தாங்க முடியாத தலை வலி

எனக்கு ரொம்ப நாளாக மைக்ரேன் தலை வலி இருக்கிறது.நானும் ஹஸ்பிடலில் காட்டினேன் நிறைய மருந்து குடுத்தார்கள் என்னால் தொடர்ச்சியாக மருந்து எடுத்து கொள்ள முடியவில்லை...எனக்கு கோவம் வரும் சமயம் ரொம்ப வருகிறது...என்னால் என் கோவத்தை கட்டு படுத்த முடியவில்லை..இதை சரி செய்ய உதவுகள் தோழிகளே...

உங்களோட‌ டிப்ஸ் க்கு நன்றி. நான் ஏற்கனவே யோகா பண்ணிட்டுதான் இருக்கேன். இனியாவது குறையுதானு பார்ப்போம் சிஸ்!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

அதிக ஓசையில்ல்லாத, ஒளி குறைவான காற்றோடமான இடத்தில் ஓய்வெடுப்பது Migraine தலைவலியைக் குறைக்க உதவும்.
சரியான தூக்கமின்னை; வெய்யிலில் குடையில்லாமல் நடப்பது; மாலை குளிரில் (பனி விழ ஆரம்பிக்கும் வேளையில் தலையில் துணி இல்லாமல் வெளியில் இருத்தல்: பெண்களுக்கு அவர்களுக்கே உரிய‌ உடல் நலமின்மை காரணங்களால் இந்நோய் ஏற்படுகின்றது.நொச்சியிலை தலையணை ஒரு சிறந்த‌ தீர்வுதான்.

நொச்சி இலையை சுக்குடன் சேர்த்து அரைத்து நெற்றிப் பொட்டில் பற்றிட வேண்டும். அப்போதும்கூட‌ தலைவலி குறையும்,
நீண்ட தூரப்பயணங்களால்கூட‌ இத்தலைவலி ஏற்படுகிறது,

Information is wealth

நான் நீங்க சொன்னது எல்லாம் செய்து விட்டேன்...ஆனால் அந்த சமயம் மட்டும் தான் குறைகிறது...எனக்கு வாமிட் வருவது இல்லை...நொச்சி இலை எப்படி இருக்கும்...கோவத்தில் இருக்கும் போது வந்தால் தான் தாங்க முடியவில்லை...டாக்டர் எல்லோரும் மன அழுத்தம் இருந்தால் கூட மைகிரேன் வரும் என்று கூறுகிறார்கள்...

எப்படி மைக்ரெய்ன் என்று நிச்சயம் சொல்றீங்க! தெரிந்துகொள்ள ஆவல். முன்பு இரண்டு வருடங்கள், இங்கே ஒவ்வொருவரும் தனித்தனியே குறிப்பிட்ட அனைத்துமே அனுபவித்து இருக்கிறேன். பயங்கர வேதனை இல்லையா! ஆனால் என் மருத்துவர் அது மைக்ரெய்ன் என்று நிச்சயப்படுத்திச் சொல்லவில்லை. "அப்படியும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்," என்றுவிட்டார். :-)

அந்தச் சமயம் வேறு ஒரு சிகிச்சையும் நடந்துகொண்டு இருந்தது. கவுன்சிலர் சொல்லுவார்... "கோபம் வந்தால் அடக்காமல் கொட்டிருங்க," என்று. :-) அவரேதான் சுலமான வழியும் சொல்லித் தந்தார். கடிதம் அல்லது ஈமெல் எழுதி வைத்து இரண்டு நாள் கழித்து அழித்து விடச்சொன்னார். வேறு சின்னச் சின்ன மாற்று வழிகள் சொல்லிக் கொடுத்தார். கேட்டால் நகைப்பீர்கள். ஆனால் எல்லாமே உதவியது என்பது உண்மை. ஸ்ட்ரெஸ் ரிலேட்டட் என்று நினைத்த சமயம் அதற்கென்று மாத்திரை - அடிப்படையில் பனடோல்தான் அதுவும், கொடுத்தார். எல்லாம் தற்காலிகமாகத்தான் இருந்தது.

வெயில் பிரச்சினை... உண்மை அது. முடிந்தவரை குறைக்கிறேன்.

