தாங்க முடியாத தலை வலி

எனக்கு ரொம்ப நாளாக மைக்ரேன் தலை வலி இருக்கிறது.நானும் ஹஸ்பிடலில் காட்டினேன் நிறைய மருந்து குடுத்தார்கள் என்னால் தொடர்ச்சியாக மருந்து எடுத்து கொள்ள முடியவில்லை...எனக்கு கோவம் வரும் சமயம் ரொம்ப வருகிறது...என்னால் என் கோவத்தை கட்டு படுத்த முடியவில்லை..இதை சரி செய்ய உதவுகள் தோழிகளே...

ஹாய் திவ்யா எனக்கும் அதே ப்ரச்சனை. நான் இப்போ தொடர்ச்சியாக‌ மருந்து எடுத்துட்டு இருக்கேன். கோவம் வரும்போதுனு இல்ல‌. நார்மலா இருக்கும்போதும் வரும். டாக்டர்ஸ் சொல்றாங்க‌ வருடக்கணக்காக‌ மருந்து எடுக்க‌ வேண்டிவரும்னு சொல்றாங்க‌.

கஸ்டமாதான் இருக்கு தொடர்மருந்து ஆனால் என்ன‌ பண்றது என்னால‌ தலைவலி தாங்கமுடியாது. முடியாம‌ அழக்கூட‌ செய்திருக்கேன். என்னோட‌ சந்தேகம் என்னனா எவ்ளோ நாள் tablets எடுக்கவேண்டிருக்கும்.

யாராவது continuousa எடுத்து சரியாகிருக்கானு தெரியனும். தெரிஞ்சவங்க‌ கொஞ்சம் சொல்லுங்க‌ Friends.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

டாக்டர் தொடர்ச்சியாக எடுத்தால் ஒரு சிலர்க்கு சரி ஆகும் அப்படி சரி ஆகலனா வாழ்க்கை முழுவதும் எடுக்க வேண்டி இருக்கும் நு சொன்னங்க..நான் 10th படிக்கும் போது ஆரம்பிச்து இன்னும் தொடர் கதை மாதிரி தொடருது...இப்போ எனக்கு 23 வயது ஆகிறது...கர்ப்பம் ஆனதுல இருந்து மருந்து விட்டது இன்னும் எடுக்க முடியல...சில சமயம் தலை வெடித்து விட்டால் பரவயில்லை நு தோணுது....

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

அன்புத் தோழிகளுக்கு,

எனக்குத் தெரிந்த‌ சில‌ பேர் சொன்னதை இங்கே பகிர்ந்துக்கறேன்.

நொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்து, அதை தலையணை போல‌ தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கினால், மைக்ரேன் தலைவலி குணமாகும்.

இன்னொரு தோழிக்கு ஒரு சித்த‌ வைத்தியர் சொல்லி, அவங்களுக்கு பலன் கிடைச்சுதுன்னு சொன்ன‌ விஷயங்கள்:

வெண்டைக்காயை சூப் ஆக‌ செய்து குடிக்கச் சொன்னாராம்.

அதே போல‌ உளுந்து வடை மாவை, நெய்யில் சுட்டு, சாப்பிடச் சொன்னாராம்.

இவை இரண்டுமே நல்ல‌ பலன் கொடுத்ததாக‌ சொன்னாங்க‌.

நொச்சி இலை தலையணையும் உபயோகப்படுத்தி, பலன் கிடைத்ததாக‌ சொன்னாங்க‌.

ட்ரை பண்ணிப் பாருங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப‌ நன்றிமா. முயற்சி செய்து பார்க்கிறேன்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

எனக்கும் இந்த பிரச்சணை இருந்ததது.ரொம்ப கஷ்டமா இருக்கும்.நான் கூட வேர எதாவது பிரச்சணை இருக்குமோனு ரொம்ப பயந்தேன்.ஏலக்காய் மூளைக்கு நல்லதுநு கேள்விபட்டிருக்கேன்.தலை வலிக்கும்போது இஞ்சி ஏலக்காய் போட்டு டீ குடிப்பேன் சரி ஆகிடும்.நீங்களும் முயற்சி செஞ்சு பாருங்க.

நொச்சி இலை - காய்ந்ததா ? எவ்வளவு நாட்களுக்கு தலையணையாக உபயோகிக்க வேண்டும்?
உளுந்து வடை மாவை நெய்யில் சுட்டு & வெண்டைக்காய் சூப் எத்தனை நாட்களுக்கு உண்ண வேண்டும். தகவல் கிடைத்தால் பயனளிக்கும், நானும் எனது 8 வயது முதல் மைக்ரேனால் அவதிப் படுகிறேன். இப்போது அதிகமாகி கொண்டேயிருக்கிறது. அக்குபங்சர் எடுத்தும் பயனில்லை.சித்த வைத்தியம் எடுத்தேன் அது எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இங்கும் இந்த நோயை குணப் படுத்த முடியாது என்கிறார்கள். வலி துவங்கும் போது மாத்திரை போட்டுக் கொள்ளுங்கள் என்பதுதான் மைக்ரெனுக்கான வைத்தியம் என்று கூறிவிட்டார்கள். தயவு செய்து விசாரித்து பதிவிட்டீர்களெனில் நலமாயிருக்கும். சிரமத்திற்க்கு மன்னிக்கவும்.
நன்றி

மைக்ரேன் தலைவலிக்கு நிரந்தர‌ தீர்வு தெரியவில்லை..திவ்யா...ஆனால் தலைவலி வரும்போது நிறைய‌ தண்ணீர் குடியுங்கள்..வாமிட் வரும்.வாமிட் வந்ததும் தலைவலி குறையும்.
முயற்சி செய்து பாருங்கள்.

கவிதாசிவகுமார்.

anbe sivam

வாமிட் வரமாதிரிதான் சிஸ் இருக்கும். ஆனால் வந்ததில்லை பா.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நான் பார்க்கிற‌ டாக்டர் கூட‌ அதைதான் சொன்னார். லைட்டா வலி ஆரம்பிக்கும்போதே மாத்திரை போட்டுருங்கனு. வாணி சிஸ் அதிகமாதான் ஆகுமா? குறைய‌ வாய்ப்பு இல்லயா?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

மைக்ரேனுக்கு வைத்தியம் இல்லை. ஆனால் மெடிடேஷன், யோகா மூலம் மைக்ரேன் அட்டாக் வருவதை கொஞ்சம் குறைக்கலாம் என்றார்கள். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளணும். வெயிலில் நடக்கையில் தலையில் வெயில் படாமல் மூடிக் கொள்ள வேண்டும். கண்களுக்கு தரமான கண்ணாடி (sun glass) அணிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோரு காரணங்களால் மைக்ரேன் வரும். சில உணவுகளின் ஒவ்வாமையும் ஒரு காரணம்.
வலி ஆரம்பிக்கும் போதே மாத்திரை போட்டு வலியின் வீரியத்தை வேண்டுமென்றால் குறைத்துக் கொள்ளலாம் என்பது தான் மைக்ரேனுக்கான டிரீட்மென்ட் அப்படின்னு எல்லா மருத்துவர்களுமே சொல்றாங்க.
நான் இப்பத்தான் முதன் முதலா மைக்ரேன் குணமாகியிருப்பதைப் பற்றி சீதா மேடம் மூலமா கேள்விப் படறேன்.

மேலும் சில பதிவுகள்