். பேச நிறைய விஷயம் உள்ளது கூட. சமையல் பாத்திர வகைகளூக்கு இப்ப கணக்கே இல்லாம போச்சு. என்ன என்னவோ கோட்டிங் என்கிறார்கள். எண்ணெயே தேவை இல்லை என்கிறார்கள். எப்படிங்கிறது தான் புரியல. ஆனா இதெல்லாம் எண்ணெய் கெடுதல்னு வாங்கி வேற என்ன என்ன கெடுதலா உள்ள அனுப்பறோமோ... அதுவும் தெரியல. நான் ஸ்டிக் தப்புங்கறாங்க... ஆனா சில சமையலுக்கு அது இல்லன்னா வேலை ஆகல. மைக்ரோவேவ் நிகி சொன்னதே தான்... அந்த வேவ்ஸ் அடங்காம சாப்பிட கூடாதுன்னு சொன்னாங்க. என் மைக்ரோவேவ் ரிப்பேர் ஆச்சு, நம்ம நாட்டில் அதன் தேவை இல்லைன்னு நான் அதை வாங்க நோ சொல்லிட்டேன். எனக்கு அது வெறும் ரிஹீட் தான், முக்கியமா பார்ட்டி டைம். இங்க அந்த வேலை இல்லை.

மண் சட்டி தான் பெஸ்ட். இல்லன்னா எவர்சில்வர்... அலுமினியம் வெரி பேட் ஃபார் ஹெல்த். ஆனா நம்ம ஊரில் பாதி பொரியல், வறுவல்னு எல்லாம் அதுல தான் நடக்குது. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனு நல்ல பதிவு. எனக்கும் இது பத்தில்லாம் தெரியாது. நம்ம் மக்கள் சொல்லறது நானும் கேட்டுக்கறேன்.

Be simple be sample

Except one or two vessels, all other branded non stick vessel are good, because everything had been checked by isi. we should not doubt everything. Before technology improvement mud and oriented thing are good . But now the situvation are different. We have to accept and adopt with the new technology

ரொம்ப‌ நல்ல‌ பதிவு,
இப்போ நாம பயன்படுத்துற‌ பேன்ஸி பொருளுமே கெடுதல் தான்,
நீங்க‌ மைக்ரோவேவ் அவன் பத்தி தான் மெயினா கேட்டு இருக்கீங்க‌, அது ரொம்ப‌ கெடுதல் தான் படிச்சி இருக்கேன், கேள்வியும் பட்டிருக்கேன், அதுல‌ வர‌ வேவ்ஸ் புற்று நோய் ஏற்பட மூல‌ காரணம்னு சொல்றாங்க‌,
மண் பாத்திரம் ரொம்பவே நல்லது, நாம‌ நடைமுறைல‌ பயன்படுத்த‌ இப்போ சிரமமா இருக்கு, ஆனா இப்போ வர‌ புது புது வியாதிக்கு பயந்து எல்லாரும் பழைய‌ நிலமைக்கு திரும்ப‌ ஆரம்சிட்டாங்க‌....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

//எதுக்கு ரிஸ்க்?? நாம‌ இந்தியால‌ தான‌ இருக்கோம். நமக்கு வேணாமே// திரும்ப‌ அங்கதான் வரனும், அதுவரைக்கும்தான் பிரச்சனையே....

///சமையல் பாத்திர வகைகளூக்கு இப்ப கணக்கே இல்லாம போச்சு. என்ன என்னவோ கோட்டிங் என்கிறார்கள். எண்ணெயே தேவை இல்லை என்கிறார்கள். எப்படிங்கிறது தான் புரியல. ஆனா இதெல்லாம் எண்ணெய் கெடுதல்னு வாங்கி வேற என்ன என்ன கெடுதலா உள்ள அனுப்பறோமோ... அதுவும் தெரியல. நான் ஸ்டிக் தப்புங்கறாங்க... ஆனா சில சமையலுக்கு அது இல்லன்னா வேலை ஆகல/// நல்லா சொன்னீங்க‌!!! ஒவ்வொன்னும் கெடுதல்னு யோசித்து யோசித்தே!! எதுசரி எது தப்புன்னு தெரியாமயே பாதி வாழ்க்கை முடிஞ்சிபோச்சு!! மீதி வாழ்க்கைக்குத்தான் இந்த‌ ஆராய்ச்சியே!!