என் மகன் சொல்லுவார், எந்தப் பிரச்சினையானாலும் பத்து நிமிடத்துக்கு மேல் யோசிக்கக் கூடாது. அதற்குள் அதை விட்டு விலகப் பார்க்க வேண்டும் என்று. இது பெரிதும் உதவிற்று என்றுதான் சொல்லுவேன்.

எல்லாச் சமயமும், எல்லா மருத்துவர்களுமே, "இது மைக்ரெய்ன் ஆக இருக்கலாம், சைனஸாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்," என்று நிச்சயமில்லாமல் சொல்லி வந்தார்கள்.

நானே கண்டுபிடித்த இன்னொரு விடயம்.... பசி. சரியான சமயத்தில் கொஞ்சமாவது உள்ளே கொட்டி அடைக்காவிட்டால் அத்தனை சிம்ப்டம்ஸும் ஒன்றாக எட்டிப் பார்த்திருக்கிறது. தலைவலி, வாந்தி... பிறகு சாப்பிட்டாலும் நிற்காது. அதிகரித்துக் கொண்ண்டே போகும். அது நிற்பதற்குள் ஸ்ட்ரெஸ்... :-) பிறகு எதற்குத் தலை வலிக்கிறது என்று புரியாது.

இப்போது அந்தக் கொடுமையான தலைவலிகளைக் காணோம். இதை நிரந்தரம் என மாட்டேன். நான் என் உடலை மரியாதையாக நடத்தும் வரை அது என்னை நிம்மதியாக விட்டுவைக்கும் என்று தோன்றுகிறது. ஆனாலும் ஒவ்வொருவர் அனுபவம் வெவ்வேறு. தெரிந்து வைப்பது நல்லது. இந்த இழையைத் தொடர்ந்து படிக்கிறேன். கருத்துப் பகிர்ந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி.

