கிச்சன் குயின் - 1

அன்பு மக்களே, போட்டி வெச்சு பரிசு கொடுத்து ரொம்ப நாளாகுது ;) எனக்கு கை பரபரங்குது. புதுசா ஒரு போட்டி வைக்கலாமா? முன்ன நம்ம அதிரா இருந்த போது ஒரு ரயிலு வண்டி ஓடும்... சமைத்து அசத்தலாம் என்று. அந்த வண்டியில் வாரம் ஒரு உறுப்பினரின் குறிப்பை எடுத்து பட்டியலிடுவாங்க. நாம அதில் இருந்து குறிப்புகள் செய்து பார்த்து சொல்ல வேண்டும். அதிக குறிப்புகள் செய்து சொன்னவர் தான் வெற்றி பெற்றவர். அந்த ரயிலு வண்டி அப்பறம் ஏகப்பட்ட ட்ரைவர் மாறி ஓடுச்சு. ஆனா அவ்வளவு ஸ்டெடியா வண்டி போகலங்க. :( வெரி பேட்.

சரி ஃபீல் பண்ண வேணாம் வனி... நம்ம மக்கள் இப்ப இந்த புது ஃப்ளைட்டை நல்லா ஓட்ட உதவுவாங்கன்னு நம்பி (நம்பி - இதை போல்ட் லெட்டர்ஸ்ல போட்டதா நினைச்சு படிச்சுக்கங்க) இந்த ஃப்ளைட்டை நான் பச்சை விளக்கு காட்டி துவங்கி வைக்கிறேன் (ஃப்ளைட்டுக்கு பச்சை லைட்டா காட்டுவாங்க??? சரி விடுங்கப்பா... நாம நம்ம ஃப்ளைட்டுக்கு பச்சை விளக்கு காட்டிக்கலாம்). முதல்ல கீழ இருக்க ஒரு பட்டியலை பார்த்துடுங்க, அப்பறம் ரூல்ஸ் ரெகுலேஷன்ஸ் எல்லாம் பட்டியல் போடுறேன். பின்ன? ரூல்ஸ் இல்லாம கேமா? வெயிட் வெயிட்.

1. யுகாதிச் சட்னி (செண்பகா)
2. ஹைதராபாத் கோழி வறுவல் - http://www.arusuvai.com/tamil/node/213
3. http://www.arusuvai.com/tamil/node/554 - கட்டா மீடா நிம்பு
4. அப்பக்கா (கல்பு)
5. ஆந்திரா தக்காளித் தொக்கு (சுவர்ணா)

6. உளுந்து அல்கா பணியாரம் (சுமி)
7. சம்பாரப் புளி (சுவர்ணா)
8. சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை (சுமி)
9. வறுத்த பருப்பு குழம்பு (சுமி)

10. தாம்பாள் பணியாரம் (வாணிசெல்வின்)
11. புளிக்கூழ் (செண்பகா)
12. கொங்கு கோழி வறுவல் (சுவர்ணா)

13. கச்சான் அல்வா (கல்பு)
14. வாய்ப்பன் (ரேவ்ஸ்)
15. http://www.arusuvai.com/tamil/node/5813 - மாங்காய் சொதி
16. மட்டன் யாழ்பாண வறுவல் (சுவர்ணா)

17. http://www.arusuvai.com/tamil/node/19851 - குவாக்கமொலே
18. http://www.arusuvai.com/tamil/node/3366 - மெக்ஸிகன் சிக்கன் கேசரோல்
19. சில்லி மெக்ஸிகன் ரைஸ் (ரேவதி)

20. http://www.arusuvai.com/tamil/node/13125 - செந்தோல் (Chendhol)
21. தாய்லாந்து சிக்கன் பிரைட் ரைஸ் (வாணிசெல்வின்)
22. http://www.arusuvai.com/tamil/node/4083 - தாய்லன்ட் கார்லிக் சிக்கன்
23. http://www.arusuvai.com/tamil/node/1942 - தாய்லாந்து சிக்கன் கறி ( Gang Gai )
24. http://www.arusuvai.com/tamil/node/1981 - தாய்லாந்து சைவ தேங்காய்ப்பால் சூப் (Hed Tom Kha)

25. http://www.arusuvai.com/tamil/node/3569 - மஷ்ரூம் பார்லி சூப்
26. முள்ளங்கி - பார்லி சூப் (கவிதா உதயகுமார்)

27. பேக்ட் ஹெர்ப் பொட்டேட்டோஸ் (ரேவதி)
28. பனினி ப்ரெட் சாண்ட்விச் (வாணிசெல்வின்)

