தயிர் வடை

தேதி: December 5, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

உளுத்தம் பருப்பு - 100 கிராம்
தயிர் - 500 மில்லி
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
அலங்கரிக்க:
கேரட் - ஒன்று
கொத்தமல்லித் தழை - ஒரு கப்


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தயிருடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் சிறிது தயிரை மோராக்கி வடையை ஊற வைப்பதற்காக எடுத்து வைக்கவும். (சிலர் வடையைத் தண்ணீரில் ஊற வைத்துப் போடுவார்கள். மோரில் ஊற வைத்தால் இன்னும் அதிகச் சுவையுடன் இருக்கும்).
உளுந்து மாவுடன் உப்பு மற்றும் அரிசி மாவு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, உளுந்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
பொரித்தெடுத்த வடைகளை 5 நிமிடங்கள் மோரில் ஊற வைக்கவும்.
ஊறியதும் எடுத்து தயிரில் போட்டு 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
இப்பொழுது சுவையான தயிர் வடை ரெடி. கொத்தமல்லித் தழை மற்றும் கேரட் துருவல் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். விரும்பினால் இத்துடன் காரா பூந்தி சேர்த்துச் சாப்பிடலாம். இன்னும் அதிகச் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் நாந்தான் பர்ஸ்ட். சூப்பர் இதுவும் லிஸ்ட்ல போட்டுக்கோங்க ரேவ்.

Be simple be sample

என்னோட‌ ஃபெவரேட் இது! வீட்டுல‌ வடை செய்வேன், ஆனா அதை தயிர்வடையா ட்ரை செஞ்சதில்லை! உங்களோட‌ கடைசி ஃபோட்டொ என்னை உடனே செய்யத் தூண்டுது!! சூப்பர்.

:-) எங்கூர்ல... ஒரு ஆசிரியரை இந்தப் பேர் வைச்சுக் கூப்பிடுவாங்க. என்ன காரணம்னு தெரியாது. ஆனா, அவங்க நிஜப் பெயர் தெரியாதவங்களுக்குக் கூட இந்தப் பெயரைச் சொன்னால் ஆளைத் தெரியும். :-)

நிறைய இன்ங்ரேடியன்ஸ் எல்லாம் இல்லாம ஈஸியான குறிப்பா இருக்கு. ட்ரை பண்ணிட்டுச் சொல்றேன் ரேவ்ஸ்.

‍- இமா க்றிஸ்

சூப்பர்ங்க. பார்க்கவே அருமையா இருக்கு.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!