நான் மைக்ரோவெவை உணவை சூடுபடுத்தமட்டுமே உபயோகிக்கிறேன்! அதுக்கே இவ்வளவு குழப்பம்!

நன்றி ரேவதி.....நீங்களும் என்னைப்போலத்தானா? :)))))

படித்து கருத்து சொல்லியதற்கு மிக்க‌ நன்றிங்க‌!

புது புது டெக்னாலஜி வரவேற்கத்தக்கதுதான்!

ஆனாலும் அதால‌ வர்ற‌ நன்மையைவிட‌ தீமை அதிகமா இருந்தா!!

சுவர் இருந்தால்தானே சித்திரம்!

நன்றி சுபி....

//இப்போ நாம பயன்படுத்துற‌ பேன்ஸி பொருளுமே கெடுதல் தான்// முன்பு ஒரு பொருள் வாங்கப்போனா நல்ல‌ பொருளா இருக்கான்னு மட்டும்தான் பார்த்து வாங்குவோம்! இப்பல்லாம் அதால‌ என்ன‌ சைட் எஃபெக்ட் வரும்னு யோசிக்கவேண்டியிருக்கு!!

ஊரிலிருந்தவரை மண் சட்டியில்தான் சமையல். சோறு சமைக்க, பால், காய்ச்ச, வறுக்கும் வேலைகளுக்கு அலுமினியப் பாத்திரங்களும் பயன்படுத்தினோம். அரிக்கன் சட்டி... மண்சட்டிதான் பிடிக்கும். எப்போழுதுமே சீசனல் பாத்திரம் என்று போனது இல்லை. வசதி, தேவை என்பதற்கு மேல் அதிகம் சிந்தனையைப் போட்டுக் குழப்பிக் கொண்டது இல்லை. சலட் & சம்பலுக்கு உலோகப் பாத்திரங்கள் கரண்டிகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பேன். கரண்டியை விட்டுவைத்தாலே மாற்றம் தெரியும்.

மண்சட்டிகளில் அந்த மினுக்கம்... வேறு எதுவும் சேர்க்காமல் தயாரிப்பு முறைகளிலேயே கொண்டுவரலாம்.

முதல் தடவை மைக்ரோவேவ் கண்டது 86ல். ஆயிரத்தெட்டு எச்சரிக்கைகள் சொல்லியிருந்தார்கள்... எதிரில் வானொலி போன்றவை, மினுக்கமான கரண்டிகள் எல்லாம் வைக்கக் கூடாது, உள்ளே கரப்பு, பல்லி, எறும்பு போகக் கூடாது... இப்படிச் சிலது. வேண்டாமென்று திருப்பியனுப்பினேன். இப்போது அது இல்லாமல் ஆகவில்லை. குளிர் என்பதுதான் முதற்காரணம். ஆனால் முதல் முதல் வைத்திருந்த மைக்ரோவேவ்... வேலை செய்யும் சமயம் முன்னால் நின்றால் அலைகள் வெளிவருவதை உணரக் கூடியதாக இருந்திருக்கிறது. என் மனமா என்பது தெரியாது. :-) அதன் பின்னால் வாங்கியவை எல்லாம் ஒழுங்காக இருக்கின்றன. காரணம்... உயரமான இடத்தில் இருப்பதால் என்னால் அவதானிக்க இயலாமலிருக்கிறதோ என்னவோ! :-) எங்கள் நாடுகளுக்கு மைக்ரோவேவ் அறிமுகமாவதற்குப் பல பல வருடங்கள் முன்பிருந்தே ஐரோப்பியர் மைக்ரோவேவ் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இதனாலெல்லாம் ஆரோக்கியம் கெடும் என்கிற பயம் எனக்கு வரவில்லை. எதைத் தவிர்த்தாலும் மரணம் என்பதைத் தவிர்க்க இயலாது. அது வரை அவரவர் மனதிற்குச் சரியெனத் தோன்றுவதைச் செய்யலாம்.

