தாங்க முடியாத தலை வலி

எனக்கு ரொம்ப நாளாக மைக்ரேன் தலை வலி இருக்கிறது.நானும் ஹஸ்பிடலில் காட்டினேன் நிறைய மருந்து குடுத்தார்கள் என்னால் தொடர்ச்சியாக மருந்து எடுத்து கொள்ள முடியவில்லை...எனக்கு கோவம் வரும் சமயம் ரொம்ப வருகிறது...என்னால் என் கோவத்தை கட்டு படுத்த முடியவில்லை..இதை சரி செய்ய உதவுகள் தோழிகளே...

//சரியான தூக்கமின்னை; வெய்யிலில் குடையில்லாமல் நடப்பது; மாலை குளிரில் (பனி விழ ஆரம்பிக்கும் வேளையில் தலையில் துணி இல்லாமல் வெளியில் இருத்தல்://
இது எல்லாம் நான் செய்யும் தவறுகள் தான். குறைத்து கொள்கிறேன்.
நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

எனக்கு இடது பக்கம் தலை மட்டும் வலி உண்டாகும்...எனக்கு தலைவலி வந்து விட்டால் போதும் யாரும் வீட்டில் சத்தம் போட்டு பேசினால் போதும் உடனே கராணம் இல்லாமல் சண்டை போடுவேன்..என் வீட்டில் எல்லோரும் பயப்பட்டனார்..நிறைய டாக்டரிடம் காட்டினேன்...கண் மருத்துவர் கண்ணாடி போட சொன்னார்..கண்ணாடி போட்ட ஒரு வாரம் தான் நல்ல இருந்தது திரும்ப மருத்துவரிடம் போய் காட்டினேன் தலைவலி சரியாகவில்லை என்றேன்...பிறகு தான் நியுரேலாஜியிடம் காட்ட சொன்னார்...அப்போது தான் மைகிரேன் என்று கண்டுபிடித்தோம்.என்க்கு வாமிட் வந்தது இல்லை...கோவம் குறைத்து கொள்ள முயழுகிறேன் ஆனால் முடியவில்லை ரொம்ப வலி இருக்கும் போது தூங்க சிரமாக இருக்கும் ஆனாலும் கஷ்டபட்டு தூங்கிவிடுவேன்...தூங்கி எழுந்தால் வலி இருக்காது...நான் படுத்து இருக்கும் பெட் ஆட்டிவிட்டால் அவர்கள் அன்று அவ்ளோ தான் நான் போடும் சத்தம் அப்படி இருக்கும்...கண் எரிச்சல் இருக்கும்...காலையில் எழும் போது இருந்தால் அன்று முழுவதும் இருக்கும்...சாப்பாடு சாப்பிட சிரமமாக இருக்கும்...இந்த தலைவலி உடன் இத்தனை வருடம் சமளித்தேன்...இதற்கு மேல் முடியாது...

ஆரம்பத்தில் இருந்து இழையை படித்து வருகிறேன். எனக்கு தலைவலி உண்டு, அடிக்கடி.... பல வருஷமா இருக்கு, வாரத்தில் 2 நாளாவது தலைவலின்னு நான் சொல்லாட்ட இவரே ஆச்சர்யமா பார்ப்பார். எனக்கு சும்மா இருந்தா கூட தலைவலி வரும். அதுக்காகவே எதாவது வேலை செய்வேன். கண்ணை ஸ்ட்ரெய்ன் பண்ணி மொபைல் அதிக நேரம் பார்த்தா தலைவலி வரும். தலைக்கு எண்ணெய் வைக்காம 2 நாள் விட்டா, தலைக்கு குளிச்சு ஒழுங்கா காய வைக்காம விட்டா, pasi, வெய்யிலில் சன் க்ளாஸ் இல்லாமல் பயணம், குளிர்ச்சியான உணவு, வழக்கமான நேரத்தில் குடிக்கும் டீ மிஸ் ஆவது, கோபம், மண்டையில் நீர் இப்படி பல காரணங்கள். நீங்க எல்லாம் சொல்லுவது போல வாமிட்டிங் சென்சேஷன் உண்டு. வாமிட் பண்ணதில்லை. சில நேரம் எழும்போதே இருக்கும், மாத்திரை இல்லாமல் அடங்காது. முடிந்தவரை மாத்திரை தவிர்ப்பேன், இப்போதெல்லாம் அது முடிவதில்லை. இதுவரை மருத்துவரிடம் இது பற்றி கேட்டவரை யாரும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதை எல்லாம் படிச்சதும் நமக்கும் மைக்ரேனா? என நானே கேட்டுக்கறேன் ;) எப்படியும் வலி வந்தா மருந்து தான் வழின்னா, நானும் தான் என்ன பண்ண. எனக்கு என்ன என்ன ஆகாதுன்னு எனக்கு தெரியும், அவற்றை முடிந்தவரை எப்போதும் அவாய்ட் பண்றேன். ம்ம்... புதுசு புதுசா என்ன என்னவோ சொல்றீங்க... :)

