தோழிகளே,நான் நேரில் பத்த அனுபவம்...

என் கணவரின் பெரியப்பா பேத்திக்கு இன்று திருமணம் நடந்தது...அவளின் அம்மா அவள் ஆறாவது படிக்கும் போது தற்கொலை செய்து கொண்டார்...அதன் பின் அவளின் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்...அவளின் சித்தி ரொம்ப நன்றாக பாத்து கொண்டார்...அவள் பி இ வரைக்கும் படிக்க வைத்தார்...தன் மகள் போல் பத்து கொண்டார்...அவளின் அப்பா சென்டரல் govt வேலை..அதனால் வீட்டில் இருப்பது அரிது...எதற்கும் பஞ்ச்ம் இல்லை.அவள் காலேஜ் முடிக்கும் வரை ஹாஸ்டல் சேர்த்தவில்லை வேலைக்கு சேர்ந்த பின் தான் ஹாஸ்டலில் விட்டார் ..நான் நினைத்து உண்டு....சித்தி இந்த அளவுக்கு பத்து கொள்வார என்று.என் மணதில் சித்தி என்றால் கொடுமை மட்டுமே படுத்துவார் என்றுப் இருந்த தப்பான எண்ணம் மறைந்து விட்டது..இன்று அவளின் அம்மா வின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடைந்து இருக்கும்..அவளின் அம்மா இருந்தல் கூட இந்த அளவுக்கு செய்து இருப்பரா என்று எனக்கு தெரியவில்லை....எனக்கு இது நம் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது...

திவ்யா நீங்க சொல்ரது சரிதான்பா.சில சித்திகள்கொடுமை செய்ரதால எல்லாரும் அப்படித்தான்னு ஒரு தவறான எண்ணம் எல்லாருக்கும் இருக்கு.என் அம்மாவும் என் 5 வயதில் இறந்து விட்டார்.நான் 3வது படிக்கும்போது என் அப்பாவுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.என் அப்பாவுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் எனக்காகவும் என் தம்பிக்காகவும் திருமணம் செய்துகொண்டார்.அப்போ என் சித்திக்கு 19 வயது.நான் அவங்களை ஒரு நாளும் சித்தினு கூப்பிட்டது கிடையாது.அம்மானு தான் கூப்பிடுவேன்.என் தம்பியும் அப்படிதான்.இப்போ ஒரு தங்கச்சியும் இருக்கா.என் சித்தி எங்களயும் என் தங்கச்சியேயும் ஒரு நாளும் பிரிச்சு பார்த்தது கிடையாது.19 வயசுலேயே அவங்க 2 குழந்தைகளுக்கு அம்மாவா இருந்திருக்காங்க.எங்கலுக்காக அவங்க life ye அர்ப்பணிர்திருக்காங்க.அவங்க friends எல்லாம் 3rd குழந்தைக்கு ready ஆகிட்டு இருக்காங்க.ஆன என் அம்மா மகளுக்கு கல்யாண்ம் செஞ்சு பேரன் பேத்திக்கு காத்திட்டு இருக்காங்க.அவங்க எனக்காகவும் என் தம்பிக்காகவும் செஞ்ச உதவியெய் வாழ்க்கைல எந்த சூழ்நிலைலயும் மறக்க மாட்டேன்.என் தங்கச்சி எனக்கும் என் தம்பிக்கும் ரொம்ப செல்லம்.அவளுக்கும் எல்லாம் தெரியும்.அவளும் பிரிச்சு பார்க்க மாட்டா.நாங்க வேறு தாய் பிள்ளைகள் என்பதையே மறந்துட்டோம்.life எப்பவும் இப்படியே happy a இருக்கனும் insha allah..

hello thozhi divya
antha chithiyum oru penthane.chithi kodumai yellam antha kaalam.ini antha pen nandraga valamaga vazha irivanai poirarthikiren.

மேலும் சில பதிவுகள்