தாங்க முடியாத தலை வலி, தலைக்குள் சுத்தியால் அடிப்பது போன்ற உணர்வு. ஒலி, ஒளி ஒவ்வாமை. கண்கல் இருளடைந்து சில நேரங்களில் மங்கலான பார்வை,தலையை சுவற்றில் முட்டி உடைத்து விட வேண்டும் போன்ற உணர்வு ,அஜீரணம், வாந்தி போன்றவை தான் மைக்ரேன் என்று திட்டமாய் குறிக்கும்(கண்டறியும்) காரணிகள்.
மைக்ரேன் தலை வலி என்பதை வார்த்தைகளால் சொல்ல முடிவதில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இந்த தலைவலியை உண்டாக்கும் காரணிகள் மனிதருக்கு மனிதர் வேறு படுகிறது. பல ஆண்டுகளாக எனக்கு இந்த தலை வலி இருப்பினும் இன்னும் புது புது காரணிகள் உள்ளதை கண்டு பிடித்து அதை எல்லாம் முடிந்த அளவிற்க்கு கவனத்தில் கொண்டு வருகிறேன். சில நேரங்களில் நல்ல தூங்கி காலையில் எழுகையிலே வலி ஆரம்பிக்கும், மெதுவாக வலியின் வீரியம் அதிகமாகி மதியத்திற்க்கும் மேல் வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல், சத்தத்தைக் கூட கேட்க்க முடியாமல் கண்களும் இருண்டு கொண்டு, எழுத்தைப் பார்த்தால் மங்கலாக தெரிவதும், கடுமையான வாந்தியும் தான் இந்த தலை வலியின் விளைவுகள். ஃபேன் ஓடும் சத்தத்தைக் கேட்டால் கூட ஃபேன் உடைத்து விட தோன்றும். எனக்கு வாசனை திரவியங்கள் எதுவும் ஒத்துக் கொள்ளாது., முகம் பூசும் பவுடர் உட்பட. ஆகவே மென்மையான வாசனை போருட்களை தேடி அலைவதுண்டு. சில ஆண்டுகள் முன் கண்டறிந்த ஒரு விஷயம் உணவு ஒவ்வாமைகள். நட்ஸ் முதல் பாலில் தயாரிக்கும் உணவுகள், காஃபி, சாக்லேட், Preserved & processed பொருட்கள் மற்றும் பல பல.உப்பிட்டு பதப் படுத்திய உணவுகளும் இதில் அடக்கம். அதை விடவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜல் வைத்திருந்து உண்பதும் ஒரு காரணி. சமைத்த 6 முதல் 12 மணி நேரத்திற்க்குள் உண்ணலாம். அதற்க்கும் மேல் வைத்திருந்து உண்ணும் உணவுகளால் உடனே தலை வலி வந்து விடுகிறது. அதினால் வெளியே உண்பதை முடிந்த அளவிற்க்கு தவிர்த்து விடுவேன். நீண்ட பயணத்தினாலும் வந்து விடுகிறது. அதிக நேரம் உணவு உண்ணாமல் இருப்பது நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து உடனே தலை வலியை கொண்டு வந்து விடுகிறது. சுத்தமான காற்றோட்டம் இல்லையெனிலும் தலை வலி வருகிறது. அத்தகைய நேரங்களில் ஜன்னல் கதவுகளை திறது ஜன்னல் ஓறம் அமர்ந்து கொண்டாலும் பலன் தெரியும்.
போதிய தூக்கமின்மையும் காரணி தான்.
பெண்களுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று தான் ஹார்மோன் செயல் பாடுகளில் உண்டாகும் மாற்றம். இதினால் மாதவிடாய் வருவதற்க்கு முன் இந்த தலை வலி சிலருக்கு வருமாம். ஆனால் அவர்களுக்கு போதுவாக குழந்தை பேற்றிற்க்குப் பின் நிரந்தரமாக குணமாகி விடுவதாக பலர் கூறுவதை கேள்விப் பட்டுள்ளேன்.கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மறுபாட்டினால் அதிக அளவில் வருவதுண்டு. இதை அநேகர் சொல்வதைக் கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் எனக்கு இரண்டாவது பிரசவத்திற்க்குப் பின் தான் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது.
இப்போதெல்லாம் தலை வலி வந்தால் தொடர்ந்து 4 நாட்கள் படுக்கையை விட்டு எழ முடிவதில்லை. வாந்தி எடுத்து விட்டு மீண்டும் படுக்கை தான். ஆனால் தலைவலியின் போது எதுவுமே உண்ணாமல் இருப்பதும் வலியை அதிகப் படுத்துகிறது. தோழி புனிதா குறிப்பிட்டது போன்று காரணத்தைக் கண்டறிந்து விட்டால் கொஞ்சமாவது குறைக்கலாம்.

ஊரில் இருக்கையிலும் சரி இங்கு வந்தும் சரி வலியின் Symptoms சொன்னவுடன் மருத்துவர்கள் இது மைக்ரேன் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் ஊரில் உள்ள நரம்பியல் மருத்துவர் இது பிரசவத்திற்க்குப் பின் சரியாகி விடும் என்றார் ( 10 ஆண்டுகளுக்கும் முன்)
ஆனால் எனக்கான அறிகுறிகளை கண்டறிய உதவியது என்னமோ கூகிள் தான். அது போக எனக்கு தெரிந்தவர்கள் வட்டத்தில் யாருக்காவது மைக்ரேன் இருந்தாலும் அவர்களிம் மறக்காமல் காரணிகளை கேட்ப்பதுண்டு. சைனஸ், பல்வலி, காது வலியினால் உண்டாகும் தலை வலிகளுக்கு அதின் கரணிகளுக்கு மருந்து உண்டால் தலை வலியும் குறந்து விடுகிறது. ஆனால் மைக்ரேன் வலி வந்த பின் மாத்திரை போட்டால் குறைவதில்லை :((

ஸ்ட்ரெஸ்; இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் உடனே வெறு ஏதிலாவது கவனத்தை செலுத்த முயற்ச்சிக்கிறேன். இதற்க்கும் கணிணி தான் உதவியாயிருக்கிறது:))
ஆனால் சில நேரங்களில் குழந்தைகளை சமாளிக்கப் போராடுவது தான் மிகவும் சவாலாகவே இருந்து வருகிறது. கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டாலும் பின்னர் மனம் ஏதோ வலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
பயனுள்ள ஆலோசனைகள்
நன்றி

