தேதி: December 8, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கரோலின் இமானுவேல் அவர்களின் வெங்காய மசாலா குழம்பு குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய கரோலின் இமானுவேல் அவர்களுக்கு நன்றிகள்.
பெரிய வெங்காயம் - 2
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
தக்காளி - 2
பூண்டு - 6 பற்கள்
காய்ந்த மிளகாய் - 15
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க
தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டைத் தோலுரித்து வைக்கவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயிலுள்ள விதையை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.

வதக்கியவற்றைச் சிறிது நேரம் ஆறவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். ஒரு சுற்று சுற்றிய பிறகு ஊற வைத்துள்ள மிளகாயைச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது தேவையெனில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.

சுவையான காரசாரமான வெங்காய மசாலா குழம்பு ரெடி.

Comments
வெங்காய மசாலா குழம்பு
இரண்டாவது படம் செம்மையா இருக்கு.. என்னவென்று சொல்வதன்ம்மா சுமி இவள் சமையல் அழகை.. சூப்பர் சுமி..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவா
//இரண்டாவது படம் செம்மையா இருக்கு.// கிரிடிட்ஸ் கோஸ் டூ மை டியர் ஏஞ்சல்(வர்ஷா)
//என்னவென்று சொல்வதன்ம்மா சுமி இவள் சமையல் அழகை.// அய்யோ எனக்கு வெட்க வெட்கமா வருதே.நான் என்ன பண்ணுவேன்..;)
உங்கள் பாராட்டுக்கு எனது நன்றிகள்..
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
கலக்கலான சமையலோடு கலக்கலான படங்கள் இரண்டாவது படம் கொள்ளை அழகு வர்ஷாட்ட சொல்லுங்க :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுமி
டுடே கிச்சன் குயின் சுமிக்கு என்னுடைய வாழ்த்துக்கள், உங்கள் சமையல் கைவண்ணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள். எல்லா படமும், டெக்ரேஷனும் சூப்பர் பா.. ப்ப்ப்ப்பாஆஅ அள்ளுது எங்கிற மாத்ரி இருக்கு மேலும் வர்ஷா குட்டிக்கு என் மனமார்ந்த பாரட்டுக்கள்..
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
சுவா..
//கலக்கலான சமையலோடு கலக்கலான படங்கள் இரண்டாவது படம் கொள்ளை அழகு வர்ஷாட்ட சொல்லுங்க :)// கண்டிப்பா சொல்லிடறேன் சுவா.. உங்கள் பாராட்டுக்கு எனது நன்றிகள் ..
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ஹேமா..
உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் எனது நன்றிகள் ஹேமா...//எல்லா படமும், டெக்ரேஷனும் சூப்பர் பா.. ப்ப்ப்ப்பாஆஅ அள்ளுது எங்கிற மாத்ரி இருக்கு // நான் எல்லாம் கத்துக் குட்டிங்க, இங்க போட்டோ எடுக்கிறதுலே சூரப்புலி எல்லாம் இருக்காங்க..:)//மேலும் வர்ஷா குட்டிக்கு என் மனமார்ந்த பாரட்டுக்கள்..//தேங்ஸ்ங்க..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
இது எதுக்கு மேட்சா இருக்கும் டிபனா,சாதத்திற்கா.வாழ்த்துக்கள்.
Expectation lead to Disappointment
மீனா
சாத்தை விட இட்லி, தோசைக்கு நல்லா இருக்கும், நான் தோசைக்கு தான் செய்தேன். நன்றி..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
Sumi
எல்லா குறிப்புகளுமே சூப்பர்ங்க வித் டெகரேசன். நன்றி சிஸ்
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
மெர்சி..
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி மெர்சி..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
இந்த போட்டி முடிந்ததும், அவசியம் இந்த குழம்பு செய்துப் பார்க்கிறேன். சுவை வெங்காய சட்னி போல வருமோ?
வாணி..
//இந்த போட்டி முடிந்ததும், அவசியம் இந்த குழம்பு செய்துப் பார்க்கிறேன்// அவசியம் செய்துட்டு சொல்லுங்க.
// சுவை வெங்காய சட்னி போல வருமோ?// தக்காளி சட்னி போல இருக்கும் வாணி..:) பதிவுக்கு நன்றி..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....