முன்பெல்லாம் விறகு அடுப்பில் சமைத்தோம். இப்போ நினைத்துப் பார்க்கிறேன்... எங்கள் சமையலறைக் கூரையையொட்டி அப்படி ஒரு புகைமண்டலமாக இருக்கும். அந்தக் காற்றைத்தான் சுவாசித்திருந்திருக்கிறேன். அப்போ இருந்ததை விட இப்போது ஆஸ்துமா தொல்லை பல மடங்கு குறைந்து இருக்கிறது.

நீங்கள் குறிப்பிட்ட விஜய் டீவீ ப்ரோக்ராம் பார்த்தது இல்லை. எனாமல் கோட்டிங் பாத்திரங்கள் அடுப்பில் வைக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலம் ஆன பின்னால் & குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேலே போனால் பொருக்கு ஏற்பட்டு உள்ளே உதிர ஆரம்பிக்கும்.

வெள்ளை நிறமான மட்பாத்திரங்கள் (செராமிக்கை விடக் கடினமானவை) இருக்கின்றன. இவற்றை அடுப்பில் வைக்கலாம், அவனில் வைக்கலாம், மைக்ரோவேவிலும் வைக்கலாம். விழுந்தால் நொருங்கிவிடும்.

‍- இமா க்றிஸ்

//அரிக்கன் சட்டி... மண்சட்டிதான் பிடிக்கும்// அரிக்கன் சட்டி ‍- ‍விளக்கம் தேவை.

அன்புடன்
ஜெயா

ஆஹா என் கணவரிடம் இரண்டு நாட்களுக்கு முன் தான் சண்டை போட்டேன், எனக்கு எல்லா சில்வர் பாத்திரத்தையும் போட்டுட்டு நான்ஸ்டிக்கா கேட்டேன், இப்ப அந்த முடிவ மாத்திகிட்டேன், நல்லவேளை இன்று சாயங்காலம் கடைக்கு கிளம்ப இ௫ந்தோம். நல்ல பதிவுங்க நன்றி

ரம்யா ஜெயராமன்

ஆஹா! :-) உங்க ஊர்ல என்ன பெயர் என்று தெரியலயே ஜெயா. அரிசி, பருப்பு கல் இல்லாமல் கழுவும் சட்டி, உள்ளே வளைவு வளைவாக கோடுகள் இருக்குமே! அதைத்தான் அரிக்கன் சட்டி என்போம். :-)

