சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை

தேதி: December 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

புழுங்கல் அரிசி - ஒரு டம்ளர்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ
சன்ன ரவை - அரை கப்
மைதா மாவு - அரை கப்
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் - 3
நெய் - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கப்


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். அரிசியை இரவே ஊற வைத்துவிடவும்.
ஊறிய அரிசியை மறுநாள் காலையில் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி அரிசியுடன் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைத் தூளாக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றி கரையவிடவும்.
அத்துடன் பொடித்த ஏலக்காய் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
அரைத்து வைத்துள்ள அரிசி கிழங்கு கலவையில் ரவை, மைதா மாவு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக வெல்லக் கரைசலையும் ஊற்றி நன்கு கலந்து அடை மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கலந்து வைத்துள்ள மாவை எடுத்து சிறு அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு குறைந்த தணலில் வேகவிடவும்.
அடிப்பக்கம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு சிறிது நெய்விட்டு, மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும். சுவையான நெய் மணக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை ரெடி. சூடாகப் பரிமாறவும்.

மாவின் பதம் நீர்த்து இருந்தால் சிறிது மைதா மாவு அல்லது ரவையைச் சேர்த்து கலந்து சுடவும்.

கிழங்கின் இனிப்புத் தன்மையைப் பொறுத்து வெல்லம் சேர்க்கவும். அடுப்பின் தணலை குறைத்து வைத்துச் செய்வதே நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சர்க்கரை வள்ளி கிழங்கு சுமி சமைச்சது எப்படி???? அடி தூள்.. சூப்பர் சுமி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

// சர்க்கரை வள்ளி கிழங்கு சுமி சமைச்சது எப்படி??// நீ முதல்ல‌ எங்க‌ வீட்டுக்கு வா மகளே..; , சமைச்சது , கழுவினது எப்படின்னு நான் சொல்லித் தர்றேன்..;)
//அடி தூள்.. சூப்பர் சுமி..// டேங்யூவெல் ரே..( டச்சு மொழில‌ நன்றின்னு அர்த்தம்)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கிழங்கு அடை பார்க்கவே சாப்பிடதோணுது பா நீங்க எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்திருக்கலாம் இல்ல நான் உங்க வீட்டுக்கு பக்கமா இருக்கனும் ;) ஆனா நடக்காதே

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//நீங்க எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்திருக்கலாம் இல்ல நான் உங்க வீட்டுக்கு பக்கமா இருக்கனும் ;) ஆனா நடக்காதே// நான் ஊருக்கு வந்தா நீங்க‌ என் வீட்டுக்கு வந்துடுங்க‌ சுவா.. எல்லாமே செய்து தர்றேன்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப‌ டேஸ்டியான‌ டிஷ். வாழ்த்துக்கள் சுமி.

Expectation lead to Disappointment

உங்க‌ அனபான‌ பதிவுக்கு மிக்க‌ நன்றி மீனா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அருமையான‌ அடை உடனே சாப்பிடதோணுது சிஸ். வாழ்த்துக்கள்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஸ்வீட் அடை புதுமை... பார்க்கும் போதே சுவை அருமையாக இருக்கும்னு தெரிகின்றது.. சீக்கிரமே செய்து பார்க்கிறேன்

"எல்லாம் நன்மைக்கே"

//அருமையான‌ அடை உடனே சாப்பிடதோணுது சிஸ்// அப்போ கண்டிப்பா செய்து பார்த்து பதிவு போடணும்.. வாழ்த்துக்கு நன்றி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பாக்யா (அப்படி கூப்பிடலாம் தானே) கிழங்கு அடை ட்ரை செய்து பாருங்க‌, நாம் செய்யும் போளி போல‌ இருக்கும்..:) உங்கள் பதிவுக்கு நன்றி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்புகள், படங்கள் அனைத்தும் கலக்கல். இந்த அடை நீங்க சொல்ற மாதிரியே பார்க்க போளி போன்று இருக்கு. அவசியம் செய்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள்

உங்கள் பதிவுக்கும் பாராட்டுக்கும் எனது நன்றிகள். ஆமா போளியே தான் வாணி. பூரணத்துக்கு பதிலா கிழங்கு வாசமும் நெய் வாசனையும் இருக்கும். இனிப்பு அதிகமாயிட்டா திகட்டிடும். பதிவுக்கு நன்றி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி,
ஹெல்தி குறிப்பு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப‌ நன்றி ..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அடை செய்தேன், சுவை அருமை, ஆனால் கோதுமை தோசை போன்று வந்தது. போளி போன்றில்லை.
என் மகளும் பான் கேக் என்று சொல்லி சாப்பிட்டாள்.
பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகளுக்கான மாலை நேர சிற்றுண்டி.

நீங்கள் படத்துடன் குறிப்பு போட்டதினால் தான் நான் செய்துப் பார்த்தேன். சத்தான, சுவையான குறிப்பிற்க்கு நன்றி

அடை செய்து சாப்பிட்டாச்சா...:) குட்டிக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. //கோதுமை தோசை போன்று வந்தது.//மாவில் நீர்த் தன்மை ஜாஸ்தி ஆகிடுச்சோ?
//நீங்கள் படத்துடன் குறிப்பு போட்டதினால் தான் நான் செய்துப் பார்த்தேன். சத்தான, சுவையான குறிப்பிற்க்கு நன்றி// செய்து பார்த்து பதிவிட்டதிற்க்கு மிக்க‌ நன்றி வாணி.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....