29. கொத்தவரைக்காய் பருப்பு உசிலி (ரேவ்ஸ்)
30. சீனி அவரைக்காய் பருப்பு கூட்டு (மெர்சி)
31. http://www.arusuvai.com/tamil/node/1679 - கொத்தவரங்காய் மோர் குழம்பு
32. http://www.arusuvai.com/tamil/node/12276 - அவரைக்காய் வறுவல்

33. நூல்கோல் மசாலா (கவிதா உதயகுமார்)
34. நூல்கோல் வடை (கல்பு)
35. நூல்கோல் கூட்டு (கவிதா உதயகுமார்)

36. பில்ல குடுமு (செண்பகா)
37. http://www.arusuvai.com/tamil/node/1168 - மோர் வில்லை
38. கோழி கொத்தமல்லி மசாலா (ரேவதி)

39. கோவா சிக்கன் கறி (ரேவ்ஸ்)
40. http://www.arusuvai.com/tamil/node/268 - பச்சைமிளகாய் சிக்கன் டிக்கா
41. http://www.arusuvai.com/tamil/node/338 - ஸ்டஃப்டு நண்டு

42. குலாப் ஜாமூன் (சுவர்ணா)
43. மோர் குழம்பு (கடலை மாவுடன்) (ஹேமா)
44. http://www.arusuvai.com/tamil/node/1962 - சாம்பார் வெங்காயம் கறி

45. ஜெய்பூரி ஆலு (சுமி)
46. தஹி பூரி (பிரேமா ஹரிபாஸ்கர்)
47. காபேஜ் கோப்தா கறி (பிரியா)
48. பூவா (கல்பு)
49. ஹக்காரா (ஹேமா)
50. மசாலா லெஸி (சுமி)

51. முருங்கைக்கீரை சுண்டைக்காய் வறுவல் - 2590
52. http://www.arusuvai.com/tamil/node/3374 - வனிலா ஐஸ் கிரீம்

53. பூண்டு லேகியம் (வாணிசெல்வின்)
54. புதினா டீ (லோ பிரெஷருக்கு) (மெர்சி)
55. நெல்லிக்காய் துவையல் (கவிதா உதயகுமார்)

56. இஞ்சி தொக்கு (ரேவ்ஸ்)
57. மலாய் சட்னி (சுவர்ணா)
58. இஞ்சி தயிர் பச்சடி (சுமி)

59. சேப்பங்கிழங்கு கறி (ஆர்பி க சாக்) (கல்பு)
60. சேப்பங்கிழங்கு காரக்குழம்பு (வனிதா)
61. சேப்பங்கிழங்கு மசாலா (செண்பகா)
62. சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (மெர்சி)
63. சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட் (ரேவதி)

64. இறால் அவரை பொரியல் (செண்பகா)
65. அவரைக்காய் சைனீஸ் கூட்டு - 12359 (தர்ஷா)
66. அவரைக்காய் கூட்டு - 14945 (தர்ஷா)

67. நான் கிங் ஸ்டைல் நூடுல்ஸ் (சைனா) (வாணிசெல்வின்)

68. துவரம் (வாணிசெல்வின்)

69. சீராளக்கறி (பிரியா)

70. கோழி உப்புக்கறி (சுமி)

71. குஜராத்தி சீஸ் போண்டா (சுமி)
72. அண்டா புர்ஜி (கவிதா உதயகுமார்)
73. 6887 - ஊந்தியா

74. 4800 - அடைத்த பெல் பெப்பர் (Stuffed Bell Peppers)
75. 5156 - லசான்யா (Lasagna)
76. புரோக்லி ஸலட் (ஹேமா)

77. தாய்லாந்து ரெட் ஃபிஷ் கறி (தர்ஷா)
78. 5625 - தாய்லாந்து சிக்கன் வெஜிடபிள் ஸ்டிர் ஃபிரை
79. தாய்லாந்து வெள்ளரிக்காய் சாலட் (சுமி)

80. இறால் பஜ்ஜி (ரேவதி)
81. பட்டி ஷு (பிரெஞ்சு பப்ஸ்) (தர்ஷா)

82. சல்ஷா (மெக்சிக்கன் உணவு) (கவிதா உதயகுமார்)
83. 4087 - மெக்ஸிக்கன் சில்லி
84. 4232 - மெக்ஸிகன் சாட்டேட் ஷிரிம்ப்
85. மெக்ஸிகன் சிக்கன் ஃப்ரை (தர்ஷா)
86. சீஸ் கேசடீயா (Cheese Quesadilla) (சுமி)