‍- இமா க்றிஸ்

அனு செந்தில் நல்லதொரு பதிவு நன்றி.எங்கம்மா இன்னமும் மன்சட்டியில்தான் எல்லாமே சமைப்பாங்க அடுத்து வெங்கலம் அலுமினியம் பாத்திரம் அதுமட்டுமல்ல விறகுஅடுப்பில்தான் அதிகமா சமைப்பாங்க ரசத்துக்கு அம்மியில தட்டிதான் வைப்பாங்க துவையலும் அப்படிதான் நான் ஊருக்கு போனா திட்டுவேன்.இந்தகாலத்திலும் ஏம்மா இப்படியிருக்கீங்கனு திட்டுவேன் இப்ப நீங்கல்லாம் போட்ட பதிவபார்த்து நான் என்னையே திட்டிகிட்டேன்.நானும் இங்க ரென்டு மன்சட்டி வச்சிருக்கேன்.அதில்தான் மீன்குழம்பு புளிகுழம்பு எல்லாம் செய்வேன்.நான்ஸ்டிக் நான் ஒரு கடாய் ஒருதவாதான் வச்சிருக்கேன் ரொம்ப நானும் இந்தாலியன் பாத்திரம்தான் சமைப்பேன் மைக்ரோ ஓவனில் சூடு மட்டும்தான் செய்வேன்.வேரு ஏதும் பன்னதெரியாது.சமைத்து வைப்பதும் கிளாஸ் பாத்திரம்தான் என்கனவருக்கு சில்வர்&மெலமின்வேர் ல வச்சா பிடிக்காது.கிளாஸ்&மன்பாத்திரம்தான் நல்லதுனு சொல்வர் இனி நானும் என்னை மாத்திக்கரேன் அனு செந்தில் நல்லதொரு பதிவு நன்றி.எங்கம்மா இன்னமும் மன்சட்டியில்தான் எல்லாமே சமைப்பாங்க அடுத்து வெங்கலம் அலுமினியம் பாத்திரம் அதுமட்டுமல்ல விறகுஅடுப்பில்தான் அதிகமா சமைப்பாங்க ரசத்துக்கு அம்மியில தட்டிதான் வைப்பாங்க துவையலும் அப்படிதான் நான் ஊருக்கு போனா திட்டுவேன்.இந்தகாலத்திலும் ஏம்மா இப்படியிருக்கீங்கனு திட்டுவேன் இப்ப நீங்கல்லாம் போட்ட பதிவபார்த்து நான் என்னையே திட்டிகிட்டேன்.நானும் இங்க ரென்டு மன்சட்டி வச்சிருக்கேன்.அதில்தான் மீன்குழம்பு புளிகுழம்பு எல்லாம் செய்வேன்.நான்ஸ்டிக் நான் ஒரு கடாய் ஒருதவாதான் வச்சிருக்கேன் ரொம்ப நானும் இந்தாலியன் பாத்திரம்தான் சமைப்பேன் மைக்ரோ ஓவனில் சூடு மட்டும்தான் செய்வேன்.வேரு ஏதும் பன்னதெரியாது.சமைத்து வைப்பதும் கிளாஸ் பாத்திரம்தான் என்கனவருக்கு சில்வர்&மெலமின்வேர் ல வச்சா பிடிக்காது.கிளாஸ்&மன்பாத்திரம்தான் நல்லதுனு சொல்வர் இனி நானும் என்னை மாத்திக்கரேன்

என்னுடைய‌ பல‌ குழப்பங்களுக்கு விடையளித்துவிட்டீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த‌ நன்றிகள்.

இங்கு மைக்ரோவேவ் இல்லாத‌ வீடு வெகு அரிது!! அவர்கள் கண்டுபிடித்ததை அவர்களே பயன்படுத்தவில்லை என்றால் எப்படி?
நம்மவரைவிட‌ அதிகமாக‌ ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே! இதில்மட்டும் எப்படி என்றே என் யோசனை இருந்தது!

///அதனால் இதனாலெல்லாம் ஆரோக்கியம் கெடும் என்கிற பயம் எனக்கு வரவில்லை. எதைத் தவிர்த்தாலும் மரணம் என்பதைத் தவிர்க்க இயலாது. அது வரை அவரவர் மனதிற்குச் சரியெனத் தோன்றுவதைச் செய்யலாம்// சரியாகச் சொன்னீர்கள்!!

///இப்போது அது இல்லாமல் ஆகவில்லை. குளிர் என்பதுதான் முதற்காரணம்/// இங்கே UK விலும் குளிர்காலம் தொடங்கிவிட்டது.மைக்ரோவேவ் இல்லாமல் இருப்பது கடினம்தான்!!

///மண்சட்டிகளில் அந்த மினுக்கம்... வேறு எதுவும் சேர்க்காமல் தயாரிப்பு முறைகளிலேயே கொண்டுவரலாம்/// நல்லவேளை!! என் சந்தேகத்தைப் போக்கிட்டீங்க‌....இன்னுமொருமுறை நன்றிகள்.

