Enaku baby poranthu 9month akuthu delivery aki 2mth la period vanthuchi,athuku 45 days,50days period vanthuchi athuku apram 84 days achi inum period varala.ithuku idaila cobtact la irunthom ivlo nal period varama irukuratha nenacha conceive irukumonu doubt ah iruku athukana entha symptoms ila frt conceive ku entha symptoms ila athan ipa payama iruku.pathil4 solunga..s
ஒன்னும் கவலப்படதிங்க நீங்க
ஒன்னும் கவலப்படதிங்க நீங்க குழந்தைக்கு பால் குடுக்குறது நாலா தான் பீரியோட்ஸ் சரிவர வராது எனக்கு ஆப்டர் டெலிவரி 9 மாசம் கழிச்சுதான் வந்துது சோ டோன்ட் வொர்ரி
thanks
Thanks pa.milk kuduthalum conceive akalam nu ellarum potu kolapuranga pa,athan keten .
உண்மை எது!
//milk kuduthalum conceive akalam nu ellarum potu kolapuranga pa// அப்படிச் சொன்னவர்கள் உங்களைக் குழப்பவில்லை. அது 100% உண்மை. நீங்கள் கவலயீனமாக இருந்துவிட்டு உங்களுக்கு வசதியாக மற்றவர்கள் பதில்கள் இல்லை என்பதால் இப்படி நினைக்கலாமா! :-) அதை நம்பவில்லையானால்... ஒரு மகப்பேறு மருத்துவரிடம் போய்க் கேட்டுப் பாருங்களேன். இதையே தான் சொல்வார்கள் சங்கீ. பதில்கள் உங்கள் மனது ஆறுதல் கொடுக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை. அது உண்மையா இல்லையா என்பதில் தான் விஷயம் இருக்கிறது.
//conceive irukumonu doubt ah iruku // இருக்கலாம் சங்கீ. பாலூட்டும் சமயம் சிலருக்கு மாதவிடாய் வராது என்பது உண்மை. ஆனால் அதற்காக கருத்தரிக்காது என்று நினைத்துக் கவலையீனமாக இருக்க வேண்டாம். இது கருத்தடை முறை அல்ல. மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்ததை நீங்கள் அறிவதற்கு முன்பே, மீண்டும் கருத்தரிக்கச் சாத்தியம் நிறைய இருக்கிறது.
//ipa payama iruku.// இரண்டாவது குழந்தைக்கும் முதலாவதிற்கும் இடைவெளி போதாமல் இருப்பது உங்களுக்குப் பல வழிகளிலும் சிரமமாக இருக்கும் என்பதைத் தவிர இதில் பயப்பட என்ன இருக்கிறது! சிந்திக்காமல், பாதுகாப்பு இல்லாமல் இருந்தது உங்கள் தப்பு. கருத்தரிக்கவில்லை என்பதை நிச்சயம் செய்ய முடிந்ததும் முறையான கருத்தடை வழி எதையாவது பின்பற்றுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
- இமா க்றிஸ்
பென்ஸ் காதர்
//ஒன்னும் கவலப்படதிங்க// & //சோ டோன்ட் வொர்ரி// :-) உங்களைப் பற்றிக் கொஞ்சம் எனக்கு வொர்ரி வருதே! :-)
//நீங்க குழந்தைக்கு பால் குடுக்குறது நாலா தான் பீரியோட்ஸ் சரிவர வராது.// கருத்தடை முறை பயன்படுத்திக் கொண்டு இருந்தால்... இது உண்மை.
//எனக்கு ஆப்டர் டெலிவரி 9 மாசம் கழிச்சுதான் வந்துது// ஆள் ஆளுக்கு ஒரு கணக்கு இருக்கும். உங்களுக்கு ஆனதை வைத்து மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்ல இயலாது சகோதரி. அந்த ஒன்பதாம் மாதம் மாதவிடாய் வராமலே கர்ப்பம் தரிக்கலாம்.
உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிகிறது. நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள் என்பதுவும் தெரியும். உங்கள் அடுத்த பிரசவத்திற்கு முன்பாக உங்களைப் பார்க்கும் மருத்துவரிடம் இது பற்றிக் கேட்டுத் தெளிவுபடுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
- இமா க்றிஸ்
தாய்மை
///milk kuduthalum conceive akalam nu ellarum potu kolapuranga pa// அப்படிச் சொன்னவர்கள் உங்களைக் குழப்பவில்லை. அது 100% உண்மை. நீங்கள் கவலயீனமாக இருந்துவிட்டு உங்களுக்கு வசதியாக மற்றவர்கள் பதில்கள் இல்லை என்பதால் இப்படி நினைக்கலாமா! :-) அதை நம்பவில்லையானால்... ஒரு மகப்பேறு மருத்துவரிடம் போய்க் கேட்டுப் பாருங்களேன். இதையே தான் சொல்வார்கள் சங்கீ. பதில்கள் உங்கள் மனது ஆறுதல் கொடுக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை//
//அந்த ஒன்பதாம் மாதம் மாதவிடாய் வராமலே கர்ப்பம் தரிக்கலாம். //
- 100% உண்மைங்க. நான் என் முதல் குழந்தை 6 மாதம் இருக்கும் போது அடுத்த கரு உண்டானேன். இப்படி பால் கொடுத்தா கரு நிக்காதுன்னு நம்ப வெச்ச புத்திசாலி எல்லாம் என் கையில் அதன் பின் கிடைச்சிருந்தா மண்டையை பிடிங்கி இருப்பேன். கஷ்டப்பட்டது நானா இருந்தா பரவாயில்லை, தாய் பால் கிடைக்காம போனது என் முதல் குழந்தைக்காச்சே.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Sangee
முதலில் காலம் தாழ்த்தாமல் மருத்துவரை சந்தித்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். முடிவு பாஸிட்டாவாக இல்லையென்றால் உடனே முறையான கருத்தடை சிகிச்சையை பின்பற்றுங்கள். எனக்கு முதல் பிரசவத்திற்கு பின் 45 நாளில் period வந்தது. ஆனால் என் தோழிக்கு 7 மாதம் ஆனது. அதனால் ஒவ்வொருவருடைய உடல்நிலை வெவ்வேறானது.
நன்றி!
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
thanks pa
Rompa thanks pa ellarukum.safety ku condom use panrom.irunthalum period varama porathu than konjam payam
negative
Hi,frds doctor kita poi chk paniten test -ve
Pa,ena karuthadai better..solunga