ஒயர் ரிப்பன் ஏஞ்சல்ஸ் - பாகம் 1

தேதி: December 4, 2014

Average: 5 (2 votes)

 

44 மி.மீ அகல ஆர்கன்ஸா ஒயர் ரிப்பன் (Organza Wire Ribbon) - 16 செ.மீ
3 மி.மீ அகல ரிப்பன் - 20 செ.மீ + 11 செ.மீ
வெள்ளை பைப் க்ளீனர் - 12 செ.மீ
கிஃப்ட் டாக் ஸ்ட்ரிங் (Gift Tag String) - 15 செ.மீ
அட்டை - 4 செ.மீ x 10 செ.மீ
வெள்ளை ஃபெல்ட் - 4 செ.மீ x 10 செ.மீ
உட்டன் பீட் (Wooden Bead) - ஒன்று (முகத்திற்கு)
க்ராஃப்ட் ஹேர் (Craft Hair)
அளவான காது வளையம் - ஒன்று
சிறிய மணிகள் - 2
லிபர்ட்டி பெல் (Liberty Bell) - ஒன்று
கம்பி - 15 செ.மீ
குறடு
கத்தரிக்கோல்
பேனா
ஹாட் க்ளூ கன்

 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். உட்டன் பீட்டில் முகம் வரைந்து கொள்ளவும்.
அட்டைத் துண்டை இரண்டாக மடித்து, ஒரு பக்க இறக்கையை வரைந்து வெட்டி எடுத்து விரித்துக் கொள்ளவும்.
அதை ஃபெல்ட்டில் வைத்து வரைந்து வெட்டிக் கொள்ளவும். (வெட்டிய இறக்கைகளில் பேனா அடையாளம் தெரிந்தால் அழகு கெட்டுவிடும். படத்தில் தெளிவாகத் தெரிவதற்காக மட்டுமே அழுத்தமாக வரைந்திருக்கிறேன். கூடுமான வரை மெல்லிதாக வரைந்து கொள்ளவும்).
கைகளுக்கு பைப் க்ளீனரை இரண்டாக மடித்து இரண்டு நுனிகளையும் வளைத்து வைக்கவும்.
வளையங்களிலிருந்து தேவையில்லாத பகுதிகளை வெட்டி நீக்கவும்.
சிறிய துண்டு ரிப்பனில் ஒரு போவ் (bow) செய்து வைக்கவும்.
கம்பியை இரண்டாக மடித்து முனையை குறட்டினால் அழுத்தி எடுக்கவும்.
கம்பி முனையை மணியின் துளை வழியே நுழைத்து, மறுபக்கம் வந்ததும் நீளமான ரிப்பன் துண்டின் ஒரு நுனியைச் சொருகவும்.
கம்பியை மீண்டும் ஆரம்ப நிலைக்கு இழுத்தால் ரிப்பன் மணியில் நுழைந்து மறுபக்கம் வந்துவிடும். மணி நழுவாமலிருக்கும் விதமாக ஒரு முடிச்சுப் போடவும்.
ரிப்பனின் மறு முனையிலும் மணியைக் கோர்த்து முடிச்சுப் போடவும்.
சட்டைக்கு ஆர்கன்ஸா ரிப்பனை படத்தில் காட்டியுள்ளபடி மடிக்கவும். (இரண்டு ஓரங்களும் சந்திக்கும் இடத்தில் 3 மில்லி மீட்டர் அளவு ஒன்றன் மேல் ஒன்று வர வேண்டும்). அடையாளம் செய்திருக்கும் இடங்களில் 3 மில்லி மீட்டர் அளவு (சட்டைக் கைகளுக்கு) கோடுகள் வரைந்து வெட்டவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்