நொச்சி இலை காய்ந்ததா ? அல்லது ஃப்ரெஷ்ஷான இலைகளா ? எவ்வளவு நாட்கள் பயன் படுத்த வேண்டும். நொச்சி இலை பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள்வது பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

நொச்சி இலை பறித்தவுடன் அதில் வேறு ஏதாவது பூச்சி இருக்கிறதா சுத்தமாக‌ இருக்கிறதா என்று சோதித்து தெரிந்து கொண்ட‌ பிறகு ஏற்கனே மெல்லிய‌ துணியில் தைத்து வைத்துள்ள‌ தலையணி உறையில் போட்டு தைத்து வைத்துக் கொண்டு தூங்கும் போது பயன் படுத்த‌ வேண்டும். தலைவலி தொடங்கியதிலிருந்து மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பயன் படுத்த‌ வேண்டும், முதல் நாளே நல்ல‌ பலன் தெரியும். தொடர்ந்து இம்முறையை பயன் படுத்தினால் நீண்ட‌ நாட்களுக்கு இத் தொல்லை இருக்காது. ஆனால் மைக்ரேன் தலிவலிக்கு ஒவ்வொவருக்கும் ஏற்படும் தனிப்பட்ட‌ காரணிகளை தெரிந்து கொண்டு அதனை தவிர்பது மட்டுமே நல்ல‌ பலனை தரும். இந்த‌ இழையில் சொல்லியுள்ள‌வைக்கு மேலும் பல காரணங்களால் வருகிறது.
ஒரு கைப்பிடி நொச்சியிலையை நன்றாக‌ சுத்தம் செய்தப் பிறகு ஒரு ஸ்பூன் அளவு சுக்கு சேர்த்து நன்கு மைய‌ அரைத்துக் கொண்டு நெற்றிபொட்டில் ப‌ற்றிட‌ வேண்டும். இதன் Botanical Name: Vitex Nigunda என்பதாகும். சென்னையில் வசிப்பவர்க்ளுக்கு ஒரு செய்தி நொச்சி இலை (புதியதாக‌) திருவல்லிகேணி பெரிய தெரு அருகில்லுள்ள் மாலை கடைக்கு அருகிலுள்ள் மூலிகை கடைகளில் கிடைக்கும்.

Information is wealth

திவ்யா எனக்கும் 8 வது படிக்கும்போது வந்தது. அப்போலாம் ஹாஸ்பிட்டல் போனா முதலில் கண்ணைதான் சோதித்து பார்ப்பார்கள்.
ஒவ்வொருவரும் ஒரு மருத்துவமனை சிபாரிசு செய்து இறுதியில் 7 வருடங்களுக்கு பின் தான் நியூராலஜி டாக்டர் பார்த்தேன்.
எனக்கும் வாந்தி வந்ததில்லை. டெலிவரிக்கு முன்னாடி நிறுத்தி வச்சுருந்தேன். இப்பொ திரும்பவும் ஆரம்பித்திருக்கிறேன்.
Friends சொல்றதலாம் try பண்ணிப் பார்க்கலாம். கோவம் வரும்போதுதான் அதிகமா வலிக்குதுனு கண்டுபிடுத்து விட்டீர்கள் அல்லவா?
பின் அதனைக் குறைக்க‌ முயற்சி பண்ணுங்களேன்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

//எப்படி மைக்ரெய்ன் என்று நிச்சயம் சொல்றீங்க!// மருத்துவர் சொன்னதுதான் புனிதா சிஸ்.
//கடிதம் அல்லது ஈமெல் எழுதி வைத்து இரண்டு நாள் கழித்து அழித்து விடச்சொன்னார்// நானும் சில‌ நேரம் அப்படி செய்வதுண்டு.
//எந்தப் பிரச்சினையானாலும் பத்து நிமிடத்துக்கு மேல் யோசிக்கக் கூடாது. அதற்குள் அதை விட்டு விலகப் பார்க்க வேண்டும் என்று.// நான் செய்யும் பெரிய‌ தவறு என்னனா எதாவது பிரச்சனையென்றால் அதவிட்டுட்டு வெளில‌ வரதுக்கு ரொம்ப‌ நேரம் எடுத்துப்பேன். அதையே யோசிச்சுட்டே இருப்பேன்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

மேலும் சில பதிவுகள்