87. பீர்க்கங்காய் வேர்கடலை கறி (ரேவ்ஸ்)
88. மாங்காய் பருப்பு மசியல் (கல்பு)

89. 1707 - தஞ்சாவூர் ஃப்ரைடு நண்டு
90. மொச்சைக்கொட்டை முருங்கைக்காய் புளிக்குழம்பு (ரேவதி)
91. தேங்காய் திரட்டுப் பால் (ஹேமா)

92. கேரட் ஐஸ்கிரீம் (சுமி)
93. கஸ்டர்ட் அப்பிள் புடிங் - 5924
94. ஜெல்லி ஐஸ்க்ரீம் - 3151
95. கஸ்டர்டு ஐஸ்க்ரீம் - 3153

96. பேரீச்சம் பழ ஜாம் (ஹேமா)
97. வெஜிடபிள் ஜாம் (தர்ஷா)
98. எலுமிச்சை மார்மலேட் - 6203
99. அன்னாசிப் பழ ஜாம் (செண்பகா)
100. கவ்வர் மசாலா - 22820

101. கேரள நண்டு மசாலா - 319
102. சில்லி நண்டு (சைனீஸ் முறை) - 320
103. நண்டு மசாலா குழம்பு - 334
104. தேங்காய் மிளகு வறுத்து அரைத்த நண்டு - 1701

105. கருணைக்கிழங்கு மசியல் (ஹேமா)
106. சிறுகிழங்கு பொரியல் - 7507
107. கருணைக்கிழங்கு புளிக்குழம்பு (ஹேமா)

108. சுண்டைக்காய் குழம்பு (கல்பு)
109. கறிச்சுண்டைக்காய் கோலா (செண்பகா)
110. சுண்டைக்காய் பச்சடி - 6189
111. மேங்கோ டேங்கோ ஸ்மூதி - http://www.arusuvai.com/tamil/node/19004
112. ஸ்பைசி கார்ன் (ரேவதி)
113. சிக்கன் ஹாரா மசாலா (பிரேமா ஹரிபாஸ்கர்)
114. காஷ்மீரி பொட்டேட்டோ புலாவ் (பிரேமா ஹரிபாஸ்கர்)
115. காஷ்மீர் ரொட்டி (ரேவதி)

116. சந்தேஷ் (பிரியா)
117. பேல் பூரி (ஹேமா)
118. சாய்துக்ரா (சுமி)
119. ஆலூ படூரா (சுமி)
120. ராப்டி கீர் (பிரியா)
121. பாதுஷா (கல்பு)

122. www.arusuvai.com/tamil/node/7438 - கோழிச்சாறு
123. வெங்காய மசாலா குழம்பு (சுமி)
124. கேழ்வரகு இனிப்பு அடை (ரேவ்ஸ்)
125. தூதுவளை தோசை (ரேவ்ஸ்)

மேலே 125 குறிப்பு இருக்கோ?? ரைட்டு... இப்ப ரூல்ஸ்:

1. ஆளுக்கு குறைந்தது 3 குறிப்பு செய்ய வேண்டும்.
2. மூன்றுக்கு மேல் எவ்வளவு அதிகமா வேண்டுமானாலும் செய்யலாம்.
3. இந்த ஒரு வாரம் தான் டைம். இந்த வாரம் சனிக்கிழமைக்குள் செய்து முடிக்க வேண்டும்.
4. செய்தேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம். செய்த குறிப்புகளை ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுத்து அறுசுவைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கும். எந்த குறிப்பு என்று லின்க், ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் போதுமானது.
5. கண்டிப்பா மேலே இருக்கும் குறிப்புகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
6. எந்த குறிப்புகள் நீங்க இந்த வாரம் செய்ய இயலும் என்பதை முடிவு பண்ணி இங்க பட்டியலை முதல்ல சொல்லிடுங்க. அப்படி தேர்வு செய்யும் குறிப்பு உங்களுக்கு முன் இங்கே வந்த மற்றவர்கள் தேர்வு செய்தவைகளாக இருக்க கூடாது.

இது தான் ரூல்ஸ். ரொம்ப ஈசியா இருக்கில்ல? பின்ன.. குறிப்பை நாங்க கொடுத்துட்டோம், செய்து பார்த்து நீங்க படம் மட்டும் அனுப்பினா போதும், அந்த குறிப்புகள் யாரும் சமைக்கலாம் பகுதியில் உங்கள் பெயரில் வெளியாகும்.

ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் அடுத்த வாரத்தில் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும் (அண்ணா உதைப்பார் வனின்னு யாராவது பின்னாடி சொல்றீங்களோ? நம்ம அண்ணா.. பேசிக்கலாம் ;) உதைச்சாலும் நான் வாங்கிக்கிட்டு உங்க குறிப்புகளை வர வைக்கிறதுக்கு காரண்டி கொடுக்கறேன்). எப்படி இருக்கும் கற்பனை பண்ணிப்பாருங்க... :) சூப்பரில்ல?

இனி ஏன் தாமதம்? வாங்க... குறிப்புகளின் லின்க் மேலே இருக்கு, தேர்வு செய்து உங்களால் இந்த வாரமே செய்து முடிக்க முடிந்ததை எனக்கு இங்க சொல்லிட்டு, கடகடன்னு சமையலை ஆரம்பிங்க. வீட்டில் இருக்கவங்களையும் அசத்தலாம், அறுசுவையில் உள்ளவங்களையும் அசத்தலாம்.

வாழ்த்துக்கள் மக்களே... என்ன சந்தேகம் என்றாலும் அவசியம் கேட்டுவிடுங்கள் :) லிஸ்ட் யார் யார் என்ன என்ன சொல்ல போறீங்கன்னு நான் ஆவலா காத்திருக்கேன். ஃபாஸ்ட்... வாங்க வாங்க.

5
Average: 4.8 (6 votes)

Comments

11.கோவா சிக்கன் கறி
2. இஞ்சித்தொக்கு
3.வாய்ப்பண்.
4.கேழ்வரகு இனிப்பு அடை
5. கொத்தவரங்காய் பருப்பு உசிலி.
6. பீர்க்கங்காய் வேர்கடலை கறி
7.தூதுவளை தோசை.

Be simple be sample

2 நாளா iPad வேலை செய்யல‌. உங்க‌ பிரியாணி குறிப்புக்கே இன்னும் பதிவு போடல‌ சிஸ் . இப்போ தான் வரேன். செய்து பாத்து எப்படி அனுப்புரது இதுவரைக்கும் ரீடர்தான். அதான் கேட்டேன்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Kurippugalil irukkira steps a photo edunga samaikum bodhu. Adhai 1 2 3 nu number panni arusuvaiadmin @ gmail . Com enra mugavarikku mail pannunga. Simple :) All the best.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

http://www.arusuvai.com/tamil/node/248 - கொங்கு கோழி வறுவல்

http://www.arusuvai.com/tamil/node/4400 - மட்டன் யாழ்பாண வறுவல்

http://www.arusuvai.com/tamil/node/1315 - ஆந்திரா தக்காளித் தொக்கு

http://www.arusuvai.com/tamil/node/680 - சம்பாரப் புளி

http://www.arusuvai.com/tamil/node/1984 - குலாப் ஜாமூன்

மலாய் சட்னி - 2256

இது என்னோட லிஸ்ட் வனி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

30. http://www.arusuvai.com/tamil/node/11710 - சீனி அவரைக்காய் பருப்பு கூட்டு

54. http://www.arusuvai.com/tamil/node/8227 - புதினா டீ (லோ பிரெஷருக்கு)

62. சேப்பங்கிழங்கு ரோஸ்ட் - 9913

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Min 3... max unga viruppam. 3 kurippu mattume sonnaa vani azuven. 6 aavadhu seydhaa dhanae mugappil oru naal queen aagalaam?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நான் தேர்வு செய்த‌ குறிப்புகள்

1.உளுந்து அல்கா பணியாரம் http://www.arusuvai.com/tamil/node/453

2.சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை http://www.arusuvai.com/tamil/node/1220

3.வறுத்த பருப்பு குழம்பு http://www.arusuvai.com/tamil/node/1976

4.கோழி உப்புக்கறி http://www.arusuvai.com/tamil/node/258

5.ஜெய்பூரி ஆலு http://www.arusuvai.com/tamil/node/20057

6.மசாலா லெஸி http://www.arusuvai.com/tamil/node/8638

7.இஞ்சி தயிர் பச்சடி http://www.arusuvai.com/tamil/node/5371

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இஞ்சி தொக்கு - 1635

http://www.arusuvai.com/tamil/node/3247 - சில்லி மெக்ஸிகன் ரைஸ்

http://www.arusuvai.com/tamil/node/22745 - பேக்ட் ஹெர்ப் பொட்டேட்டோஸ்

http://www.arusuvai.com/tamil/node/306 - கோழி கொத்தமல்லி மசாலா

http://www.arusuvai.com/tamil/node/303 - கோவா சிக்கன் கறி

http://www.arusuvai.com/tamil/node/17856 - ஈசி குல்பி

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நல்ல முயற்சி வனி. வாழ்த்துக்கள்.