////முன்பெல்லாம் விறகு அடுப்பில் சமைத்தோம். இப்போ நினைத்துப் பார்க்கிறேன்... எங்கள் சமையலறைக் கூரையையொட்டி அப்படி ஒரு புகைமண்டலமாக இருக்கும். அந்தக் காற்றைத்தான் சுவாசித்திருந்திருக்கிறேன். அப்போ இருந்ததை விட இப்போது ஆஸ்துமா தொல்லை பல மடங்கு குறைந்து இருக்கிறது/// முன்பொரு காலத்தில் எங்கள் வீட்டிலேயும் இந்த‌ நிலமை இருந்தது, உண்மையில் அதுக்கு, இப்ப‌ இருக்கும் நிலை எவ்வளவோ பரவாயில்லை!!

//வெள்ளை நிறமான மட்பாத்திரங்கள் (செராமிக்கை விடக் கடினமானவை) இருக்கின்றன. இவற்றை அடுப்பில் வைக்கலாம், அவனில் வைக்கலாம், மைக்ரோவேவிலும் வைக்கலாம். விழுந்தால் நொருங்கிவிடும்// இது நான் கேள்விப்படாதது! இப்படி ஒரு பாத்திரம் இருந்தால் எல்லாவிதத்திலும் நமக்கு வசதிதான்!!

கருத்துக்களுக்கு முதலில் என் நன்றிகள்.

நீங்க‌ பாத்திரம் வாங்கிற‌ முடிவை மாத்தினவுடனே, உங்க‌ கணவர்தான் அதிகம் சந்தோசப்பட்டிருப்பார்!! ஏன்னா எங்க‌ வீட்டில‌ அப்படிதான்!! :)))))

படித்து பதிவிட்டமைக்கு முதலில் என் மனமார்ந்த‌ நன்றிகள்.

நானும் மண்சட்டியில் சில‌ வகைகள் மட்டுமே சமைப்பேன்!! எல்லாவற்றிர்க்கும் அது ஒத்துவராது! அதிகம் எவர்சில்வர்தான்! நான்ஸ்டிக் பயன்படுத்தி, இப்ப‌ விட்டுட்டேன்!

//எங்கம்மா இன்னமும் மன்சட்டியில்தான் எல்லாமே சமைப்பாங்க அடுத்து வெங்கலம்//// இது ரொம்ப‌ நல்ல‌ விஷயமாச்சே!! அம்மியில் அரைப்பதால் சுவைக்கு சுவை! ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்! கூட‌ உடற்பயிற்சியும்!! அதனாலதான் அந்தகாலத்துல‌ அவ்வளவு ஆரோக்கியத்துடன் இருந்தாங்க‌!

சரியா சொன்னீங்க. அப்பாடினு சொன்னா௫. ஆனா நான் , எனக்கு நான்ஸ்டிக் வேண்டாம் அதுக்கு பதிலா மண்பாத்திரம் வாங்கி குடுங்க னு சொன்னேன், அதற்கு குடுத்தாரே ஒ௫ ரியாக்ஸன் வடிவேலு பாஷை ல அவ்வ்வ்வ்வ்வ்,,,

ரம்யா ஜெயராமன்

///அப்பாடினு சொன்னா௫. ஆனா நான் , எனக்கு நான்ஸ்டிக் வேண்டாம் அதுக்கு பதிலா மண்பாத்திரம் வாங்கி குடுங்க னு சொன்னேன், அதற்கு குடுத்தாரே ஒ௫ ரியாக்ஸன் வடிவேலு பாஷை ல அவ்வ்வ்வ்வ்வ்,,,/// ஹ‌.ஹா..ஹா

இப்படியெல்லாம் ரியாக்ஷன் குடுத்தா நாம‌ என்ன‌ சும்மாவா விட்டுடப்போறோம்!!!:))))

அதற்கு குடுத்தாரே ஒ௫ ரியாக்ஸன் வடிவேலு பாஷை ல அவ்வ்வ்வ்வ்வ்,,, - hahaa... namma mannai ketaalum ponnai ketaalum reaction ore maadhiri dhaan irukkum :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Unmai than vani akka, ethavathu oru porul ketta remba yosiparu , ore reaction than kuduparu.