எனக்கு பல நேரம் கை கொடுக்கும் வைத்தியம் சில... தலைவலி வந்தா வெளிய ஒரு நடை போயிடுவேன், பிடிச்ச ஏரியா பக்கம் ஷாப்பிங் போயிடுவேன், இல்லன்னா எனக்கு தலை வலிக்கலன்னு என்னை நானே கன்வின்ஸ் பண்ணிகிட்டு வேறு வேலையில் ஈடு பட ஆரம்பிச்சுடுவேன். ;) நிஜமாவே எனக்கு வொர்கவுட் ஆகுதுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களின் விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி பழனி சார். இங்கு இலை கிடைப்பதில்லை, ஆனால் சில சைனா மருந்து கடைகளில் Leaf Extract கிடைக்க வாய்ப்புள்ளது, தேடிப் பார்க்கிறேன். என் தோழி ஒருத்தியும் அவதிப் படுகிறாள். அவளுக்கும் தெரியப் படுத்துகிறேன்.
தகவலுக்கு மீண்டும் நன்றி.

எனக்கு மைக்கிரைன் 10 வயதில் வந்தபோது கண் டாக்டர் நல்லா இருந்த‌ கண்ணுக்கு கண்ணாடி போட்டு காதின் பின்புறம் வலி வந்ததுதான் மிச்சம். தலைவலி குறையவில்லை. பின் ஒரு நாட்டு மூலிகை கடைக்காரர் சொன்ன‌ வைத்தியத்தை என் அம்மா கடைப்பிடித்தார்கள். 6 மாதங்களுக்கு பிறகு மைக்கிறேன் தலைவலியிலிருந்து முற்றிலும் விடுபட்டேன் என்று சொல்லமுடியாவிட்டாலும் தப்பித்துக் கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும்.
அந்த‌ முறை இதுதான்
இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதீனா,சின்ன‌ வெங்காயம், மல்லித் தூள், மஞ்சள் தூள் ,மிளகு, சீரகம், வெந்தயம், சுக்குத் பொடி, இவையனைத்தயும் ஒன்றாக‌ தட்டி போட்டு கசாயம் காய்ச்சி காலையில் 3 மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் இந்நோய் கட்டுக்குள் வரும். இன்று என் வயது 67 . என் அம்மாவின் டைரியை அறுசுவை வாசகர்களுக்காக‌ தேடி எடுக்க‌ தாமதமாகிவிட்டது. இப்ப‌யன்பட்டால் மகிழ்ச்சியடைவேன்.

Information is wealth

சிரமம் பார்க்காமல் எங்களுக்காக உங்கள் அம்மாவின் டைரியை தேடிப் பிடித்து மருத்துவ குறிப்பு கொடுத்தமைக்கும் நன்றி :-)) நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்துப் பொருட்களுமே உணவில் சேர்த்துக் கொள்பவை தான். நான் நிச்சயம் முயற்ச்சி செய்யலாம் என நினைக்கிறேன். என் அம்மா சிறு வயதில் இதைப் போன்று எனக்கு கொடுப்பார்கள். தலை வலி வருகையில் ஏற்ப்படும் பித்த வாந்திக்காக. ஆனாலும் குறைந்த பாடில்லை. இருந்தாலும் மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்ததில்லை. நான் இதை முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன், சின்ன வெங்காயம் கிடைப்பது தான் சிக்கல்.
நன்றி _()_

எனக்கும் தலைவலி அடிக்கடி வரும்.தலைக்கு குளிச்சு ஒழுங்கா காய வைக்காம விட்டா, பசி, குளிர்ச்சியான உணவு, வழக்கமான நேரத்தில் குடிக்கும் டீ மிஸ் ஆவது, கோபம்,தலைக்கு குளித்து ரெம்ப‌ நேரம் வெயிலில் சுற்றுவது இப்படி காரணங்களால் ஆனால் அது நீங்க‌ சொல்ற மாரி மைக்ரன் தலைவலி என்னானு தெரியவில்லை வணிதா அக்கா சொன்ன‌ மாரி வணிதா அக்கா சொன்ன‌ மாரி தலைவலி வந்தா வெளிய ஒரு நடை போயிடுவேன், பிடிச்ச ஏரியா பக்கம் ஷாப்பிங் போயிடுவேன், இல்லன்னா எனக்கு தலை வலிக்கலன்னு என்னை நானே கன்வின்ஸ் பண்ணிகிட்டு வேறு வேலையில் ஈடு பட ஆரம்பிச்சுடுவேன்.அப்படியும் விடலையா மாத்திரை போட்டு விடுவேன்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