இந்த 3 சீட்லயும் கர்ச்சீஃப் போட்டு வைச்சுக்கறேன். ;)

http://www.arusuvai.com/tamil/node/4771 - வாய்ப்பன்
http://www.arusuvai.com/tamil/node/5371 - இஞ்சி தயிர் பச்சடி
http://www.arusuvai.com/tamil/node/19851 - குவாக்கமோலே

நான் நினைத்த பேக்ட் ஹர்ப்ஸ் பொட்டேட்டோஸை சட்னு சுட்ட ரேவுதய்க்கு ஒரு... செல்ல உதை. ;)

க்வீனா வரணும்னுல்லாம் ஆசை இல்ல. என் ஆதரவைத் தெரிவுக்குமுகமாக 3 தெரிவு செய்திருக்கிறேன். பாடசாலையில் வருட இறுதி வாரம் இதுவே கொஞ்சம் இடிபாடாகப் போகலாம். நிச்சயம் செய்துவிடுவேன். குறிப்பு... தட்டச்சு... ஃபோட்டோ எடிட்டிங் எல்லாம் தொடர்ந்து வரும் வாரத்தில் தான் இயலும். அதற்குள் சமையல் ஆனதை நிரூபிக்க க்ளோஸ்ட் க்ரூப்பில் படம் வரும்.

அட்லீஸ்ட் கிச்சன் ப்ரின்சஸ் பட்டமாச்சும் கிடைக்கும்ல!! ;)

‍- இமா க்றிஸ்

1.முள்ளங்கி - பார்லி சூப் http://www.arusuvai.com/tamil/node/2793
2.நூல்கோல் மசாலா http://www.arusuvai.com/tamil/node/18498
3.நூல்கோல் கூட்டு http://www.arusuvai.com/tamil/node/11595
4.நெல்லிக்காய் துவையல் http://www.arusuvai.com/tamil/node/10391
5.அண்டா புர்ஜி http://www.arusuvai.com/tamil/node/6390
6.சல்ஷா (மெக்சிக்கன் உணவு)http://www.arusuvai.com/tamil/node/3546
7.காஷ்மீர் ரொட்டி http://www.arusuvai.com/tamil/node/2324

என்றும் அன்புடன்,
கவிதா

நான் கிங் ஸ்டைல் நூடுல்ஸ் (சைனா)
தாய்லாந்து சிக்கன் பிரைட் ரைஸ்
தாம்பாள் பணியாரம்
துவரம்
பனினி ப்ரெட் சாண்ட்விச்
பூண்டு லேகியம்

என்னோட லிஸ்ட் இது வனி,
இப்படியே எல்லா குறிப்புகளும் ஃபோட்டோவோட வந்துட்டா அட்மின் அண்ணனுக்கு ஹாப்பி தான் போங்க :)

மக்களே...

இஞ்சி தயிர் பச்சடி, வாய்ப்பன், அல்கா பணியாரம்

இதெல்லாம் ரிப்பீட் ஆகுது... உங்க லிஸ்ட்டை மீண்டும் எடிட் பண்ணுங்க... ப்ளீஸ் :) யாரு முதல்ல தேர்வு செய்தார்களோ அவர்கள் அதை செய்யட்டும்.

கூடவே குறிப்பு டிமாண்ட் அதிகமாகுறதால இன்னும் சில குறிப்புகள் சேர்த்திருக்கேன்... பாருங்க. இப்போ 110 குறிப்புகள் இருக்கு, நிறைய சைவமும் சேர்ந்திருக்கு இப்போ. பார்த்து முடிவு பண்ணுங்க :)

இமா... குறிப்புக்கு படமெடுத்து லின்க் கொடுங்க போதும், தட்டச்சு வேலை இருக்காது, குறிப்பு இருக்கே. :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இஞ்சி தொக்கு - 1635 ithu reva select panathal intra dish select paniten

மொச்சைக்கொட்டை முருங்கைக்காய் புளிக்குழம்பு
Vani intha kuripu mano avanga kuripu thana

Gova chicken reva seithutangalam so ithu change panren
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

Pls in Yarum mathatheenga
சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட் select vani