ரம்யா ஜெயராமன்

தற் சமயம் நானும் அதிக அளவில் பயன் படுத்துவது எவர்சில்வர் தான். ஹெவி பாட்டம் உள்ள எவர்சில்வர் பயன் படுத்தினால் அடி பிடிப்பது குறைவு.
மைக்ரோவேவ் சமையலோ, சூடாக்குவதோ குளிர்ந்த நாடுகள் என்பதை விடவும் அந்நாட்டு உணவுகளைப் பொறுத்தே அமைகிறது. நம்மூர் குழம்பு வகைகளை எளிதில் அடுப்பில் சூடாக்கலாம், சாதம் முதல் பிரியாணி வரை ஆவியில் சூடாக்குவதால் சூடு அதிக நேரம் தங்கும். ஆனால் மேற்கத்திய உணவுகளான ரோஸ்ட், பை, பாஸ்தா போன்றவற்றை சூடாக்க மைக்ரோவேவ் தான் எளிது. மைக்ரோவேவ் இங்கும் அதிக கான்ஷியஸ் உள்ளவர்கள் உபயோகிப்பதில்லை. (பிளாஸ்ட்டிக் ஸ்டோரேஜ் டப்பாக்கள் உட்பட)
மைக்ரோவேவ் சமையலில் உணவுப் பொருட்களில் உள்ள வைட்டமின்கள் அழிக்கப் படுவதாக தகவல். ஆனால் சாப்பாட்டை சூடாக்குவதற்க்கு இது பொருந்துமா என தெரியவில்லை.

மண் சட்டி, கல் சட்டி தான் பெஸ்ட், ஆனால் கேஸ் அதிக செலவாகிறது. செராமிக்கும் பயன் படுத்தலாம்.
நான் ஸ்டிக் நல்லதில்லை தான், ஆனால் சில இனிப்புகள் செய்கையில் சிறிதளவே நெய் உபயோகிக்க வசதியாக உள்ளது.
புளிக்கரைசல் சேர்த்து செய்யப் படும் உணவு வகைகளுக்கு அலுமினியம் உகந்ததல்ல. நம் சமையலுக்கு தகாதது.

ஆறு மாதத்திற்க்கு முன் வெளிநாட்டு தோழி ஒருவர் டைட்டானியத்தினால் செய்யப் பட்ட பாத்திரங்களைப் பற்றிய டெமோ காட்டினார். ஒரு துளி எண்ணெய் இல்லாமல் கோழியை முறுக்கு போன்று க்றிஸ்ப்பியாக வறுத்தெடுத்தார். சுவையும் அபாரம். பாத்திரத்திலேயே முட்டை, வெண்ணெயின்றி சிறிது ஆலிவ் எண்ணெயில் கேக்கும் செய்து காண்பித்தார். ருசிக்கு குறைவில்லை. பாத்திரங்களை வாங்குபவருக்கு பாத்திரத்திற்க்கு ஆயுட்கால கியாரண்டி என்றார். ஆனால் விலைதான் மயக்கம் வர வழைத்தது.(தங்கம், வைரம் போன்ற மதிப்பு) இருந்தாலும் நம் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் என கொடுத்துவிட்டு செல்லலாம் தான். டைட்டானியம் என்பது நம் உடலுக்குள் எலும்பு முறிந்தால் இணைப்பதற்க்கு பயன் படுத்தும் ஒரு வகை உலோகமாகையால் அதில் சமைப்பதால் பாத்திரங்களில் உபயோகிக்கப் படும் செயற்கை கோட்டிங்க் மூலம் உண்டாகும் நோய்கள் வருவதில்லை என்பதை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.

அன்பு அனு,

நிறைய‌ விஷயங்கள் சொல்லியிருக்கீங்க‌.

எல்லோருமே இப்பல்லாம் ஒரு சந்தேகத்தோடயேதான் சமையல் செய்யறோம் போல‌.

மைக்ரோ அவன் இல்லாம‌ ஒரு நாள் ஒரு பொழுது கூட‌ முடியாது. என்னதான் அளவாக‌ செய்தாலும் கொஞ்சம் மிஞ்சிடத்தான் செய்யுது. அதே போல‌, சூடு செய்வது என்பது தவிர்க்க‌ முடியாததாக‌ ஆகிடுச்சு.