சுமார் 200 வகையான‌ தலைவலிகள் உள்ளன‌ என்பது ஆய்வுகளின் முடிவு. தலைவலி மைக்கீரேன் தலைவலியா வேறு வகையை சார்ந்ததா என்பதனை ஒரு
neurologist specialist தான் முடிவு செய்ய முடியும் என்பதனை அறுசுவை நேயர்கள் அறிய‌ விரும்புகிறேன்.
நான் சொல்லியுள்ள‌ கசாயம் குடிப்பதால் எல்லாவித‌ தலைவலிக்கும் நிவாரணம் கிடைக்கும் மற்றும் எந்தவித‌ பக்க‌ விளைவு இல்லாதது, மேலும் இதனை vertigo problem இருப்பவர்களும் அருந்தலாம்.

Information is wealth

இந்த‌ மைக்ரேன் தலைவலி எனக்கும் சிறுவயதுமுதலே இருந்துவருகிறது! தோழிகள் கூறும் அனைத்துவிதமான‌ சிம்டம்களும் எனக்கும் உண்டு!

தலைவலி என்று டாக்டரிடம் போனாலே முதலில் கண்பரிசோதனைதான் செய்யச்சொல்கிறார்கள்! இதற்கு ட்ரீட்மென்ட் எடுப்பதைவிட‌, நமக்கு என்னென்னெ காரணங்களால் தலைவலி வருகிறதுன்னு தெரிந்து, அதற்கேற்ற‌ வகையில், கவனமாக‌ இருந்தோமென்றால், தலைவலி ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும்! இது என் அனுபவம்!!

நானும் பல‌ ட்ரீட்மென்ட் எடுத்து , எதனாலும் இந்த‌ தலைவலி குணமாகவில்லை!
நான் கண்டுபிடித்தவரையில், எனக்கு உடல்சூடு, தலைசூடு மற்றும் வாயுத்தொல்லையினால் தலைவலிவரும்!

காலை எழும்போதே தலைவலியும்,வாமிட்டிங்சென்சேஷனும் வாயுத்தொல்லையினால் வருவது! முதல் நாள் நாம் சாப்பிட்ட‌ உணவு, அஜீரணம் போன்ற‌ காரணங்களினால் வரும்! பசி, டீ மிஸ் பன்றது இது எல்லாமே இதில் அடக்கம்!

கண்ணை ஸ்ட்ரெய்ன் பண்ணி மொபைல் அதிக நேரம் பார்த்தா ,தலைக்கு எண்ணெய் வைக்காம 2 நாள் விட்டா, தலைக்கு குளிச்சு ஒழுங்கா காய வைக்காம விட்டா,வெய்யிலில் போவது, இவையெல்லாம் தலைசூடு உடல்சூட்டிற்கான‌ காரணங்கள்!

எனக்கும் குறைந்தது வாரம் 2 நாளாவது இந்த‌ தலைவலி பிரச்சனை இருந்தது! இப்பொழுது மாதம் 2 முறை அல்லது 1 முறை! சிலசமயம் 2 மாதங்களுக்கு கூட‌ வராமல் இருக்கு!!

இதற்கு நான் கடைபிடிக்கும் சில‌ விஷயங்கள் : 1. காலையில் வெறும் வயிற்றில் சீரக‌, வெந்தய‌ நீர் அருந்துவது. 2. டீயில் சர்க்கரைக்கு பதில் பனங்கல்கண்டு.3.தலைக்கு மூலிகை எண்ணெய்.
அப்படியும் தலைவலி வந்தால், நல்ல‌ சூடான‌நீரில் முகம் கழுவுவது, சூடாக‌ ஏதாவது அருந்துவது (தண்ணீராகக்கூட‌ இருக்கலாம்).எல்லாவற்றையும் விட‌ முக்கியம் உடனே வயிற்றுக்குள் ஏதாவது இட்டு நிரப்பவேண்டும்!தயிர்சாதம் என் சாய்ஸ்! இதெல்லாம் செய்தால் தலைவலி கட்டுக்குள் இருக்கும்! முழுவதும் குணமாகும் என்று சொல்லவில்லை!

பழனி ஐயா அவர்கள் சொல்லியுள்ள‌ கசாயம் நல்ல‌ விஷயமாகத்தெரிகிறது! நானும் கடைபிடிக்கலாம் என்றிருக்கிறேன்! பழனி ஐயாவுக்கு நன்றி!

இந்த‌ மைக்ரேன் தலைவலி பரம்பரையாக‌ வருவதற்கு வாய்ப்பு உள்ளதா??

இது பரம்பரை நோய் இல்லை...

மேலும் சில பதிவுகள்