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அறுசுவைக்கு நீங்க அனுப்ப போகும் படங்கள் பலருக்கு பயன்படும். ஏன்னா எனக்கு தெரிஞ்சு நான் வந்த இந்த 5 வருடத்தில் அதிகமா படங்களோடு இருக்க குறிப்பை தான் தேர்வு செய்து பலரும் சமைச்சு சொல்வாங்க. படம் இல்லாத குறிப்புகள் கேட்பாரின்றி கிடக்கும். ஒரு முறை டீம் கலக்ட் பண்ண பழையை குறிப்புகளை தேர்வு செய்து பாதுஷா, அதிரசம் செய்து பார்த்தேன். எனக்கு அவற்றை செய்ய உதவ கூட யாருக்கும் தெரியாது. குறிப்பை அப்படியே செய்தேன், எவ்வளவு பாராட்டு தெரியுமா? கடையில் கூட இத்தனை சுவையாக இருக்காது என்றார்கள் எல்லோரும் :)

அன்று நினைத்தேன், இப்படி எத்தனை அருமையான குறிப்புகள் அறுசுவையில் புதைந்து கிடக்கிறதோ என்று. இன்று அவற்றை தோண்டி எடுத்து படங்கள் இணைத்து பலரும் சமைத்து அசத்த ஒரு வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்திக்கொடுக்க போகிறீர்கள். இது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்? எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி :) உங்களோடு சேர்ந்து நானுமே சமைக்க போறேன். தினம் ஒன்னு செய்து பார்த்துடணும்.

ஒருவர் 3க்கு மேல் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் செய்து அனுப்பலாம். இந்த வார இறுதிக்குள் அனுப்புங்கள். இப்போது ஒரு செட் அனுப்பினவங்க, அதற்கு மேலும் செய்ய விரும்பினால் தெரியப்படுத்துங்க... இந்த வாரம் செய்து முடிச்ச குறிப்புகளின் லின்க் நீக்கிட்டு, அடுத்த வாரமும் இன்னும் சில குறிப்புகளோடு இதே இழையில் போட்டியை தொடரலாம். படமில்லா குறிப்புகளுக்கா பஞ்சம்?? இனிப்பு காரமெல்லாம் தேர்வு செய்து பட்டியல் தரேன்.

உங்கள் அனைவருக்கும் தனி தனியே பதிவிட தான் ஆசை... ஆனால் உங்க பதிவை எல்லாருமே எடிட் பண்ணிகிட்டே இருக்கீங்கன்னு நினைக்கிறேன், அதனால் பதிலளி தட்ட விருப்பமில்லை. :) எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். இத்தனை பேர் பதிவிட்டு சப்போர்ட் பண்ணிருக்குறது மிகுந்த மகிழ்ச்சியை தருது.

ஒரே ஒரு வேண்டுகோள்... முடிஞ்சா இந்த போட்டியில் டீம் மக்கள், செண்பகா எல்லாருமே ஆளுக்கு ஒரு குறிப்பாவது செய்து அறுசுவையில் வெளியிடணும்னு கேட்டுக்கறேன். நீங்க ஏற்கனவே வேறு வேலைகளில் பிசி என்பதால் ஒன்னே ஒன்னு கொடுத்தாலே போதும். நன்றி நன்றி. ;)

மக்களே... ஏற்கனவே தேர்வான குறிப்புகள் பார்க்குறது சிரமமா இருந்தா சொல்லுங்க... நீங்க தேர்வு செய்த குறிப்பை ஃபைனலைஸ் பண்ணிட்டு அந்த லின்கை உங்க பதிவில் நோட் பண்ணிகிட்டா, நான் அந்த லின்கை மேலே உள்ள பட்டியலில் இருந்து நீக்கிடுறேன். அதனால் அடுத்து பார்ப்பவர்கள் அவை தேர்வு செய்யப்பட்டவைன்னு தெரிஞ்சுக்குவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இஞ்சி தயிர் பச்சடி, வாய்ப்பன்.... இதெல்லாம் ரிப்பீட் ஆகுது... உங்க லிஸ்ட்டை மீண்டும் எடிட் பண்ணுங்க... ப்ளீஸ் :) யாரு முதல்ல தேர்வு செய்தார்களோ அவர்கள் அதை செய்யட்டும்.//

ஓகே. மீ வாபஸ். ;) நல்ல வேளையா குறிப்பு காப்பி பண்ண வந்த சமயம் இது கண்ணுல பட்டுது. சமைக்க முன்னாலயே கண்டுபிடித்துச் சொன்னதற்கு நன்றி வனி. வாய்ப்பன் முதல் ஆளே சூஸ் பண்ணி இருக்காங்க. கடைசி எழுத்தை மட்டும் தேடினது தப்பாகிப் போச்சு. மன்னிச்சுக்கங்க. //இஞ்சி தயிர் பச்சடி// என் கண்ணுல படல. இருந்தாலும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது. பொருட்கள் இருக்கிற நம்பிக்கைலதான் அது மூன்றும் தெரிந்தேன். மீதி ஒண்ணுதான் இருக்கு. இனி தேடிப் படிச்சு, பொருள் எல்லாம் வாங்க நேரம் போதாது. குறைஞ்சது மூணுன்னு சொல்லிட்டீங்க. இமா வாபஸ்.