ப்ளாஸ்டிக் பாத்திரங்கள் தவிர்த்து, கண்ணாடி பாத்திரங்கள் உபயோகிக்கலாம், ஆனா, உடைஞ்சுடுமோங்கற‌ பயத்தில், ப்ளாஸ்டிக்தான் வீட்டில் இருக்கு.

மண் பாத்திரங்கள் நான் வாங்கியதேயில்ல‌ அனு.

அலுமினியத்தில் வாணலி, குழம்பு சட்டி, இதெல்லாம் அடி பிடிக்காமல் செய்யறதுக்கு உபயோகமா இருக்கு. குறிப்பாக‌ உப்புமா இதெல்லாம் இதில்தான் செய்ய‌ வேண்டியிருக்கு. பால் காய்ச்சறதுக்குன்னு தனியாக‌ அலுமினியத்தில் குட்டியாக‌ பானை வாங்கி வச்சிருக்கேன். இது பால் காய்ச்சுவதற்கு மட்டுமே. எவர்சில்வரில் பால் ஓரங்களில் பிடிச்சு, கொஞ்சம் ஸ்மெல் வந்துடுது.

அதே போலத்தான் குழம்பும். எவர்சில்வர் பாத்திரங்களில் ஓரத்தில் லேசாக‌ கருப்பாகிடுது. ருசி மாறிப் போகிற‌ மாதிரி ஒரு ஃபீலிங்.

நான் ஸ்டிக் பாத்திரங்கள் - கேசரி செய்யறதுக்கு, இடியாப்ப‌ மாவு, கொழுக்கட்டை மாவு கிளறுவதற்கு, இதுக்கெல்லாம் ரொம்ப‌ ரொம்ப‌ யூஸ்ஃபுல்லா இருக்கு. அடி பிடிக்கறதில்லை. நான் ஸ்டிக் ஆப்ப‌ சட்டி, நான் ஸ்டிக் பணியாரச் சட்டி இதிலெல்லாம் ஆப்பம், பணியாரம் சூப்பராக‌ வருது.

முன்பெல்லாம் ஈயச்செம்பில் வைத்த‌ ரசம் ருசி என்று சொல்வாங்க‌. ஆனா, இப்ப‌ என்ன‌ சொல்றாங்க‌ தெரியுமா? ஈயத்தில் சூடு பட்டு, அது உணவோடு சேரும்போது ஒரு விதமான‌ இனிப்புச்சுவை உண்டாகுது. அதனால் ருசி என்று தோன்றுகிறதாம். ஆனால் அது உண்மையில் நச்சுத் தன்மை உள்ளது என்கிறாங்க‌.

ஒரு கூடுதல் தகவல்: ஈயப் பாத்திரங்கள் மட்டும் அன்றைய‌ தேதியின் மதிப்புக்கு வாங்கிக்குவாங்களாம். தங்கம் கூட‌ கொஞ்சம் குறைச்சுதான் எடுப்பாங்க‌. ஆனா, ஈயம் ரொம்பவும் மதிப்புள்ள‌ உலோகமாம்.

நல்ல‌ பகிர்வு அனு.

அன்புடன்

சீதாலஷ்மி

வாணி செல்வின்
நீங்க‌ AMC பாத்திரம் பற்றி சொல்றீங்க‌. அதை நானும் பார்த்திருக்கேன். என்னிடமும் விற்ப‌னையாளர் எலும்பு முறிந்தால் இணைக்கப் பயன்படும் மெட்டல் என்று தான் கூறினார்.

ஆனா அதோடு தரும் கேட்லாக் பார்த்த‌ போது 'ஹை குவாலிட்டி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' என்று தான் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துக்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க‌ நன்றி வாணி.