மூன்றாவது - http://www.arusuvai.com/tamil/node/19851 - குவாக்கமோலே யாராவது எடுத்து செய்யலாம்.
``````````````

‍- இமா க்றிஸ்

நான் ரேவ்ஸ லிஸ்ட் மாத்த சொல்லிருக்கேன்... நீங்க செய்யுங்க :) அவங்க மொபைலில் இருந்து தேர்வு செய்து போடும் முன் பின்னாடி வருகிறவர்கள் தேர்வு செய்துடுறாங்க, அதனால் அவங்க மாத்திக்குறேன்னு சொல்லிருக்காங்க. நீங்க செய்து சொல்லுங்க இமா.

ஆகா... ஓரேயடியா அப்படிலாம் விட மாட்டோம் இமா ;) கட்டாயம் நீங்க தேர்வு செய்த மூன்றை நீங்க செய்யுங்க, ரேவ்ஸ் ஏற்கனவே லிஸ்ட் மாத்துறதா சொல்லிருக்காங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//தட்டச்சு வேலை இருக்காது, குறிப்பு இருக்கே.// ஆமாம், ஆனால்... முன்னாலயே யோசிச்சுப் பார்த்துட்டேன் வனி. குறிப்பு இருக்கு. ஸ்டெப்ஸ் குறைவாக இருக்கு. அப்படியே ஸ்டெப்ஸ் எல்லாத்துக்கும் படம் எடுக்கிறது, பார்க்க நல்லா இருக்காது. சில இடங்களில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட கண்ணில் பட்டது. இப்போ நேரமில்லாமல் அவசரப் பட்டதால ஆனதைப் பார்த்தீங்கல்ல! ;) உங்கள்ட்ட மாட்ட வேண்டி வந்துச்சு. :-) குறிப்பை எடிட் பண்ணாம அவசரப் பட்டு அனுப்ப விருப்பமில்லை எனக்கு. அது டீமுக்கு இருக்கிற வேலைக்கு மேல வேலை கொடுக்கிறது ஆகிரும்னு நினைக்கிறேன்.

போட்ட கமண்ட் ஆட் ஆகாம போச்சு. அதை மட்டும் திரும்ப ஒட்டிருக்கேன். பரவாயில்லை வனி.

ரூல்ஸ் ரூல்ஸா இருக்கட்டும். மாற்றம் எதுவும் வேண்டாம். இன்னொரு முறை பார்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

உங்க விருப்பம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் போட்டி...

குறிப்புகள் பார்த்துட்டு இருக்கேன்... குல்பி குறிப்புகள் 2 ஏற்கனவே படங்களுடன் இரண்டு முறை இருக்கு...
http://www.arusuvai.com/tamil/node/18124
http://www.arusuvai.com/tamil/node/21214

அடைப்புக்குள் பெயர் இருந்த்தால் குறிப்புகள் செலக்ட் ஆகிவிட்டது என்று அர்த்தமா?
இதுவும் இருக்கே.......
மிக்ஸ்ட் ஃப்ரூட்ஸ் அல்வா
http://www.arusuvai.com/tamil/node/28280

ஓ.. மே பி அவை அந்த கேடகிரியில் சேர்க்கபடாமல் மிஸ் ஆகி இருக்கும் :( வெரி சாரி.

டீம்கிட்ட சொல்லி அவற்றை சேர்க்க சொல்லலாம். அந்த குறிப்புகளை நீக்கிட்டேன் பட்டியலில் இருந்து. ஈசி குல்ஃபி சூஸ் பண்ண ரேவதி... அம்மா என்னை மன்னிக்கணும் ;( எனக்கு உங்ககிட்ட சொல்லவே பயமா இருக்கு.

அடைப்புக்குள் பெயர் இருந்த்தால் குறிப்புகள் செலக்ட் ஆகிவிட்டது என்று அர்த்தமா? - yes priya

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனி :)

touch vitt poonathil NHM-mum thagararu pannuthu :( neengal eduththirukkum intha nalla muyarchiai manthaara paaratti varavettrtu vaazthugiren. niriya per seat-u pottutanga pola iukku.. meethi irukkum recipe-yai.. naan select pannittu soldren vani.. kalanthu kondu mudi sooda irukku anaithu samaiyal rani-galukkum en advance vazthukkal :)

vani 1 doubt : naan select panna recipe-yai inge eppadi select panni poduven.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

hai enakku oru doubt.pudusa recipe panni anupanuma illa already arusuvail irukkum recipes pannanuma.

அப்பாடா நல்லவேலை நான் தேர்வு செய்த குறிப்புகள் யாரும் எடுக்கவில்லை தப்பிச்சேண்டா சாமீ ;)