//// ஹெவி பாட்டம் உள்ள எவர்சில்வர் பயன் படுத்தினால் அடி பிடிப்பது குறைவு/// அப்படியா சொல்றீங்க‌!! நான் அதுதான் பயன்படுத்தறேன்! அதுவும்கூட‌ அடிபிடிக்கத்தான் செய்யுது! ஒருவேளை இந்த‌ ஹாட்ப்ளேட் குக்கிங் ஸ்டவ்வோட‌ ஹீட்டுக்கு அப்படி ஆகுதோ!!

//ஆறு மாதத்திற்க்கு முன் வெளிநாட்டு தோழி ஒருவர் டைட்டானியத்தினால் செய்யப் பட்ட பாத்திரங்களைப் பற்றிய டெமோ காட்டினார்// இந்த‌ டெமோ பாத்து அசந்துபோயி ஒரு பாத்திரமும் வாங்கியாச்சு வாணி !!!!:))))) ஊர்ல‌ பத்திரமா தூங்கிட்டு இருக்கு!! இது வாங்கின‌ கதையை எழுதனும்னா ஒரு தனி வலப்பதிவுதான் எழுதனும்! இதுக்கும், மண்சட்டிக்கும் நிறைய‌ ஒற்றுமை உண்டு!
ஆனா நல்லாதான் இருக்கும், விலையைத்தவிர‌!!!

///பாத்திரங்களை வாங்குபவருக்கு பாத்திரத்திற்க்கு ஆயுட்கால கியாரண்டி என்றார். ஆனால் விலைதான் மயக்கம் வர வழைத்தது.(தங்கம், வைரம் போன்ற மதிப்பு) இருந்தாலும் நம் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் என கொடுத்துவிட்டு செல்லலாம் தான்// பேங்களூர்ல‌ எங்க‌ பக்கத்துவீட்டுக்காரங்க‌, இந்த‌ AMC யோட‌(நிகி சொன்னமாதிரி இதுக்கு பேர் AMC தான் ஊர்ல‌, கம்பெனி பேர்னு நினக்கிறேன்) முழு செட்டுமே வாங்கி வெச்சுருக்காங்க‌!! அவங்க‌ பெண்ணுக்கு சீதனமா குடுப்பாங்களாம்!!!:)))

உஙகள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த‌ நன்றிகள் சீதாம்மா.

///எல்லோருமே இப்பல்லாம் ஒரு சந்தேகத்தோடயேதான் சமையல் செய்யறோம் போல‌//// நானெல்லாம் தினமும் செய்யற‌ சமையலையே சந்தேகத்தோடதான் சமைப்பேன் !!!!:)))

////மண் பாத்திரங்கள் நான் வாங்கியதேயில்ல‌/// நீங்க‌ மண்சட்டி நிறைய‌ உபயோகிப்பீங்களோன்னு நினைச்சேன்!!!

////ஒரு கூடுதல் தகவல்: ஈயப் பாத்திரங்கள் மட்டும் அன்றைய‌ தேதியின் மதிப்புக்கு வாங்கிக்குவாங்களாம். தங்கம் கூட‌ கொஞ்சம் குறைச்சுதான் எடுப்பாங்க‌. ஆனா, ஈயம் ரொம்பவும் மதிப்புள்ள‌ உலோகமாம்/// பிறகு ஏன், ஈயம்,பித்தளையை பேரிச்சம்பழத்துக்கு போடுறாங்க‌???:)))

///நீங்க‌ AMC பாத்திரம் பற்றி சொல்றீங்க‌. அதை நானும் பார்த்திருக்கேன். என்னிடமும் விற்ப‌னையாளர் எலும்பு முறிந்தால் இணைக்கப் பயன்படும் மெட்டல் என்று தான் கூறினார்/// எங்களிடம் சர்ஜிக்கல் மெட்டல்னு சொன்னாங்க‌ நிகி!
நான் ஆரம்பத்துல‌ இந்த‌ AMC பாத்திரம், இரும்பு பாத்திரம் பற்றி எல்லாம் எழுதனும்னு நினைத்தேன்!! பதிவு ரொம்ப‌ பெரிதா போயிட்டே இருக்கேன்னு பாதியோட‌ சந்தேகத்தை நிப்பாட்டிட்டேன்!!!!:))))