எனக்கும் கிச்சகுயினாக ஆகனும்னெல்லாம் ஆசையில்லை அறுசுவைக்கு என்னால் முடிந்ததை(ஆதரவு) செய்யவே இம்முயர்ச்சி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

// அப்பாடா நல்லவேலை நான் தேர்வு செய்த குறிப்புகள் யாரும் எடுக்கவில்லை தப்பிச்சேண்டா சாமீ ;)//ஹா ஹா ஹா.. என் இனமாடா நீ(ங்க‌)..;) நானும் இப்படி தான் நினைத்தேன் சுவா..
அய்யோ இதில‌ என்ன‌ அரட்டைன்னுட்டு வனி டீச்சர் கம்போட‌ வாரதுக்குள்ள‌ நான் எஸ்கேப்..;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நான் செய்யும் உணவுவகைகள்:

1.http://www.arusuvai.com/tamil/node/1089‍ / தேங்காய் திரட்டுப்பால்,
2.http://www.arusuvai.com/tamil/node/9881‍‍ / கருணைக்கிழங்கு புளிகுழம்பு,
3.http://www.arusuvai.com/tamil/node/11716 /மோர்க் குழம்பு ( கடலை மாவுடன்,
4.http://www.arusuvai.com/tamil/node/5348 /ப்ரொக்கலி சாலட்,
5. http://www.arusuvai.com/tamil/node/797 /பேரீச்சை ஜாம்
6.http://www.arusuvai.com/tamil/node/6620/ கருணைக்கிழங்கு மசியல்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

1. http://www.arusuvai.com/tamil/node/1343 - அப்பக்கா
2. http://www.arusuvai.com/tamil/node/5680 - கச்சான் அல்வா
3. http://www.arusuvai.com/tamil/node/2006 - நூல்கோல் வடை
4. http://www.arusuvai.com/tamil/node/1333 - பூவா
5. http://www.arusuvai.com/tamil/node/2040 - சேப்பங்கிழங்கு கறி (ஆர்பி க சாக்)
6. http://www.arusuvai.com/tamil/node/5323 - சுண்டைக்காய் குழம்பு
7. http://www.arusuvai.com/tamil/node/868 - மாங்காய் பருப்பு மசியல்
8. http://www.arusuvai.com/tamil/node/129 - பாதுஷா
9. http://www.arusuvai.com/tamil/node/10723 - காஷ்மீரி பொட்டேட்டோ புலாவ்
10. http://www.arusuvai.com/tamil/node/12276 - அவரைக்காய் வறுவல்

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

http://www.arusuvai.com/tamil/node/3247 - சில்லி மெக்ஸிகன் ரைஸ்

http://www.arusuvai.com/tamil/node/22745 - பேக்ட் ஹெர்ப் பொட்டேட்டோஸ்

http://www.arusuvai.com/tamil/node/306 - கோழி கொத்தமல்லி மசாலா

மொச்சைக்கொட்டை முருங்கைக்காய் புளிக்குழம்பு

சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட்

2952 - இறால் பஜ்ஜி

இனியும் யாரும் மாத்திடாதீங்க இதுதான் என் கடைசி தேர்வு ;)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கல்ப்ஸ் சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட் நான் முன்னாடியே எடுத்துட்டேன் அதனால அதை எடுக்காதீங்க

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

//ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் அடுத்த வாரத்தில் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும் // எனக்கு பாராசூட்ல‌ பறக்கிர‌ மாத்ரி இருக்கு,ஐஐஆஇ ம்ம்ம்ம்ம்ம்ம்...

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

எனக்கு ஒரு சந்தேகம் நீண்ட‌ நாட்களாக‌ குறிப்புகளை வெளியிடுவது என்று இருந்தது நேரம் கிடைக்கும் போது கேட்கலாம் என்று இருந்தேன், மேலும் இப்பொது கிச்சன் குயின் போட்டி வரவும் கேட்டுவிட்டேன், இது பற்றிய‌ முன்பே உள்ளதா என்று தெரியவில்லை இருந்தாலும் அதை பற்றியும் தெரிவித்தால போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கும் வசதியாக‌ இருக்கும் என‌ நினைக்கின்றேன்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா